மாதவிடாய் வலியானது, மாதவிலக்கு வலி அல்லது வலிமிகுந்த மாதவிடாய் எனவும் அறியப்படுகிறது. இது, கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களுமே, அவர்களின் மாதவிடாய் காலத்தில் ஒரு முறையேனும், அனுபவித்த ஒன்றாக இருக்கிறது. மாதவிடாய் வலியானது, பல்வேறுபட்ட பெண்களால் பல்வேறு விதங்களில் உணரப்படுகிறது. ஒரு பெண், பல்வேறு மாதவிடாய் சுழற்சிகளை, பல்வேறு விதங்களில் உணரவும் செய்யலாம். சிலருக்கு, இது மிதமான மற்றும் குறைவான அசௌகரியத்தைக் கொடுக்கிற அதே வேளையில், வேறு சிலருக்கு இது வலிமிகுந்ததாக மற்றும் தொல்லை தருவதாக இருக்கிறது.

மாதவிடாய் வலி, உங்கள் தொடைகள், கால்கள், கீழ் முதுகு, மற்றும் சிலநேரங்களில் மார்புப்பகுதிக்கும் பரவக் கூடிய மாதவிடாய் காலத் தசைப்பிடிப்புகளாக, கீழ் இடுப்புப் பகுதியில் உணரப்படுகிறது. பெரும்பாலும் மாதவிடாய் வலி, ஒரு பெண்ணுக்கு அவரின் முதல் மாதவிடாய் காலத்தின் போது, மிகவும் தீவிரமானதாக இருக்கிறது.

இருந்தாலும், உங்களின் உடல்நிலை, மனநிலை மற்றும் ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றைப் பொறுத்து, உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட, மாதவிடாய் வலியைப் பல்வேறு மாறுபட்ட தீவிரமான நிலைகளில் நீங்கள் உணரக் கூடும். பெரும்பாலும், இது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கக் கூடியது. ஆனால், உங்கள் மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக மற்றும் தாங்க முடியாததாக இருக்கும் பட்சத்தில், உங்கள் வலியுடன் இணைந்த வேறு ஏதேனும் மறைந்திருக்கும் மருத்துவரீதியிலான பிரச்சினை அல்லது கோளாறு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய, உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகும் படி, உங்களை மிக முக்கியமாக அறிவுறுத்துகிறோம்.

 1. மாதவிடாய் வலியின் வகைகள் - Types of period pain in Tamil
 2. மாதவிடாய் வலியின் அறிகுறிகள் - Symptoms of period pain in Tamil
 3. மாதவிடாய் வலிக்கான காரணங்கள் - Period pain causes in Tamil
 4. மாதவிடாய் வலிக்கான காரணங்கள் - Period pain causes in Tamil
 5. மாதவிடாய் வலிக்கான வீட்டு நிவாரணிகள் - Home remedies for period pain in Tamil
 6. மாதவிடாய் வலிக்கான அறுவை சிகிச்சை - Surgery for period pain in Tamil
 7. மாதவிடாய் வலி சிகிச்சை - Menstrual pain treatment in Tamil
 8. செவ்வந்திப்பூ தேநீர் - Chamomile tea in Tamil
 9. மாதவிடாய் வலிக்கான மருந்துகள் - Medicine for period pain in Tamil
 10. மாதவிடாய் வலி நிவாரணத்துக்காக அக்குபிரஷர் - Acupressure for menstrual pain relief in Tamil
 11. மாதவிடாய் வலி நிவாரணத்துக்காக அக்குபங்சர் - Acupuncture for period pain relief in Tamil
 12. மாதவிடாய் வலிக்கான வலி நிவாரணிகள் - Painkillers for period pain in Tamil
 13. மாதவிடாய் வலிக்கான வெப்ப சிகிச்சை - Heat therapy for period pain in Tamil
 14. மாதவிடாய் வலிக்காக மஸாஜ் - Massage in period pain in Tamil
 15. மாதவிடாய் வலிக்கான தளர்வு முறைகள் - Relaxation methods for period pain in Tamil
 16. மாதவிடாய் வலியைக் குறைப்பதற்கான உணவுப் பழக்க முறை - Diet to reduce period pain in Tamil
 17. மாதவிடாய் வலியின் போது தூக்கத்தின் விளைவு - Sleep effective in period pain in Tamil
 18. மாதவிடாய் வலியைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகள் - Exercise to reduce period pain in Tamil
 19. மாதவிடாய் வலியைக் குறைக்க தண்ணீர் அதிக அளவு அருந்துதல் - Increase water intake to reduce period pain in Tamil
 20. மாதவிடாய் வலியைக் குறைப்பதற்காக மெக்னீஷியம் - Magnesium to reduce period pain in Tamil
 21. மாதவிடாய் வலிக்காக வைட்டமின் பி1 மற்றும் மீன் எண்ணெய் - Vitamin B1 and Fish oil for period pain in Tamil
 22. மாதவிடாய் வலியைக் குறைக்க பெருஞ்ஜீரக விதைகள் - Fennel seeds to reduce period pain in Tamil
 23. மாதவிடாய் வலியைக் குறைக்க போரான் - Boron to reduce period pain in Tamil
 24. மாதவிடாய் வலியை இல்லாமல் ஆக்க மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் - Release stress to get rid of period pain in Tamil
 25. மாதவிடாய் வலியை இல்லாமல் செய்வதற்கு இந்த உணவுகளைத் தவிர்க்கவும் - Avoid these foods to get rid of period pain in Tamil
 26. மாதவிடாய் வலி நிவாரணத்துக்காக இஞ்சி - Ginger for menstrual pain relief in Tamil
 27. மாதவிடாய் வலியை இல்லாமல் போக்க மஞ்சள் உதவுகிறது - Turmeric helps get rid of period pain in Tamil
மாதவிடாய் வலி டாக்டர்கள்

மாதவிடாய் வலியானது, வலிக்கான காரணத்தின் அடிப்படையில் முதன்மை நிலையானது மற்றும் இரண்டாம் நிலையானது என வகைப்படுத்தப்பட இயலும்.

 • முதன்மை நிலை மாதவிடாய் வலி
  இது, கருப்பையின் உட்புற சுவர்களின் உரிதல் காரணமாக, தனியே வலி மட்டும் ஏற்படுவதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. வலிக்கு காரணமாக அத்துடன் இணைந்த வேறு எந்த ஒரு நோயும் இருப்பது கிடையாது.
   
 • இரண்டாம் நிலை மாதவிடாய் வலி
  இரண்டாம் நிலை மாதவிடாய் வலி என்பது, இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகிற ஒரு கோளாறு காரணமாக ஏற்படுகிற வலியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆர்மபிக்கிறது, மாதவிடாய் காலத்தில் மேலும் மோசமாகிறது மற்றும் உதிரப்போக்கு நின்ற பிறகும் கூட வலி போகாமல் நீடிக்கிறது. 

மாதவிடாய் வலியின் மிகவும் பொதுவான அறிகுறி, அடிவயிற்றில் ஏற்படும் ஒரு வலி ஆகும். இருந்தாலும், முதன்மை நிலை மாதவிடாய் வலியில், பின்வருவன போன்ற வேறு சில அறிகுறிகளையும் நீங்கள் உணரக் கூடும்:

 • உங்கள் கால்கள்,கீழ் முதுகு, மார்பு , இன்ன பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய, தொடைகளில் ஏற்படும் வலி.
 • குமட்டல்
 • வாந்தியும் கூட உணரப்படலாம். வழக்கமாக, வாந்தி எடுத்த பிறகு சிறிது வலி குறைந்தது போன்று உணரப்படலாம்.
 • சோர்வு
 • எரிச்சல் உணர்வு
 • மயக்கம்

ஒரு மகப்பேறு மருத்துவரை எப்பொழுது பார்க்க வேண்டும்?

மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் அனைத்தும், வழக்கமாக முதன்மை நிலை மாதவிடாய் வலியில் காணப்படும். மேலும் அவை, வீட்டிலேயே நிவாரணிகளை எடுத்துக் கொள்வது மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம், எளிதாகக் குறைக்கக் கூடியவை ஆகும். இருந்தாலும், பின்வரும் இரண்டாம் நிலை மாதவிடாய் வலியின் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கொண்டிருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அல்லது மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டும்.

 • அரிப்பு, சிவந்து போதல், வலி போன்ற பிற அறிகுறிகளுடன் கூடிய, பெண்ணுறுப்பில் திரவ வெளியேற்றம்.
 • அந்தரங்க உறுப்புகளில் இருந்து துர்நாற்றம்.
 • உங்கள் மாதவிடாயை நீங்கள் எதிர்பார்க்காத பொழுது, பெண்ணுறுப்பில் இருந்து உதிரப்போக்கு.
 • கண்டறிய முடியாத காரணத்தினால், இடுப்புப் பகுதியில் திரும்பத் திரும்ப ஏற்படும் கடுமையான வலி.

பின்வருபவை மாதவிடாய் வலியுடன் இணைந்திருக்கின்ற காரணங்கள் ஆகும்

முதன்மை நிலை மாதவிடாய் வலி

இது, சரியாக மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் முன்பாக ஆரம்பிக்கிறது. கருமுட்டை கருவாக உருவாக்கப்படாமல் இருக்கும் பொழுது, கருப்பை அதன் உட்புற சுவர்களை (கருப்பை உட்படலம்) உகுக்கும் செயல்பாட்டை ஆரம்பிக்கிறது. இந்த செயல்பாட்டின் போது, ப்ரோஸ்டாகிளாண்டின்கள் (கருப்பையினுள் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள்) கருப்பையின் உட்புற சுவர்களை ஒன்று திரட்ட ஆரம்பிக்கிறது. இந்த ஹார்மோன்கள், கருப்பை சுவர்களை உகுக்க செய்வதற்கு பதிலாக, அவை சுருங்குவதற்கு காரணமாகி ன்றன. இந்த சுருங்குதல்கள் வலிமையானவையாக இருக்கின்றன மற்றும் இடுப்புப் பகுதியில் தசைப்பிடிப்புகளாக உணரப்படுகின்றன. கருப்பையின் உட்படலம் உகுப்பதனை ஆரம்பிக்கும் பொழுது, இரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன, அதன் விளைவாக, ஆக்சிஜன் அளிப்பு குறைக்கப்படுகிறது. அடுத்தபடியாக இது, மூளைக்கு சமிக்கைகளை அனுப்பி வலி உணர்வுகளைத் தூண்டி விடுகிறது. அதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில், வலி மிகவும் மோசமானதாக இருக்கிறது. நாட்கள் நகர நகர, கருப்பை உட்படலத்தின் தடிமன் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் ப்ரோஸ்டாகிளாண்ட்களின் அளவு குறைகிறது. ஆதலால், மாதவிடாய் சுழற்சி நடைபெறப் பெற வலி நீங்குகிறது. மாதவிடாயின் மிகவும் வழக்கமான அறிகுறியான வயிறு உப்புதலின் காரணமாகவும் கூட வலி ஏற்படக்கூடும். முதன்மை நிலை மாதவிடாய் வலியின் போது, வலிக்கு காரணமாகக் கூடிய, வேறு எந்த ஒரு மறைந்து இருக்கும் நோயும் இருப்பது கிடையாது. 

இரண்டாம் நிலை மாதவிடாய் வலி

இது, இனப்பெருக்க அமைப்பில் மறைந்து இருக்கக் கூடிய ஒரு நோயின் காரணமாக ஏற்படுகிறது. “மாதவிடாய் வலி மற்றும் அது தொடர்பான நோய்கள்" -இல் உள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, இரண்டாம் நிலை மாதவிடாய் வலி ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்ற, சில மருத்துவரீதியிலான பிரச்சினைகள் பின்வருமாறு:

 • எண்டோமெட்ரியோசிஸ்
  இது, கருப்பை உட்படலத்தின் செல்கள் அதீத வளர்ச்சி அடைந்து, கருப்பையைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கும் பரவுகின்ற ஒரு பிரச்சினை ஆகும். அவை, கருமுட்டை குழாய், கருப்பை, சிறுநீர்ப்பையின் மேல், இன்ன பிற இடங்களில் வளரக் கூடும்.மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஒரு எதிர்விளைவாகவும், கருப்பை உட்படலம் உதிர்கிறது. அதன் விளைவாக, கருப்பையில், அதே போல, கருப்பை உட்படலம் அதீத வளர்ச்சி அடைந்து இருக்கும் இடங்களில், உதிரப்போக்கு ஆரம்பிக்கிறது. இந்த இரத்தம், பல்வேறு உறுப்புகளின் ஒட்டுதலுக்கு (ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளுதல்) காரணமாகி, வலியை ஏற்படுத்துகிறது. (மேலும் படிக்க: கருப்பை உட்படல சிகிச்சை
   
 • கருப்பை திசுக்கட்டி
  கருப்பை உட்படல திசுக்கள், கருப்பையின் தசைகளின் வழியாக தள்ளிக் கொண்டு வெளியே வந்து வளர ஆரம்பிப்பது, கருப்பை திசுக்கட்டி என அறியப்படுகிறது. இது, அடிவயிற்றில் கடுமையான வலி, மாதவிடாய் கால தசைப்பிடிப்புகள், கருப்பை பெரிதாகுதல், மற்றும் அதீத மாதவிடாய் உதிரப்போக்கு ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
   
 • நார்த்திசுக் கழலைகள்
  நார்த்திசுக் கழலைகள் என்பவை, கருப்பை சுவரில் புற்றுநோய் இல்லாத, பாலி போன்ற கட்டிகளின் வளர்ச்சி ஆகும். வழக்கமா அவை அளவில் சிறியவையாக மற்றும் கருப்பையில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக் கூடியவையாக இருக்கின்றன. சிறிய நார்த்திசுக் கழலைகள் எந்த ஒரு பிரச்சினையையும் ஏற்படுத்தாது. ஆனால், அளவில் பெரியவை கடுமையான வலி, அதீத உதிரப்போக்கு, இன்ன பிற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். (மேலும் படிக்க: கருப்பை நார்த்திசு கழலைகள்)
   
 • இடுப்பு அழற்சி நோய் (பி..டி)
  கருப்பை, கருமுட்டை குழாய்கள் ஆகியவற்றில் ஒரு நுண்ணுயிர் நோய்த்தொற்று ஏற்படும் பொழுது, அது இடுப்புப் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியில் அழற்சியை (வீக்கம்) ஏற்படுத்துகிறது. இது, இடுப்பு அழற்சி நோய் என அறியப்படுகிறது. இது, மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியது. ஆயினும் இடுப்பு வலி, உதிரப்போக்கு நின்ற பிறகும் கூட நீடிக்கிறது.
   
 • கருப்பையக சாதனங்கள் (.யூ.டி.க்கள்)
  கருப்பையக சாதனங்கள் என்பவை, கர்ப்பம் உண்டாவதைத் தடுப்பதற்காக, கருப்பையின் உள்ளே செலுத்தப்படும் ஒரு கருவியான, கருத்தடை சாதனம் ஆகும். உடல் இந்த புதிய சாதனத்தை ஏற்றுக் கொள்ள சில மாதங்கள் எடுத்துக் கொள்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவை, மாதவிடாய் ஏற்படும் பொழுது, வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக மாறலாம். சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த வலி முழுமையாக மறைந்து விடக் கூடும்
   
 • கருப்பை வாய் குறுக்கம்
  கருப்பை வாய் அல்லது பிறப்புப் பாதை, வழக்கத்தை விட குறுகலானதாக இருக்கும் பொழுது, மாதவிடாயின் போது உடலில் இருந்து இரத்தம், அதன் வழியாக வெளியேற முயற்சிக்கும் பொழுது, அது வலிமிகுந்ததாக மாறுகிறது. அதன் விளைவாக, கடுமையான வலி உணரப்படலாம்.

பின்வருபவை மாதவிடாய் வலியுடன் இணைந்திருக்கின்ற காரணங்கள் ஆகும்

முதன்மை நிலை மாதவிடாய் வலி

இது, சரியாக மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் முன்பாக ஆரம்பிக்கிறது. கருமுட்டை கருவாக உருவாக்கப்படாமல் இருக்கும் பொழுது, கருப்பை அதன் உட்புற சுவர்களை (கருப்பை உட்படலம்) உகுக்கும் செயல்பாட்டை ஆரம்பிக்கிறது. இந்த செயல்பாட்டின் போது, ப்ரோஸ்டாகிளாண்டின்கள் (கருப்பையினுள் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள்) கருப்பையின் உட்புற சுவர்களை ஒன்று திரட்ட ஆரம்பிக்கிறது. இந்த ஹார்மோன்கள், கருப்பை சுவர்களை உகுக்க செய்வதற்கு பதிலாக, அவை சுருங்குவதற்கு காரணமாகி ன்றன. இந்த சுருங்குதல்கள் வலிமையானவையாக இருக்கின்றன மற்றும் இடுப்புப் பகுதியில் தசைப்பிடிப்புகளாக உணரப்படுகின்றன. கருப்பையின் உட்படலம் உகுப்பதனை ஆரம்பிக்கும் பொழுது, இரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன, அதன் விளைவாக, ஆக்சிஜன் அளிப்பு குறைக்கப்படுகிறது. அடுத்தபடியாக இது, மூளைக்கு சமிக்கைகளை அனுப்பி வலி உணர்வுகளைத் தூண்டி விடுகிறது. அதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில், வலி மிகவும் மோசமானதாக இருக்கிறது. நாட்கள் நகர நகர, கருப்பை உட்படலத்தின் தடிமன் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் ப்ரோஸ்டாகிளாண்ட்களின் அளவு குறைகிறது. ஆதலால், மாதவிடாய் சுழற்சி நடைபெறப் பெற வலி நீங்குகிறது. மாதவிடாயின் மிகவும் வழக்கமான அறிகுறியான வயிறு உப்புதலின் காரணமாகவும் கூட வலி ஏற்படக்கூடும். முதன்மை நிலை மாதவிடாய் வலியின் போது, வலிக்கு காரணமாகக் கூடிய, வேறு எந்த ஒரு மறைந்து இருக்கும் நோயும் இருப்பது கிடையாது. 

இரண்டாம் நிலை மாதவிடாய் வலி

இது, இனப்பெருக்க அமைப்பில் மறைந்து இருக்கக் கூடிய ஒரு நோயின் காரணமாக ஏற்படுகிறது. “மாதவிடாய் வலி மற்றும் அது தொடர்பான நோய்கள்" -இல் உள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, இரண்டாம் நிலை மாதவிடாய் வலி ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்ற, சில மருத்துவரீதியிலான பிரச்சினைகள் பின்வருமாறு:

 • எண்டோமெட்ரியோசிஸ்
  இது, கருப்பை உட்படலத்தின் செல்கள் அதீத வளர்ச்சி அடைந்து, கருப்பையைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கும் பரவுகின்ற ஒரு பிரச்சினை ஆகும். அவை, கருமுட்டை குழாய், கருப்பை, சிறுநீர்ப்பையின் மேல், இன்ன பிற இடங்களில் வளரக் கூடும்.மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஒரு எதிர்விளைவாகவும், கருப்பை உட்படலம் உதிர்கிறது. அதன் விளைவாக, கருப்பையில், அதே போல, கருப்பை உட்படலம் அதீத வளர்ச்சி அடைந்து இருக்கும் இடங்களில், உதிரப்போக்கு ஆரம்பிக்கிறது. இந்த இரத்தம், பல்வேறு உறுப்புகளின் ஒட்டுதலுக்கு (ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளுதல்) காரணமாகி, வலியை ஏற்படுத்துகிறது. (மேலும் படிக்க: கருப்பை உட்படல சிகிச்சை
   
 • கருப்பை திசுக்கட்டி
  கருப்பை உட்படல திசுக்கள், கருப்பையின் தசைகளின் வழியாக தள்ளிக் கொண்டு வெளியே வந்து வளர ஆரம்பிப்பது, கருப்பை திசுக்கட்டி என அறியப்படுகிறது. இது, அடிவயிற்றில் கடுமையான வலி, மாதவிடாய் கால தசைப்பிடிப்புகள், கருப்பை பெரிதாகுதல், மற்றும் அதீத மாதவிடாய் உதிரப்போக்கு ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
   
 • நார்த்திசுக் கழலைகள்
  நார்த்திசுக் கழலைகள் என்பவை, கருப்பை சுவரில் புற்றுநோய் இல்லாத, பாலி போன்ற கட்டிகளின் வளர்ச்சி ஆகும். வழக்கமா அவை அளவில் சிறியவையாக மற்றும் கருப்பையில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக் கூடியவையாக இருக்கின்றன. சிறிய நார்த்திசுக் கழலைகள் எந்த ஒரு பிரச்சினையையும் ஏற்படுத்தாது. ஆனால், அளவில் பெரியவை கடுமையான வலி, அதீத உதிரப்போக்கு, இன்ன பிற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். (மேலும் படிக்க: கருப்பை நார்த்திசு கழலைகள்)
   
 • இடுப்பு அழற்சி நோய் (பி..டி)
  கருப்பை, கருமுட்டை குழாய்கள் ஆகியவற்றில் ஒரு நுண்ணுயிர் நோய்த்தொற்று ஏற்படும் பொழுது, அது இடுப்புப் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியில் அழற்சியை (வீக்கம்) ஏற்படுத்துகிறது. இது, இடுப்பு அழற்சி நோய் என அறியப்படுகிறது. இது, மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியது. ஆயினும் இடுப்பு வலி, உதிரப்போக்கு நின்ற பிறகும் கூட நீடிக்கிறது.
   
 • கருப்பையக சாதனங்கள் (.யூ.டி.க்கள்)
  கருப்பையக சாதனங்கள் என்பவை, கர்ப்பம் உண்டாவதைத் தடுப்பதற்காக, கருப்பையின் உள்ளே செலுத்தப்படும் ஒரு கருவியான, கருத்தடை சாதனம் ஆகும். உடல் இந்த புதிய சாதனத்தை ஏற்றுக் கொள்ள சில மாதங்கள் எடுத்துக் கொள்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவை, மாதவிடாய் ஏற்படும் பொழுது, வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக மாறலாம். சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த வலி முழுமையாக மறைந்து விடக் கூடும்
   
 • கருப்பை வாய் குறுக்கம்
  கருப்பை வாய் அல்லது பிறப்புப் பாதை, வழக்கத்தை விட குறுகலானதாக இருக்கும் பொழுது, மாதவிடாயின் போது உடலில் இருந்து இரத்தம், அதன் வழியாக வெளியேற முயற்சிக்கும் பொழுது, அது வலிமிகுந்ததாக மாறுகிறது. அதன் விளைவாக, கடுமையான வலி உணரப்படலாம்.

முதன்மை நிலை மாதவிடாய் வலிக்கு, வீட்டிலேயே எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். நீங்கள் கவனத்தில் கொள்ளக் கூடிய, நமது பட்டியலில் உள்ள சில விஷயங்கள் பின்வருமாறு:

உங்கள் மாதவிடாய் வலிக்கான காரணம், மருந்துகளால் குணப்படுத்த முடியாததாக இருந்தால், அதன் பின்னால் மறைந்து இருக்கும் காரணத்தை நீக்குவதற்கு, ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு, உங்கள் மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவர் உங்களை அறிவுறுத்தலாம். அதனால் உங்களுக்கு, எண்டோமெட்ரியோசிஸ், நார்த்திசு கழலை, கருப்பை திசுக்கட்டி, கருப்பை வாய் குறுக்கம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம்.

மாதவிடாய் வலிக்கான சிகிச்சை, அதன் பின்னால் மறைந்து இருக்கும் காரணத்தைப் பொறுத்து இருக்கிறது. மேலும், வீட்டு மருத்துவம், மருந்துகள், அக்குப்ரஷர், அக்குபங்சர், அறுவை சிகிச்சை, இன்ன பிறவற்றை உள்ளடக்கியதாக இருக்கக் கூடும். 

செவ்வந்திப்பூவின் மருத்துவ குணங்களை ஆய்வு செய்ய நடத்தப்பட்ட முறைசார்ந்த ஒரு ஆய்வில், செவ்வந்திப்பூ, தசைப் பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் சுழற்சியோடு இணைந்த பிற அறிகுறிகளைக் குறைப்பதில் திறன்மிக்கது எனத் தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்குத் தேவையானவை என்ன
1-2 தேக்கரண்டி செவ்வந்திப்பூ, ஒரு கோப்பை தண்ணீர், தேன் அரை தேக்கரண்டி. 

எவ்வாறு பயன்படுத்துவது
ஒரு செவ்வந்திப்பூ தேநீரைத் தயாரிக்க, ஒரு கோப்பை தண்ணீரில் செவ்வந்திப்பூவை சேர்த்து, 5-7 நிமிடங்களுக்கு அதை ஊற விடவும். தேநீரை வடிகட்டி, உங்களின் மாதவிடாய் காலத்தின் பொழுது, ஒரு நாளைக்கு 2-3 முறைகள் அருந்தவும். 

 • வழக்கமாக முதன்மை நிலை மாதவிடாய் வலிக்கு, மேலே குறிப்பிடப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும். இருந்தாலும், வலியின் கடுமை அதிகரித்து, உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படக் கூடும். உங்கள் மருத்துவர், சக்தி வாய்ந்த வலிநிவாரணிகள் அல்லது, உங்கள் மாதவிடாய் வலியின் தீவிரத்தைக் குறைக்கக் கூடிய ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரை செய்யக் கூடும்.
   
 • உங்களுக்கு இரண்டாம் நிலை மாதவிடாய் வலி ஏற்பட்டால், அதற்கான காரணத்தின் அடிப்படையில், உங்கள் மருத்துவர், மறைந்து இருக்கும் நுண்ணுயிர் தொற்று அல்லது அழற்சி நோய்கள் அல்லது உங்கள் அறிகுறிகளின் வேறு ஏதேனும் காரணத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், அல்லது வாய்வழி உட்கொள்ளும் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றைப் பரிந்துரை செய்யலாம்.

முதன்மை நிலை மாதவிடாய் வலியின் மீதான, அக்குபிரஷர் மற்றும் அக்குபங்சரின் திறனைப் பற்றிய ஒரு ஆய்வு, இந்த இரண்டு முறைகளை சிகிச்சையில் சேர்த்துக் கொள்வது, மாதவிடாய் வலி நீடிக்கும் காலம் மற்றும் அதன் தீவிரத்தைக் குறைப்பதில், நன்மைபயக்கக் கூடியதாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது.
உங்கள் வலியில் இருந்து நிவாரணம் பெற, நீங்கள் ஒரு தொழில்முறை அக்குபிரஷர் அல்லது அக்குபங்சர் நிபுணரின் உதவியை நாடலாம்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மற்றும் முதன்மை நிலை மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதில், அக்குபங்சர் மற்றும் அக்குபிரஷர் ஆகியவற்றின் விளைவின் மீது, ஒரு ஆய்வு 2015 ஆம் வருடம்   நடத்தப்பட்டது. அந்த ஆய்வு அக்குபங்சர், மாதவிடாய் காலத்தில் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற அதே வேளையில், அக்குப்ரஷர், வலிநிவாரணிகளைப் போன்று வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதில் திறன்மிக்கதாக இருப்பதாகத் தெரிவித்தது.

உங்கள் அறிகுறிகளில் இருந்து விடுபட, தொழில்முறை அக்குபிரஷர் மற்றும் அக்குபங்சர் நிபுணர்களிடம் செல்லுங்கள்.

உங்கள் வலி தாங்க முடியாததாக மாறும் பொழுது நீங்கள், டிக்லோஃபெனாக், ஐபிபுரோஃபென், அசிட்டாமினோஃபென் போன்ற, பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் கிடைக்கிற (ஓ.ஒய்.சி), ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த மருந்துகள், உடலில் உள்ள ப்ரோஸ்டாகிளாண்டின்களின் அளவைக் குறைப்பதில் உதவி புரிந்து, அதன் மூலம் வழியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

இந்த மருந்துகளை வாங்க, மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவை இல்லை என்றாலும் கூட, உங்களுக்கு வயிற்றுப் புண்கள், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள்இதய நோய்கள்ஆஸ்துமா ஆகிய நோய்கள் இருந்தால், நீங்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது போன்ற நிலைகளில், உங்கள் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற, ஒரு மாற்று வலி நிவாரணிக்காக உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு உங்களை அறிவுறுத்துகிறோம்.

முதன்மை நிலை மாதவிடாய் வலியின் மீதான, வெப்ப சிகிச்சையின் விளைவை அடிப்படையாகக் கொண்ட முறைசார்ந்த ஆய்வுகள் மீதான மதிப்பீடு, 2016 ஆம் ஆண்டு மேற்கெள்ளப்பட்டது.அந்த மதிப்பீடு வெப்ப சிகிச்சையானது, மாதவிடாயின் போது ஏற்படுகிற அடிவயிற்று வலியைக் கணிசமாகக் குறைக்கிறது என்று தெரிவிக்கிறது.

உங்களுக்குத் தேவையானவை எவை
வெந்நீர், ஒரு பிளாஸ்டிக் குடுவை அல்லது தண்ணீர் பை.

அதை எவ்வாறு பயன்படுத்துவது?
வெப்ப சிகிச்சைக்கு, நீங்கள் ஒரு தண்ணீர் பையிலோ அல்லது பிளாஸ்டிக் குடுவையிலோ வெந்நீரை நிரப்பி, அதைக் கொண்டு உங்கள் இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும். வெந்நீர் கொப்புளங்கள் ஏற்படுவதைத் தடுக்க, அது எந்த ஒரு இடத்திலும் கசியாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

இதற்கு மாறாக நீங்கள், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் வலியில் இருந்து விடுபட, அரை மணி நேரத்துக்கு வெந்நீர் நிரப்பப்பட்ட ஒரு குளியல் தொட்டியில் அமர்ந்து இருக்கலாம் அல்லது சூடான வெந்நீரில் ஒரு குளியல் போடலாம்.

மாதவிடாய் வலிக்கான மஸாஜ் சிகிச்சை முறையின் விளைவுகள் பற்றிய ஒரு ஆய்வு, இடுப்புப் பகுதியில் மஸாஜ் செய்வது, மாதவிடாய் வலியைக் கணிசமான அளவு குறைக்கிறது எனத் தெரிவிக்கிறது.

உங்களுக்குத் தேவையானவை எவை?
சூடுபடுத்தப்பட்ட கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய் 10 மில்லி. 

அதை எவ்வாறு பயன்படுத்துவது
மேலே குறிப்பிடப்பட்ட அத்தியாவசிய எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணெய்யை கொதிக்காத அளவுக்கு மிதமாக சூடுபடுத்தவும். கொஞ்சம் எண்ணெய்யை உங்கள் கையில் எடுத்து, உங்கள் இடுப்புப் பகுதி மற்றும் கீழ் முதுகு ஆகிய பகுதிகளில், 10-15 நிமிடங்களுக்கு சிறிய வட்ட வடிவ இயக்கத்தில் மென்மையாக மஸாஜ் செய்யவும். இது, உங்கள் மாதவிடாய் வலியில் இருந்து சிறிதளவு விடுபட உங்களுக்கு உதவக் கூடும். இந்த மஸாஜ் செய்து முடித்த பிறகு, ஒரு சூடான வெந்நீர் குளியலும் நீங்கள் செய்யலாம்.

சில நேரங்களில், மாதவிடாயின் போது, மன அழுத்தம், பதற்றம் மற்றும் மன இறுக்கம் ஆகியவை கூட உங்கள் வலியை மோசமடைய வைக்கலாம். அதனால், மனத் தளர்வு முறைகளைப் பயன்படுத்துவது கூட, உங்கள் கருப்பையின் தசைகளை தளர்வுற செய்வது மற்றும் உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களை (மகிழ்ச்சி ஹார்மோன்கள்) சுரக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம், உங்கள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவக் கூடும்.

இதை எவ்வாறு செய்வது?

ஒரு மென்மையான தரையின் மீது உங்கள் முதுகை வைத்துப் படுத்துக் கொள்ளவும். மூச்சை ஆழமாக உள்ளிழுக்கவும் மற்றும் மூச்சு விடுவதில் உங்கள் கவனத்தை செலுத்தவும். உங்கள் கண்களை மென்மையாக மூடிக் கொண்டு, தலையில் இருந்து பாதம் வரை உள்ள ஒவ்வொரு தசைகளின் மீதும் உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம் உங்கள் உடலைத் தளர்வாக வைக்கவும். குறைந்தது 15-20 நிமிடங்கள் இதை செய்யவும். மனத் தளர்வுக்காக தியான இசையையும் கூட, நீங்கள் ஒலிக்க செய்யலாம். வழிக்காட்டப்படும் தியான முறை, மற்றும் தியான இசை, இரண்டும் பல்வேறு வலைத்தளங்களில் கிடைக்கக் கூடும்.

உணவுப்பழக்கம், மாதவிடாய் வலி மற்றும் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள், இவற்றுக்கு இடையேயான தொடர்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு, குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த சைவ உணவுகள், மாதவிடாய் வலியை மற்றும் அதன் தீவிரத்தைக் குறைப்பதில் உதவுகின்றன எனத் தெரிவிக்கிறது.

உங்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து, கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். அதிக அளவில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவினை உண்ணுங்கள். இது, உங்கள் மாதவிடாய் வலியைக் குறைப்பதில் உதவுகிறது. அதே போல், உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவும்.

எப்போதுமே நன்கு உறங்குவது என்பது, ஏறத்தாழ எந்த ஒரு வகை வலியாக இருந்தாலும், அதிலிருந்து விடுபட நமக்கு உதவுகிறது. மாதவிடாய்க்கு முந்தைய குறைபாட்டின் அறிகுறிகள், மாதவிடாய் கால மனப்பான்மை மற்றும் தூக்கத்தின் தரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய, 2015 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு, தூக்க நடைமுறைகளில் ஏற்படும் தொந்தரவுகள், மாதவிடாயின் போது ஏற்படும் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் நீடிக்கின்ற கால அளவுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

அதனால், உங்கள் மாதவிடாய் வலியின் தீவிரத்தைக் குறைக்க, நீங்கள் தவறாமல் 7-8 மணி நேர நல்ல தூக்கம் மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

கடந்த பத்தாண்டு காலமாக, முதன்மை நிலை மாதவிடாய் வலியின் மீது, உடற்பயிற்சி அல்லது யோகாவின் விளைவுகளை அறிய பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்த ஆய்வுகள், மாதவிடாயின் போது மற்றும் அதற்குப் பிறகு மிதமான உடற்பயிற்சிகளை செய்வது, மாதவிடாய் வலியின் தீவிரத்தைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கின்றன.

அதனால், யோகா, உடற்பயிற்சி, நீட்டி மடக்குதல், நீச்சல் போன்ற எந்த வகை உடல் செயல்பாடாக இருந்தாலும், அது, என்டோர்ஃபின்கள் அல்லது மகிழ்ச்சி ஹார்மோன்களின் சுரப்பைத் தூண்டுவதன் மூலம், உங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்கும். நீங்கள் தொடர்ந்து தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டால், அடுத்தடுத்து வரும் மாதவிடாய் சுழற்சிகளின் போதும், உங்கள் வலியின் தீவிரம் குறையக் கூடும். சுய தூண்டுதல் மூலம் அல்லது உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் பெண்ணுறுப்பு உச்சகட்டத்தை அடைவதும் கூட, உங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்கக் கூடும். உங்கள் இணை, ஆணுறை அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும். ஏனென்றால், மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது, இடுப்பு அழற்சி நோய் போன்ற பரவக்கூடிய தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிக அளவில் கொண்டிருக்கிறது.

அதிக அளவு தண்ணீர் அருந்துவது, உங்கள் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது அல்ல. உடலில் போதுமான அளவு தண்ணீரைக் கொண்டிருப்பது, உடலில் சிறுநீர் தேங்குவதைத் தடுக்கும் மற்றும் வயிறு உப்புதலில் இருந்து உங்களைத் தள்ளியே வைத்திருக்கும். நீங்கள், உங்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பொழுது, வயிறு உப்புதல் வலிமிகுந்ததாக இருக்கக் கூடும். அதனால், உங்கள் மாதவிடாய்க்கு முன்னர் மற்றும் மாதவிடாயின் பொழுது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மகப்பேறு பிரச்சினைகளின் மீதான மெக்னீஷியத்தின் விளைவுகளை பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை, மெக்னீஷியம், மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது எனத் தெரிவித்து இருக்கிறது.

அதனால், உங்கள் மாதவிடாய் வலியில் இருந்து விடுபட நீங்கள், கீரை, கோஸ்கள், அவகோடா, ராஸ்பெரிக்கள், வாழைப்பழங்கள் போன்ற மெக்னீஷீயம் செறிவுள்ள உணவுகளை, உங்கள் உணவுப் பழக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.மேலும், உங்கள் மாதவிடாய் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்ற மெக்னீசியம் பிற்சேர்க்கை உணவுகளைப் பற்றி, நீங்கள் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பேசலாம்.

முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை மாதவிடாய் வலிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மூலிகை மற்றும் உணவு பிற்சேர்க்கை பொருட்களைப் பற்றிய ஒரு ஆய்வு, தினமும் 100 மி.கி அளவு வைட்டமின் பி1 அல்லது தியாமைன், மீன் எண்ணெய் மாத்திரைகளுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, மாதவிடாய் வலியைக் கணிசமான அளவு குறைக்கிறது எனத் தெரிவிக்கிறது.

நீங்கள் வைட்டமின் பி1- ஐ சுயமாக எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சரியான எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ஆகியவற்றை உங்களுக்குப் பரிந்துரைப்பார். பட்டாணிகள், பருப்பு வகைகள், கொட்டைகள், ஓட்ஸ், பால், சாதம் போன்ற, வைட்டமின் பி1 செறிவான உணவுகளையும் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

(மேலும் படிக்க: வைட்டமின் பி நன்மைகள்)

மாதவிடாய் வலியின் மீதான பெருஞ்ஜீரகத்தின் விளைவுகளைப் பற்றிய ஒரு ஆய்வு, 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு, 30 மி.கி பெருஞ்சீரக மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, கணிசமான அளவுக்கு மாதவிடாய் வலியைக் குறைக்கிறது எனத் தெரிவித்து இருக்கிறது.அந்த ஆய்வு, மாதவிடாயின் முதல் நாளில் இருந்து ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு, தினமும் நான்கு வேளை இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தொடர்புபடுத்துகிறது. அதனால், வலியில் இருந்து விடுபட நீங்கள், பெருஞ்ஜீரக தேநீர் அருந்துவது, பெருஞ்ஜீரக விதைகளை மெல்லுவது, அல்லது பெருஞ்ஜீரக பிற்சேர்க்கை உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை செய்யலாம்.

உங்களுக்குத் தேவையானவை எவை
ஒரு தேக்கரண்டி பெருஞ்ஜீரக விதைகள், ஒரு கோப்பை தண்ணீர், இஞ்சி, மற்றும் தேன்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது
நீங்கள் பெருஞ்ஜீரக விதைகளை ஒரு கோப்பை தண்ணீரில் போடுவதில் இருந்து ஆரம்பிக்கலாம். அதை 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். நீங்கள் விரும்பினால், சுவையை அதிகரிப்பதற்காக அதனுடன் இஞ்சி மற்றும் தேனையும் கூட நீங்கள் கலந்து கொள்ளலாம். இந்தத் தேநீரை, உங்கள் மாதவிடாய் காலத்தின் போது, ஒரு நாளுக்கு 2-3 முறைகள் அருந்தவும்.
கருஞ்ஜீரக மாத்திரைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு பற்றி அறிந்து கொள்ள, நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது ஒரு ஆயுர்வேத மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கலாம்

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளைக் குறைப்பதில் போரானின் விளைவுகளைப் பற்றிய ஒரு அமைப்புரீதியான ஆய்வு, ஒரு நாளுக்கு 10 மி.கி போரான் பிற்சேர்க்கைப் பொருட்களை உட்கொள்வது, மாதவிடாய் வலியின் தீவிரம் மற்றும் நீடிக்கும் கால அளவைக் கணிசமான அளவுக்கு குறைப்பதாகத் தெரிவிக்கிறது.

உங்கள் மாதவிடாய் காலத்தின் போது, ஒவ்வொரு நாளும் ஒருமுறை போரான் பிற்சேர்க்கைப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை ஆரம்பிக்கும் முன்பாக, உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்குமாறு நாங்கள் உங்களை அறிவுறுத்துகிறோம்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை உங்கள் உடலில், உங்கள் அறிகுறிகளை மேலும் மோசமடைய வைக்கும் அழுத்த ஹார்மோன்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் வலியின் மீதான ஒரு ஆய்வு, மன அழுத்தத்தைக் கொண்டிருக்கும் பெண்கள், மாதவிடாய் வலி ஏற்படுவதற்கான அபாயத்தை (மன அழுத்தம் இல்லாத பெண்களை விட இரண்டு மடங்கு) அதிக அளவில் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

அதனால், உடற்பயிற்சி, யோகா, தியானம், நடனம், இசை போன்றவற்றின் வழியாக மன அழுத்தத்தைக் குறைப்பது, உங்கள் மாதவிடாய் வலியின் தீவிரத்தைக் குறைக்க உங்களுக்கு உதவலாம். இதற்காக நீங்கள் ஒரு தொழில்முறை சிகிச்சையளிப்பவரின் உதவியையும் கூட நாடலாம்.

வயிறு உப்புதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற மிகவும் வழக்கமான ஒரு அறிகுறி ஆகும். காஃபி, மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், இனிப்பான உணவுகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது, வயிறு உப்புதலுக்குக் காரணமான, உடலில் நீர் தங்குவதற்கு வழிவகுக்கிறது. வயிறு உப்புதல் வலிக்கு வழிவகுக்கக் கூடும். அதனால், அத்தகைய உணவுகளில் இருந்து சிறிது காலம் தள்ளி இருப்பது நல்லதாகும்.

இஞ்சி, உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, மிகவும் பிடித்தமான மூலிகைகளில் ஒன்றாகும். அது, அதிக எண்ணிக்கையிலான உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஒரு சேர்மானப் பொருளாகவும் மற்றும் அதன் ஆரோக்கியமளிக்கும் நன்மைகளுக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, முதன்மை நிலை மாதவிடாய் வலியின் மீதான இஞ்சியின் பாதிப்புகளின் மீது கவனம் செலுத்தியது. அந்த ஆய்வில் இஞ்சி, மாதவிடாய் வலியின் தீவிரம் மற்றும் வலி நீடிக்கும் கால அளவு ஆகியவற்றைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

உங்களுக்குத் தேவையானவை எவை?
3-4 இஞ்சித் துண்டுகள் அல்லது ஒரு-அங்குல அளவு இஞ்சி, ஒரு கோப்பை தண்ணீர், ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு, மற்றும் அரை தேக்கரண்டி தேன்.
 

இதை எவ்வாறு பயன்படுத்துவது?
நீங்கள் ஒரு நாளுக்கு 3-4 இஞ்சி துண்டுகளை உட்கொள்ளவோ அல்லது ஒரு நாளுக்கு மூன்று முறை இஞ்சி தேநீர் அருந்தவோ செய்யலாம். இஞ்சித் தேநீர் தயாரிக்க, ஒரு அங்குல அளவுள்ள இஞ்சியை நறுக்கியோ அல்லது அரைத்தோ,  ஒரு கோப்பை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். சுவையை அதிகரிக்க அதில் நீங்கள், தேன் மற்றும் எலுமிச்சை சாறும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள், எல்லா இடத்திலும் பயன்படுத்தப்படும் பொதுவான நறுமணப் பொருட்களில் ஒன்று ஆகும். அது, அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளுக்காகவும் அறியப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, மாதவிடாய் அறிகுறிகளின் மீதான மஞ்சளின் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. அந்த ஆய்வு மூலம், மஞ்சள், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் மற்றும் நியூரோட்ரான்ஸ்மீட்டர் (நரம்புகளைத் தூண்டுகின்ற வேதிப்பொருட்கள்) பண்பேற்றி பண்புகளையும் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரப்பட்டது. அதன் விளைவாக அது, மாதவிடாயின் போது ஏற்படுகிற அறிகுறிகளைக் குறைக்கிறது.

உங்களுக்குத் தேவையானவை எவை?
அரைத் தேக்கரண்டி மஞ்சள், ஒரு கோப்பை தண்ணீர், அரை அங்குல இஞ்சி, அரைத் தேக்கரண்டி தேன்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மஞ்சள், தேன், மற்றும் இஞ்சியை சேர்க்கவும். ஒரு நாளுக்கு மூன்று முறை இந்தத் தேநீரை அருந்தவும்.

இதற்கு மாற்றாக, மஞ்சள் உட்பொருளைக் கொண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு பற்றி அறிய, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை செய்யலாம்.

Dr. Swati Rai

Dr. Swati Rai

Obstetrics & Gynaecology
10 वर्षों का अनुभव

Dr. Bhagyalaxmi

Dr. Bhagyalaxmi

Obstetrics & Gynaecology
1 वर्षों का अनुभव

Dr. Hrishikesh D Pai

Dr. Hrishikesh D Pai

Obstetrics & Gynaecology
39 वर्षों का अनुभव

Dr. Archana Sinha

Dr. Archana Sinha

Obstetrics & Gynaecology
15 वर्षों का अनुभव

ऐप पर पढ़ें