டென்டின் பிறழ்வு வகை II என்றால் என்ன?

டென்டின் பிறழ்வு வகை II என்பது ஒரு மரபணு கோளாறு, இது பற்களின் திசுவிற்கு பாதிப்பேற்படுத்துக்கூடியது.

டிஸ்பிளேசியா என்றால் அசாதாரணமான வளர்ச்சி என்று பொருள், எனவே அதன் பொருள்பட டென்டின் பிறழ்வு வகை II ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அசாதாரணமான டென்டின் உருவாக்கம் ஏற்படும். இதனால் பால்பற்கள் அல்லது முதன்மையாக தோன்றும் பற்களே பொதுவாக பாதிக்கப்படுகின்றன. இந்த டென்டின் உருவாக்கம் பெரும்பகுதி பற்களின் கிரீடப்பகுதியில் ஏற்படுவதால் இது கரோனல் பிறழ்வு நோய் எனவும் அழைக்கப்படுகிறது. டென்டின் பிறழ்வு வகை II பற்களுக்கு மட்டுமே பாதிக்கபேற்படுத்துகிறது. அதோடு, நிரந்திர பற்களின் அமைப்பு அரிதாகவோ அல்லது லேசாகவோதான் தான் பாதிக்கப்படுகின்றது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலினரையும் சமமாக தாக்கக்கூடியது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

டென்டின் பிறழ்வு வகை II என்பது முதன்மை பல் அமைப்பில் ஏற்படும் அசாதாரண உருவாக்கத்தை பண்பிடக்கூடியது, இது பெரும்பாலும் சாதாரண வேர்களையே தோற்றுவிக்கும் ஆனால் பல்லின் கிரீடத்தில் குறைவான கூழ் பகுதியை கொண்டிருக்கும். பல் கிரீடம் என்பது தோற்றத்தில் குமிழ் வடிவத்தைக் கொண்டிருக்கும். நிறம்மாறிய பற்கள் மற்றும் குறைந்த கூழ் பகுதியைக் கொண்ட பற்கள் ஆகியவையே இதன் முக்கிய அறிகுறிகளாகும். பொதுவாக பற்கள் பிரௌனிஷ்-ப்ளூ, பிரௌன் அல்லது மஞ்சள் போன்ற நிறங்களில் மாற்றமடைகின்றன.

பெரும்பாலான நேரங்களில், நிரந்தர பற்கள் எந்த பாதிப்புமில்லாமல் இருக்கும். ஆனால் நிரந்தரமான பல் அமைப்புக்கான வளர்ச்சியில் ஈடுபடும்போது நிறம், வடிவம் மற்றும் பற்களின் அளவு ஆகியவை சாதாரணமான தோற்றத்தையே காட்டுகிறது. டென்டின் பிறழ்வு வகை II ன் அறிகுறிகள் டெண்டினோஜெனீசிஸ் இம்பெர்ஃபெக்டா வகைகள் I, II மற்றும் III மற்றும் டென்டின் பிறழ்வு வகை I ஆகியவைகளின் அறிகுறிகளோடு ஒத்து இருக்கின்றது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

டென்டின் பிறழ்வு வகை II என்பது தன்னியக்க மேலாதிக்க நிலையாகும், இது டென்டின் சியாலோபாஸ்போப்ரோடீன் மரபணு (டிஎஸ்பிபி) பிறழ்வின் காரணமாக ஏற்படுகிறது. 50% வழக்குகளில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட தாயின் மூலம் இந்த மரபணு பாலினம் வேறுபாடின்றி குழந்தைக்கு மாற்றப்படுகிறது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

டென்டின் பிறழ்வு வகை II நோயை ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறியலாம். உங்கள் பல் மருத்துவர் முழுமையான வரலாற்றை எடுப்பதோடு அதை உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார். பல்லின் கூழ் கற்கள், முற்றிலும் அழிந்த கூழ் அறை, அசாதாரண கரோனல் கூழ் உருவாக்கம் அல்லது கூழ் அறையில் திஸ்ட்டில்-வடிவ குறைபாடு போன்றவைகளை காண்பதற்கு எக்ஸ்-கதிர் (எக்ஸ் - ரே) சோதனை மேற்கொள்ளப்படும்.

பற்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவினை பொறுத்து சிகிச்சை வேறுபடும். மீளமைக்கப்பட்ட வேர்கள் மற்றும் முற்றிலும் சிதைந்த கூழ் போன்றவைகளை உடைய பற்களுக்கு வேர் கால்வாய் சிகிச்சை செய்யமுடியாது. சில நேரங்களில், பற்களின் சீரமைப்பிற்காக ஆர்த்தோடான்டிக்ஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. மற்ற சிகிச்சை தேர்வுகளானது அனைத்து பற்களையும் அகற்றிவிட்டு அதற்கு பதில் பொய்ப்பற்கள் அல்லது செயற்கையாக பற்களை பொருத்துதல் ஆகும். பாதிக்கப்பட்ட பற்களில் ஏற்பட்ட சேத அளவினை பொறுத்து சிகிச்சை காலம் மாறுபடக்கூடியது.

(மேலும் படிக்க: பல் சொத்தை சிகிச்சைகள்).

Read more...
Read on app