நெஞ்சு வலி என்பது லேசான வலியிலுருந்து  கடுமையான வலி வரை வரும் நிலை. நெஞ்சு வலிக்கு மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களை போலவே அறிகுறிகள் இருப்பதனால் பலருக்கு அது பயம் உண்டாக்கும். இருந்தாலும், அடிப்படை மருந்துகளால் வலி குறையவில்லை என்றால் மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இதயத்தின் அருகே வயிறு, நுரையீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளுடன் தசைகள், விலா எலும்புகள், நரம்புகள் மற்றும் தோலினால் உருவான அமைப்புகள் சேர்ந்தது தான் நெஞ்சு/மார்பு. எனவே, ஒரு நெஞ்சு வலி, மேலே மேற்கூறப்பட்ட எந்த உருப்பினாலும் தோன்றலாம். சில சமயம், நெஞ்சு வலி அதுவே சரியாகிவிடும், ஆகவில்லை என்றால் என்ன நோய் என்று கண்டறிய வேண்டியது அவசியம்.நோய் அறிந்த மருத்துவர்;மருந்துகள் மூலமோ அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களினலோ அல்லது தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து நிவாரணம் அளிப்பார்.

நெஞ்சு வலி அறிகுறிகள் என்ன - Symptoms of Chest Pain in Tamil

மேற்கூறப்பட்டதை போல நெஞ்சு வலி பல வகையில் தோன்றும்.அதனோடு கீழேயுள்ள அறிகுறிகளும் வர கூடும் :

  • மார்புப் பகுதியில் அழுத்தம் அல்லது நசுக்குதல் போன்ற உணர்வு
  • கனமான நெஞ்சு
  • கழுத்து,தாடை மற்றும் கை வரை நீடிக்கும் வலி
  • மார்பு பகுதியில் ஒரு அழுத்தம்
  • இதய துடிப்பின் வேகம் அதிகரிப்பு
  • தோள்பட்டை வலி
  • படபடப்பு அதிகரித்து இதயத் துடிப்பு வேகமாகவும், சத்தமாகவும், ஒழுங்கற்றதாகவும் ஆகிவிடும்
  • குமட்டல்
  • வாந்தி
  • காய்ச்சல் அல்லது குளிர்ஜுரம்
  • மஞ்சள்-பச்சை நிறத்தில் சளியுடன் இருமல்
  • மூச்சுமுட்டல்
  •  குறைந்த அல்லது உயர் இரத்த அழுத்தம்
  •  டையாபோரெசிஸ் எனப்படும் விளக்கமுடியாத அதிகப்படியான அல்லது தொடர்ச்சியான வியர்வை
  • தலைசுற்றலும் வரலாம். சில சந்தர்ப்பங்களில், மயங்கி கூட விழலாம்
  •  குறைந்த உடல் உழைப்பு கூட இல்லாமலே களைப்பு உண்டாகலாம்

மருத்துவரை எப்பொழுது அணுக வேண்டும்?

கேழே குடுக்கபட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.உங்கள் நிலைமை மோசமானால்,உங்கள் குடும்பத்தினர் ஒருவரை , உங்களை மருதுவரிடம் அழைத்து செல்லவோ அல்லது மருத்துவரை அழைத்து வரவோ கூறவும்.

  • மார்புப் பகுதியில் அழுத்தம் அல்லது நசுக்குதல் போன்ற உணர்வு
  • கழுத்து,தாடை மற்றும் இடது கை வரை நீடிக்கும் வலி
  • சுவசமுட்டல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
  • மருத்துவரால் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கும் கட்டுப்படாமல்  திடேரென்ற வலி, கடுமையாகி குறையாமல் இருக்கும் நிலை
  • தலைசுற்றல், படபடப்பு, காரணமே இல்லாமல் அதிகப்படியாக வியர்ப்பது, குழப்பம், முதலியவை.
  • நிவாரணமே இல்லாமல் தொடர்ச்சியான நெஞ்சு வலி
  • மேலும் கீழும் குனிந்து நிமிர்ந்தாலும் குறையாத நெஞ்சு வலி
  • மிக குறைந்த அல்லது மிகவும் உயர் இரத்த அழுத்தம்.
  • மஞ்சள்-பச்சை நிறத்தில் சளியுடன் இருமல் மற்றும் குளிர்காய்ச்சல்

நெஞ்சு வலி சிகிச்சை - Treatment of Chest Pain in Tamil

இதன் சிகிச்சையாக, அடிப்படை காரணங்களை பொருத்து மருந்துகள் மூலமோ அல்லது  வாழ்க்கை முறை மாற்றங்களினலோ அல்லது தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும்

மருந்துகள்

  • வலி நிவாரணிகள் மற்றும்வீக்கத்தை குறைக்கும் க்கத்தை எதிர்க்கும் மருந்துகள்
    வயிரு, பித்தப்பை, கணையம், விறைப்பு குருத்தெலும்பு போன்ற உட்புற அமைப்புகளின்  வீக்கம் தான்  அடிப்படை காரணம் என்றால் மருத்துவர் உங்கள் வலியை நிவாரணம் செய்ய  வீக்கத்தை குறைக்கும்  சில மருந்துகளை பரிந்துரைக்கலாம்​​
  • அண்டிபையோடிக்ஸ் மற்றும் அண்டிவைரல்ஸ்
    நெஞ்சு வலிக்கு அடிப்படை காரணம் தொற்றுநோயானது என்றால், அண்டிபையோடிக்ஸ் மற்றும் அண்டிவைரல்ஸ் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள்) வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக நோய்த்தொற்று நீங்கினால், நெஞ்சு வலியும் போய்விடும். அண்டிபையோடிக்ஸ் பரிந்துரைக்கும் பொழுது வலி நிவாரணி மற்றும் வீக்கம் குறைக்கும் மருந்துகளும்,வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பரிந்துரைக்கப்படுகின்றன. இது நிமோனியா, பான்க்ரியாடிடிஸ்,அக்கி, வயிற்றுப் புண்கள், கூலிலிஸ்டிடிஸ் (பித்தப்பை வீக்கம்) போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது இரத்தக் குழாய்களில் உறைவு ஏற்படுவதன் காரணமாக அடிப்படை காரணம்​​
  • அண்டி பிளாடேலேட் மருந்துகள்
    இரத்த குழாயின் உறைவு தான்  இதன் அடிப்படை காரணமாக இருந்தால், இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.இது உறைவதை தடுத்து அடைப்புக்கான வைய்புக்களை குறைகின்றது.உதாரனத்திற்க்கு  இந,அஸ்பிரின்​​
  • இரத்த அடர்த்தி குறைக்கும் மருந்துகள்
    இதற்க்கு  அண்டிகொஅகுலன்ட் என்ற ஒரு பெயரும் உண்டு,இது இரத்த உராய்வைத் தடுக்கும்உறைவு  ஆகாமல் தடுக்கும் ,ஏற்கனவே உருவாகி இருந்தால் அதன் வளர்ச்சியை தடுக்கும்.
  • றைவு கரைக்கும் மருந்துகள்
    இவை த்ரோம்போல்டிக் அஜென்ட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. இது கரோனரி இரத்தக்குழாயில் உள்ள உறைவை கரைத்து விடுகின்றனர். உதாரனத்திற்க்கு:ஹெப்பரின், வார்ஃபரின்
  • இதய தசைகளுக்கான மருந்துகள்
    டிஜிடாலிஸ் எனப்படும் மருந்து இதய தசைகளின் செயற்பாடுகளை மேம்படுத்தி இதயத்தின் இரத்த ஓட்டத்தை வலுப்படுத்தும்.இது இதயத்துடிப்பை ஒரே சீராக மேம்படுத்தும்
  • எசிஈ (அஞ்சியோடென்ஷன் கன்வெர்டிங் என்சைம்) டுப்பான்கள்
    இந்த மருந்துகள், ஆன்ஜியோடென்சினோஜெனின் எனப்படும் இரத்தக் குழாய்களைக் குறுகலாக்கும் ஹார்மோனின் உற்பத்தியை தடுத்து  ஏசிஈ இன் செயல்களை நிறுத்துகிறது இதை தடுப்பதனால்  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் (BP) குறையும். இது  இரத்த ஓடத்தை ஆற்றலுடன் மேம்படுத்த, இதயத்திற்கு உதவுகிறது
  • பீட்டா தடுப்பான்கள்
    இம்மருந்துகள் இரத்த அழுத்தத்தையும் ,இதயத்தின் வேலைபளுவை குறைக்கிறது
  • நைட்ரோகிளிசரின்நைட்ரோகிளிசரின் ல்லது  நையிட்ரெட்
    இது இரத்த குழாய் சுவர்களை தளர்த்தி நெஞ்சு வலியிலுருந்து விடுவிக்கும்
  • கால்சியம் சேனல் பிளாக்கர்கள்
    நைட்ரோகிளிசரின் நைட்ரோகிளிசரின்  போன்றே செயல்படும் இந்த மருந்து, நெஞ்சு வலி மற்றும் இரத்த அழுத்தின் சிகிச்சைக்காக பயன்படுத்தபடுகின்றது பயன்படுகிறது
  • டியுரேடிக்ஸ்
    இமருந்துகள் இரத்த அழுதத்தை குறைத்து,உடம்பிலுருந்து உபரி நீர் மற்றும் உப்பை அகற்றுகிறது.அதனால் இதற்க்கு நீர் மாத்திரை என்ற பெயரும் உண்டு.இது இதயத்தின் வேலைப்பளுவை குறைத்து மாரடைப்பின் ஆபத்தைத் தடுக்கிறது
  • கொலஸ்ட்ரால் (கொழுப்பு)-கட்டுப்படுத்தும் மருந்துகள்
    இந்த மருந்துகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரத்தின்  (எல்டிஎல்) அளவைக் குறைக்கின்றன, இது கெட்ட கொலஸ்ட்ரால் எனவும் அழைக்கப்படுகிறது. இது கரோனரி இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்​​

அறுவை சிகிச்சை

நெஞ்சு வலிக்கு அடிப்படைக் காரணம், குழாய்-அடைப்பு, உறைப்பு, கல்லீரல் வீக்கம் அல்லது உறுப்புகளின் சேதம் என ஏதேனும் என்றால், நீங்கள் அறுவைசிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கோலிசிஸ்ட்டெக்டமி, பேங்க்ரியட்டெக்டமி, இடுப்பு எலும்பு முறிவு சீர்செய்தல், கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங், கரோனரி இரத்த குழாய் பைபாஸ் பொருத்துதல் (சிஎபிஜி), இதய வால்வு மாற்றுதல், இதய மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை இதய மின்னியக்கி பொருத்துதல் போன்றவை இதற்குரிய அறுவைச் சிகிச்சையாகும்.

  • கோலிசிஸ்ட்டெக்டமி
    நோயுற்ற​ பித்தப்பை அகற்றுதல்
  • பெங்க்ரியாட்டெக்டமி
    நோயுற்ற​ பகுதி அல்லது முழு கணையம் அகற்றுதல்
  • இடுப்பு எலும்பு முறிவு சீர்செய்தல்
    இடுப்பு எலும்பு முறிவு பகுதியை சேர்த்தல்
  • நியுமோதொரக்ஸ் சரி செய்ய அறுவை சிகிச்சை
    ப்லேயுரோடேசிஸ் (நுரையீரல் உட்சதையை  மீண்டும் ஒட்டவைப்பது), நுரையீரல் உட்சதை சிராய்ப்பு (நுரையீரல் உட்சதை உரசி நுரையீரலுடன் ஒட்டிக்கொள்வதற்கு உதவுகிறது), ப்லேயுரெக்டமி (நுரையீல் உட்சதை அகற்றுவதன் மூலம் நுரையீரல், மார்பு சுவற்றில் ஒட்டிகொள்கிறது) இது போன்ற சிகிச்சைகள் நியுமோதொரக்ஸினுள் அடங்கும். நுரையீரல் உட்சதையின்  சவ்வுகளுக்கு இடையில் காற்று அல்லது திரவத்தை உருவாகுவதை இந்த அறுவை சிகிச்சைகள் தடுக்கும் .
  • கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங்
    ஒரு ஸ்டேன்ட் ஒன்றை கை அல்லது காலில் உள்ள இரத்த குழாயில் நுழைத்து இதயத்திற்கு சென்று ஒரு சிறிய பலூனின் உதவியுடன் அடைப்பு தகர்க்கப்படும்.
  • ரோனரி இரத்த குழாய் பைபாஸ் பொருத்துதல் (சிஎபிஜி)
    அடைத்திருக்கும் இரத்த குழாயுடன் ஒரு ஆரோக்கியமான இரத்தக் குழாய் இணைக்கவோ அல்லது  பொருத்தப்படுகிறது. எனவே, இது தடுக்கப்பட்ட இதய இரத்த குழாய் பகுதிகளை தவிர்த்து இரத்த ஓட்டம் இதயத்தை அடைய ஒரு புதிய பாதையை அமைக்கிறது
  • இதய வால்வு மாற்றுதல் அல்லது சீர்படுத்துதல்  
    ஒரு செயலிழந்த அல்லது சேதமடைந்துள்ள வால்வை மாற்றி புதிய வால்வ் போருத்தபடுகிறது
  • இதயம் மாற்று அறுவை சிகிச்சை
    மிகவும் சிதிலமடைந்த இதயம் என்றால்,அதற்குப் பதிலாக தானம் கொடுக்கப்பட்ட புதியதோர் இதயத்தை மாற்றி பொருத்தப்படும்.
  • செயற்கை இதய மின்னியக்கி பொருத்துதல்
    இதயத்துடன் இணைக்கப்பட்ட கம்பிகளுடன் மார்பின் கீழே ஒரு செயற்கை இதய மின்னியக்கி வைக்கப்படுகிறது. இது இதயத்தின் சீரோட்டத்தை பராமரிக்க உதவுகிறது.
  • விஎடி (வேன்றிகூலர் அசிஸ்ட் டிவயிஸ்) அறுவை சிகிச்சை மற்றும் டிஎஎச் (முழு செயர்க்கை இதயம்)
    விஎடி​ பலவீனமான இதயம் உள்ளவர்களின் இதயத்திற்க்கு அதிகப்படியான இரத்தஒட்டம் அளிபதர்க்கு உதவுகிறது. டிஎஎச் இதயத்தின் கேழ் இரண்டு பலவீனமான மாற்றி ஆரோகியமான அறைகள் போருத்தபடுகிறது
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.

Dr. Abhishek Chaturvedi

Orthopedics
5 Years of Experience

Dr. G Sowrabh Kulkarni

Orthopedics
1 Years of Experience

Dr. Shivanshu Mittal

Orthopedics
10 Years of Experience

Dr. Saumya Agarwal

Orthopedics
9 Years of Experience

Medicines listed below are available for நெஞ்சு வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Schwabe Inula Dilution 30 CH30 ml Dilution in 1 Bottle76.5
Kerala Ayurveda Vasarishtam450 ml Syrup in 1 Bottle200.0
Himalaya Cold Balm 45gm45 gm Balm in 1 Box118.75
SBL Myrtus communis Mother Tincture Q30 ml Mother Tincture in 1 Bottle106.0
Namhya Heart Tea Powder150 gm Tea in 1 Packet230.0
Himalaya Cold Balm 10gm10 gm Balm in 1 Box42.75
Baidyanath Kamdudha Ras (Moti Yukta) (25)25 Ras Rasayan in 1 Bottle214.0
Baidyanath Kamdudha Ras (Moti Yukta) (50)50 Ras Rasayan in 1 Bottle399.0
Sbl Myrtus Communis Mother Tincture Q 100 ML100 ml Mother Tincture in 1 Bottle166.5
SBL Myrtus communis Dilution 30 CH30 ml Dilution in 1 Bottle81.0
Read more...
Read on app