ஸ்கார்லெட் காய்ச்சல் - Scarlet Fever in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 12, 2019

July 31, 2020

ஸ்கார்லெட் காய்ச்சல்
ஸ்கார்லெட் காய்ச்சல்

ஸ்கார்லெட் காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்கார்லெட் காய்ச்சல் என்பது ஸ்ட்ரெப்டோ கோக்கஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறிகள் ஏற்பட 2-5 நாட்கள் வரை ஆகும். தொண்டை புண்ணுடன் தொடங்கும் இந்த நோய் பொதுவாக குழந்தைகளில் காணப்படும் ஒருவகையான தொற்று நோயாகும்.எனினும், இந்நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெரிதும் பாதிக்கப்படுவோர் பெரியவர்களாக இருக்கலாம்.காய்ச்சல், வாந்தி, குளிர்தல் மற்றும் வயிற்று வலி போன்றவை இந்நோயின் மற்ற அறிகுறிகள் ஆகும்.அதே நேரத்தில் குழந்தைகளின் நாக்கில் ஒரு வெண்மையான படலம் தோன்றும்.மொத்தத்தில், இந்த பாக்டீரியா உள்நாக்கழற்சி, சரும தொற்று, தீவிர வாதக்காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • தொண்டை வலி.
  • காய்ச்சல்.
  • சிவப்பாக வீக்கமடைந்து காணப்படும் உள்நாக்கு சதை.
  • வீக்கம் அல்லது ஸ்ட்ராபெரி நிற (சிவப்பான மற்றும் மேடான) நாக்கு.
  • குமட்டல்.
  • வாந்தி.
  • பசியிண்மை.
  • சிவந்த தடிப்புகள் போன்று உடல் முழுவதும் வேனற்கட்டி போல் இருக்கும் இந்நோய் முற்றிய நிலையில் ஸ்கார்லெட் காய்ச்சல் (செம்புள்ளி நச்சுக்காய்ச்சல்) என அழைக்கப்படுகிறது.

இந்நோய் பின்வரும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்:

  • அடிநாக்கு சதையை சுற்றி சீழ் பை காணப்படுதல்.
  • நிணநீர் முனைகளில் வீக்கம்.
  • சருமம் அல்லது காதுகளில் தொற்று ஏற்படுதல்.
  • வாதக்காய்ச்சல்.
  • நிமோனியா.
  • மூட்டு வீக்கம் அல்லது கீல்வாதம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்நோய் தொற்று பரவுதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமல் மற்றும் தும்மலின் போது வெளிவரும் பாக்டீரியா உள்ளடக்கிய சுவாச நீர்துளிகளிலிருந்து பரவுதல்.
  • இந்நோய் பாதிக்கப்பட்ட நபருடன் உள்ள நேரடி தொடர்பு.
  • அசுத்தமான இடங்களில் இருந்துவிட்டு அதே கைகளை கொண்டு  , வாய் அல்லது மூக்கைத் தொடுதல்.
  • உடல் துவட்டும் துண்டுகள், ஆடை அல்லது உணவுகள் போன்ற தனி மனிதர் சார்ந்த பொருட்களை பகிர்தல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

தொண்டையில் ஏற்பட்டுள்ள அழற்சியை கண்டறிய நுண்ணநோக்கியின் கீழ் கழுத்தின் முன்பக்கதிலிருந்து பஞ்சின் மூலம் எடுக்கப்பட்ட மாதிரியை வைத்து ஸ்ட்ரெப் டெஸ்ட் சோதனை செய்யப்படுகிறது.மேலும், ஸ்கார்லெட் காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்த மாதிரி பஞ்சின் மூலம் எடுக்கப்பட்ட முழு தொண்டையும் ஆராயும் சிகிச்சை முறை மருத்துவரால் மேற்கொள்ளப்படும்.ஏனெனில் சிகிச்சை அளிக்கப்படாத ஸ்கார்லெட் காய்ச்சலில் இருந்து வாதக்காய்ச்சல் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து காரணிகளை குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் பெற்றுள்ளதால் இவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகவும் முக்கியம் ஆகும்.

இந்நோய்க்கான சிகிச்சை முறை பென்சிலின் அல்லது அமொக்ஸிலின் மருந்துகளை பயன்படுத்தி செய்யப்படும் ஆண்டிபயாடிக் சிகிச்சையினை உள்ளடக்கியது ஆகும்.இந்நோயிலிருந்து ஐந்தாவது நாளே பலர் குணமடைந்தாலும், இந்நோய்க்கு எடுக்கப்படும் சிகிச்சை முறை  20 நாட்களுக்கு பின்பற்றப்பட வேண்டும். கூடவே, காய்ச்சல் மற்றும் வலி மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளித்தல், போதுமான அளவு திரவங்களை குடித்தல், சூடான சூப் போன்ற இதமான உணவுகளை எடுத்து கொள்ளுதல் போன்ற வீட்டு பராமரிப்பு முறைகளையும் இந்நோய்க்கான சிகிச்சை முறையை உள்ளடக்கியதாகும்.



மேற்கோள்கள்

  1. Department of Health Scarlet fever. Government of Western Australia [Internet]
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Scarlet Fever: All You Need to Know
  3. National Health Service [Internet]. UK; Scarlet fever.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Scarlet fever
  5. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Scarlet fever
  6. Wessels MR. Pharyngitis and Scarlet Fever. 2016 Feb 10 [Updated 2016 Mar 25]. In: Ferretti JJ, Stevens DL, Fischetti VA, editors. Streptococcus pyogenes : Basic Biology to Clinical Manifestations. [Internet]. Oklahoma City (OK): University of Oklahoma Health Sciences Center; 2016-.