ஜப்பானிஸ் என்செபலிடிஸ் - Japanese Encephalitis in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

April 24, 2019

July 31, 2020

ஜப்பானிஸ் என்செபலிடிஸ்
ஜப்பானிஸ் என்செபலிடிஸ்

ஜப்பானிஸ் என்செபலிடிஸ் என்றால் என்ன?

ஜப்பானிஸ் என்செபலிடிஸ் என்பது ஒரே மாதிரி மனிதர்களையும் விலங்குகளையும் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.என்செபலிடிஸ் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், என்செபலிடிஸ் என்பது மூளையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அழற்சி ஆகும். ஜப்பானிஸ் என்செபலிடிஸ் என்பது தடுப்பூசிகளின் மூலம் தடுக்கப்படும் ஒரு பொதுவான நோயாகும்.இந்த என்செபலிடிஸ் நோய்க்கான காரணி, ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் மேற்குப் பகுதிகளில் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.பொதுவாக 3-6 வயதுள்ள குழந்தைகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 1500-4000 மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த நோயினால் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. நோயாளிகளில் 1% க்கும் குறைவானவர்களே இந்த நோய்க்கான அறிகுறிகளை காணுகின்றனர். முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

சில நோயாளிகளில், பின்வரும் அறிகுறிகளும் காணப்படலாம்:

  • வலிப்பு.
  • இயக்க செயல்பாடு குறைபாடுகள்.
  • தசைகளில் அசாதாரண விறைப்பு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஜப்பானிஸ் என்செபலிடிஸ் நோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ் ஃபிளாவிவைரஸ் பேரின வகையை சேர்ந்தது .ஒரு வகை கொசுக்களின் மூலம் இந்த நோய் பரவுகிறது.இந்த நோயின் தொற்று ஆபத்து பின்வருவனவற்றை சார்ந்திருக்கிறது:

  • நீங்கள் தங்கியிருக்கும் இடம் அல்லது செல்லும் இடங்கள் (ஜப்பானிஸ் என்செபலிடிஸ் நோய்த்தாக்கம் பரவி உள்ள இடங்கள்).
  • நோய் பாதிப்புள்ள இடங்களில் தங்கியிருக்கும் காலங்களின் அடிப்படையில்.
  • நோய் பாதிப்புள்ள இடங்களில் வேலை செய்வதால் (அதிக நேரம் வெளியில் செலவழிப்பதால்).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

முழுமையான மருத்துவ அறிக்கை மற்றும் உடல் பரிசோதனையின் அடிப்படை நிலையின் மூலம் இந்த நோய்க்கான நோயறிதல் செய்யப்படுகிறது.நோயறிதலை உறுதிப்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகள் பின்வருமாறு:

  • இரத்த பரிசோதனை: வைரஸுக்கு எதிராக உள்ள ஆன்டிபாடிகளை கண்டறிய.
  • அடிமுதுகுத் துளை பரிசோதனை: மூளை தண்டுவட திரவத்தில் உள்ள எதிர்மங்களை பரிசோதிக்க.
  • மூளை ஸ்கேன்: மூளையில் ஏற்படும் பண்பு மாற்ற பிம்பங்களை காட்டுகின்றன

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க எந்த வித குறிப்பிட்ட மருந்துகளும் இல்லை அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற அதை சார்ந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த நோய் பாதிப்பு தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி கொடுக்கப்படலாம். குறிப்பாக, இந்த நோய் தாக்குதல் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யும் மக்களுக்கு நோய்க்கான தடுப்பூசி கொடுக்கப்படவேண்டும் .2 மாதங்களுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.எந்தவொரு தடுப்பூசியின் காரணமாகவும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த முறை சிகிச்சையினை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவார்.

சுயபாதுகாப்பு முறைகள்:

  • கொசுக்களால் வைரஸ் பரவுவதில் இருந்து பாதுகாக்க விரட்டிகள் மற்றும் கொசு வலைகள் போன்றவற்றை பயன்படுத்தப்படலாம்.
  • கொசு கடிப்பதை தவிர்ப்பதற்கு, வசதியான கைகளுக்கு நீளமான சட்டைகளை அணியலாம்.
  • கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீர் தேங்கியுள்ள குளங்கள் போன்றவற்றை அகற்றி உங்கள் சூழலை சுத்தம் செய்தல் ஆகியவை உங்களை இந்த நோய் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.



மேற்கோள்கள்

  1. Science Direct (Elsevier) [Internet]; Japanese encephalitis: a review of the Indian perspective.
  2. National Health Portal [Internet] India; Japanese-Encephalitis .
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; A review of Japanese encephalitis in Uttar Pradesh, India.
  4. Office of Infectious Disease and HIV/AIDS Policy. [Internet]. U.S. Department of Health and Human Services. Japanese Encephalitis (JE).
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Japanese Encephalitis.

ஜப்பானிஸ் என்செபலிடிஸ் க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஜப்பானிஸ் என்செபலிடிஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.