மலச்சிக்கல் - Constipation in Tamil

மலச்சிக்கல்
மலச்சிக்கல்

சுருக்கம்

மலச்சிக்கல் என்பது குடல் செயல்பாடுகள் கஷ்டம் ஆகும் போது மற்றும் குறைவாக அடிக்கடி தோன்றும் ஒரு நிலை ஆகும். இது, உணவுப் பழக்கம், மருத்துவ சரித்திரம் அல்லது மற்ற உடல் நலக் கோளாறுகள் போன்ற பலவித காரணிகளோடு தொடர்புடையது. சிலநேரங்களில், குறிப்பிட்ட மருந்துகள் கூட மலச்சிக்கலுக்கு காரணமாகலாம். மருத்துவர்களின் கருத்துப்படி, மலச்சிக்கல் ஒரு நோயல்ல, ஆனால் மறைந்திருக்கும் செரிமானப் பிரச்சினையை வெளிப்படுத்துகிற ஒன்றாகும். மலச்சிக்கலுக்கான மற்ற காரணங்களில், குடலில் ஏற்படும் அடைப்புகள், பலவீனமான இடுப்புத் தசைகள், உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பது அல்லது நீர் வற்றிப்போதல் இவையும் அடங்கும்.

மலமிளக்கிகள் என அறியப்படும், மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு மலச்சிக்கலை திறமையாகக் கையாள முடியும். இந்த மருந்துகள் உடனடியாக பலன் அளித்தாலும், அவற்றைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பலவித வீட்டு மருத்துவங்களும் காப்பாற்ற வருகின்றன. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினையானதாக இருக்கலாம், மேலும் மருத்துவர் காரணத்தைக் கண்டறிய பலவித சோதனைகளும் தேவைப்படலாம். உணவுப் பழக்க மாற்றங்கள் மலச்சிக்கலை சமாளிப்பதில் பெரிதும் உதவுகின்றன என்பது நிரூபணமானது. சிகிச்சையளிக்காமல் விட்டால் மலச்சிக்கல்களின் தொகுப்பு உருவாகக் கூடும்.

மலச்சிக்கல் அறிகுறிகள் என்ன - Symptoms of Constipation in Tamil

மலச்சிக்கலின் அறிகுறிகள் எளிதாக அடையாளம் காணக் கூடியவை மற்றும் இவற்றை உள்ளடக்கியவை:

 • வழக்கத்தை விடக் குறைவான குடல் செயல்பாடுகள்.
 • முழுமையற்ற குடல் செயல்பாடுகள் போன்ற உணர்வு.
 • மலம் கழித்தலில் சிரமம் அல்லது வலி.
 • கடினமான மலம்.

இந்த அறிகுறிகள் ஒரு சில மணிகளில் தணியலாம் அல்லது அதற்கும் மேல் நீடிக்கலாம். எவ்வாறாயினும், பின்வரும் அறிகுறிகளை ஒரு நபர் உணர்ந்தால், அவர்/அவள் உடனடியாகத் தங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்:

மலச்சிக்கல் சிகிச்சை - Treatment of Constipation in Tamil

உடனடி நிவாரணத்தை வழங்க, உங்கள் மருத்துவர் மலமிளக்கிகளைப் பரிந்துரைக்கலாம். இந்த மலமிளக்கிகள் எப்போதாவது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க  உதவுகிறது, ஆனால் மறைந்திருக்கும் காரணத்தைக் குணப்படுத்தாது. மலமிளக்கிகளின் அதீத பயன்பாடு கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கக் கூடும். மேலும் நீண்ட கால உபயோகத்தில் தீங்கு விளைவிக்கக் கூடியது.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட நபர்கள் மலமிளக்கிகளை அதிகமாகப் பயன்படுத்துவது மிகவும் வழக்கமானது. அது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. உண்ணும் குறைபாடு உள்ள நபர்களுக்கு, மலமிளக்கிகளின் தொடர்ச்சியான பயன்பாடு மிகவும் தீங்கானது மற்றும் செரிமானப் பாதையின் உட்புற சுவர்களைப் பாதிக்கக் கூடியது. ஆகவே, நிவாரணம் பெற, மருந்துக்கடையில் கிடைக்கும் மலமிளக்கிகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

மலமிளக்கிகளை எடுத்துக்கொண்ட பிறகு பின்வரும் அறிகுறிகளை ஒரு நபர் உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை கண்டிப்பாகத் தொடர்பு கொள்ள வேண்டும்:

 • மலம் கழிக்கும் போது இரத்தப்போக்கு.
 • மூக்கிலிருந்து இரத்தப்போக்கு.
 • அடிவயிற்று வலி.
 • குமட்டல்.
 • குடல் செயல்பாடுகளில் மாற்றம்.
 • பலவீனம்.

மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க மருந்துக் கடைகளில் பலவித மலமிளக்கிகள் கிடைக்கின்றன. வாய்வழி சவ்வூடு பரப்பி இயற்றிகள், மலத்திற்கு எளிதான பாதையை செயல்படுத்த தண்ணீரை பெருங்குடலுக்குள் ஊற்றுகின்றன. வாய்வழி திரள் உருவாக்கிகள், நேர்மாறான விதத்தில், மலம் எளிதாக வெளியேறுவதற்காக, மலத்தை உருவாக்க நீரை உறிஞ்சுகின்றன. மற்ற மலமிளக்கிகளில் வாய்வழி மலம் மென்மையாக்கிகள் மற்றும் வாய்வழித் தூண்டி விடுபவைகளும் அடங்கும்.

வாய்வழி மலமிளக்கிகள், குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகளை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிக்கக் கூடும். சில மலமிளக்கிகள் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்தலாம். மலமிளக்கிகளை எடுத்துக் கொள்ளும் முன்னர், பின்வரும் விஷயங்களை சரிபார்க்க அட்டையைப் படிப்பது அவசியம்:

 • தொடர்புடைய பக்க விளைவுகள்.
 • மருந்துகளுக்கு எதிர்ச்செயல்.
 • நீரிழிவு, சிறுநீரக பிரச்சினைகள் அல்லது கர்ப்பம் போன்ற உடல் நிலைகளில் செயல்பாடு.
 • மருத்துவரை முன்கூட்டியே கலந்தாலோசிக்காமல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மலமிளக்கிகள் கொடுக்கப்படக் கூடாது.
 • மருத்துவர்கள் உண்ணும் வழக்கம் மற்றும் உணவு முறைகளில் கவனம் செலுத்தினால் மலச்சிக்கல் பிரச்சினையைத் தவிர்க்க இயலும் என அறிவுறுத்துகிறார்கள். நாளாவட்டத்தில் மலச்சிக்கல் தீவிரமாகவும், மோசமானதாகவும் மாறினால், மருத்துவர் வேறு சில மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். ஒருவேளை ஏதேனும் அடைப்பு இருந்தால், அதனை சரி செய்ய மருத்துவர் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

வீட்டு மருத்துவங்கள்

வீட்டு மருத்துவங்களும் மலச்சிக்கலுக்கு நிவாரணமளிப்பதில் பெரிதும் உதவக் கூடியவை. சில எளிதான வீட்டு மருத்துவங்கள் பின்வருமாறு:

 • பெருங்காயம்
  பெருங்காயம் துண்டுகள் இரண்டு சிட்டிகை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்.
 • கேரட் விதைகள்
  கேரட் விதைகளை நீர் விடாமல் ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து விழுங்க வேண்டும்.
 • தண்ணீர்
  ஒவ்வொரு முறையும் உங்களுக்கு மிதமான மலச்சிக்கல் ஏற்பட்டால், உங்கள் நாளை வெதுவெதுப்பான தண்ணீருடன் தொடங்குங்கள், அது குடல் செயல்பாடுகளைத் தூண்டி விடும். ஒவ்வொரு நாள் காலையிலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவும். நீர் வற்றிப்போதலைத் தவிர்க்க நாள் முழுவதும் முறையான இடைவெளிகளில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கவும்.
 • காஃபி
  காஃபின் ஒரு இயற்கை மலமிளக்கி மற்றும் அது இயல்பில் மிகவும் மிதமானது. ஒரு கோப்பை கருப்பு காஃபியை காய்ச்சி அதைக் காலையில் குடிக்கவும். காஃபின் நீர் வற்றிப்போதலுக்கு வழிவகுக்கும் மற்றும் தூங்கும் நேரத்தில் குடித்தால் தூக்கப் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம் என்பதால், இதையே சார்ந்து இருப்பதை வளர்க்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க்கைமுறை பராமரிப்பு

உணவுப் பழக்கம்

 • மலச்சிக்கலில் இருந்து நீண்ட கால நிவாரணம் பெற முதல் மற்றும் முக்கியமான படி, ஒருவரின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துதலே. இதில் உணவுப் பழக்கம் முக்கியமான இடம் வகிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்க,உணவில் அதிக நார்ச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளுதல் மிக முக்கியம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளும் அதிக அளவு தண்ணீரும் நிவாரணம் வழங்குவதில் பெரிதும் உதவுகின்றன.
 • ஒரு சாதாரண வயது வந்தவருக்கு, ஒரு நாளைக்கு 25 கிராம்கள் வரை நார்ச்சத்து தேவைப்படுகிறது. நார்ச்சத்து கிடைக்கும் நல்ல ஆதாரங்களில், முழு கோதுமை ரொட்டி, ஓட்ஸ் உணவு மற்றும் நவதானியங்கள் போன்ற முழு தானியங்கள் அடங்கும். அவரை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற பயறு வகைகளும் நார்ச்சத்து மிகுந்தவை . பச்சைக் காய்கறிகள் நார்ச்சத்தை மட்டும் வழங்கவில்லை, கூடவே அவசியமான ஊட்டச்சத்துக்களையும் தருகின்றன. பாதாம் மற்றும் நிலக்கடலைகள் போன்ற கொட்டை வகைகளை, கூடுதல் நார்ச்சத்துக்காக, நல்ல கொழுப்பாக சாப்பிடலாம்.
 • செரிமான நடவடிக்கைகள் மென்மையாக நடைபெற தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியமானது. கூடவே, தண்ணீர் மலத்தை மென்மையாக்கவும் அவற்றை எளிதாக வெளியேற்றவும் உதவுகிறது. ஒருவர் பழச்சாறுகள் போன்ற மற்ற திரவ பானங்களையும் அருந்தலாம்.
 • நுண்ணுயிர் நிறைந்த உணவுகளும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட கால நன்மைகளை அளிக்கிறது.
 • உணவு சம்பந்தமான மலச்சிக்கலைத் தவிர்க்க, பதப்படுத்தப்பட்ட உணவுகள், காற்றடைத்த பானங்கள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகளில் இருந்து தள்ளியே இருங்கள்.

உடற்பயிற்சி

முறையான உடற்பயிற்சி செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க, குடல் தசைகளைத் தூண்டுவதற்கு உதவுகிறது. மருத்துவர் வழக்கமான முறையை உருவாக்க குடல் பயிற்சியையும் கூட பரிந்துரைக்கலாம், எனவே மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

மருந்துகள்

நீங்கள் ஏதாவது மருந்துகள் அல்லது ஊட்டச்சத்துப் பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்தால், மலச்சிக்கலுக்கு அவை காரணமா எனக் கண்டறிய உங்கள் மருத்துவரை ஆலோசியுங்கள். ஒருவேளை அவ்வாறு இருந்தால், நீங்கள் வேறு ஒரு மருந்தைப் பெறலாம்.மேற்கோள்கள்

 1. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Constipation .
 2. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Constipation Causes
 3. National Health Service [Internet]. UK; Laxatives.
 4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Constipation
 5. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Complications of Constipation

மலச்சிக்கல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மலச்சிக்கல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for மலச்சிக்கல்

Number of tests are available for மலச்சிக்கல். We have listed commonly prescribed tests below: