தசை வலி - Muscle Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

February 07, 2019

September 10, 2020

தசை வலி
தசை வலி

சுருக்கம்

தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும். இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும்  காரணத்தை பொறுத்தது. தசை வலியின் மிக பொதுவான காரணங்கள் சோர்வு, மன அழுத்தம், தவறான உடல் நிலை பயன்பாடுகள், காயங்கள் மற்றும் நேய் தொற்று உள்ளிட்டவை ஆகும். தசை வலியானது பொதுவாக ஒரு சில நாட்களுக்குள் தானகவே குணமடைய கூடும். எனினும், நீண்டகால தசை வலியானது ஒரு அடிப்படை உடல் நல கோளாறின் அடையாளமாக இருக்கலாம். இரத்த பரிசோதனைகள், இமேஜிங் சோதனைகள், மற்றும் முழு உடல் பரிசோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தசை வலி நோயை கண்டறியலாம். சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற தசை வலிக்கு, சூடான நீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்வது போன்ற வீட்டு வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பிசியோ தெரபி, வலி நிவாரண மருந்துகள், மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பிற சிகிச்சைக்களும் இதில் அடங்கும்.

தசை வலி அறிகுறிகள் என்ன - Symptoms of Muscle Ache in Tamil

தசை வலியின் முக்கிய அறிகுறியானது உடலின் சில பகுதிகளில் ஏற்படும் பல்வேறு தீவிரமான அசௌகரியத்தை அனுபவிப்பதாகும்.

 • வலியானது தெளிவற்ற மற்றும் பரவியும் இருக்கலாம். இந்த வகையான தசை வலிகள் பொதுவாக சோர்வு மற்றும் களைப்பு காரணத்தால் ஏற்படும். இது பொதுவாக ஓய்வு எடுப்பதின் மூலம் சரி செய்யலாம்.
 • சாதாரணமான கால் காயங்களினால் கூட கூர்மையான மற்றும் தீவிரமான தசை வலி ஏற்படலாம். பாதிக்கப்பட்ட தசைகள் முறுக்கிக்கொள்ளவதினால் வலியானது மேலும் மோசமடைகிறது.
 • தசை வலியானது சுளுக்கு அல்லது ஆழமான இரத்த நரம்பு உறைவு போன்ற நிலைமையின் காரணத்தால் அடிக்கடி ஏற்படுக்கிறது, ஆதலால் அதை துடிப்பு என விவரிக்கப்படுகிறது.
 • மன அழுத்தம் தொடர்பான தசை வலிகள் பெரும்பாலும் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் ஏற்படுவதை கானலாம்.
 • மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து தசை வலி ஏற்படலாம். அவை:
  • பலவீனம்.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் அசைவு ஏற்படும்போது வலி.
  • அழற்சி.
  • சிவத்தல்.
  • வீக்கம்.

தசை வலியின் அறிகுறிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தசைகளை பொறுத்தது. உதாரணமாக, கனமான பயிற்சியின் காரணத்தினால் வயிற்று தசைகளில் வலி ஏற்படல். இருப்பினும், ஒரு நபர் விரைந்து சுவாசிக்கும்போது அல்லது விரைவாக சிரிக்கும்போது, வலியை அனுபவிக்கலாம். கழுத்து பகுதிகளில் உள்ள தசை வலியிலிருந்து தற்காத்துக்கொள்ள கழுத்தை எல்லா பக்கங்களிலும் சுற்றவும் மற்றும் ஒரு பக்கத்தில் மட்டும் கழுத்தை வளைக்க முயலும்போது ஒரு கூர்மையான வலியை ஏற்படுத்தும்.

தசை வலி சிகிச்சை - Treatment of Muscle Ache in Tamil

தசை வலியின் சிகிச்சையானது பெரும்பாலும், வலியின் காரணம் மற்றும் உடலில் ஏற்படும் வலியின் பகுதியை பொறுத்தாகும்.

 • காயங்களின் காரணமாக தசை வலி ஏற்பட்டால், அது இயற்கையாக குணமடையவதற்கு உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கலாம். சில சந்தர்ப்பங்களில், ஊன்று கோல் அல்லது பிடிப்பு கோல் போன்ற மருத்துவ உபகரணங்களின் உதவிகள் தசை வலியிலிருந்து வேகமாக குணமடைய தேவைப்படுக்கிறது.
 • தசைப்பிடிப்பு மற்றும் தொடர்ச்சியான தசை வலிக்கு, தசையைத் தளர்வு செய்யும் நிவாரண மருந்துகள் அளிக்கப்படுகிறது.
 • ஈபுப்ரொஃபென் மற்றும் டிக்லொஃபெனக் போன்ற என் ஸ் ஏ ஐ டிகளனது (ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) மற்ற சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம். மேலும் வலி நிவாரண மருந்துகள் குறுகிய காலத்திற்குள் வலியை எளிதாக குணமடைய செய்கிறது. வீக்கத்தை குறைப்பதற்கு பெயின்கில்லர்கள் உதவுகின்றன. கால் காயங்களின் காரணமாக ஏற்படும் வலிக்கு பெரும்பாலும் இது பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், நீங்கள் உடல் நிலையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டுருந்தால், வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது.
 • ஹிட்டிங் பேடு பயன்படுத்துவது தசை வலியை குறைக்கும், மற்றொரு எளிதான வழியாகும். ஹிட்டிங் பேடு மற்றும் சூடான தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை, பொதுவாக சுளுக்கு அல்லது தசைப்பிடிப்பு போன்ற காரணத்தால் ஏற்படும் வலியை குறைக்க பயன்படுகிறது. ஹிட்டிங் பேடு பயன்பாடுனாது கருப்பையில் உள்ள தசை சுருக்கங்களின் காரணமாக ஏற்படும் மாதவிடாய் பிடிப்பு வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.  ஹிட்டிங் பேடை பாதிக்கப்பட்ட பகுதியின் மீது வைக்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளில் பல முறை பயன்படுத்தலாம்.
 • ஆயின்மென்ட்கள் என்பது பொதுவாக தசை வலிக்கு தரப்படும் ஒரு மேற்பூச்சு, இது தசை வலிக்கு ஒரு பொதுவான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. ஆயின்மென்ட்களில் உறிஞ்சக்கூடிய தன்மை இருப்பதால் அது தோலின் கீழ்யுள்ள வீக்கங்களை உடனடியாக குறைக்கும் வலி நிவாரண மருந்தாக உள்ளது. ஆயின்மென்ட்கள் லேசான வலியில் இருந்து மிதமான தசை வலிகளுக்கு இது நன்றாக வேலை செய்கின்றன மற்றும் இது பொதுவாக கால்கள், முதுகு மற்றும் தோள்பட்டை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
 • பிசியோதெரபியுடன் இணைந்த உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரண மருந்துகளின் கலவையானது நீண்ட கால முதுகுவலிக்கான சிகிச்சையாகும். சிலர் குத்தூசி மருத்துவம் போன்ற நுட்பங்களை பயன்படுத்தி நிவாரணம் அடைந்தாக தெரிவிக்கின்றனர். இது போன்ற சிகிச்சைகள் உதவாமல் போனால், அறுவைசிகிச்சைகள் பரிந்துரைக்கப்படலாம்.
 • ஃபைப்ரோமியால்ஜியா என்பது பிசியோதெரபி மற்றும் உளவியல் சிகிச்சையுடன் (ஒரு நிபுணர் ஆலோசகரின் உதவியுடன்) சேர்ந்த வலி நிவாரண மருந்தாகும்.

வாழ்க்கை மேலாண்மைகள்

 • சில சமயங்களில் அடிக்கடி ஏற்படும் தசை வலிக்களுக்கு வீட்டிலேயே அதற்கான தீர்வு காணலாம். அதற்கு முதலில் ஓய்வு எடுக்க வேண்டும். தசை வலியானது உழைப்பு மற்றும் தொடர்ச்சியான வேலைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட உடல் செயல்பாடுகளினால் ஏற்படலாம். தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் சிறிது நேரம் செயல்பாடுகளை நிறுத்துவது மிகவும் உதவியாக இருக்கும்.
 • கடுமையான காயங்களுக்கு, ஐஸ் பேக்களைப் பயன்படுத்தவும். தசை வலிக்கும் பகுதியில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவும்.
 • நீண்ட காலமாக ஆழ்ந்த மன அழுத்தத்தின் கீழ் உள்ள மக்களுக்கு அடிக்கடி தசை வலி ஏற்படலாம். மன அழுத்தம் தொடர்பான தசை வலிக்கு தியானப் பயிற்சி மேற்கொள்வது மூலம் அதை தவிர்க்க முடியும். தியானமானது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் பல நன்மைகளை அளிக்கிறது. யோகா அல்லது சிகிச்சை போன்ற பிற மன அழுத்தத்தை குறைக்கும் நுட்பங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப எடுத்து கொள்ளலாம்.
 • தொழில்முறை தெரிந்து பணிபுரியும் உடற்பயிற்சிக் கூடத்தில் இருப்பவரின் மேற்பார்வையின் கீழ் உடற்பயிற்சிகளை கடைப்பிடித்து சரியான உடல் தோற்றத்தை பராமரிப்பதே சிறப்பாகும். இந்த கடுமையான உடல் செயல்பாடுகளின் காரணமாக ஏற்படும் தசை வலியில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
 • பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்வதினால் தசைகளில் இருக்கும் பதற்றம் மற்றும் விறைப்புகளை வெளியிட உதவுகிறது.
 • தசை வலியை தீர்க்கும் வரை உயர் தாக்க நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவும் என பரிந்துரைக்கப்படுகிறது.

தசை வலி என்ன - What is Muscle Ache in Tamil

தசை வலியானது ஒரு பொதுவான நிகழ்வாகும் மற்றும் இது பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் சில நேரங்களில் இதை அனுபவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இது பல காரணிகளினால் ஏற்படலாம் மற்றும் இதற்கான சிகிச்சை அணுகுமுறைகளை இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தசை வலி என்றால் என்ன?

தசை வலி என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு வலியாகும். இருப்பினும், இதன் அறிகுறிகள் உடல் நிலையை அடிப்படையாக கொண்டது. தசை வலியை உடலில் உள்ள சில தசைகளில் ஏற்படும் அசௌகரியத்தை குறிக்கிறது. இருப்பினும், சிலர் இதை உடல் முழுவதும் அனுபவித்திருக்கலாம். தசை வலியை மருத்துவ ரீதியாக, மைலஜியா என்று அழைக்கப்படுகிறது. இது பல காரணங்களினால் கடுமையான அல்லது நாள்பட்ட வலியாக இருக்கலாம். காயங்களும் தசை வலிக்கு காரணமாக இருக்கலாம். இது காய்ச்சல், தடிப்பு அல்லது வீக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருக்கலாம். தசை வலியானது தானகவே குணமடையும் ஆனால் சில சூழ்நிலைகளில் நீண்ட காலத்திற்கு இது தொடர்ந்தும் இருக்கலாம்.மேற்கோள்கள்

 1. American Academy of Orthopaedic Surgeons [Internet] Rosemont, Illinois, United States; Compartment Syndrome.
 2. American Academy of Orthopaedic Surgeons [Internet] Rosemont, Illinois, United States; Sprains, Strains and Other Soft-Tissue Injuries.
 3. National Fibromyalgia Association [Internet] California; Diagnosis Fibromyalgia.
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Muscle aches.
 5. National Pharmaceutical Council [Inetrnet]; Management of Acute Pain and Chronic Noncancer Pain.

தசை வலி க்கான மருந்துகள்

தசை வலி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।