வயிற்றுக்கோளாறு - Upset Stomach in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

May 21, 2019

March 06, 2020

வயிற்றுக்கோளாறு
வயிற்றுக்கோளாறு

வயிற்றுக் கோளாறு என்றால் என்ன?

வயிற்று கோளாறு மற்றும் செரிமானமின்மை போன்ற அறிகுறிகள் இரைப்பையில் கோளாறு இருப்பதை குறிக்கிறது. ஏதேனும் காரணத்தினால் குடல் பகுதி அல்லது வயிற்று பகுதியில் ஏற்படும் வீக்கம் செரிமானமின்மைக்கு வழிவகுக்கும். குறிப்பிட்ட மருந்துகள், வைரஸ், பயணத்தின் போது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாவின் தொற்று அல்லது மாசு கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது இந்த வயிற்று கோளாறு பிரச்சனை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட அனைவரும் இந்த செரிமானமின்மை பிரச்சனையை அவர்களது வாழ்நாளில் ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பார்கள்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்த வயிற்று கோளாறு நோயுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த வயிற்று கோளாறு பிரச்சனை ஏற்பட முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

 • உணவு உண்ணுதலின் போது அதிகமான காற்றினை உள்ளிழுப்பதால் ஏற்படும் வீக்கம் செரிமானமின்மைக்கு வழிவகுக்கிறது.
 • மாசுற்ற உணவு மற்றும் நீரை அருந்துவதினால் ஏற்படும் தொற்று உதாரணமாக., டைபாய்டு காய்ச்சல்,காலரா போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.
 • செரிமானப்பாதை மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புண்கள்.
 • அதிக அளவிலான கஃபின் கலந்த பானங்களை குடித்தல் மற்றும் மது  அருந்துதல்.
 • புகை பிடித்தல்.
 • மாசுற்ற உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
 • ஆஸ்பிரின் - ஆஸ்பிரின் மருந்து சிலருக்கு வயிற்று புறணியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

வயிற்று பகுதியில் புண்கள் போன்று ஏதேனும் அடிப்படை காரணிகள் உள்ளதா  என கண்டறிய மருத்துவர் நோயாளின் மருத்துவ அறிக்கையை ஆராய்வார். அடிவயிற்று பகுதில் செய்யப்படும் எக்ஸ் கதிர் சோதனை அல்லது வயிற்று பகுதியை உற்று நோக்க எண்டோஸ்கோபி (ஒளி மற்றும் கேமரா பொருத்தப்பட்ட குழாய் போன்ற கருவி)போன்ற சோதனைகளை செரிமானம்மின்மை  பிரச்சனை ஏற்பட  காரணமாக உள்ள  காரணியை கண்டறிய மருத்துவர் பரிந்துரைப்பார். தேவைப்பட்டால்  இரைப்பை அகநோக்கி சோதனை பரிந்துரைக்கப்படலாம்.

வயிற்று கோளாறு பிரச்சனையின் அடிப்படை நிலையினை பொறுத்து இந்நோய்க்கான சிகிச்சை முறை இருக்கும். வழக்கமாக, இந்த வயிற்று கோளாறு பிரச்சினையினால் ஏற்படும் அறிகுறிகள் எந்த ஒரு மருந்துகளையும் பயன்படுத்தாமல்  ஒரு சில மணி நேரத்திற்குள் குறைந்துவிடும். இந்த வயிற்று கோளாறு பிரச்னையை சரிசெய்ய சுத்தமான திரவ உணவுகளை அருந்துவதே மிகவும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறையாகும்.

பின்வரும் பழக்க வழக்கங்களை தவிர்ப்பதன் மூலம் இந்த வயிற்று கோளாறு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்:

 • காரமான உணவுகளை  சாப்பிடுவது.
 • தாமதமாக இரவு உணவு உண்ணுதல்.
 • சாப்பாட்டுக்குப் பிறகு செயல்பாடற்று இருத்தல்  வளர்சிதைமாற்ற திறனை  குறைக்கும்.
 • உணவு உண்ணும் போது திரவ பானங்களை குடித்தல்.

இந்த வயிற்று கோளாறு பிரச்சனை வயிற்றின் இயல்பான இயக்கங்களை பாதித்தால் ஆண்டிபயாடிக்குகள், ஆண்டி அமில மருந்துகள், குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் வயிற்றோட்ட எதிர்ப்பி  மருந்துகள் போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.மேற்கோள்கள்

 1. Board of Regents of the University of Wisconsin System [Internet]: University Health Services; Upset stomach
 2. Virginia State University[Internet]; Upset Stomach.
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Indigestion.
 4. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Upset Stomach (Indigestion): Care and Treatment.
 5. Bolia R. Approach to "Upset Stomach". Indian J Pediatr. 2017 Dec;84(12):915-921. PMID: 28687951

வயிற்றுக்கோளாறு டாக்டர்கள்

Dr. Raghu D K Dr. Raghu D K Gastroenterology
14 वर्षों का अनुभव
Dr. Porselvi Rajin Dr. Porselvi Rajin Gastroenterology
16 वर्षों का अनुभव
Dr Devaraja R Dr Devaraja R Gastroenterology
7 वर्षों का अनुभव
Dr. Vishal Garg Dr. Vishal Garg Gastroenterology
14 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வயிற்றுக்கோளாறு க்கான மருந்துகள்

வயிற்றுக்கோளாறு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।