நோய்த்தொற்றுகள் - Infections in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 23, 2018

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
நோய்த்தொற்றுகள்
நோய்த்தொற்றுகள்
ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?

நோய் ஏற்படுத்தும் உயிரினங்கள் உங்கள் உடலை தாக்குகையில், அவை பெருக்கப்பட்டு பல தாக்கங்களையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும், அவை நோய்த்தொற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் இந்த தொற்று ஏற்படுகிறது, இது உள்ப்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ இருக்கலாம்.பெரும்பாலான நோய்க்கிருமிகள் பலதரப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது.தற்போதைய சுகாதார பிரச்சனையின் காரணமாக ஏற்படும் முதன்மை நோய் அல்லது  முன்னர் ஏற்பட்ட நோய்த்தொற்று அல்லது குறைந்த நோயெதிர்ப்புத்திறன் காரணமாக ஏற்படும் இரண்டாம்நிலை நோயின் காரணமாக நோய்த்தொற்று ஏற்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தொற்றுநோய்க்கான அறிகுறிகள் பொதுவாக தொற்றுநோய் ஏற்படும் இடம் மற்றும் அதை உண்டாக்கும் நுண்ணுயிரிகளைச் சார்ந்துள்ளது.அதன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நோயின் நுண்ணுயிர் காரணிகள் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் மற்றும் ரிங்வோர்ம் (படை), உருண்டைப்புழு, பேன், உன்னி மற்றும் டிக்ஸ் போன்றவையாகும்.தொற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல வகைகள் பரவுகின்றன:

 • ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுதல்.
 • விலங்கிலிருந்து மனிதருக்கு பரவுதல்.
 • தாயிடம் இருந்து பிறந்த குழந்தைக்கு பரவுதல்.
 • மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீர்.
 • பூச்சி கடி.
 • பாதிக்கப்பட்ட நபரால் தொடுக்கப்பட்ட உயிரில்லாத பொருள்களைப் பயன்படுத்துதல்.
 • ஐயோட்ரோஜெனிக் டிரான்ஸ்மிஷன் (பாதிக்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் காரணமாக மருத்துவச்செனிமமாக பரவுதல்).
 • நோஸோகோமியல் தொற்று (மருத்துவமனையின் ஈட்டக்கூடிய தோற்று).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவ பரிசோதனை மற்றும் உங்கள் மருத்துவ வரலாற்றை வைத்து மருத்துவர் நோய் கண்டறிதல் சோதனையை மேற்கொள்வார்.பொதுவாக பரிந்துரைக்கப்படும் நோய் கண்டறிதல் சோதனைகள் பின்வருமாறு:

 • உடல் பரிசோதனை.
 • நுண்ணுயிரியல் பரிசோதனை.
 • இரத்த பரிசோதனை, சிறுநீர், மலம், தொண்டை நீரிழிவு மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் ஆகியவற்றை பரிசோதித்தல் போன்ற ஆய்வக சோதனைகள்.
 • எக்ஸ்-ரே மற்றும் எம்.ஆர்.ஐ போன்ற இமேஜிங் ஆய்வுகள்.
 • திசு பரிசோதனை.
 • பி.சி.ஆர் (பாலிமரேஸ் சேய்ன் எதிர்வினை) அடிப்படையிலான சோதனை.
 • நோயெதிர்ப்பு சோதனைகள்: எலைசா (என்சைம்-இணைக்கப்பட்ட இம்முனோசோர்பேண்ட் சோதனை) அல்லது ஆர்.ஐ.ஏ (ரேடியோ இம்முனோ சோதனை).

உங்கள் தொற்றை ஏற்படுத்தும் உயிரினம் தெரிந்தவுடன், சிகிச்சை எளிதாகிறது.தொற்றுநோய்க்கான சிகிச்சைகள் பின்வருமாறு:

 • மருந்துகள்:
 • நுண்ணுயிர் கொல்லிகள்.
 • வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.
 • ஓரணு உயிரி எதிர்ப்பு மருந்துகள்.
 • பூசண எதிர்ப்பிகள்.
 • தடுப்பூசி.
 • மாற்று மருந்துகள்:
  பச்சை தேயிலை, குருதிநெல்லி பழச்சாறு, இஞ்சி மற்றும் பூண்டு போன்ற இயற்கை வைத்தியம் தொற்றுக்களுக்கு எதிராக போராடுவதாகக் கூறப்படுகிறது.

இயற்கை சிகிச்சைகள் மற்றும் மாற்று சிகிச்சைகள், குறிப்பாக ஆயுர்வேத சூத்திரங்கள் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், நோய்த்தொற்றின் அறிகுறிகளை நீங்கள் கண்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நுண்ணுயிரிகள் எதிர்ப்புத்திறன் வளர்ப்பதைத் தவிர்க்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சரியாக கொடுக்கப்பட்டுள்ள காலம் வர உட்கொள்ள வேண்டும்.சில தொற்றுகள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதால் அனைத்து நோய்த்தாக்கங்களும் சிகிச்சை தேவையில்லை.ஆனால் கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது அவசியம்.தூய்மை மற்றும் முறையான சுகாதாரம் ஆகியவற்றை பராமரிப்பது தொற்றுநோய்களின் பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம், இதனால் தொற்றுத்நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.மேற்கோள்கள்

 1. British Medical Journal. The accuracy of clinical symptoms and signs for the diagnosis of serious bacterial infection in young febrile children: prospective cohort study of 15 781 febrile illnesses. BMJ Publishing Group. [internet].
 2. D.H Tambekar, S.B Dahikar. Antibacterial activity of some Indian Ayurvedic preparations against enteric bacterial pathogens. J Adv Pharm Technol Res. 2011 Jan-Mar; 2(1): 24–29. PMID: 22171288
 3. Office of Disease Prevention and Health Promotion. Health Care-Associated Infections. Office of the Assistant Secretary for Health.[internet].
 4. Washington JA. Principles of Diagnosis. In: Baron S, editor. Medical Microbiology. 4th edition. Galveston (TX): University of Texas Medical Branch at Galveston; 1996.
 5. Science Direct (Elsevier) [Internet]; Treatment of infectious disease: Beyond antibiotics

நோய்த்தொற்றுகள் டாக்டர்கள்

Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Alok Mishra Dr. Alok Mishra Infectious Disease
5 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

நோய்த்தொற்றுகள் க்கான மருந்துகள்

நோய்த்தொற்றுகள் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹104.0

20% छूट + 5% कैशबैक


₹356.72

20% छूट + 5% कैशबैक


₹46.55

20% छूट + 5% कैशबैक


₹123.83

20% छूट + 5% कैशबैक


₹89.6

20% छूट + 5% कैशबैक


₹81.38

20% छूट + 5% कैशबैक


₹1683.5

20% छूट + 5% कैशबैक


₹52.5

20% छूट + 5% कैशबैक


₹97.2

20% छूट + 5% कैशबैक


₹0.0

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 324 entries