சித்தப்பிரமை - Delirium in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 10, 2018

March 06, 2020

சித்தப்பிரமை
சித்தப்பிரமை

சித்தப்பிரமை என்றால் என்ன?

சித்தப்பிரமை என்பது மூளை செயல்பாட்டில் திடீர் சரிவின் விளைவினால் ஏற்படும் மனநல பாதிப்பே ஆகும். சித்தபிரமை எனும் நிலை, ஒருவரது மனநிலையில் நிகழும் விரைவான மாற்றமே ஆகும். இது கடுமையான குழப்ப நிலை எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

  • மனநிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்களை பண்பிடக்கூடியதே சித்தப்பிரமையாகும். காணப்படும் மாற்றங்கள் பின்வருமாறு:
  1. திடீரென ஏற்படும் குழப்பம் (தன்னிலையிழத்தல்).
  2. உஷார்நிலை மற்றும் கவனம்.
  3. உணர்தல் அல்லது புலனுணர்வு.
  4. தசை ஒருங்கிணைப்பு: சித்தப்பிரமையின் நிலையில், ஒருவர் மிக மெதுவாக நடப்பது(மந்தமான செயல்பாடு) அல்லது அமைதியற்ற நிலை கொண்டிருப்பது, குழப்பமடைந்த செயல்பாடுகள் (வேகமான செயல்பாடு).
  5. தூங்கும் முறை அல்லது தினசரி பழக்கம். 
  6. உணர்தல் மற்றும் ஆளுமை.
  7. உணர்வு நிலை அல்லது சுயநினைவில் ஏற்படும் குழப்பம்.
  8. அறிவாற்றல் திறன்களில் ஏற்படும் குறைபாடு.
  • மற்ற அறிகுறிகளாவன:
  1. சிறுநீர் தற்கட்டுப்பாடின்மை.
  2. குறைந்த குறுகிய-கால நினைவு மற்றும் நியாபகப்படுத்தும் திறன் (மேலும் படிக்க: நியாபக மறதிக்கான காரணிகள்).
  3. எப்போதும் மனது விழிப்பு நிலையையே சூழ்ந்துகொண்டிருப்பது அல்லது விழிப்புணர்வு.
  4. கருத்துக்களை வெளிப்படுத்தும் போது நிரூபணமாகும் ஒழுங்கற்ற யோசனைகள்.
  5. நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களின் தூண்டுதலால் நடுக்கம் - போன்ற இயக்கங்கள்.
  6. கவனிப்பதில் சிரமம் ஏற்படுதல்.

சித்தப்பிரமை நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சித்தப்பிரமை நோய் பல காரணிகளால் விளையும் நிலையாகும்:  

  •  அடிப்படை நோயின் காரணிகளால் சித்தப்பிரமை இரண்டாம் நிலையாக ஏற்படலாம், அவைகள் பின்வருமாறு:
  • சில பொதுவான, நிவாரணம் பெறக்கூடிய காரணங்கள் பின்வருமாறு : (நரம்பியல் அல்லாத காரணங்கள்)
    • நரம்புகளுக்கு குறிப்புகளை அனுப்பும் இரசாயனங்களில் உள்ள சமநிலையின்மை.
    • மருத்துகளின் அதீத அளவு, கெடுதல் விளைவிக்கும் மருந்தின் எதிர்வினை, அல்லது போதை பழக்கத்தின் தொடர்பு.
    • மது அருந்துதல். மது அருந்தும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கும் போது கூட எதிர்வினையால் நிவாரண அறிகுறியாக சித்தபிரமை ஏற்படலாம்.
    • மின்னழுத்த ஏற்றத்தாழ்வுகள், ஹார்மோன் சீர்கேடுகள்.
    • உடலமைப்பு முழுதையும் சார்ந்த தொற்று, சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று, சுவாச அமைப்பில் ஏற்படும் தொற்று.

சித்தப்பிரமையை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

 சித்தப்பிரமையை நோயறிதலுக்கு ஒருவரின் மருத்துவ வரலாற்றோடு கூடிய நோயாளியின் கண்காணிப்பும் மிக அவசியம்.

  • நரம்பியல் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக மருத்துவர் உங்களை சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தலாம்:
    • அறிவாற்றல் செயல்பாடு பற்றிய பரிசோதனைகள்.
    • புலனுணர்வுக்கான சோதனை மற்றும் நரம்புகளை இயக்கம் திறனின் மதிப்பீடு.
    • சில எளிய மற்றும் நிலையான கேள்விகளின் மூலம் மருத்துவர் உங்களது சிந்தனை திறனை மதிப்பீடு செய்யலாம்.
  • மற்ற கண்டறியும் முறைகள் பின்வருமாறு:
    • மார்பில் எடுக்கப்படும் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
    • மூளை மின்னலை வரவு (ஈஈஜி).
    • செரிப்ரோஸ்பைனல் திரவ சோதனை.
    • மூளையில் எடுக்கப்படும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) அல்லது சிடி ஸ்கேன்.
    • சிறுநீரக பரிசோதனை.

சித்தப்பிரமை நோயின் அறிகுறிகள் டிமென்ஷியாவின் அறிகுறிகளை ஒத்து இருப்பதுபோல் காணப்படும். ஆனால் டிமென்ஷியாவின் திடீர் நிகழ்வு மற்றும் காட்சி பிரமைகள் சித்தப்பிரமை நோயை டிமென்ஷியாவிலிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது.

சித்தப்பிரமை நோய்க்கான சிகிச்சைகள் அடிப்படை காரணக்காரணிகளையும் கையாளுகிறது.

  • மருந்துகள் பயன்படுத்தாத சிகிச்சை முறைகள்:
    • ஆதரவான பாதுகாப்பு: மருந்துகள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பு நோயாளிகளுக்கு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும், சமூக தேவைகளுக்கான கவனம் மற்றும் நோயாளிகளின் சுற்றுசூழலும் மிக அவசியம். நோயாளிகளுக்கு உதவக்கூடிய ஒரு நிலையான மற்றும் அவருக்கு பழக்கமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்.
    • உறங்கும் நேரங்களை முறையாக பின்பற்றவேண்டும். தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை பால், மசாஜ், அல்லது மூலிகை தேநீர் ஆகியவற்றின் மூலம் குணப்படுத்தலாம்.
    • பிஸியோதெரபி மற்றும் தினசரி நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டால் தசைகளை இயக்கும் நரம்பமைவு சக்தியை மேம்படுத்தலாம்.
    • எப்போதும் வீட்டில் ஒரு தொழில்சார் செவிலியரை வேலைக்கு சேர்த்துக்கொள்வது சாலச்சிறந்தது.
    • நடத்தையில் மாற்றம் ஏற்படுவதற்கான சிகிச்சைகள்.
  • மருந்தியல் சிகிச்சைகள் பின்வருமாறு:
    • நோய்த்தொற்று, வலி, நாள்பட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமை ஆகிய இந்நோய்க்கு வழிவகுக்கும் அடிப்படை காரணிகளை மருந்துகளை கொண்டு குணப்படுத்தலாம்.
    • ஆண்டிசைகோடிக் மருந்துகள்.
    • அரிதாக, குழப்பமான மனநிலையின் போதோ மற்றும் அமைதியற்ற நிலையின் போதோ லேசான மயக்க மருந்துகள் உபயோகப்படுத்தப்படலாம்.



மேற்கோள்கள்

  1. American Heart Association. What is Venous Thromboembolism (VTE)?. [Internet]
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Delirium
  3. Ramírez Echeverría MdL, Paul M. Delirium. Delirium. StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-
  4. Prinka, Arvind Sharma. Comparative Study of Delirium in Emergency and Consultation Liaison- A Tertiary Care Hospital Based Study in Northern India. J Clin Diagn Res. 2016 Aug; 10(8): VC01–VC05. PMID: 27656535
  5. Dementia Australia. Delirium and dementia . Australia; [Internet]

சித்தப்பிரமை க்கான மருந்துகள்

Medicines listed below are available for சித்தப்பிரமை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.