மூளை கட்டி - Brain Tumour in Tamil

மூளை கட்டி
மூளை கட்டி

சுருக்கம்

மூளை கட்டி என்பது மூளை செல்களில் ஏற்படும் அசாதாரணமான வளர்ச்சியாகும். கட்டிகள் பாதிப்பற்றதாக (தீங்கற்றது) அல்லது புற்றுநோய் உருவாக்கக்கூடியதாக (தீங்கானது) இருக்கலாம். மூளைக்குள் உருவாகும் மூளை கட்டிகள், முதன்மை மூளை கட்டிகள் எனப்படுகிறது. இன்னொரு புறம், இரண்டாம் நிலை மூளை கட்டிகள் அல்லது புற்று மூளை கட்டிகள் என்பன, புற்று நோய் காரணமாக உடலின் வேறு பகுதியில் உருவாகி மூளையை வந்தடையும் கட்டிகள் ஆகும். மூளை கட்டியின் குணங்களும் அறிகுறிகளும், கட்டியின் அளவு, கட்டி வளரும் அளவின் வேகம் மற்றும் கட்டி இருக்கும் இடம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. மூளை கட்டிகளின் சில ஆரம்ப நிலை மற்றும் பொதுவான அறிகுறிகளில் மாறுபட்ட வகை தலைவலிகள், அடிக்கடி மற்றும் கடுமையான தலைவலி, பேசுவதில் சிரமம், தடுமாற்றம் ஆகியவை அடங்கும். மூளை கட்டிகளுக்கான சிகிச்சை, மூளை கட்டியின் வகை, அதே போன்று கட்டியின் அளவு மற்றும் இருக்குமிடத்தைப் பொறுத்து அமைகிறது.

மூளை கட்டி என்ன - What is Brain Tumour in Tamil

மூளை கட்டி என்பது, மூளை செல்களின் ஒரு கட்டுப்பாடற்ற வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் ஒரு சதைத்திரட்சி அல்லது வளர்ச்சி ஆகும். இந்தக் கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், 20 கட்டிகளில் ஒன்றில், மரபணுக்களின் மரபுவழித் தாக்கத்தின் காரணமாக ஒரு நபருக்கு மூளை கட்டி வரும் அபாயம் அதிகமிருப்பதாக எண்ணப்படுகிறது.

130 மாறுபட்ட முதன்மை மூளை மற்றும் தண்டுவட கட்டிகள், மூளையில் அவை இருக்கும் இடம், அவை உருவான செல்களின் வகை, எவ்வளவு விரைவாக அவை வளர்ந்து பரவுகின்றன என்பதைப் பொறுத்து தொகுக்கப்பட்டு, பெயரிடப்பட்டு இருக்கின்றன. தீங்கான அல்லது புற்று நோய் பாதிப்புள்ள மூளை கட்டிகள் அரிதானவை (வயது வந்தவர்களுக்கு வரும் புற்று நோய்களில் கிட்டத்தட்ட 2%). மற்ற புற்று நோய்களோடு ஒப்பிடும்போது, மூளை கட்டிகளில் உயிர் பிழைப்பவர்கள் விகிதம் மிகக் குறைவு, வாழும் வருடங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இழக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் மூளை கட்டிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு உருவாகின்றன? மூளை கட்டிகளுக்கான காரணங்கள் என்ன? மேலும் அவற்றுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்? மூளை கட்டிகளைப் பற்றி அனைத்தையும் அறிய மேலும் படிக்கவும்.

மூளை கட்டி அறிகுறிகள் என்ன - Symptoms of Brain Tumor in Tamil

ஒரு மூளை கட்டியின் அறிகுறிகள், அந்தக் கட்டியின் வகை மற்றும் அந்தக் கட்டி இருக்குமிடத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. மூளையின் பல்வேறு பாகங்கள் பல்வேறு உடல் இயக்கங்களுக்கு காரணமாக இருப்பதால், கட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதியைப் பொறுத்து அறிகுறிகள் உருவாகும். மூளை கட்டியின் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கின்றன:

 • தலைவலிகள்
  மூளை கட்டி நோயாளிகளில் 20% பேருக்கு தலைவலி ஒரு ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்கிறது. தலைவலிகள், மூளை கட்டி உள்ள ஒரு நபருக்கு, ஒழுங்கற்றதாக இருக்கக் கூடும், அதிகாலையில் மிகவும் மோசமாக, அதைத் தொடர்ந்து வாந்தி வரக் கூடியதாக அல்லது மூளைக்குள் ஏற்படும் அழுத்தத்தை அதிகரிக்கக் கூடிய  இருமல் அல்லது இருக்கும் நிலையை மாற்றுவது, போன்ற செயல்களால்  மேலும் தீவிரமடையக் கூடியதாக இருக்கக் கூடும்.
   
 • வலிப்பு
  மூளை கட்டி உள்ள சில நபர்களுக்கு, மூளை கட்டியின் முதல் அறிகுறியாக வலிப்பு இருக்கக் கூடும். மூளையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான மின் தூண்டல் செயல்பாடுகளால் வலிப்பு ஏற்படுகிறது. மூளை கட்டி உள்ள ஒரு நபருக்கு, திடீர் நினைவிழப்பு, உடல் இயக்கங்களின் கட்டுப்பாட்டை முழுமையாக இழத்தல், தோல் நீலமாக நிறம் மாறும் வகையில் குறுகிய கால மூச்சு விடாமல் இருத்தல் (30 வினாடிகள்) போன்ற வடிவங்களில் வலிப்பு ஏற்படலாம்.
   
 • ஞாபகசக்தி இழப்பு
  மூளை கட்டி, நோயாளியின் ஞாபக சக்தியில் பிரச்சினைகளை  ஏற்படுத்தக் கூடும். கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை போன்றவை கூட ஞாபக சக்தியில் பிரச்சினைகளை உருவாக்க கூடும். ஞாபக சக்தியில் பிரச்சினைகளை உருவாக்க கூடிய சோர்வு, மூளை கட்டி உள்ள நோயாளிகளுக்கு இன்னும் மோசமாக்கக் கூடும். ஒரு நோயாளியின் நீண்ட- கால ஞாபகங்களை விட குறுகிய – கால ஞாபகங்கள் (ஃபோன் செய்யும் போது, ஃபோன் எண்ணை மறந்து விடுவது போன்றது)   அதிகம் பாதிக்கப்படுகிறது. (மேலும் படிக்க: ஞாபகசக்தி இழப்புக்கான காரணங்கள்)
   
 • மன அழுத்தம்
  மூளை கட்டி நோயாளிகளில் 4ல் 1 நோயாளி, பெரும் மன அழுத்தக் கோளாறினைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் . மன அழுத்தம் பொதுவாக, நோயாளிகள் மற்றும் அவர்களின் அன்பிற்குரியவர்கள், இருவருக்குமே ஏற்படுவதைக் காணலாம். வழக்கமாக சந்தோசமாக செய்யக் கூடிய விஷயத்தில், மகிழ்ச்சி/ஆர்வத்தை இழத்தல், இன்சோம்னியா (தூக்கமின்மை), உற்சாக அளவுகள் குறைதல், பயனற்றவராக எண்ணிக் கொள்ளுதல், சூழ்நிலைக்குப் பொருந்தாத சோகமான எண்ணங்கள், மேலும் தற்கொலை எண்ணம் கூட தோன்றுதல் போன்ற அறிகுறிகள் மன அழுத்தத்தை காட்டும் விதமாக வெளிப்படலாம்.
   
 • ஆளுமைத் திறனில் மாற்றங்கள் மற்றும் அலைபாயும் மனம்
  மூளை கட்டிகள் ஒரு நபரின் ஆளுமைத் திறனிலும் மாற்றங்களுக்கு காரணமாகக் கூடும். செயல் நோக்கமுடைய, உந்துதல் உடைய ஒரு நபர் தயக்கமான மற்றும் குறுகலான மனநிலை உள்ளவராக மாறக் கூடும். கட்டி ஒரு நபர் சிந்திக்கும் மற்றும் செயல்படும் விதத்தைப் பாதிக்கக் கூடும். கூடவே, கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற சிகிச்சை நடைமுறைகள் மூளையின் செயல்பாட்டை மேலும் மோசமடையச் செய்யும். அலைபாயும் மனது விளக்க முடியாதது, திடீரென்று தோன்றும் மற்றும் மூளை கட்டிகள் நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படுவதாகும்.
   
 • புரிதல் திறன் செயல்பாடுகள்
  சிந்தனையை ஒருமுகப்படுத்துதல், கவனித்தல், தகவல் தொடர்பு மற்றும் மொழியறிவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அறிவார்ந்த திறமைகள் குறைவது ஆகியவை மூளை கட்டிகள் நோயாளிகளிடம் காணப்படுகிறது. வெளிப்புற, முன்புற, பொட்டு எலும்பு மடல் போன்ற மூளையின் பல்வேறுபட்ட மடல்களில் ஏற்படும் கட்டிகள் ஒரு நபரின் நடத்தையைப் பாதிக்கக் கூடும்.
   
 • குவிந்த அறிகுறிகள்
  குவிந்த அறிகுறிகள், அல்லது குறிப்பிட்ட இட அறிகுறிகள் என்பவை மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பாதிக்கக் கூடிய அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் கட்டி இருக்குமிடத்தைக் கண்டறிய உதவுகிறது. இரட்டைப் பார்வை, அருவெறுப்பாக உணர்தல், களைப்பு, கூச்சமாக அல்லது உணர்வற்று இருத்தல் ஆகியவை குவிந்த அறிகுறிகளின் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த அறிகுறிகள் ஒரு கட்டியையும் மற்றும் மூளையில் அது இருக்குமிடத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
   
 • குவிந்த விளைவு
  மண்டை ஓட்டின் இறுக்கமான பகுதியில் ஒரு கட்டி வளர்வதன் காரணமாக, அந்தக் கட்டி அதனைச் சுற்றி இருக்கக் கூடிய ஆரோக்கியமான திசுக்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுவதே குவிந்த விளைவு என அறியப்படுகிறது. கட்டியின் அருகில் திரவம் சேர ஆரம்பிப்பதன் காரணமாக, மூளைக்குள் இருக்கும் அழுத்தம் அதிகரிக்கிறது. குவிந்த விளைவின் அறிகுறிகளில், நடத்தையில் மாறுதல்கள், சோம்பல், வாந்தி மற்றும் தலைவலிகள் ஆகியவை அடங்கும்.
   
 • சோர்வு
  சோர்வுக்கான வழக்கமான அறிகுறிகளான தூக்கமின்மை     , பலவீனம், முன்கோபம், திடீரென ஏற்படும் ஒரு களைப்பு உணர்வு, கவனிப்பதில் பிரச்சினைகள் ஆகியவை வழக்கமாக மூளை கட்டிகள் நோயாளிகளிடம் காணப்படுகின்றன.

மூளை கட்டி சிகிச்சை - Treatment of Brain Tumour in Tamil

ஒரு மூளை கட்டிக்கான சிகிச்சை, கட்டி இருக்குமிடம், அளவு, கட்டியின் வளர்ச்சி, நோயாளியின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் அவர்/அவளின் சிகிச்சை தேர்வுகள் போன்ற பல காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன. மூளை கட்டி சிகிச்சையில் இருக்கக் கூடிய சிகிச்சை நடைமுறைகளில் சில பின்வருமாறு:

 • அறுவை சிகிச்சை
  மூளை கட்டி இருக்கும் இடம் அறுவை சிகிச்சை மூலம் அணுகக் கூடிய இடத்தில் இருந்தால், மருத்துவர் முடிந்த அளவுக்கு கட்டியை நீக்கி விடுவார். சிலநேரங்களில் கட்டிகள் சிறியதாகவும் எளிதாக மற்ற மூளை திசுக்களில் இருந்து பிரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன; அதனால், அறுவையின் மூலம் நீக்குதல் எளிதாகிறது. கட்டி எந்த அளவு நீக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, ஒரு மூளை கட்டியின் குறிகள் மற்றும் அறிகுறிகளைக் குறைக்க அறுவை சிகிச்சை பயன்படுகிறது. இரத்தப்போக்கு மற்றும் நோய்த்தொற்று அல்லது காதுகளோடு தொடர்புடைய கட்டிக்கான அறுவை சிகிச்சையின் போது காது கேளாமை ஏற்படும் அபாயம் போன்ற ஆபத்துக்கள் இதில் இருக்கின்றன.
   
 • கதிர்வீச்சு சிகிச்சை
  எக்ஸ்ரேக்கள் அல்லது புரோட்டான்கள் போன்ற அதிக சக்தி வாய்ந்த கதிர்கள், கட்டியின் செல்களைக் கொல்ல கதிர்வீச்சு சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளியின் இரண்டு வெளிப்புறமும் ஒரு இயந்திரத்தை வைத்து, வெளிப்புற கதிர்வீச்சு கதிர்கள் அல்லது மூளை கட்டிக்கு அடுத்து நோயாளியின் உடலின் உட்புறமாக வழங்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது (பிராக்கிதெரபி). கதிர்வீச்சின் புதிய வடிவமான புரோட்டான் சிகிச்சையில், கட்டிகள் மூளையின் உணர்ச்சிமிகு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் பொழுது, கதிர்வீச்சோடு சேர்ந்த பக்கவிளைவுகள் அபாயத்தைக் குறைக்க முடியும். மூளை முழுவதற்குமான கதிர்வீச்சு சிகிச்சை, உடலின் மற்ற பாகங்களில் இருந்து பரவியிருக்கிற புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய் பலமடங்கு மூளை கட்டிகளை உருவாக்கும் போதும் இது  பயன்படுத்தப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சையின் போது அல்லது சிகிச்சை முடிந்த உடனே ஏற்படும் பக்க விளைவுகள், நோயாளிக்குக் கொடுக்கப்படும் கதிர்வீச்சின் வகை மற்றும் அளவைப் பொறுத்தது.
   
 • கதிர்வீச்சு அறுவை சிகிச்சை
  கதிர்வீச்சு அறுவை சிகிச்சை முறையில், ஒரு சிறிய பகுதியில் உள்ள கட்டியின் செல்களைக் கொல்ல, பலமடங்கு கதிர்வீச்சு கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூளை கட்டிகளுக்கான கதிர்வீச்சு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பலவித தொழில்நுட்பங்களில், காமா கத்தி அல்லது லீனியர் முடுக்கியும் ஒன்று. வழக்கமாக இந்த அறுவை சிகிச்சை ஒரு, ஒரே நாள் சிகிச்சை, பெரும்பாலான நோயாளிகள் அதே நாளில் வீட்டிற்கு செல்கிறார்கள்.
   
 • கீமோதெரபி
  கீமோதெரபி ஒரு மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தி கட்டியின் செல்களை அழிக்கும் ஒரு புற்று நோய் சிகிச்சையாகும். மூளை கட்டியின் வகை மற்றும் நிலையைப் பொறுத்து, கீமோதெரபி ஒரு சிகிச்சை தேர்வாக பரிந்துரைக்கப்படக் கூடும். மூளை கட்டிகளுக்கான கீமோதெரபியில் மிகவும் பொதுவாகப் பயன்படும் மருந்து, ஒரு மாத்திரையாகக் கொடுக்கப்படும் டெமோசோலோமைட் ஆகும். கோர்ட்டிகோஸ்டெராய்டுகள், மூளை கட்டி மருத்துவத்தில், கட்டியின் காரணமாக அல்லது நடந்து கொண்டிருக்கும் சிகிச்சையின் காரணமாக ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள் மற்றும் பக்க விளைவுகள், கீமோதெரபிக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் வகை மற்றும் அளவைப் பொறுத்தது.
   
 • இலக்கு நோக்கிய மருந்து சிகிச்சை
  இந்த சிகிச்சை புற்று நோய் செல்களில் ஏற்படும் குறிப்பிட்ட அசாதாரணமானவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் புற்று நோய் செல்களை இலக்கு வைத்து அவற்றைக் கொல்கின்றன. பலவித வகையான மருந்து அளிக்கும் நடைமுறைகள், சோதனையில் இருக்கின்றன மற்றும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Brain Tumors
 2. McKinney PA. Brain tumours: incidence, survival, and aetiology. J Neurol Neurosurg Psychiatry. 2004 Jun;75(suppl 2):ii12-7. PMID: 15146034
 3. Accelerate Brain Cancer Cure [Internet] Washington DC; Tumor Grades and Types
 4. American Association of Neurological Surgeons. [Internet] United States; Classification of Brain Tumors
 5. American Society of Clinical Oncology [Internet] Virginia, United States; Brain Tumor: Grades and Prognostic Factors
 6. American Brain Tumor Association [Internet] Chicago; Signs & Symptoms
 7. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; What Causes Brain and Spinal Cord Tumors in Adults?.
 8. Accelerate Brain Cancer Cure [Internet] Washington DC; Staying Healthy

மூளை கட்டி க்கான மருந்துகள்

மூளை கட்டி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।