தொண்டை புண் (வலி) - Sore Throat in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 21, 2017

September 10, 2020

தொண்டை புண்
தொண்டை புண்

சுருக்கம்

ஒரு தொண்டை புண் (வலி) என்பது குழந்தைகளிடம், அத்துடன் பெரியவர்களிடமும் காணப்படும்  ஒரு அறிகுறியாகும். இது, மருத்துவர்கள் வெளிநோயாளி பிரிவுகளில் சிகிச்சையளிக்கும் மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்று. தொண்டை புண் (வலி) உருவாக்கக் கூடிய, பாக்டீரியா உள்பட 200க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்களும், வைரஸ்களும் இருக்கின்றன. ஒரு நோய்த்தொற்று அல்லது மறு-தொற்று ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாக உள்ள, மக்கள் நெருக்கடி அதிகமான இடங்கள் மற்றும் வறுமையான வாழ்வியல் சூழல் போன்ற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, கடுமையான தொண்டை புண் (வலி) ஏற்படுவது மிகவும் பொதுவானது. தொண்டை புண் (வலி) ஏற்பட மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று காய்ச்சல் அல்லது வழக்கமான ஜலதோஷம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது, பெரும்பாலும் தொற்று ஏற்பட்ட ஒருவரின் மூக்கு அல்லது உமிழ்நீர் சுரப்புகள் மூலமாக. மக்கள் நெருக்கடி அதிகமான இடங்கள், சுகாதாரமின்மை, சுகாதாரமின்றி உணவைக் கையாளுதல், ரசாயனங்கள், புகை மற்றும் எரிச்சலை உண்டாக்கும் பொருட்களை சுவாசிப்பதாலும் தொண்டை புண் (வலி) ஏற்படக் காரணமாகலாம்.. தவிர, விழுங்குவதில் சிரமம், மற்ற அறிகுறிகளான காய்ச்சல், அரிப்பு அல்லது தலைவலி போன்றவற்றோடு  சேர்ந்து வரலாம்.

இது ஒரு பெரிய அளவிலான நோய்களின் காரணமாகக் கூட வரக் கூடும் என்பதால், தொண்டை புண் (வலி)க்கான சரியான காரணத்தை மதிப்பிடஒரு விரிவான மருத்துவ சரித்திரக் குறிப்பு அவசியம். பெரும்பாலான தொண்டை புண் (வலி), எந்தவித மருந்துகளும் இல்லாமலே சரியாகின்றன, ஆனால் பல தனிநபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம். ஸ்ட்ரெப்டோகோக்கஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் தொண்டை புண் (வலி)க்கு, கூடுதல் பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் தொண்டை புண் (வலி)க்கு மிகவும் சிக்கலான மற்றும் நோய் சார்ந்த மருத்துவம் தேவைப்படலாம். நோயாளி உடனடியாகவா அல்லது தாமதமாகவா  நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொண்டார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், 1% நேரங்களில் ஒரு தொண்டை புண் (வலி)யின் சிக்கல்களைக் காணலாம்.

தொண்டை புண் (வலி) அறிகுறிகள் என்ன - Symptoms of Sore Throat in Tamil

காரணத்தைப் பொறுத்து, ஒரு தொண்டை புண் (வலி)யின் குறிகள் மற்றும் அறிகுறிகள் வேறுபடக்கூடும். அவற்றுள் அடங்கியவை:

 • தொண்டை வேதனை.
 • தொண்டை அரிப்பு.
 • உணவு மற்றும்/அல்லது நீரை விழுங்குவதில் சிரமம்.
 • கழுத்து சுரப்பிகளில் ஏற்படும் அலர்ஜி.
 • கரகரப்பான குரல்.

மேலே குறிப்பிடப்பட்ட தொண்டை புண் (வலி)யின் பொதுவான குறைபாடுகளோடு, இவையும் சேர்ந்து வரலாம்:

காரணமற்ற சோர்வு அல்லது சாதாரணமான அசௌகரிய உணர்வு.

தொண்டை புண் (வலி) சிகிச்சை - Treatment of Sore Throat in Tamil

 • வலிநிவாரணிகள் மற்றும் காய்ச்சல் மருந்துகள்
  வைரஸின் காரணமாக உண்டாகும் தொண்டை புண் (வலி) 5 முதல் 7 நாட்களுக்குள் எந்த மருந்துகளும் உட்கொள்ளாமல் குணமாகும். சில நேரங்களில் வலி மற்றும் காய்ச்சல் போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் லேசான காய்ச்சல் மருந்துகள் (காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகள்) மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சமாளிக்க இயலும். குழந்தைகளுக்கு, குழந்தையின் வயது, எடை மற்றும் உயரத்தைப் பொறுத்து அவர்களின் சரியான அளவு குறித்து மருத்துவரிடம் ஆலோசித்த பின்னர் அவர்களின் மேற்பார்வையில் மருந்துகள் கொடுக்கப்படலாம். தொண்டை புண் (வலி) அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள பதின்பருவத்தினருக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைக் கொடுக்கக் கூடாது, அது தீவிரமான சிக்கல்களுக்கு காரணமாகக் கூடும்.
 • நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்
  ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக தொண்டை புண் (வலி)ஏற்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் ஒரு தொகுதி மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். அனைத்து அறிகுறிகளும் குறைந்து விட்டாலும் கூட, மருந்துகளின் முழுத்  தொகுதியையும் நிறைவு செய்வது அறிவுறுத்தப்படுகிறது. கூறப்பட்ட மாதிரி மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், நோய்த்தொற்று திரும்ப ஏற்படலாம் அல்லது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவலாம். ஸ்ட்ரெப் தொண்டைக்காக முழுமையான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தொகுதியை எடுத்துக் கொள்ளாவிட்டால், முக்கியமாக குழந்தைகளுக்கு, சிறுநீரக நோய்கள் அல்லது கீல்வாதக் காய்ச்சல் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது.
 • மற்ற மருத்துவங்கள்
  ஒரு தொண்டை புண் (வலி) ஒரு மறைமுக மருத்துவ காரணத்தால் ஏற்பட்டால், சிகிச்சை வேறுபடும் மற்றும் நோய் சார்ந்ததாக இருக்கும்.

வாழ்க்கைமுறை நிர்வாகம்

 • மருந்துகளோடு, இந்த வீட்டு நல குறிப்புகளும் தொண்டை புண்ணிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற உதவக் கூடும்:
 • போதுமான அளவு ஓய்வு எடுங்கள், அதே போல் உங்கள் குரலுக்கும் ஓய்வு கொடுங்கள்.
 • தொண்டையை ஈரப்பதமாக வைக்க அதிக அளவு திரவ பானங்கள் அருந்துங்கள். தொண்டையை உலரச் செய்வதால் காஃபி மற்றும் மதுபானங்களைத் தவிருங்கள்.
 • தொண்டையைத் தணிக்கும் வகையில் ரசம், கஞ்சி மற்றும் தேனுடன் சுடுநீர் போன்ற வெதுவெதுப்பான பானங்களைக் குடியுங்கள்.
 • ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் கொப்பளிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.
 • தொண்டை வலி மிட்டாய்களை சுவைப்பது அறிகுறிகளைக் குறைக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அவை அடைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதால், அவர்களுக்குக் கொடுக்கும் போது கவனமாக இருக்கவும்.
 • தொண்டையை எரிச்சலூட்டக் கூடிய சிகரெட் புகை, ஊதுவத்திகள் மற்றும் கடின நெடி உள்ள பொருட்கள் போன்ற அனைத்து எரிச்சலூட்டக் கூடியவற்றையும் தவிர்க்கவும்.
 • மாற்று மருத்துவங்களான மூலிகை வைத்தியம், தேயிலைகள், அதிமதுரம், மார்ஷ்மெல்லோ வேர் மற்றும் சீன மூலிகைகளும் பயன் தரக் கூடும். மாற்று மருத்துவத்தைத் தொடங்கும் முன்பு ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

தொண்டை புண் (வலி) என்ன - What is Sore Throat in Tamil

ஒரு தொண்டை புண் (வலி) என்பது அனைத்து வயதுப் பிரிவினரிடமும் காணப்படும்  ஒரு பொதுவான அறிகுறியாகும். இது, தொண்டை சிகப்பாக மாறி எரிச்சல் உண்டாகி, அந்த நபருக்கு உணவை விழுங்குவதில் சிரமத்தை உண்டாக்கும் ஒரு நிலை ஆகும். கடுமையான ஒரு தொண்டை புண் (வலி) நிகழ்வுகள் வழக்கமாக வைரஸ்களின் காரணமாக ஏற்படுகிறது, இருந்தாலும் அவை, பாக்டீரியா அல்லது மற்ற நோய் பரப்பும் காரணிகளாலும் ஏற்படலாம். தொண்டை புண் (வலி)க்கு முக்கிய காரணமாக விளங்கும் பாக்டீரியாக்கள் பிரிவுகளில் ஒன்றாக இருப்பது, பிரிவு ஏ ஸ்ட்ரெப்டோகோக்கஸ் (ஜிஏஎஸ்), இது குழந்தைகள் பிரச்சினைகளில் 15% முதல் 20% வரை காணப்படுகிறது. இந்தியாவில் கூட, ஜிஏஎஸ் பிரச்சினைகள் 11% to 34%க்கு நடுவில் இருக்கிறது.மேற்கோள்கள்

 1. Nandi S, Kumar R, Ray P, Vohra H, Ganguly NK. Group A streptococcal sore throat in a periurban population of northern India: a one-year prospective study.. Departments of Experimental Medicine and Biotechnology, Postgraduate Institute of Medical Education and Research (PGIMER), Chandigarh, India. Bull World Health Organ. 2001;79(6):528-33. PMID: 11436474
 2. Am Fam Physician. 2004 Mar 15;69(6):1465-1470. [Internet] American Academy of Family Physicians; Pharyngitis.
 3. ENT Health [Internet]. American Academy of Otolaryngology–Head and Neck Surgery Foundation; Sore Throats.
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Strep Throat
 5. The Merck Manual of Diagnosis and Therapy [internet]. US; Sore Throat
 6. Huang Y, Wu T, Zeng L, Li S. Chinese medicinal herbs for sore throat. Cochrane Database Syst Rev. 2012 Mar 14;(3):CD004877. PMID: 22419300.

தொண்டை புண் (வலி) க்கான மருந்துகள்

தொண்டை புண் (வலி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page