மூட்டழற்சி - Arthritis in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

January 14, 2019

March 06, 2020

மூட்டழற்சி
மூட்டழற்சி

சுருக்கம்

மூட்டழற்சி என்பது மூட்டுக்கள், முழங்கால், முழங்கை, இடுப்பு மற்றும் கணுக்கால் பகுதிகளில் சிவந்து போதல் மற்றும் வலியை ஏற்படுத்தும் வழக்கமான அழற்சிகளின் படி வகைப்படுத்தப்படுகிறது. இது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தன்னுடைய சொந்த செல்களையும் குருத்தெலும்புகளையும், தானே அழிக்கத் துவங்குகிற ஒரு தானே இயங்கும் நோய் எதிர்ப்பு நிலையாகும். மூட்டுக்களையும் அருகிலுள்ள பகுதிகளையும் பாதிப்பது நடமாடுவதில் சிரமத்தை உண்டாக்குகின்றன. மூட்டழற்சியில் பலவித வடிவங்கள் உள்ளன. ஆனால், வாத நோய், ஜூவினைல் மற்றும் கீல்வாதம் ஆகியன அதிகமாகக் காணப்படுகிற வடிவங்கள் ஆகும். மூட்டழற்சிக்கு நிரந்தரத் தீர்வு கிடையாது, இருந்தாலும், அதைத் திறமையாக கையாள்வது, வலியைக் குறைப்பதிலும், கடுமையான இருதய இரத்தக்குழாய் மற்றும் மூட்டுக்கள் பாதிப்பு போன்ற மூட்டழற்சியோடு இணைந்திருக்கக் கூடிய தொடர்ந்த அபாயங்களைத் தடுக்கவும் உதவுகிறது.

மூட்டழற்சி என்ன - What is Arthritis in Tamil

மூட்டழற்சி என்பது, மக்களில் எந்த வயது அல்லது பாலினமாக இருந்தாலும் பாதிக்கக் கூடிய, பலவித மூட்டு வியாதிகளைக் குறிக்கும் ஒரு பாமர வார்த்தையாகும். முன்பு ஆராய்ச்சியாளர்கள் மூட்டழற்சி, 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கும், வயதோடு தொடர்புடைய ஒரு நோய் என நம்பினார்கள். தற்போதைய ஆய்வுகள், மூட்டழற்சி வயதைப் பொருட்படுத்தாமல் எந்த ஒரு நபரையும் தாக்கக் கூடும் எனக் கூறுகின்றன. உண்மையில், இந்த நோய் சமூக-பொருளாதார பிரச்சினைகளின் முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது, ஏனென்றால், இந்த நிலை இடம்பெயர்தலைப் (நகர்வு) பாதிப்பதில் பிரபலமாக அறியப்படுகிறது.

மூட்டழற்சி அறிகுறிகள் என்ன - Symptoms of Arthritis in Tamil

அனைத்து வகை மூட்டழற்சிகளும் பளிச்செனத் தெரியும், நான்கு பொதுவான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் இவற்றை உணரக் கூடும்:

 • வலியை உணர்தல் மற்றும் வீக்கம் (அழற்சி)
 • மூட்டுக்களில் விறைப்பு மற்றும் கன்னிப் போதலை உணர்தல்
 •  தொடர்ச்சியான காய்ச்சல் வருதல்
 • பாதிக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட இடத்தில சிவந்து போதல்.  

மூட்டழற்சியின் குறிப்பிட்ட வகைகளுக்கான அறிகுறிகள் இங்கே:

ஜூவினைல் மூட்டழற்சியின் அறிகுறிகள் 

உங்கள் குழந்தைக்கு ஜூவினைல் மூட்டழற்சி இருந்தால், அவள்/அவன் உணரக்கூடும்:

 • தசை பலவீனத்தை உணருதல்
 • காரணமற்ற தோல் தடிப்புகள் வருதல்
 • சோர்வாக உணருதல் (எந்நேரமும் களைப்பாக இருத்தல்)
 • தொடர்ச்சியான வலி மற்றும் விறைப்பின் காரணமாக சரியாகத் தூங்க முடியாமல் (தொந்தரவு செய்யப்பட்ட தூக்கம்) இருத்தல்.

வாத நோய் மூட்டழற்சியின் அறிகுறிகள்

பொதுவாக வாத நோய் மூட்டழற்சியின் இந்த அறிகுறிகளோடு தோன்றுகிறது; நீங்கள் இவற்றை உணரக் கூடும்:

 • உங்கள் (கைகள், விரல்கள், மூட்டுக்கள் மற்றும் கால்களை) குறைந்த வரம்புக்குள்ளே மட்டுமே அசைக்க முடிதல்
 • இரத்த சோகையால் பாதிக்கப்படுதல் (உடலில் குறைவான அளவுகளில் இரும்புச்சத்து இருத்தல்)
 • அளவுக்கதிகமான களைப்பை உணருதல் (சோர்வு)   
 • மன இறுக்கத்தால் பாதிக்கப்படுதல் (தாழ்வாகவும் உற்சாகமற்றும் உணருதல்)
 • நடக்கும் போது நொண்டுதல் (முற்றிய மூட்டழற்சி நிலைகளில்). அவ்வப்போது, நீங்கள் நொண்டுவதைக் கவனிக்க விட்டாலும் மற்றவர்கள் அதைக் கவனிக்க இயலும்.
 • மூட்டு உருக்குலைவது (முற்றிய நிலைகள்)

கீல்வாத மூட்டழற்சியின் அறிகுறிகள் 

 • காலையில் எழுந்த உடனே மூட்டுக்கள் மற்றும் தசைகளில் வலியை உணர்தல்.
 • உங்கள் மூட்டுக்களில் இருந்து படபடவென அல்லது வெடியோசை போன்ற ஒலிகள்.  
 • மூட்டுக்களிலும் அதைச் சுற்றியும் வீக்கங்கள் மற்றும் புடைப்புக்கள்
 • நாள் முடியும் வரை, நீங்கள் ஓய்வில் இருக்கும் பொழுது கூட, தசைகளிலும் மூட்டுக்களிலும் வலி தொடர்வது.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்

 • கன்னிப் போதலோடு வீக்கம்.
 • குறிப்பிட்ட பிரதேசத்தில் வெதுவெதுப்பு.
 • தோல் சிகப்பாக, மஞ்சளாக, வெளிறிப்போயோ தோன்றலாம், பெரும்பாலும் சிகப்பாக தோன்றலாம்.
 • பாதிக்கப்பட்ட பகுதியைத் தொடும் போது கடுமையான வலிமிகுந்ததாக இருக்கக் கூடும்.

ஒரு மருத்துவரைப் பார்ப்பது எப்பொழுது

உங்கள் இயக்கங்களைக் குறைக்கக் கூடிய வகையில் மூட்டுக்களில் தொடர்ச்சியான வலி மற்றும் இறுக்கம் ஏற்படும் பொழுது, நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு வாழ்நாள் முழுவதுமுள்ள பிரச்சினையாக இருப்பதால் தயவு செய்து தாமதிக்காதீர்கள், மேலும் நீங்கள் மருத்துவ உதவியை எவ்வளவு சீக்கிரம் பெறுகிறீர்களோ அவ்வளவு நல்லது. 

மூட்டழற்சி சிகிச்சை - Treatment of Arthritis in Tamil

தற்போது மூட்டழற்சிக்கு உறுதியான தனித்த தீர்வு எதுவும் இல்லை. ஆனால், இவ்வாறு கூறுவதால் சிகிச்சை தேவையில்லை என்று அர்த்தமில்லை. மேற்பூச்சு வலி நிவாரணிகள், இன்ன பிறவற்றைக் கொண்டு நிறைய நோயாளிகள் தங்களுக்குத் தாங்களே சுய-வைத்தியம் செய்து கொண்டு, மருத்துவரிடம் போக மறுத்து, நோயை மேலும் பெரிதாக்கி விடுகிறார்கள் என்பதை அறிய உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். வாத நோய் மூட்டழற்சி இருந்தால் ஒருவர், கண்டிப்பாக ஒரு எலும்பியல் நிபுணரையும் ஒரு வாதநோய் நிபுணரையும் ஆலோசிக்க வேண்டும். 

பல்வேறு வகை மூட்டழற்சிகளின், முக்கியமாக கீல்வாதம், வாதநோய் மூட்டழற்சி சிகிச்சைக்கு மருத்துவர்களால் அழற்சிகள் மற்றும் வீக்கங்களை குணமாக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதியில் சிவந்து போதல் மற்றும் வேதனையைக் குறைக்க, வெப்பமான மற்றும் குளிர்ந்த அழுத்துதல்கள் பயன்படுகின்றன. இந்த நோய் முற்றிய நிலையில் இருக்கும் சில நோயாளிகள், நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது மற்றும் நீண்ட நேரத்திற்கு நிற்பது போன்ற அன்றாட செயல்களைச் செய்வதற்கு மிகவும் சிரமமாக உணர்வார்கள்,  மருத்துவர்கள், மூட்டுக்களில் குறைந்த சிரமத்தைக் கொடுக்கிற, குறிப்பிட்ட அளவு இயக்கத்தை உறுதி செய்கிற, யோகா, நீச்சல், ஏரோபிக்ஸ் போன்றவற்றில் குறைந்தபட்சம் 1 உடலியல் செயல்பாட்டிலாவது ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.

மூட்டழற்சி நோயாளிகளுக்கு, பிசியோதெரபி ஒரு முக்கியமான சிகிச்சை அம்சமாகும். நோய் முற்றிய நிலை, இயக்கம் மற்றும் இடப்பெயர்ச்சியில் சிரமத்தைக் கொடுக்கும், பல்வேறு உருக்குலைவுகளுக்கும் மற்றும் எலும்பில் மிகையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். எனவே, பிஸியோதெரபி உடற்பயிற்சிகளின் உதவியால் உங்கள் இயங்கும் நிலையைத் திரும்பக் கொணர்வதோடு மட்டுமல்லாமல் நெகிழ்வுத்தன்மையையம் அடைகிறீர்கள். உங்கள் மருத்துவர், வலி மற்றும் தசைநார் இறுக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, அல்ட்ராசோனிக் அலைகளையும் பரிந்துரைக்கக் கூடும். வாதநோய் மூட்டழற்சி (ஆர்.ஏ) உள்ள நபர்களுக்கு, மூட்டுக்களில் வெப்பத்தைக் காட்டுவதன் மூலம் அவர்களின் தசை இறுக்கத்திலிருந்தும் வலியிலிருந்தும் நிவாரணம் பெறலாம். எனவே,பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதிகளை ஆசுவாசப்படுத்த ஆழமான வெப்பம் பயன்படுத்தப்படுகிறது.மூட்டழற்சி க்கான மருந்துகள்

மூட்டழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।