தலைவலி - Headache in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

December 08, 2018

March 06, 2020

தலைவலி
தலைவலி

சுருக்கம்

தலை அல்லது கழுத்துப் பகுதியோடு தொடர்புடைய எந்த ஒரு இடத்திலும் ஏற்படுகிற வலி தலைவலி ஆகும்அது, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் தொடர்புடையதாக, குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு இடத்தில் அல்லது ஒரு புள்ளியில் இருந்து பரவுவதாக இருக்கலாம், பெரும்பாலான தலைவலிகள் கூர்மையானதாக அல்லது மந்தமானதாக தோன்றி, பல நிமிடங்களுக்கு அல்லது சில நாட்களுக்குக் கூட நீடிக்கும். ஒரு தலைவலியை மதிப்பாய்வு செய்வது நேரடியானதாக அல்லது சவாலானதாக இருக்கக் கூடும். பெரும்பாலான நேரங்களில் தலைவலி பாதிப்பில்லாததாக இருந்தாலும், சில நேரங்களில் அவை மறைந்திருக்கும் கடுமையான நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம். தலைவலிகள் முதல் நிலையாக அல்லது இரண்டாம் நிலையாக இருக்கலாம். முதல் நிலை தலைவலிகள் ஒரு தெரிந்த காரணத்தைக் கொண்டிருக்காது; மாறாக, உள்ளுறுப்பு அமைப்புகளில் தசைச்சுருக்கம் அல்லது கட்டிக்கு காரணமாகக் கூடிய, மறைந்திருக்கும் நோய்க்குறிகள் அல்லது நிலைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பல்வேறுபட்ட தலைவலிகள் வழக்கமாக குறிப்பிட்ட அறிகுறிகளோடு தோன்றுகிறது, தனித்துவமாகக் தோன்றுகிறது, மேலும் அதனால் மிகவும் பொருத்தமான சிகிச்சைகள் தேவைப்படுகிறது.

தலைவலி என்ன - What is Headache in Tamil

தலை அல்லது கழுத்துப் பிரதேசத்தின் எந்த ஒரு பகுதியோடும் தொடர்புடைய, தொடர்ச்சியான அல்லது விடாப்பிடியான வலி, தலைவலியைக் குறிக்கிறது. ஒரு தலைவலியோடு வரக்கூடிய அறிகுறிகள், ஒரு மருத்துவரால் தலைவலியைப் புரிந்து கொள்ளுதலில் முடிவு செய்யும் காரணிகள் ஆகும். தலைவலிகள் பொதுவாக அறிகுறிகளின் அடிப்படையிலும் மருத்துவப் பரிசோதனைகள் மூலமும் அறிந்து கொள்ளப்படுகிறது. ஒருவேளை இரண்டாம் நிலை தலைவலியாக இருக்கும் என சந்தேகப்பட்டால், இமேஜிங் சோதனைகள் தேவைப்படுகிறது.

தலைவலிகள் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று, மேலும் ஒரு பெரிய வரிசை நரம்பியல் குறைபாடுகளை உள்ளடக்கியது. ஆண்களை விடப் பெண்களைத் தாக்கும் இயல்போடு, ஒரு தலைவலியின் வாழ்நாள் பாதிப்பு 96% ஆக ,மதிப்பிடப்படுகிறது. தற்போது, உலக அளவில் மன இறுக்க- தலைவலியின் பாதிப்பு ஏறத்தாழ 40%, ஒற்றைத்  தலைவலி 10%, மற்றும் கொத்து தலைவலி 1% ஆக இருக்கிறது. இக்காலத்தில், வல்லுநர்கள் அறிவுறுத்துவது, வெற்றிகரமான சிகிச்சையின் முதல் படி, அநேகமாய் மிகவும் முக்கியமான படி, தலைவலியின் வகை முதல் நிலையா அல்லது இரண்டாம் நிலையா என்பதை உறுதிப்படுத்துவே ஆகும். ஏனென்றால், சில எச்சரிக்கை குறிகளோடு இணைந்து தலைவலிகளின் வகைகளைப் புரிந்து கொள்வது, தலைவலியை திறமையாக சமாளிப்பதை உறுதி செய்யும் நீண்ட பாதையில் செல்ல உதவும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.

தலைவலி அறிகுறிகள் என்ன - Symptoms of Headache in Tamil

வேறுபட்ட தலைவலிகள் தனக்கே உரிய குணங்களுடன் வித்தியாசமாகத் தோன்றுகின்றன. ஒரு தலைவலியின் மாதிரியைத் கண்டறிய, உங்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்புள்ள தலைவலியை நோக்கியும், அதே போன்று தொடர்ந்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை திட்டத்தை நோக்கியும் தங்கள் கண்டறிதலைச் சுருக்குகிறார்கள்.. 

முதல் நிலை தலைவலி
சில பொதுவான தலைவலியின் வகைகள் மற்றும் அவை தோன்றுகின்ற அறிகுறி மாதிரிகள் பின்வருமாறு:

 • ஒற்றைத் தலைவலி
  ஒற்றைத் தலைவலி முற்றிலும் மரபுவழி சார்ந்த காரணங்களால் வருகிறது, அது வழக்கமாக கண்ணால் காணக் கூடிய அல்லது உணரக் கூடிய அறிகுறிகளோடு நரம்பு மண்டலத்தின் ஒரு முழுமீட்சி தொகுப்பினால் ஏற்படுகிறது. தலைவலிகள் பொதுவாக படிப்படியாக அதிகரிக்கும்; தணிவது - ஒரு 'அவுரா' என அறியப்படுகிறது; மேலும் கூடுதல் குணாதிசயங்களாக வேறுபட்ட கோணங்களில் திரும்பத் திரும்ப  வரும் தலைவலிகள், ஒளியினால்  உருவாகும் நிலை, தூங்குவதில் இடையூறு மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
   
 • மன இறுக்கம்-வகை தலைவலி
  இது ஏறத்தாழ 80% வாழ்நாள் பாதிப்பைத் தரக்கூடிய, தலைவலியின் மிகவும் பொதுவான ஒரு பிரிவு. இது வழக்கமாக ஒரு மந்தமான தலைவலியாக தோன்றுகிறது, பொதுவாகத் தலையின் இருபக்கமும் வரக்கூடியது, மிதமானதிலிருந்து நடுத்தரமான அளவு வரை தீவிரமானது, மேலும் அழுத்தம் அல்லது வலியோடு தொடர்புடையது. வழக்கமாக இதனுடன் இணைந்து தாக்கும் அம்சங்கள் கிடையாது மற்றும் தலைவலி அடிக்கடி ஏற்படாத, அடிக்கடி ஏற்படுகிற அல்லது நாள்பட்டதாக இருக்கக் கூடும்.
   
 • கொத்து தலைவலி
  ஒரு கொத்து தலைவலி என்பது திடீரென்று தொடங்கக் கூடிய, முகத்தின் நடு மற்றும் மேல் பகுதிகளோடு மற்றும் கண்களைச் சுற்றியும் ஏற்படும் தலைவலி. பல வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 1-8 தடவைகள் வரக் கூடும். ஒரு தலைவலியின் கொத்தான காலங்களுக்கு இடையில், சில காலங்களுக்கு தலைவலியின் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். இந்தத் தலைவலி அறிகுறியின்மை மாதங்கள் முதல் வருடங்கள் வரை நீடிக்கக் கூடும். இது பொதுவாக திடீரென்று ஆரம்பிக்கிறது, ஒரு எரியும் தரத்தைக் கொண்டிருக்கிறது, மற்றும் வழக்கமாக 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கிறது. எப்போதாவது அதே 24 - மணி நேர காலத்தில் இது திரும்ப வரலாம், அதனால், இதன் பெயர் 'அலாரக் கடிகார தலைவலி' எனப்படுகிறது. கண்களில் நீர் வடிதல், மூக்கு அடைத்தல் மற்றும் சிவந்து போதல் இதன் குணாதிசயங்கள்.
   
 • சைனஸ் தலைவலி
  தலைவலியுடன் கூடவே முகத்தில் வலி அல்லது அழுத்தம் மற்றும் மூக்கு மற்றும் சைனஸ்களில் அடைப்பு ஆகியவை பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளில் அடங்கியவை. சைனஸ் தலைவலி பெரும்பாலும் ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியா சைனஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் வருகிறது, இது கெட்டியான நிறமற்ற மூக்கு ஒழுகுதல், மணத்தை அறிவதில் குறைபாடு அல்லது மணம்  அறியாமல் இருப்பது, முகத்தில் வலி - அழுத்தம் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றோடு சேர்ந்து வருகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளோடு ஒரு வார காலத்தில் சரிசெய்யப்படுவதாக அறியப்படுகிறது.
   
 • இடிமுழக்க தலைவலி
  மிகக் கடுமையான மற்றும் தீவிரமான ஒரு வலி இதன் குணாதிசயம் ஆகும்.இந்தத் தலைவலி திடீரென்று அல்லது படிப்படியாக ஆரம்பிக்கலாம். இது முதல் நிலையாகவோ அல்லது இரண்டாம் நிலையாகவோ இருக்கக் கூடும். இரண்டாம் நிலை, மூளை இரத்தக் கசிவு, மூளையின் அழுத்தத்தில் ஒரு தாழ்வு நிலை மற்றும் உயர் இரத்த அழுத்தத்துக்குக் காரணமாகலாம்.
   
 • புதிய தினம்தோறும் தொடருகிற தலைவலி
  தெளிவாக நினைவு வைத்து, தினமும் தோன்றுகிற ஒரு தொடர்ந்த தலைவலி. இந்த வலி குணாதிசய அம்சங்கள் குறைவானது மற்றும் ஒற்றைத் தலைவலி மற்றும் மன இறுக்க தலைவலியின் அம்சங்களை ஒத்தது. அறிகுறிகள் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீடித்தால், நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது.
   
 • ஹெமிக்ரானியா கன்டினுவா
  இது, ஒரு பக்கமாக, நடுத்தர தீவிரமுடைய, நாள்பட்ட தினசரி தலைவலியின் ஒரு வகை,  கண்களில் நீர்வடிதல், சிவந்து போதல், மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் மற்றும் கொத்து தலைவலி போன்ற சோர்வான கண் இமைகள் போன்றவற்றோடு வருகிறது.

இரண்டாம் நிலை தலைவலிகள்
ஒரு தலைவலி முதல் நிலை தலைவலிப் பிரிவுகளில் எதனோடும் பொருந்திப் போகாமல் இருந்து, மேலும் மோசமடைந்தால், மறைந்திருக்கும் காரணம் ஒன்று உள்ளதாக சிகப்புக் கோடி காட்டப்படுகிறது. அதுபோன்ற இரண்டாம் நிலை தலைவலிகள் பாதிக்கும் காரணிகளைக் கொண்டிருக்காது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.

தலைவலி சிகிச்சை - Treatment of Headache in Tamil

சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்த வரை விரைவாக உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது பிரச்சினையை சமாளிக்க சிறந்த வழியாகும். அறிகுறிகளின் அடிப்படையில், உங்கள் மருத்துவர் பின்வரும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கலாம்:

உங்களுக்குக் கற்பித்தல் 
அனுபவிக்கும் தலைவலியின் வகையைப் பற்றி ஒருவருக்கு கற்றுத் தருதலே ஒரு வெற்றிகரமான சிகிச்சையில் பங்கெடுக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு, ஒவ்வொரு நிகழ்வின் விவரங்கள், அத்துடன், தொடர்புடைய தூண்டக்கூடிய காரணிகள், நிவாரணத்துக்கு எடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் குறிப்பிடத்தக்க தொடர் முன்னேற்றங்கள் பற்றிப் பதிவு செய்ய, ஒரு தலைவலி டைரி வழங்கக் கூடும்.

மனஅழுத்தத்தை சமாளித்தல் 
முன்னரே குறிப்பிட்டபடி, இந்தக் காலத்தில் மன அழுத்தம், தலைவலியைத் தூண்டக் கூடிய மிகவும் பொதுவான காரணிகளில் ஒன்று. உங்கள் மருத்துவர், யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள், நறுமண சிகிச்சை, இசை சிகிச்சை அல்லது செல்லப்பிராணி சிகிச்சை போன்ற பயனுள்ள மன அழுத்தக் குறைப்பு உத்திகளை உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்
அறிகுறிகள் மிகவும் தீவிரமாக அல்லது தொடர்ந்து இருந்தால், உங்கள் மருத்துவர் மருந்துகளைக் கண்டிப்பாக பரிந்துரைக்கிறார். வழக்கமாக இவை மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

 • அறிகுறி சார்ந்த மருந்துகள்
  இவை, பாராசிட்டமால், ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரோஃபென் போன்ற எளிதான, மருந்துக் கடைகளில் வாங்கக் கூடிய மருந்துகளை உள்ளடக்கியது. இருப்பினும், மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவது நனமையை விட தீங்கை விளைவிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; அதனால், உங்கள் மருத்துவரிடம் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக பரிசோதித்துக் கொள்வது நல்லது.
   
 • அழிப்பு மருந்துகள் 
  பெயருக்கு ஏற்றார் போல், இந்த மருந்துகள் தலைவலியின் முதல் குறிகள் ஆரம்பித்த உடனே தலைவலி அறிகுறிகளின் முன்னேற்றத்தை அழித்து விடுகின்றன. இந்தப் பிரிவில் பயன்படுத்தப்படும் மருந்துகளில், ஊசி மூலம் செலுத்தக் கூடிய எர்கோட்டமைன் மற்றும் சுமட்ரிப்டான் ஆகியவையும் அடங்கும். ஆயினும் இதற்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு வேண்டும்.    
   
 • தடுப்பு மருந்துகள்
  தலைவலி மிகவும் தீவிரமாக அல்லது அடிக்கடி ஏற்பட்டால், அவற்றுக்கு சிகிச்சையளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் ,அமிட்ரிப்லைன் போன்ற மன அழுத்த தடுப்பிகள்; அமிலோடிப்பைன் போன்ற கால்சியம் பாதை தடுப்பிகள்; பேனீராமைன் போன்ற ஹிஸ்டமின் எதிர்ப்பிகள்; வால்ப்ரோயேட் போன்ற வலிப்பு தடுப்பிகள் போன்றவை அடங்கும். இவை கண்டிப்பாக உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும் மற்றும் எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மாற்று மருத்துவங்களை முயற்சித்தல் 
இவை புதுவிதமான சிகிச்சைகள் மற்றும் வழக்கமாக பலன்களை அதிகரிக்க, பாரம்பரிய சிகிச்சைகளோடு இணைந்து அல்லது அவற்றை மேலும் அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் உள்ளடங்கியவை:

 • அக்குபஞ்சர்
 • ஆழ் மூளைத் தூண்டுதல்
 • உயிரியல் பின்னூட்டம்
 • அதிகரிக்கும் தசை தளர்த்துதல்
 • ஆலோசனை சிகிச்சை

வாழ்க்கைமுறை மாற்றங்கள்

 • தலைவலிகள் மிகவும் பொதுவாக வாழ்க்கைமுறை மற்றும் பழக்கங்களோடு இணைந்திருப்பதால், அவற்றைத் தடுப்பதற்கு சிறந்த வழி, உங்கள் வாழ்க்கை முறையில் பின்வரும் சில மாற்றங்களை இணைத்துக் கொள்வதே.
 • முறையான உறக்கம்
 • முறையான சாப்பாடு
 • முறையான உடற்பயிற்சி
 • வலியைத் தூண்டுவனவற்றைத் தவிர்ப்பது
 • மன அழுத்தத்தை சமாளித்தல்
 • எடைக் குறைப்பு (பொருந்தக் கூடியதாக இருந்தால்)
 • காஃபின் தவிர்த்தல்


மேற்கோள்கள்

 1. Paul Rizzoli, William J. Mullally. Headache. Harvard Medical School, Boston. January 2018 Volume 131. American Journal of Medicine,131(1), pp.17-24.
 2. Hale N, Paauw DS. Diagnosis and treatment of headache in the ambulatory care setting: a review of classic presentations and new considerations in diagnosis and management. Med Clin North Am. 2014 May;98(3):505-27. PMID: 24758958.
 3. Science Direct (Elsevier) [Internet]; Oral and Maxillofacial Pathology 3rd Edition
 4. American Migraine Foundation. [Internet]. Mount Royal, NJ.2019 American Migraine Foundation. Sinus Headaches.
 5. Dodick DW Thunderclap. Thunderclap headache. Headache Journal of Neurology, Neurosurgery & Psychiatry 2002;72:6-11.
 6. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Diagnosing Headache
 7. Probyn K, Bowers H, Caldwell F, Mistry D, Underwood M, Matharu M, Pincus T. Prognostic factors for chronic headache: A systematic review.. Neurology. 2017 Jul 18;89(3):291-301. PMID: 28615422.
 8. Winchester Hospital. [Internet]. Beth Israel Lahey Health, Winchester, MA. Risk Factors for Headache.

தலைவலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for தலைவலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.