ஒவ்வாமை அல்லாத மூக்கழற்சி என்றால் என்ன?

ஒவ்வாமை அல்லாத மூக்கிற்குள் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தினால் வகைப்படுத்தப்படுகிறது, இது எந்தவிதமான ஒவ்வாமைப் பொருட்களாலும் ஏற்படுவதில்லை. பல்வேறு ஒவ்வாமை அல்லாத காரணிகளான புகை, வளிமண்டல அழுத்த மாற்றங்கள், வறண்ட காற்று, தொற்றுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படுகிறது. இந்த நிலைக்கான நோய்த்தாக்கம் ஒரு ஒவ்வாமைக் காரணியால் ஏற்படுவதல்ல ஆனால் அது ஒரு வீக்கம் காரணமாக ஏற்படுகிறது. 

அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஒவ்வாமை அல்லாத மூக்கழற்சி உள்ள நபர்களிடம் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:

  • மூக்கடைப்பு.
  • மூக்கு மற்றும் அதனைச் சுற்றி எரிச்சல் மற்றும் அசௌகரியம்.
  • அதிகமான தும்மல்.
  • மூக்கில் இருந்து நீர் வெளியேற்றம்.
  • வாசனை மற்றும் சுவையின் குறைந்த உணர்வு.
  • பசியின்மை.

பொதுவாக மூக்கு, தொண்டை மற்றும் கண்களில் அரிப்பு ஆகியவை ஒவ்வாமை மூக்கழற்சியின் பொதுவான அறிகுறிகளாக காணப்படுகிறது. எனினும், இந்த அறிகுறிகள் ஒவ்வாமை அல்லாத மூக்கழற்சி கொண்ட நபர்களிடம் அரிதாகவே வெளிப்படுகின்றன.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நிலைக்கான சரியான காரணம் தெளிவற்றதாக இருந்தாலும், பல்வேறு ஒவ்வாமை அல்லாத காரணிகள், ஒவ்வாமை அல்லாத மூக்கழற்சிக்கு பங்களிக்கின்றன. இந்த காரணிகள் பின்வருமாறு:

  • காற்று மாசுபாடு.
  • மது அருந்துதல்.
  • காரமான உணவு.
  • இபூபுரோபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள்.
  • உலர்ந்த வளிமண்டலம்.
  • வலுவான வாசனை பொருள்களான வாசனைத் திரவியம் மற்றும் வெளுப்பான்கள்.
  • பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் நிலைமையினை அடையாளம் காண பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோயறியும் முறைகளை பயன்படுத்தலாம்:

  • உடல் பரிசோதனை.
  • இந்த நிலைமையை ஏற்படுத்தும் ஒவ்வாமையை அடையாளம் காண தோல் பரிசோதனைகள். இது ஒவ்வாமை மூக்கழற்சி அல்ல என்று வேறுபடுத்த உதவுகிறது.
  • நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோக்ளோபுலின்) ஈ யின் அளவை கண்டறிய இரத்த பரிசோதனை, இது ஒவ்வாமைக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் ஒரு நோய் எதிர்ப்பொருள் (ஆன்டிபாடி) ஆகும். ஒரு முழுமையான ரத்த எண்ணிக்கை (சிபிசி) இரத்தத்தில் உள்ள ஈஸ்னோபில் எண்ணிக்கையை (வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகை) தீர்மானிக்க உதவும், இது ஒவ்வாமையின் மற்றொரு அடையாளமாகும். எனவே, இரத்த பரிசோதனை ஒவ்வாமை எதிர்விளைவுகளை தீர்க்க உதவும். 

ஒவ்வாமை அல்லாத மூக்கழற்சி சிகிச்சை காரணிகளை தவிர்ப்பதையும் அறிகுறிகளின் நிலையை நிவாரணமளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

  • மருந்து ஒரு காரணம் என்றால், மருத்துவர் சில மாற்று மருந்துகளை பரிந்துரைக்கலாம்.
  • மூக்கடைப்பு நிவாரணியின் அதிகப்படியான பயன்பாடு இந்த நிலைமைக்கு வழிவகுத்திருந்தால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்.
  • மூக்கினை அலச நாசி உருத்துணர்வு மூலம் உப்பு நீரில் மூக்கு சுத்தப்படுத்த வேண்டும்.
  • அடைபட்ட மூக்கினை சரியாக்க கார்டிகோஸ்டிராய்ட், நிவாரணிகள் (டிகன்ஜெஸ்டண்ட்ஸ்), ஆன்டிகோலினெர்ஜிக் அல்லது ஆன்டிஹிஸ்டமினிக் நாசி ஸ்ப்ரேஸ் ஆகியவை பயன்படுகின்றன.

Dr. Manish Gudeniya

ENT
8 Years of Experience

Dr. Manish Kumar

ENT
17 Years of Experience

Dr. Oliyath Ali

ENT
7 Years of Experience

Dr. Vikram P S J

ENT
5 Years of Experience

Medicines listed below are available for அலர்ஜி அல்லாத ரைனிடிஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Zydip Lotion 50ml50 ml Lotion in 1 Bottle166.25
Fullform 400 Rotacap30 Rotacaps in 1 Packet215.0
Fusiwal B Cream 10gm10 gm Cream in 1 Tube142.0
Salbair B 100/100 Transcaps30 Transcaps in 1 Bottle56.05
Fusiwal B Cream 15gm15 gm Cream in 1 Tube180.5
Candiderma Plus Cream 20gm20 gm Cream in 1 Tube153.43
Gentalene Plus Cream10 gm Cream in 1 Tube66.6
Eclospan Cream 15gm15 gm Cream in 1 Tube122.8
Aerocort Forte Rotacap30 Rotacaps in 1 Strip90.4
Propynate NF Cream 20gm20 gm Cream in 1 Tube132.05
Read more...
Read on app