ஆலிவ் எண்ணெய்யும் ஊட்டச்சத்தும்

ஆலிவ் எண்ணெய், மத்திய தரைக்கடல் பகுதியின் உணவு வகைகளில் ஒரு முக்கியமான பகுதி ஆகும். ஆனால், இப்பொழுது மிக விரைவாக உலகம் முழுவதும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொரு நபரின் சமையலறை அன்புக்குரிய பொருளாக மாறி இருக்கிறது. இது நகர்ப்புற சமயலறைகளில் ஒரு "போக்கு" அல்லது ஒரு “புது விஷயத்தில்" எனப் பிரபலம் அடையாமல் இருக்கலாம், ஆனால், என்னை நம்புங்கள், அது அப்படி அல்ல. ஆலிவ்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை ஒரு மிக நீண்ட மற்றும் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டு இருக்கின்றன.

நீங்கள் ஒரு வரலாற்று ஆர்வலராக அல்லது விளையாட்டு ஆர்வலராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பண்டைய கிரேக்க விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் மாலைகள் அளிக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அது ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது மற்றும் உண்மை, ஆனால், கோப்பையில் ஒரு சின்னமாக ஆலிவ் இடம்பெற காரணம் என்னவாக இருக்க முடியும்? என இப்பொழுது நீங்கள் ஆச்சரியப்படலாம். கிரேக்க புராணங்களில், ஆலிவ் மரம், "ஏதென்னா" என்ற பெண் கடவுளிடம் இருந்து பெறப்பட்ட ஒரு பரிசு என நம்பப்படுவதை அறிந்தால், நீங்கள் மேலும் ஆர்வமாகி விடுவீர்கள். உங்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருந்தால் மட்டும் அவர்களுக்கு சொல்கிறேன், ஏதென்னா என்பது அறிவு மற்றும் மன உறுதியின் பெண் தெய்வம் ஆகும். ஏதென்னாவின் பெயரில் தான் ஏதென்ஸ் நகரம் கட்டமைப்பட்டது. இயற்கையாவே, ஆலிவ் மரம் மற்றும் கிளைகள், மிகவும் உயர்ந்த மரியாதைக்காகக் கொடுக்கப்பட்டன. கிரேக்கர்கள் இன்னும் கூட ஆலிவை செல்வச்செழிப்பின் ஒரு அடையாளமாகக் கருதுகின்றனர். ஏதென்ஸில் நடந்த 2004 கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், ஆலிவ் மரக் கிளையினால் செய்யப்பட்ட மலர் மாலைகளைப் பெற்றனர்.

ஆலிவ் எண்ணெய் "அபாரமான மருந்து" என மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் அவர்களால் அழைக்கப்படுகிறது. ஆகவே, ஆலிவ் எண்ணெய், அதன் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் தன்மைகளால் நீண்ட காலமாக அறியப்பட்டு இருக்கிறது எனத் தாராளமாகக் கூற முடியும்.

வரலாற்றியலாளர்கள் கூற்றுப் படி, ஆலிவ் மர பயிரிடுதல் பற்றிய பழமை வாய்ந்த விவரங்கள், ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு பின்னால் இருந்து வருகிறது. 3000 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஆலிவ் மரத்தின் தொல்லியல் மாதிரிகள், கிரீஸில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆலிவ்களின் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் நன்மைகளைப் பற்றிய குறிப்புகள், பண்டைய கிரேக்க இலக்கியங்களில் கண்டறியப்பட்டு இருக்கின்றன. சொல்லப் போனால், ஒரு பண்டைய கிரேக்க எழுத்தாளரான ஹோமர், ஆலிவ் எண்ணெயைக் குறிக்க "திரவ தங்கம்" என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்.

தங்கள் திரவ தங்கத்தை போற்றி பாதுகாப்பது கிரேக்கர்கள் மட்டுமே அல்ல, என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியமடைவீர்கள். குர்ஆனில் ஆலிவ் பழம், ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட பழம் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது, மேலும் பைபிளுடைய பழைய ஏற்பாட்டிலும் இந்தப் பழத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எகிப்தியர்கள், மம்மி பதப்படுத்தும் நடைமுறைகளில் ஆலிவ் இலைகளைப் பயன்படுத்தினர். இன்று, இந்த அற்புதம் கிட்டத்தட்ட உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய நாட்டையும் அடைந்து இருக்கிறது. மேலும் அது, தாவர எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அல்லது மற்ற எந்த ஒரு செறிவூட்டப்பட்ட எண்ணெய்க்கும், ஒரு ஆரோக்கியமான மாற்றாக, மாற முற்படுகிறது.

 1. ஆலிவ் எண்ணெய்யின் பயன்கள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Olive oil uses and health benefits in Tamil
 2. நல்ல ஆலிவ் எண்ணெய்யை அடையாளம் காண்பது எவ்வாறு - How to identify good olive oil in Tamil
 3. ஒரு நாளுக்கு எவ்வளவு ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும் - How much olive oil to take per day in Tamil
 4. மிகவும் கைபடாத ஆலிவ் எண்ணெய் மற்றும் அதன் பயன்கள் - Extra virgin olive oil and its uses in Tamil
 5. ஆலிவ் எண்ணெய்யின் பக்க விளைவுகள் - Olive Oil Side Effects in Tamil

நம்மில் நிறைய பேர், நமது சமயலறையில் ஆலிவ் எண்ணெய் ஜாடிகளை வைத்திருக்கிறோம் மற்றும் அதை தினசரி சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த சமையலறை சந்தோசம், சமையலறையோடு முடிந்து விடுவதில்லை, ஆலிவ் எண்ணெய் நமது உடலின் ஆரோக்கியத்துக்கு மற்றும் நன்மைக்குத் தேவையான பயன்மிக்க விளைவுகளையும், அதிக அளவில் கொண்டு இருக்கிறது. ஆலிவ் எண்ணெய்யின் சமையல் சாராத சில பயன்களை நாம் இப்போது காணலாம்:

 • முடிக்காக: ஆலிவ் எண்ணெய், உங்கள் உச்சந்தலைக்கு சரியான ஊட்டம் அளித்து, உங்கள் முடியை மென்மை, ஆரோக்கியம் மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
 • சருமம் மற்றும் முகத்துக்காக: ஆலிவ் எண்ணெய், அதனை உங்கள் சருமத்துக்கு மிகச் சிறந்ததாக ஆக்கும் வகையில், அதிகமான அளவு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளைக் கொண்டு இருக்கிறது. அது உங்கள் சருமத்தை மென்மையாக்க மற்றும் ஊட்டமளிக்க உதவுவதோடு மட்டும் அல்லாமல், கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்கவும் கூட உதவி புரிகிறது.
 • இதயத்துக்காக: ஆலிவ் எண்ணெய்யில் உள்ள செறிவான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி கூறுகள், உணவுப் பழக்கத்தில் இதை எடுத்துக் கொள்ளும் போது, நச்சுத்தன்மை, மனஅழுத்தம் மற்றும் இதயத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகிவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது, தொடர்ச்சியாக உட்கொண்டு வருவது மூலம், மாரடைப்பு, தமனித் தடிப்பு மற்றும் எல்.டி.எல். கொழுப்புகள் குறைவதால் ஏற்படும் பக்கவாதம் போன்ற, இதய நாளக் குறைப்பாடுகளின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
 • நீரிழிவுக்காக: ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்வது, நீரிழிவு வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதன் மூலம், அதை சமாளிப்பதிலும் கூட உதவுகிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டு உள்ளன.
 • வயிற்றுப் புண்களுக்காக:ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது, எச்.பைலோரி இன நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு செயலின் மூலம், வயிற்றுப் புண்களை கையாள்வதில் திறன் வாய்ந்தது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • குழந்தைகளுக்கு: ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது, குழந்தைகளின் சருமத்துக்கு இதம் அளிப்பதுடன், அரையாடை தடிப்புக்களுக்கு எதிராக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
 • புற்று நோய்க்கு எதிரானது: ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், புற்றுநோய் தன்மையுள்ள கட்டிகளின் வளர்ச்சி மற்றும் தாக்கத்தைத் தடுப்பதன் மூலம், உங்களுக்குப் புற்று நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கின்றன.

முடிக்காக ஆலிவ் எண்ணெய் - Olive oil for hair in Tamil

ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துபவர்கள், இந்த எண்ணையின் முடிக்கு ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதம் அளிக்கும் நன்மைகளைப் பற்றிப் பேச மிகவும் விரும்புகிறார்கள். மருத்துவ அறிஞர்களின் கருத்துப்படி, ஆலிவ் எண்ணெய், ஸ்குவாலேன் மற்றும் ஒலீயிக் அமிலம் போன்ற முடிகளுக்கு மென்மையளிக்கும் உயிரிவேதிப் பொருட்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்ற கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள், அதனை முடிகளுக்கு ஊட்டமளிக்கும் ஒரு மிகச்சிறந்த காரணி ஆக்குகின்றன. ஆலிவ் எண்ணெய்யைத் தொடர்ந்து பயன்படுத்துவது, வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியை சரி செய்ய உதவுகிறது. மேலும், அது உங்கள் முடி வேர்க்கால்களுக்கும் ஊட்டம் அளிக்கிறது, உங்கள் முடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக ஆக்குகிறது. 

முகம் மற்றும் சருமத்துக்கான ஆலிவ் எண்ணெய்யின் நன்மைகள் - Olive oil benefits for face and skin in Tamil

உங்களுக்குத் தெரியுமா?

ஆலிவ் எண்ணெய், வரலாற்றின் மிகச் சிறந்த அழகு ரகசியம் ஆகும். கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள், இந்த எண்ணெய்யில் குளிக்குமாறு கூறப்பட்டு இருக்கின்றனர். கிளியோபாட்ராவின் வாசனைத் திரவியத்தில் ஒரு முக்கியமான பகுதியாக, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அறியப்பட்டு இருக்கிறது. உண்மையில், ஆலிவ் எண்ணெயில் இருக்கின்ற கொழுப்புகள், அதனை உங்கள் முகம் மற்றும் சருமத்துக்கு ஒரு மிகச் சிறந்த மாயிச்சரைசர் ஆக ஆக்குகின்றன. சர்வதேச ஆலிவ் சபையின் கருத்துப்படி, ஆலிவ் எண்ணெய், வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவற்றின் செறிவு நிறைந்தது, அதனால் அது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக இருக்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெய், ஒரு தெரிந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியான, ஸ்குவாலேனையும் (ஒரு வேதியியல் மூலக்கூறு) போதுமான அளவு கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூறுகள் இணைந்து, உங்கள் சருமத்துக்கு ஊட்டமளித்து மற்றும் அதனை மென்மையாக்குவதோடு மட்டும் அல்லாமல், கூடவே கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்கி, உங்கள் முகத்துக்கு ஒரு பளபளப்பான தோற்றத்தையும் தருகின்றன. சுத்தமான ஆலிவ் எண்ணெயுடன் மத்தியதரைக்கடல் பகுதி உணவினை எடுத்துக் கொள்ளும் ஒரு மக்கள் குழுவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, அவர்களுக்கு, ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளாத நபர்களை விட, தமனித் தடிப்பு (இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவு) ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. அது மேலும், ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்ற பாலிஃபெனால், மத்தியதரைக்கடல் உணவின் இந்த குறிப்பிட்ட நன்மைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கிறது. இருந்தாலும், ஆலிவ் எண்ணெய்யின் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க, உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக நல்லது.

இதயத்துக்காக ஆலிவ் எண்ணெய் - Olive oil for heart in Tamil

ஒரு புகழ்பெற்ற ஆய்வுப் பத்திரிக்கையின் கூற்றுப்படி, ஆலிவ் எண்ணெய், உங்கள் வழக்கமான தாவர எண்ணெய்களில் இருக்கின்ற கொழுப்புகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக, ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்களை (நல்ல கொழுப்புகள்) அதிக அளவில் கொண்டிருக்கிறது. மேலும் அது, தொடர்ந்து ஆலிவ் எண்ணெயை உட்கொண்டு வருவது, உடலில் இருக்கின்ற எச்.டி.எல் கொழுப்பு அல்லது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது எனவும் கூறுகிறது. கூடுதலாக, ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்ற, ஒரு வகை ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியான பாலிஃபெனோல்கள், உள்மூலக்கூறு சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. இப்பொழுது, உள்மூலக்கூறு என்றால் என்ன? என்பது போன்று நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கலாம். உள்மூலக்கூறு என்பவை, நமது உடலின் பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் மற்றும், மன அழுத்தம் மற்றும் மாசுக்கள் ஆகிய காரணிகளின் விளைவாக நமது உடலில் உருவாகும் ஒரு வகை எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள் ஆகும்.இந்த ஆக்சிஜன் இனங்கள், நமது உடலின் குறை-அடர்த்தி கொழுப்புகள் (எல்.டி.எல்) அல்லது கெட்ட கொழுப்புகளுடன் இணைவதன் மூலம், ஒரு மறைமுக பாதிப்பை ஆரம்பிக்கிறது. எல்.டி.எல். நச்சுத்தன்மை அடையும் பொழுது, அது படிமங்கள் வடிவத்தில் இரத்தக் குழாய்களின் சுவர்களில் சேர ஆரம்பிக்கிறது. இந்த சங்கிலித்தொடர், இதய நாள பிரச்சினைகளான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில் சென்று முடிகிறது, அதிர்ஷ்டவசமாக, பாலிஃபெனோல்கள் உள்மூலக்கூறுகளை சுத்தப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைத்து, அதன் மூலம், வழக்கமான இதய வியாதிகள் வரும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

(மேலும் படிக்க: இதய நோய் காரணங்கள் மற்றும் சிகிச்சை)

ஒரு அழற்சி எதிர்ப்பு காரணியாக ஆலிவ் எண்ணெய் - Olive oil as an anti-inflammatory agent in Tamil

மருத்துவர்கள் அழற்சியை, மூட்டழற்சி, நீரிழிவு, சில இதய நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களோடு தொடர்புடையதாகப் பார்க்கின்றனர். தொடர்ந்த அழற்சிக்கு (மெதுவாகப் பரவுகின்ற மற்றும் நீடித்து இருக்கின்ற அழற்சி வகை) பின்னால் இருக்கின்ற அறிவியலைப் பற்றி அதிக அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள், தொடர்ந்த அழற்சியை தூண்டுவதில், உணவுப்பழக்க முறைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கலாம் என நம்புகின்றனர். ஆயினும், மூட்டழற்சி போன்ற நோய்களில் ஏற்படும் அழற்சி அறிகுறிகள் (மூட்டு வீக்கம் மற்றும் வலி), நோயாளிகளிடைய ஒரு பெரும் அசௌகரியத்துக்கான ஒரு காரணமாக நீடிக்கிறது. ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்ற ஒலியோகேந்தல் ( ஒரு வேதி மூலக்கூறு), திறன்மிகுந்த அழற்சி-எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் ஒரு ஆய்வு, சுத்தமான ஆலிவ் எண்ணெய்யில் உள்ள அழற்சி - எதிர்ப்பு குணங்கள், மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றை மிகவும் ஒத்ததாக இருக்கின்றன என சுட்டிக் காட்டுகிறது. இருந்தாலும், ஆலிவ் எண்ணெயை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் பேசுவது விரும்பத்தத்தக்கது ஆகும்.

நீரிழிவுக்காக ஆலிவ் எண்ணெய் - Olive oil for diabetes in Tamil

அதிக இரத்த அளவுகள், முன்னர் பணக்கார, மேல்தட்டு மக்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு அறிகுறியாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது, நீரிழிவு நோய் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் தனது வேர்களைப் பரப்பி இருக்கிறது. மருத்துவர்களின் கருத்துப்படி இந்தப் பிரச்சினை, நகரத்தில் வாழும் மக்களின் மோசமான உணவுப் பழக்கத் தேர்வோடு இணைந்ததாக இருக்கக் கூடும். அதிகரித்த இரத்த அளவுகள், சமாளிப்பதற்கு கடினமாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அவை ஒருவரின் வாழ்க்கையை அதிகத் துயரம் மிக்கதாக ஆக்குகின்றன. சமீபத்தில் ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வுகள், நடுத்தரமான அளவு மத்திய தரைக்கடல் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் கணிசமான அளவில் குறைந்து இருப்பதாகத் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வில், மத்திய தரைக்கடல் வகை உணவுகள், இன்சுலினால் எடுத்துக் கொள்ளப்படும் சர்க்கரை அளவை அதிகரித்து, அதன் மூலம் இரத்தத்தில் உள்ள மொத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்க உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உணவு முறை முழுவதும், ஒரு அழற்சி எதிர்ப்பு பண்பைக் கொண்ட ஆலிவ் எண்ணெய் சார்ந்தது. அது, இந்த நோயின் தீவிரத்தை குறைப்பதில் மறைமுகமாக உதவுகிறது. இருப்பினும், அழற்சிக்கும் நீரிழிவுக்குமான நேரடியான தொடர்பு இதுவரை தெளிவாகவில்லை, ஆனால், உள்ளுக்குள் ஏற்படும் அழற்சியானது, இந்த நோய் ஏற்படக் காரணமான காரணிகளில் ஒன்றாக இருக்கக் கூடும் என யூகிக்கப்படுகிறது. நீங்கள் நீரிழிவோடு வாழ்பவர் எனறால், உங்கள் ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்து பேசி, அதன் பிறகு ஆலிவ் எண்ணையை உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

வயிற்றுப் புண்களுக்காக ஆலிவ் எண்ணெய் - Olive oil for stomach ulcers in Tamil

உங்கள் உணவு மற்றும் பழக்கூட்டுகளில் சேர்க்கப்படும், ஆலிவ் எண்ணெய், உங்களை  உணவில் உண்டாகும் வழக்கமான  நோய்க்கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது? அற்புதமானது, இல்லையா? சுத்தமான ஆலிவ் எண்ணெய்யின் நீர்ம சாரம், ஒரு மிகச் சிறந்த கிருமி எதிர்ப்பு காரணி என ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. சுத்தமான ஆலிவ் எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகளோடு சேர்க்கப்படும் பொழுது, சல்மோனெல்லா மற்றும் லிஸ்டெரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொல்வதில் திறன்மிக்கது என வெளிப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு பொருத்தம். தன்னைத்தானே பாதுகாக்கிற ஒரு உணவு. ஆனால் அதற்காக, அது அதன் குறிப்பிடப்பட்ட காலாவதி காலத்துக்கும் மேல் நீடிக்கும் என அர்த்தம் இல்லை. தயவு செய்து பயன்படுத்தும் முன் மேலேயுள்ள விவரக்குறிப்பை சரிபார்க்கவும். மேலும், ஆலிவ் எண்ணெய்யில் உள்ள பாலிபோனொல்கள், இந்த எண்ணெய்யின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புக்கு காரணம் ஆகும். ஆய்வக சோதனைகள், செரிமான புண்களுக்கு (வயிற்றில் புண்கள்) காரணமான காரணியான ஹெலிக்கோபாக்டெர் பைலோரி நுண்ணுயிரியைக் கொள்வதில், ஆலிவ் எண்ணெய் திறன்மிக்கதாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. இருப்பினும் வயிற்றுப் புண்களுக்கான சிகிச்சையில், ஆலிவ் எண்ணையின் செயல்திறனை அளவிடுவதை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே, இந்த வகைப் புண்களால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுமாறு நீங்கள் மிகவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் - Olive oil for improving brain function in Tamil

ஆலிவ் எண்ணெய் உங்களை புத்திசாலியாக மாற்ற முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? மத்திய தரைக்கடல் உணவின் மீதான சமீபத்திய ஆய்வுகள், ஆலிவ் எண்ணெய் உட்கொள்வது மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், கூடவே அறிவாற்றலையும் (மூளையின் நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்) மேம்படுத்துவதாகத் தெரிவிக்கின்றன. கூடுதல் ஆய்வுகள், ஆலிவ் எண்ணையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மூளையில் படிமங்கள் சேருவதைக் குறைக்கிறது எனக் கூறுகின்றன. மூளை படிமங்கள் என்பவை, அல்சைமர் போன்ற நரம்பு சார்ந்த குறைபாடுகளுக்குக் காரணமாகக் கூடிய ஒரு வகை புரதங்கள் மூளையில் சேர்வதாகும். ஆயினும், அல்சைமருக்கான சிகிச்சையில் ஆலிவ் எண்ணெய்யின் சரியான செயல்பாட்டினை மற்றும் முறைகளைப் புரிந்து கொள்ள ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.  ஆகவே மூளையின் ஆரோக்கியத்துக்கு, ஆலிவ் எண்ணெய்யின் நன்மை தரும் விளைவுகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

குழந்தைகளுக்கு ஆலிவ் எண்ணெய் - Olive oil for babies in Tamil

நம் அனைவருக்குமே நமது குழந்தைப் பருவத்தில் ஆலிவ் என்னை மஸாஜ் செய்யப்பட்டு இருக்கும், என நான் உறுதியாகக் கூறுகிறேன். உங்கள் தாயாரிடம் சென்று கூட உறுதி செய்து கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய், ஒரு குழந்தைக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? அது குழந்தையின் சருமத்தின் மீது, இதமளிக்கும், மென்மையான மற்றும் ஈரப்பதமூட்டும் ஒரு விளைவைக் கொண்டிருப்பதாக வாதிடுபவர்கள் கூறுகிறார்கள். அது, குழந்தைகளுக்கு ஊட்டமளிப்பதாகவும் மற்றும் அமைதிப்படுத்துவதாகவும் கூட அறியப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், வழக்கமாக அரையாடை தடிப்புகளைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கான அனைத்து எண்ணெய்களுக்கும் அரசனாக, ஆலிவ் எண்ணெய் இருக்கிறது. இருந்தாலும், சில குழந்தைகள் இயற்கையாகவே உணர்திறன் மிக்க சருமத்தைக் கொண்டிருப்பர் எனவே, உங்கள் குழந்தைக்கு ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்வதற்கு முன்பாக, உங்க மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

ஆலிவ் எண்ணெயின் புற்றுநோய்க்கு எதிரான திறன் - Olive oil anticancer potential in Tamil

இப்பொழுது புற்றுநோய், உலக அளவில் மனித இறப்புக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வளர்ந்து கொண்டு வருகிறது. டபிள்யூ.எச்.ஓ கருத்துப்படி, உணவுத் தேர்வுகள் மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவை, உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது. ஆலிவ் எண்ணெய்யின் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைப் பரிசோதிக்க, அதிகமான சாதகமான முடிவுகளுடன், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது பல ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அந்த ஆய்வுகள், ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்ற பாலிஃபோனொல்கள், புற்றுநோய் செல்களைக் கொன்று புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடியது எனத் தெரிவிக்கின்றன. அதற்கும் மேலாக, மத்தியதரைக்கடல் பகுதி மக்கள், குறிப்பிடத்தக்க அளவில் குறைவான எண்ணிக்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விஞ்ஞானிகள், இது மத்தியதரைக்கடல் உணவுகளில் உள்ள அதிக அளவு ஆலிவ் எண்ணெய் பொருட்களின் காரணமாக இருக்கக் கூடும் என நம்புகின்றனர். ஆலிவ்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய்யின் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைப் புரிந்து கொள்ள, உலக அளவில் ஆய்வுகள் இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன.

ஆலிவ் மரம், மத்திய தரைக்கடல் மண்டலத்தைச் சேர்ந்தது மற்றும் ஐரோப்பாவின் தென்கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவி இருக்கிறது. பாரம்பரியமாக, ஆலிவ் எண்ணெய், ஆலிவ் மரத்தில் (ஒலியா ஈரோபயியே) இருந்து குளிரூட்டும் முறை அல்லது கற்களால் அழுத்தும் முறையில் பெறப்படுகிறது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உதவியோடு, பழைய முறைகளுக்கு மாற்றாக, வேகமான மற்றும் சிறந்த சாதனங்கள் விரைவாக இடம் பிடித்துக் கொண்டு இருக்கின்றன.

ஆலிவ் எண்ணெய் நிபுணர்களின் கருத்துப்படி, எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆலிவ்களின் வகை மற்றும் அவை பழுத்திருப்பதைப் பொறுத்து, ஆலிவ் எண்ணெய்யின் சுவை வேறுபடக் கூடும். பொதுவாக, பழம் எந்த அளவுக்குப் பழுத்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு எண்ணெய் குறைந்த கசப்புடையதாக இருக்கும். பழுக்கும் அளவும் கூட எண்ணெய்யின் நிறத்தை பச்சையில் இருந்து ஒரு பச்சைக்கலந்த தங்க நிறத்துக்கு, பழுத்த ஆலிவ்களில் ஒரு வெண்மையான தங்க நிறத்துக்கு மாற்றுகிறது.

ஆக, இதன் அதிகமான நன்மைகளைப் பற்றி படித்த பிறகு, இப்பொழுது வெளியே சென்று, உங்களின் முதல் ஜாடியை வாங்க நீங்கள் விரும்பலாம். ஆனால், உங்களை மிகவும் வெளிப்படையாக குழப்பக் கூடிய எண்ணற்ற தேர்வுகள் சந்தையில் கிடைப்பதை நீங்கள் பார்க்கலாம். அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், சுத்தம் மற்றும் தரத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளதாக ஆலிவ் எண்ணெய்யை விற்பனை செய்கின்றன. ஆகவே, இது போன்ற விஷயத்தில், உங்களைக் கவரும் முதல் ஜாடிக்காக ஓட வேண்டாம். அதற்குப் பதிலாக, எண்ணெய், நேரடி வெளிச்சத்தில் படும்படி வைக்கப்படாத ஜாடி அல்லது குப்பியை வாங்குமாறு, ஆலிவ் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது ஏனென்றால், நேரடியான வெளிச்சம் அல்லது ஆக்சிஜன் படும்படி நீண்ட காலத்துக்கு வைக்கப்படுவது, எண்ணெய்யின் தரத்தைக் குறைப்பதில் ஒரு நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும், ஒரு நல்ல தரமான ஆலிவ் எண்ணெய், ஒரு காய்கறிகள் மற்றும் புல்லின் மெலிதான சுவையுடன், பழம் போன்ற சுவையில் உங்கள் வாயில் சுவையளிக்கத் தொடங்கும். அதை நீங்கள் விழுங்கும் பொது காரமாக மாறுகிறது மற்றும் விழுங்கிய பிறகு ஒரு மெலிதான கசப்பு சுவையை விட்டுச் செல்கிறது. நீங்கள் ஏதேனும் கெட்டுப் போனவாறு கவனித்தால், அந்த குறிப்பிட்ட வகை தரத்தை தவிர்ப்பது நல்லது. 

உணவு மருந்து நிர்வாகம், யு.எஸ்.ஏ- வின் படி, ஒரு நாளுக்கு 15-20 கிராம்கள் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளப்படலாம். இருந்தாலும், அதே அறிக்கையில், ஆலிவ் எண்ணெய், உங்கள் நிறைவுற்ற கொழுப்புக்கு ஒரு மாற்றாக இருக்க வேண்டுமேயல்லாது, ஒரு கூடுதல் பிற்சேர்க்கையாக இருக்கக் கூடாது எனவும் கூறப்பட்டு உள்ளது. அதாவது ஆலிவ் எண்ணெய்யை ஒரு மருந்தாகக் குடிக்காமல், அதற்குப் பதிலாக நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். இது ஏனென்றால், ஆலிவ் எண்ணெய் அதிகமான நன்மைகளைக் கொண்டு இருக்கிறது, ஆனாலும் அதில் கொழுப்புகள் அதிகம் உள்ளது. ஒப்பீட்டளவில் உங்கள் உடலுக்கு கொழுப்புகள் குறைந்த அளவு மட்டுமே தேவைப்படுகிற காரணத்தால், ஆலிவ் எண்ணெயை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அதை சேர்ப்பதால் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடும், எனவே ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தும் சரியான வழியைப் பற்றி, எப்போதும் உங்கள் மருத்துவரை நீங்கள் கேட்க வேண்டும்; அதனால் நீங்கள் அதிலிருந்து அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப்  பெற முடியும்.

மிகவும் கைபடாத என்ற வார்த்தைகள், ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் முறையைக் குறிக்கிறது. மிகவும் கைபடாத என்பது, சுத்திகரிக்கப்படாத ஆலிவ் எண்ணெய்யைக் குறிக்கிறது. பலவகையில் இது, ஆலிவ் எண்ணெய்யின் சிறந்த வகை எனக் கருதப்படுகிறது. ஆராச்சியாளர்கள் கருத்துப்படி சுத்திகரித்தல், ஆலிவ் எண்ணெய்யில் இருந்து சில முக்கியமான வேதி மூலக்கூறுகளை நீக்கி விடுகிறது. எனவே, எந்த அளவு குறைவாக சுத்திகரிப்போ அந்த அளவுக்கு ஆரோக்கியமான ஆலிவ் எண்ணெய். ஆலிவ்களை நேரடியாக, பல்வேறு இத்தாலிய மற்றும் கிரேக்க சமையல் குறிப்புகளில், ஒரு சமையல் சேர்மானமாக பயன்படுத்த முடியும். ஆலிவ் எண்ணெய், சமையல் பொருளாக அதன் பயன்பாட்டினைத் தவிர்த்து, சோப்புகள், ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் மற்றும் குறிப்பிட்ட அழகு சாதனப் பொருட்கள் ஆகிய மற்ற பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆலிவ் எண்ணெய்யை மேற்பூச்சாகத் தடவிய பிறகு, தோல் ஒவ்வாமைகள் ஏற்படுவதாக சில பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆகவே, நீங்கள் இயல்பாகவே உணர்திறன் மிக்க அல்லது எண்ணெய்பசை மிகுந்த சருமத்தைக் கொண்டிருந்தால், உங்கள் சருமத்தின் மீது ஆலிவ் எண்ணையைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. எக்ஸிமா மற்றும் சொரியாஸிஸ் போன்ற சில சரும பிரச்சினைகளை ஆலிவ் எண்ணெய் மேலும் மோசமாக்கக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எந்த ஒரு சருமப் பிரச்சினைக்கும் ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துவதற்கு முன்னால், ஒரு தோல் நோய் நிபுணரை ஆலோசிப்பது மிகவும் நல்லது.

கர்ப்ப காலத்தின் போது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதை, ஆதரிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் உணவுப் பழக்கத்தில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்வதற்கு முன்னால், அவர்களின் மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆலிவ் எண்ணெய் ஒரு இயற்கையான சர்க்கரை குறைப்பான் (இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது), எனவே, நீரிழிவு உள்ளவர்கள், அவர்களுக்கான ஆலிவ் எண்ணெய்யின் அளவை நிர்ணயிக்க தங்கள் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

மேற்கோள்கள்

 1. Nektaria Tsantila et al. Antithrombotic and Antiatherosclerotic Properties of Olive Oil and Olive Pomace Polar Extracts in Rabbits. Mediators Inflamm. 2007; 2007: 36204. PMID: 18253466
 2. Estruch R. Effects of a Mediterranean-style diet on cardiovascular risk factors: a randomized trial.. Ann Intern Med. 2006 Jul 4;145(1):1-11. PMID: 16818923
 3. Lucas L1, Russell A, Keast R. Molecular mechanisms of inflammation. Anti-inflammatory benefits of virgin olive oil and the phenolic compound oleocanthal.. Curr Pharm Des. 2011;17(8):754-68. PMID: 21443487
 4. Beauchamp GK et al. Phytochemistry: ibuprofen-like activity in extra-virgin olive oil. Nature. 2005 Sep 1;437(7055):45-6. PMID: 16136122
 5. Kastorini CM1, Panagiotakos DB. Dietary patterns and prevention of type 2 diabetes: from research to clinical practice; a systematic review. Curr Diabetes Rev. 2009 Nov;5(4):221-7. PMID: 19531025
 6. Medina E1, Romero C, Brenes M, De Castro A. Antimicrobial activity of olive oil, vinegar, and various beverages against foodborne pathogens. J Food Prot. 2007 May;70(5):1194-9. PMID: 17536679
 7. Lin YK1, Al-Suwayeh SA, Leu YL, Shen FM, Fang JY. Squalene-containing nanostructured lipid carriers promote percutaneous absorption and hair follicle targeting of diphencyprone for treating alopecia areata. Pharm Res. 2013 Feb;30(2):435-46. PMID: 23070602
 8. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Diet, nutrition and the prevention of cance.
 9. Fabiani R. Anti-cancer properties of olive oil secoiridoid phenols: a systematic review of in vivo studies. Food Funct. 2016 Oct 12;7(10):4145-4159. PMID: 27713961
 10. Trichopoulou A1, Lagiou P, Kuper H, Trichopoulos D. Cancer and Mediterranean dietary traditions. Cancer Epidemiol Biomarkers Prev. 2000 Sep;9(9):869-73. PMID: 11008902
 11. Owen RW1, Haubner R, Würtele G, Hull E, Spiegelhalder B, Bartsch H. Olives and olive oil in cancer prevention. Eur J Cancer Prev. 2004 Aug;13(4):319-26. PMID: 15554560
 12. Martínez-Lapiscina EH. Mediterranean diet improves cognition: the PREDIMED-NAVARRA randomised trial. J Neurol Neurosurg Psychiatry. 2013 Dec;84(12):1318-25. PMID: 23670794