நினைவக இழப்பு - Memory Loss in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

April 26, 2019

March 06, 2020

நினைவக இழப்பு
நினைவக இழப்பு

நினைவக இழப்பு என்றால் என்ன?

நினைவக இழப்பு, என்பது அம்னீஷியா என்றும் அழைக்கப்படுகின்றது, இது மறதித்தன்மைக்கான அசாதாரணமான வடிவம். நினைவிழப்பு நோயைக்கொண்டவர்கள் புதிதாக நடக்கவிருக்கும் நிகழ்வுகளையோ அல்லது சில கடந்த கால நினைவுகளையோ அல்லது சில நேரங்களில் இவ்விரண்டு நிகழ்வுகளுமேவும் மறக்கலாம். வயது-தொடர்பான நினைவக இழப்பு என்பது பொதுவானது என்றாலும் இது வழக்கமாக தீவிரமானது இல்லை. இதுவே முதுமை மறதி நோய் என அழைக்கப்படுகிறது. உங்கள் சாவிகளை அல்லது குடை அல்லது கடிகாரத்தை கடைசியாக எங்கு வைத்தீர்கள் என்பதை மறப்பது பொதுவாக கருதுவது போல நினைவக இழப்பு என அழைக்கப்படுவதில்லை. நினைவக இழப்பு என்பது உங்கள் பகுத்தறிதல், திறனாய்வு, மொழி மற்றும் பிற சிந்தனை திறமைகளில் குறுக்கிடும் போது, ​​அது டிமென்ஷியா என அழைக்கப்படுகிறது மற்றும் இதற்கென மருத்துவரிடம் விரிவான சோதனை மேற்கொள்தல் அவசியம்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

நினைவக இழப்பை சார்ந்த பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • பழைய அல்லது மிகவும் சமீபத்திய நிகழ்வுகளின் மறதித்தன்மை.
 • குறைந்த சிந்தனை திறன்.
 • முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் சிரமம்.
 • ஒரு சிக்கலான டாஸ்க்கின் படிகளை நினைவுபடுத்தி வரிசைப்படுத்துவதில் ஏற்படும் சிரமம்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

சிறிது அளவு மறதித்தன்மை என்பது வயது முதிர்ச்சியை சார்ந்த ஒரு இயல்பான நிகழ்வே ஆகும். வயதினை சார்ந்திராத நினைவக இழப்புக்கான காரணிகள்:

 • மூளையின் எந்த பாகத்தில் ஏற்படும் சேதத்திற்கும், இவை காரணமாக இருக்கலாம்:
 • மனநல குறைபாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய நினைவக இழப்பு பின்வருமாறு:
 • நினைவக இழப்பு டிமென்ஷியாவின் அறிகுறியாகவும் தோன்றக்கூடும்:
 • மற்ற காரணங்கள் பின்வருமாறு:
  • மது அல்லது போதை பழக்கம்.
  • வலிப்பு.
  • தயாமின் குறைவினால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு கோர்சாகோஃப் சிண்ட்ரோமினை விளைவிக்கின்றது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

 நினைவக இழப்பை கண்டறிய, மருத்துவர் உங்களிடம் ஒரு சில கேள்விகளை கேட்கக்கூடும். இந்த கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் உங்களுடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தியை தீர்மானிக்க உதவும். நினைவக இழப்பிலிருந்து மீளக்கூடிய காரணங்களை அடையாளம் காண உதவும் மற்ற சோதனைகள் பின்வருமாறு:

 • குறிப்பிட்ட தொற்றுநோய்கள் அல்லது ஊட்டச்சத்து அளவுகளைக் கண்டறியக்கூடிய இரத்த பரிசோதனைகள்.
 • சிடி ஸ்கேன் மற்றும் எம் ஆர் ஐ போன்ற மூளை இமேஜிங்கிற்கான சோதனை முறைகள்.
 • அறிவாற்றல் சோதனைகள்.
 • முதுகுத் தண்டுவட துளையிடுதல்.
 • பெருமூளை ஆன்ஜியோகிராபி.

நினைவக இழப்பு சிகிச்சை முறை என்பது நோயின் நிலையை பொருத்தது. ஒருவேளை ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டால், ​ அதற்கான சப்ளிமெண்ட் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நினைவக இழப்பை சரிசெய்யலாம். வயது-தொடர்பான நினைவக இழப்பு மற்றும் அல்சைமர் நோய் போன்ற சில நிலைகளை முற்றிலும் குணப்படுத்த முடியாது. நோய்த்தொற்றுகள் அந்தந்த ஆண்டிமைக்ரோபயல்களை உட்கொள்வதன் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். போதைப் பொருட்களின் ஆளுமையிலிருந்து மீளுவதற்கு குடும்பத்தின் ஆதரவு, தொழில்முறை ஆலோசனை மற்றும் வலுவான மன உறுதி தேவை.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Memory loss (amnesia).
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Memory loss.
 3. Alzheimer's Association [Internet]: Chicago (IL); Mild Cognitive Impairment (MCI).
 4. Small GW. What we need to know about age related memory loss. BMJ. 2002 Jun 22;324(7352):1502-5. PMID: 12077041
 5. U. S Food and Drug Association. [Internet]. Coping With Memory Loss.

நினைவக இழப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for நினைவக இழப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.