அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) - Amyotrophic Lateral Sclerosis (ALS) in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 21, 2018

July 31, 2020

அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ்
அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ்

அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்)) அல்லது லூ கெஹ்ரிக்'ஸ் நோய் என்றால் என்ன?

ஏஎல்எஸ் என்பது, லூ கெஹ்ரிக்'ஸ் நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நரம்பியல் நோயாகும். இந்த நோய், நாட்கள் செல்லச்செல்ல மோசமடைந்து பலவீனத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் நரம்பின் செல்களை அழித்துவிடுவதால், இயலாமைக்கு காரணமாகிவிடுகிறது. சிறிய அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த நோய், பின்னர் அசைவின்மை மற்றும் சுவாசிக்க இயலாமை வரை முன்னேறிவிடுகிறது. இது இறுதியில் மரணதிற்கு வழிவகுக்கிறது.

ஏஎல்எஸ்ஸின் குறியீடுகள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?

ஆரம்பகட்டத்தில் ஏஎல்எஸ்ஸின் அறிகுறிகள் மிக அற்பமானதாக தோன்றும், ஆனால் இந்த நோயின் வீரியம்  அதிகரிக்கும்போது உடல் நிலை மோசமடைய ஆரம்பித்துவிடும். பிரச்சனை மூட்டுகளில் தொடங்கி மெதுவாக மற்ற உடலுறுப்புகளுக்கு பரவிவிடும். இது உணவை மென்று உண்ணுதல் மற்றும் விழுங்குதல் போன்ற திறன்களையும், சுவாசிப்பு மற்றும் பேச்சுத்திறன்களையும் பாதிக்கிறது. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • தடுமாற்றம் அல்லது அடிக்கடி வீழ்வது.
  • தசை பலவீனமடைதல்.
  • மூட்டுகளிள் ஒருங்கிணைப்பு இல்லாமை.
  • தடுமாற்றத்துடனோ அல்லது செயல்திறனில்லாமலோ இருப்பது.
  • கணுக்கால் மற்றும் பாதம் உட்பட மூட்டுகளின் கீழ் பலவீனம் ஏற்படுதல்.
  • குளறுவதால் ஏற்படும் தெளிவற்ற பேச்சு.
  • தசை பிடிப்புகள்.
  • தோற்றத்தை பராமரிப்பதிலும் அல்லது தலையை நிமிர்த்திவைப்பதிலும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
  • மிகுந்த சிரமத்துடன் விழுங்குதல்.
  • திடீரெனத் தசை வெட்டி இழுத்தல்.

ஏஎல்எஸ்ஸின் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சரியான காரணங்களை பற்றி குறைவான தகவல்களே உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் 10 சதவிகித கேஸ்கள் மரபுரிமையால் ஏற்படுகின்றது, மற்றவைக்கான காரணங்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை. சில சாத்தியமுள்ள காரணங்கள் பின்வருமாறு:

  • மாற்றியமைக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட மரபணு கட்டமைப்புகள்.
  • சமநிலை இல்லாத குளுட்டமேட் அளவுவானது (நரம்புகளிலிருந்து தசைகளுக்கு செய்தியை அனுப்பும் ஒரு ரசாயனம்) செல்களில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்குகிறது.
  • நரம்பின் செல்களில் உருவாகும் ஆட்டோ இம்யூன் செயல்பாடுகள்.
  • புரத சத்தின் குவிப்பு அல்லது நரம்பு செல்களில் இருக்கும் புரத வடிவத்தினால் ஏற்படும் குறைபாடுகள் அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது.
  • நச்சுத்தன்மை மிகுந்த பொருட்களினால் உடலில் ஏற்படும் வெளிப்பாடு.
  • ஓய்வில்லாத கடுமையான உடல் செயல்பாடு.

ஏஎல்எஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஏஎல்எஸ், அதன் ஆரம்பநாட்களில், பிற நரம்பியல் கோளாறுகளோ என எண்ணவைத்து குழப்பமடைய செய்யும். இதை கண்டறிவதற்கான முக்கிய குறிப்பு முதலில் மற்ற நிலைகளை சரிசெய்யும் சாத்தியத்தை சார்ந்ததே. இதை அறிந்துகொள்ள மேற்கொள்ளவேண்டிய சோதனைகள் பின்வருமாறு:

  • ஈஎம்ஜி அல்லது எலக்ட்ரோமையோகிராம் எனப்படுவது தசைகளின் செயல்பாட்டை சோதித்து பிற நரம்புத்தசை நிலைகளை அறிந்துகொள்ள உதவுகிறது.
  • இம்பல்ஸ் பரிமாற்றத்தை கண்டறியும் நரம்பு கடத்தல் சோதனையானது நரம்புச்சேதம் இருந்தாலோ அல்லது தசைநோய்கள் இருந்தாலோ அதையும் சுட்டிக்காட்டுகிறது.
  • முதுகெலும்பில் அல்லது ஹெர்னியேட்டட் டிஸ்க்கில் இருக்கும் கட்டிகளை கண்டறிவதற்காக எம்ஆர்ஐ சோதனை செய்யப்படுகிறது.
  • மற்ற நிலைகளை அறிவதற்காக சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
  • சோதனைக்காக செரிப்ரோஸ்பைனல் திரவத்தை பெறுவதற்கு முதுகு தண்டுவடத்தில் துளையிடுதல்.
  • கூடுதல் ஆய்வுக்காக தசைகளின் திசுகளை பரிசோதித்தல்.

தற்போது ஏஎல்எஸ்சை குணப்படுத்துவதற்கோ அல்லது பழைய நிலைக்கு மாற்றுவதற்கோ எந்த சிகிச்சை முறையும் இல்லை. எனினும், பாதிக்கப்பட்ட நபர் மிக சௌகரியமாக உணரவும் மற்றும் இந்த நோயின் வீரியத்தை குறைப்பதற்கும் சில சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அவை பின்வருமாறு:

  • மருந்தளிப்பு:
    வழக்கமாக இரண்டு முக்கிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன:
    • தினசரி நடவடிக்கைளில் ஏற்படும் தடைகளை தவிர்க்க எடராவோன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொமை எதிர்வினைகள், மூச்சு திணறல் அல்லது வீக்கம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
    • குளுட்டோமேட்டின் அளவை குறைத்து நோயின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் ரிலூசோல். கல்லீரல் செயல்பாட்டு கோளாறு, இரைப்பை சிக்கல் மற்றும் தலைசுற்றல் போன்றவையே இதன் பக்கவிளைவுகளாகும்.
    • தசைப்பிடிப்புகள், மலச்சிக்கல், உடல்சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை, வலி, மூக்கடைப்பு மற்றும் உமிழ்நீர் ஊறச்செய்தல் போன்றஅறிகுறிகளுக்கான மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.
  • ஆதரவளிக்கும் சிகிச்சைகள்:
    இவை பாதிக்கப்பட்ட நபரின் நிலையை சமநிலைக்கு கொண்டுவர முயற்சிக்கும் நோக்கத்தையே குறிக்கோளாக கொண்டவை மற்றும் நல்ல செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டை அளிக்கிறது. இவை பின்வருமாறு:
    • உணவருந்துவது, உடைமாற்றுவது மற்றும் மூட்டுகள் பலவீனமாயிருந்தாலும் அதை பொறுட்படுத்தாது நடப்பது போன்ற தினசரி செயல்களை செய்வதற்கு உதவும் தொழில் சார்ந்த சிகிச்சை.
    • சுலபமாக மூச்சு விடுவதற்காக மூச்சு பயிற்சிகள் உதவுகிறது, குறிப்பாக இரவுநேரத்தில் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் ஏனெனில் இரவிலும் மற்றும் உறங்கும்போதுமே நோயின் வீரியம் அதிகரிக்கும். இயந்திரத்தின் மூலம் சுவாசத்தலும் தேவைப்படக்கூடும்.
    • வலி நிவாரணத்திற்காகவும், சமநிலைக்காகவும், இயக்கதிற்காகவும் மற்றும் சீரமைப்பிற்காகவும் பிஸிக்கல் சிகிச்சை உதவுகிறது. இது உடலை வலிமையாக வைத்திருப்பதற்கு உதவும் என்றாலும் பாதிக்கப்பட்ட நபர் இறுதியில் இயக்கத்திற்காக ஒரு சக்கரநாற்காலியை பயன்படுத்துவதற்கு பழக வேண்டிவரலாம்.
    • மற்றவர்களுடன் தெளிவாகவும் திறம்படவும் தொடர்கொள்வதற்காக பேச்சு பயிற்சி.
    • பாதிக்கப்பட்ட நபரால் இந்த நிலையை தனியாக கையாளுவது சாத்தியமற்றது என்பதால், சமூக மற்றும் உணர்வுரீதியான ஆதரவு தேவைப்படும்.



மேற்கோள்கள்

  1. Daniel Murrell. All about amyotrophic lateral sclerosis (ALS). Healthline Media UK Ltd, Brighton, UK. [internet]
  2. National institute of neurological disorders and stroke [internet]. US Department of Health and Human Services; Neurological Diagnostic Tests and Procedures Fact Sheet
  3. National institute of neurological disorders and stroke [internet]. US Department of Health and Human Services; Amyotrophic Lateral Sclerosis (ALS) Fact Sheet
  4. U.S. Department of Health & Human Services USA. National Amyotrophic Lateral Sclerosis (ALS) Registry. Centres for Disease Control and Preventiobn
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Amyotrophic Lateral Sclerosis

அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) டாக்டர்கள்

Dr. Vinayak Jatale Dr. Vinayak Jatale Neurology
3 Years of Experience
Dr. Sameer Arora Dr. Sameer Arora Neurology
10 Years of Experience
Dr. Khursheed Kazmi Dr. Khursheed Kazmi Neurology
10 Years of Experience
Dr. Muthukani S Dr. Muthukani S Neurology
4 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.