வைட்டமின் சி குறைபாடு - Vitamin C Deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

May 21, 2019

October 29, 2020

வைட்டமின் சி குறைபாடு
வைட்டமின் சி குறைபாடு

வைட்டமின் சி குறைபாடு என்றால் என்ன?

வைட்டமின் சி அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது. உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாடு ஸ்கர்வி என்று அழைக்கப்படும் உயிருக்கு மிக ஆபத்தான நோய்க்கு காரணமாக அமைகிறது. வைட்டமின் சி என்பது முதல் நிலை உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகக் கருதப்படுகிறது, அதாவது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் எஞ்சிய ஆக்சைடுகளை அகற்றுகிறது. தனியாக வாழும் ஆண்கள், முதியவர்கள், மன நோய்கள் உடைய நோயாளிகள், வீடு இல்லாமல் தவிக்கும் ஆதரவற்றவர்கள், மற்றும் உணவு மீது அதிக பற்று உடையவர்கள் போன்ற மக்களில் வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதறகான ஆபத்து அதிகம் உள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

 • மருத்துவர் விரிவான மருத்துவ பின்புலம் மற்றும் குடும்பதினரிடத்தில் இக்குறைபாடு உள்ளதா என்றெல்லாம் அறிந்த பின், மருத்துவர் சருமம் பாதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிகிறதா என்று அறிய பரிசோதனைகள் செய்வார்.
 • வைட்டமின் சி அளவை பரிசோதனை செய்து மருத்துவர் முழுமையான குருதி எண்ணிக்கையையும் சோதனை செய்து ஸ்கர்வி உறுதிப்படுத்தப்படும்.
 • இரத்தக்கசிவு நிற்பதற்கு எடுக்கும் நேரத்தை மதிப்பீடு செய்யவும், உடலில் உள்ள ஹீமோகுளோபின் நிலைமையை அடையாளம் காணவும் முழுமையான இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 • குழந்தை பருவத்து ஸ்கர்வி நோயை கண்டறிய தொடையெலும்பு போன்ற பெரிய எலும்புகளின் எக்ஸ்-ரே சோதனை.
 • பிற நோய்கள் இல்லை என்று உறுதிப்படுத்த மருத்துவர் எலும்பு மஜ்ஜை திசுப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடும்.
 • எக்ஸ்ரே போதுமான தகவல்களை அளிக்காத பட்சத்தில் மட்டும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) சோதனை செய்யப்படுகிறது.

இதன் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • போதுமான அளவு வைட்டமின் சி மாற்றீடு செய்தலே சிகிச்சைக்கான சரியான தேர்வாகும். சிகிச்சை தொடங்கிய 2 வாரங்களுக்குள், அறிகுறிகள் சரியாகத் தொடங்குகின்றன.
 • அஸ்கார்பிக் அமிலம் நிறைந்த சாறுகள்: எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகள் உடலில் வைட்டமின் சி  மாற்றீடு செய்ய உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ப்ரோக்கோலி, பச்சை மிளகு, கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை இழந்த வைட்டமின் சி அளவுகளை தக்கவைக்க உதவுகிறது.
 • மெல்லும் வைட்டமின் சி மாத்திரைகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஸ்கர்வியின் (வைட்டமின் சி குறைபாடு) சிகிச்சையில் இது உதவுகின்றது.மேற்கோள்கள்

 1. Joris R. Delanghe et al. Vitamin C deficiency: more than just a nutritional disorder. Genes Nutr. 2011 Nov; 6(4): 341–346. PMID: 21614623
 2. Fain O. Vitamin C deficiency. Rev Med Interne. 2004 Dec;25(12):872-80. PMID: 15582167
 3. Valerio E. Scurvy: just think about it.. J Pediatr. 2013 Dec;163(6):1786-7. doi: 10.1016/j.jpeds.2013.06.085. Epub 2013 Sep 5. PMID: 24011760
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vitamin C.
 5. Linus Pauling Institute [Internet]. Corvallis: Oregon State University; Vitamin C.
 6. Healthdirect Australia. Vitamin C. Australian government: Department of Health

வைட்டமின் சி குறைபாடு டாக்டர்கள்

Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 वर्षों का अनुभव
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 वर्षों का अनुभव
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 वर्षों का अनुभव
Dr. M Shafi Kuchay Dr. M Shafi Kuchay Endocrinology
13 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வைட்டமின் சி குறைபாடு க்கான மருந்துகள்

வைட்டமின் சி குறைபாடு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।