தலைச்சுற்றல் - Dizziness in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

December 10, 2018

March 06, 2020

தலைச்சுற்றல்
தலைச்சுற்றல்

சுருக்கம்

தலைச்சுற்றல் என்பது நீங்கள் நின்று கொண்டு இருக்கும் பொழுது சமநிலையை இழக்கும் ஒரு உணர்வு அல்லது நீங்கள் நின்று கொண்டு இருக்கும் பொழுது நகர்வது போன்று உணர்வதாகும். இது பெரும்பாலும் குறைந்த இரத்த சர்க்கரை, நீர் வற்றிப்போதல், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பயண சுகவீனத்தின் காரணமாக ஏற்படுகிறது. சிலநேரங்களில், தலைச்சுற்றலுக்கான காரணம் தெரியாமல் இருக்கிறது. தலைச்சுற்றல் என்பது, சமநிலை உணர்தலைப் பாதிக்கக் கூடிய ஒற்றைத்தலைவலி, பயண சுகவீனம் அல்லது சில காது நோய்கள் போன்ற மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கக் கூடும். ஒரு விரிவான மருத்துவ சரித்திரத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு வழிவகுக்கக் கூடிய சாத்தியமுள்ள காரணங்கள் தொடர்பான சில சோதனைகள் மூலம், அதை உங்கள் மருத்துவரால் கண்டறிய இயலும். தலைச்சுற்றலுக்கான சிகிச்சையானது, மறைந்திருக்கும் பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகும். சிகிச்சையளிக்காமல் விட்டால், திரும்பத் திரும்ப வரும் தலைச்சுற்றல், விழுவது மற்றும் மயங்குவதால் காயங்களை ஏற்படுத்தக் கூடும். [பெரும்பாலான நேரங்களில், தலைச்சுற்றலுக்கான மறைந்திருக்கும் காரணம் குணப்படுத்தக் கூடியதாக இருப்பதால், வழக்கமாக தலைச்சுற்றல் சிகிச்சையின் பலன்கள் நன்றாக இருக்கின்றன.

தலைச்சுற்றல் என்ன - What is Dizziness in Tamil

லேசான தலைத் தன்மை எனவும் அறியப்படும் தலைச்சுற்றல் என்பது ஒரு தள்ளாட்டமான உணர்வு அல்லது சமநிலையை இழத்தல் ஆகும். இந்த உணர்வு சுயநினைவோடு அல்லது இல்லாமல் இருக்கலாம், மேலும் இது ஒரு மிகவும் பொதுவான பிரச்சினை. இது குழந்தைகளுக்கும் அதே போல் வயது வந்தவர்களுக்கும் பொதுவானது. அதிக நேரங்களில், இது குணப்படுத்தக் கூடியது. அரிதாக, மருத்வமனையில் அனுமதிக்கும் அளவுக்கு காரணம் தீவிரமானதாக இருக்கக் கூடும். உங்களுக்கு சிறிது நேரத்திற்குப் பிறகு மறைந்து விடக் கூடிய,  தலைச்சுற்றலின் தெளிவில்லாத அறிகுறிகள் இருக்கலாம், ஆனால் தலைச்சுற்றல் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டால், இந்த அறிகுறிகளைக் கண்டிப்பாகப் புறக்கணிக்காமல், உடனடியாக உங்கள் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சிலநேரங்களில், நீங்கள் பயணத்தின் போது (இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து அல்லது காரில் இருப்பது போன்று)   தலைச்சுற்றலை உணரலாம், இந்த வகை தலைச்சுற்றல், பயண சுகவீனத்தின் காரணமாக ஏற்படுகிறது. இதனை, ஒரு மருத்துவர் பரிந்துரைத்த பயண சுகவீனத்திற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சமாளிக்க முடியும். ஆனால், சில நேரங்களில், தலைச்சுற்றல், ஒரு மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினையின் விளைவாக இருக்கக் கூடும். எனவே, தலைச்சுற்றலின் காரணத்தைக் கண்டுபிடிக்கவும், முறையான சிகிச்சையைத் தொடங்கவும், ஒரு மருத்துவரை ஆலோசித்து, முறையான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

தலைச்சுற்றல் என்றால் என்ன?

தலைச்சுற்றல் என்பது, நீங்கள் நின்று கொண்டிருக்கும் பொழுது அல்லது உங்கள் சுயநினைவை இழப்பதற்கு கொஞ்சம் முன்னால், சமநிலையை இழக்கும் ஒரு உணர்வு. உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படும் பொழுது, நீங்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தாலும் கூட நீங்கள் நகர்வது போன்று உணரலாம்.

தலைச்சுற்றல் அறிகுறிகள் என்ன - Symptoms of Dizziness in Tamil

தலைச்சுற்றல் ஒரு தெளிவில்லாத அறிகுறி. நீங்கள் சரியாக என்ன உணர்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவருக்கு விளக்குவது கடினமாக இருக்கக் கூடும். நீங்கள் இது போன்று உணரலாம்:

 • படுத்திருக்கும் நிலையில் இருந்து எழுந்து நின்ற உடனே உங்கள் சமநிலையை இழத்தல்.
 • நீங்கள் நிலையாக நிற்க முடியாத, தள்ளாடுகிற ஒரு நிலை.
 • நீங்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது கூட நகர்வது போன்ற ஒரு உணர்வு.
 • எந்த நேரத்திலும் நீங்கள் மயக்கமாகி விடுவீர்கள் என்பது போன்ற ஒரு உணர்வு.

நீங்கள் இவை போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரின் அறிவுறுத்தலைப் பெற வேண்டும்.

தலைச்சுற்றல் சிகிச்சை - Treatment of Dizziness in Tamil

தலைச்சுற்றல் எந்த மருத்துவமும் இல்லாமல் தானாகவே சரியாகிவிடும். ஒருவேளை, தலைச்சுற்றல் ஒரு மறைந்திருக்கும் பிரச்சினையினால் ஏற்பட்டால், அந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது தலைச்சுற்றலை சரிப்படுத்தும். பரிசோதனை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, தலைச்சுற்றலுக்கான காரணத்தை உங்கள் மருத்துவர் கண்டறிந்த பிறகு, அதற்கு சிகிச்சையளிப்பதிலும் உதவும் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். ஒருவேளை அது இன்னமும் தொடர்ந்தால், உங்கள் மருத்துவர் சில மருந்துகள் மற்றும் பயிற்சிகளைப் பரிந்துரைக்கலாம்.

 • பயண சுகவீனத்தின் காரணமாக ஏற்படும் தலைச்சுற்றலில் இருந்து, பயணத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் விடுபட முடியும். அதுபோன்ற ஒரு நிலைகளில், ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள் உதவிகரமாக இருக்கக் கூடும். 
 • குறைந்த இரத்த சர்க்கரையின் காரணமாக ஏற்படும் தலைச்சுற்றலுக்கு, இரத்த சர்க்கரை அளவுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். குறைந்த ஆரோக்கியமான உணவுகளை, குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்க உதவும்.
 • ஒற்றைத் தலைவலியின் காரணமாக தலைச்சுற்றல் இருந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பார்.
 • குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தலைசுற்றலுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உங்கள் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, தலைச்சுற்றல் உணர்வைக் குறைக்க, நரம்புவழி செலுத்தப்படும் திரவங்கள் செலுத்தப்படுவது அவசியமாகலாம்.
 • மதுவின் நச்சுத்தன்மை காரணமாக இருந்தால், உங்கள் மருத்துவர் மதுவின் பாதிப்பை நீக்குவதற்காக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற அறிவுறுத்தலாம்.
 • உங்கள் மருத்துவர், உள் காதில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகளை பரிந்துரைக்கலாம், மேலும் தேவைப்பட்டால் அறுவைசிகிச்சைக்கும் கூட பரிந்துரைக்கலாம்.
 • ஒருவேளை, ஏதேனும் மருந்தின் பக்க விளைவின் காரணமாக தலைச்சுற்றல் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் அந்த மருந்தைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

நீங்கள் சில அடிப்படை மாற்றங்களைப் பின்பற்றினால், வாழ்க்கைமுறை மாற்றங்களால் தலைச்சுற்றலைத் தடுக்க முடியும்:

 • அதிக அளவு தண்ணீர் குடியுங்கள், நீர் வற்றிப்போதலைத் தடுக்க, கிட்டத்தட்ட 3-4 லிட்டர்கள்.
 • மேனியரின் நோயாக இருக்கும் பட்சத்தில், உப்பை கட்டுப்பாட்டில் வைப்பது உதவிகரமாக இருக்கிறது. பழங்கள்,காய்கறிகள் அல்லது உணவின் மீது உப்பைத் தூவுவதைத் தவிருங்கள்.
 • உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி, இன்சுலின் ஊசி போடுவதில் முறையான நேரத்தைப் பின்பற்றுங்கள் மேலும்,இரத்த சர்க்கரை குறைவை சமாளிக்க, சர்க்கரை ஆதாரங்களான பிஸ்கட்டுகள் அல்லது மிட்டாய் போன்றவற்றை எப்போதும் உடன் வைத்திருங்கள்.
 • அளவுக்கதிகமாக மது அருந்துவதைத் தவிருங்கள். ஒரு நாளுக்கு 1-2 கோப்பை ஆண்களுக்கும், பெண்களுக்கு என்றால் ஒரு நாளுக்கு ஒரு கோப்பை எனக் கட்டுப்படுத்துங்கள் அல்லது சாத்தியமானால் முழுமையாக நிறுத்தி விடுங்கள்.
 • நீங்கள் தலைச்சுற்றலை உணரும் பொழுதெல்லாம், அமைதியான சுற்றுச்சூழலைத் தேர்ந்தெடுங்கள் மற்றும்  அளவுக்கதிகமான சத்தம் மற்றும் வெளிச்சத்தைத் தவிருங்கள்.
 • படுத்திருக்கும் நிலையிலிருந்து இருந்து எழும் பொழுது,  நிலையை திடீரென மாற்றுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
 • கீழே விழுவதைத் தவிர்க்க, நீங்கள் தலைச்சுற்றலை உணர்ந்த உடனே எதையாவது பிடித்துக் கொள்ளுங்கள் அல்லது உட்கார்ந்து விடுங்கள்.
 • எப்போதும், மயக்கத்தின் காரணமாக ஏற்படும் காயத்தைத் தவிர்க்க, உதவிக்கு யாரையாவது கூப்பிட முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டால், வாகனங்களை ஓட்டுவதையும் இயந்திரங்களை இயங்குவதையும் தவிர்க்கவும்.மேற்கோள்கள்

 1. Wipperman J. Dizziness and vertigo.. Prim Care. 2014 Mar;41(1):115-31. PMID: 24439886
 2. Jahn K, Langhagen T, Heinen F. Vertigo and dizziness in children.. Curr Opin Neurol. 2015 Feb;28(1):78-82. PMID: 25502049
 3. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. Dizziness or Light-Headedness When Standing Up.
 4. Sloane, P. D. (2001). Dizziness: State of the Science. Annals of Internal Medicine, 134 (9_Part_2), 823.
 5. Herr, R. D., Zun, L., & Mathews, J. J. (1989). A directed approach to the dizzy patient. Annals of Emergency Medicine, 18(6), 664–672. PMID: 2729692
 6. National Institutes of Health; U.S. Department of Health & Human Services; National Institute on Deafness and Other Communication Disorders (NIDCD).
 7. Michael Strupp, Prof. Dr. med.1, Thomas Brandt. Diagnosis and Treatment of Vertigo and Dizziness. Dtsch Arztebl Int. 2008 Mar; 105(10): 173–180. PMID: 19629221
 8. Shannon J.R., Diedrich A., Biaggioni I., et al. (2002) . Water drinking as a treatment for orthostatic syndromes. . Am J Med.112(5):355-360. PMID: 11904109
 9. L M Luxon. Evaluatiom and management of dizzy patient. J Neurol Neurosurg Psychiatry 2004;75(Suppl IV):iv45–iv52.
 10. Radtke, A., Lempert, T., von Brevern, M. et al. Prevalence and complications of orthostatic dizziness in the general population. Clin Auton Res. 2011 Jun;21(3):161-8. PMID: 21279415

தலைச்சுற்றல் க்கான மருந்துகள்

தலைச்சுற்றல் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page