myUpchar प्लस+ सदस्य बनें और करें पूरे परिवार के स्वास्थ्य खर्च पर भारी बचत,केवल Rs 99 में -

குருதிநாள வீக்கம் (வாஸ்குலிட்டிஸ்) என்றால் என்ன?

குருதிநாள வீக்கம் (வாஸ்குலிட்டிஸ்) என்பது நோயெதிர்ப்பு அமைப்பு, இரத்தக் குழாய்களைத் தாக்கும் ஒரு நிலைமையாகும், இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இது இறுதியில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடலின் எந்த பகுதி பாதிப்படைகின்றதோ அந்த அடிப்படையில் சிக்கல்கள் உருவாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

குருதிநாள வீக்கத்தின் (வாஸ்குலிட்டிஸ்) தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் அதன் வகை, தீவிரத்தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்புகளை சார்ந்துள்ளது. குருதிநாள வீக்கமானது வகை மற்றும் காலத்திற்கேற்ப வேறுபடுகின்றது. இருப்பினும், பொதுவாக காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • காய்ச்சல்.
 • எடை குறைதல் மற்றும்/அல்லது பசியின்மை.
 • களைப்பு.
 • பொது வலிகள் மற்றும் நோவுகள்.
 • தோல் எதிர்வினைகள்.
 • கீல்வாதம் அல்லது மூட்டு வலிகள்.
 • இருமும் போது இரத்தம் வருதல்.
 • வாய் அல்லது மூக்கில் புண்கள்.
 • மூச்சு திணறல்.
 • காதின் நடுவில் தொற்று ஏற்படுதல்.
 • காது கேட்கும் தன்மை குறைதல்.
 • சிவந்த, அரிப்பு, மற்றும் எரிச்சலான கண்கள்.
 • பார்வை மங்கலாகுதல்.
 • தசை பலவீனம்.
 • உணர்ச்சியின்மை மற்றும் கூச்ச உணர்வு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குருதிநாள வீக்கத்தின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

 • தன்னுடல் தாக்குநோய் எதிர்வினை.
 • சமீபத்திய அல்லது நீண்ட கால (தொடர்ந்து) தொற்று.
 • சில மருத்துவம்.
 • இரத்தத்தின் சில புற்றுநோய்கள் (குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு (லுகேமியா) மற்றும் நிணநீர் நாளப்புற்று (லிம்போமா) போன்றவை).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

உடல் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த சோதனை மற்றும் அதனைத் தொடர்ந்து கீழே உள்ள பரிசோதனைகளை செய்த பிறகு நோயாளியின் பின்னணியை மருத்துவர் முடிவு செய்கிறார்:

இரத்த பரிசோதனைகள் பின்வருமாறு:

 • ஆன்டிநியூட்ரோபில் சைட்டோபிளாஸ்மிக் ஆன்டிபாடிகள் (ஏ.என்.சி.ஏ).
 • சி-எதிர்வினை புரதம் (சி.ஆர்.பி).
 • ஹீமோகுளோபின் மற்றும் ஹெமாடோக்ரிட்.
 • இரத்த சிகப்பணு (எரித்ரோசைட்) படியும் அளவு (ஈ.எஸ்.ஆர்).
 • சிறுநீர்ப் பகுப்பாய்வு.
 • மார்பு எக்ஸ்-கதிர்கள் சோதனை.
 • உடல் திசுப்பரிசோதனை (பயாப்ஸி).
 • நுரையீரல் செயல்பாடு சோதனைகள்.
 • ஈ.கே.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம்).
 • மின் ஒலி இதய வரைவி (எக்கோகார்டியோகிராபி).

ஸ்கேன்கள் பின்வருமாறு:

 • அடிவயிற்று ஊடொலி (அல்ட்ராசவுண்ட்) ஆய்வு.
 • கணிப்பொறி பருவரைவு (சி.டி ஸ்கேன்).
 • காந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ).
 • இரட்டை மீயொலி வரைவு (டூப்லெக்ஸ் அல்ட்ராசோனோகிராபி).
 • 18எப் (F)- ஃப்ளோரோடியோக்ஸி க்ளுகோஸ் பாஸிட்ரோன் எமிஷன் டோமோகிராஃபி (எப்.டி.ஜி-பி.இ.டி).
 • இரத்த குழாய் வரைவி (ஆன்ஜியோக்ராபி).

குருதிநாள வீக்கத்தின் மேலாண்மையானது அதன் வகை, தீவிரத்தன்மை மற்றும் அதன் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது, மேலும் இதில் அடங்குபவை பின்வருமாறு:

 • நோய் எதிர்ப்பு எதிர்வினையை குறைப்பதன் மூலமாகவோ அல்லது தடுப்பதன் மூலமாகவோ வீக்கத்தைக் குறைப்பதை குருதிநாள வீக்கத்தின் சிகிச்சை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • ப்ரிட்னிசோன், ப்ரிட்னிசோலோன் மற்றும் மீதில்ப்ரிட்னிசோலோன் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள் வீக்கத்தை குறைக்க கொடுக்கப்படுகின்றது.
 • லேசான குருதிநாள வீக்கத்தினை (வாஸ்குலிட்டிஸ்) கொண்ட நபர்களுக்கு, நாப்ராக்சென், அசெட்டமினோஃபென், இபுஃப்ரோபன், அல்லது ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
 • சில நேரங்களில் கார்டிகோஸ்டீராய்டுகள் பயனுள்ளதாக இல்லாத போது கடுமையான குருதிநாள வீக்க நோயாளிகளுக்கு சைட்டோடாக்ஸிக் மருந்துகள் (சைக்ளோபாஸ்ஃபாமைடு, அஸாதியோபிரைன் மற்றும் மெத்தோட்ரெக்ஸேட்) பரிந்துரைக்கப்படுகின்றன. அரிதான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
 • கவாசாகி நோய் போன்ற குருதிநாள வீக்க வகைகளில் தரமான சிகிச்சையில், அதிக ஆஸ்பிரின் மற்றும் இம்யூனோகுளோபின்கள் அடங்கும்.
 1. வாஸ்குலிட்டிஸ் க்கான மருந்துகள்

வாஸ்குலிட்டிஸ் க்கான மருந்துகள்

வாஸ்குலிட்டிஸ் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine Name
Visna खरीदें

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா? தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்

References

 1. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Vasculitis
 2. National Health Service [Internet]. UK; Vasculitis.
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vasculitis
 4. American College of Rheumatology. Vasculitis. Georgia, United States [Internet]
 5. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases [Internet]. National Institute of Health; Vasculitis Translational Research Program.
 6. healthdirect Australia. Vasculitis. Australian government: Department of Health
और पढ़ें ...
ऐप पर पढ़ें