வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா என்றால் என்ன?

வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா என்பது இதயத்தின் கீழ் அறைகளில் தொடங்கும் வேகமான இதயத் துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 100 துடிப்புகள், அதனுடன் ஒரு வரிசையில் குறைந்தது 3 சீரற்ற இதயத்துடிப்பு). இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால், உதறல் போன்ற உயிருக்கு அசச்சுறுத்தலான நிலைமைக்கு இட்டுச்சென்று இறப்புக்கு வழிவகுக்கலாம்.

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியாவின் அறிகுறிகள் திடீரென தொடங்கலாம் அல்லது நிற்கலாம். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியாவின் ஒரு முறை ஏற்படும் இதயத்துடுப்பின்  காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • மூச்சு திணறல்.
  • ஆன்ஜினா எனப்படும் நெஞ்சு கோளாறுகள்.
  • படபடப்பு (ஒழுங்கற்ற அல்லது விரைவான இதயத்துடிப்பு உணரப்பட்டு, ஒரு தனிநபரை அசௌகரியமாக ஆக்குவது).
  • பலவீனமான துடிப்பு அல்லது துடிப்பு இல்லாமை.
  • குறைந்த ரத்த அழுத்தம்.
  • கிறுகிறுப்பு.
  • தலைசுற்றல்.
  • மயக்கம்.

முக்கிய காரணங்கள் யாவை?

வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா-க்கு இட்டுச் செல்லும் பல்வேறு காரணிகள் அல்லது நிபந்தனைகள் பின்வருமாறு:

  • ஆரம்பகால அல்லது பிற்கால மாரடைப்பு அறிகுறிகள்.
  • பிறவி இதயக் குறைபாடு.

மரபுவழியாகப் பெறப்பட்ட இதய துடிப்பு பிரச்சனைகள் பின்வருவனவற்றில் அடங்கும்:

  • தொடர்ச்சியான கியூடி நோய்க்குறி.
  • புருகடா நோய்க்குறி.
  • இதயத்தசை அழற்சி.
  • இதயத்தசைநோய்.
  • முதுமை தொடக்க எடை ஏற்றம்.
  • விரிவு.
  • இதய செயலிழப்பு.
  • இருதய அறுவைச் சிகிச்சை.
  • இதய வால்வு நோய்.
  • இதய வால்வு தசைகளில் வடு திசு.

வி.டி நோய் ஏற்பட  இதயம் சார்ந்த காரணிகள் அல்லாத மற்ற காரணங்கள் பின்வருமாறு:

மருந்துகளில் அடங்குபவை:

  • ஆண்டி-அர்திமிக் மருந்துகள் (முறையற்ற இதய துடிப்பை சரிசெய்யும் மருந்து).
  • பரிந்துரைக்க படாத அடைப்பை நீக்கும் மருந்து.
  • மூலிகை வைத்தியம் மற்றும் திட்டஉணவு மாத்திரைகள்.
  • கொகெயின் அல்லது பிற தூண்டுபொருள்கள்.
  • இரத்த வேதியியலில் ஏற்படும் மாற்றங்களான:
  • பொட்டாசியம் குறைபாடு.
  • அமில-கார சமநிலை மாற்றங்கள்.
  • ஆக்சிஜன் பற்றாக்குறை.

இது எப்படிக் கண்டறியப்படுகிறது?

நோய் அறிகுறிகளின் பின்னணியை மருத்துவர் எடுத்துக்கொள்வார், முழுமையான உடல் பரிசோதனைச் செய்து, நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வார். மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளுக்கு ஆலோசனை அளிக்கலாம்:

  • இரத்தத்தில் உள்ள வேதியியல், இரத்தத்தின் பி.எச் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய இரத்தப் பரிசோதனைகள்.
  • மார்பு எக்ஸ்-ரே.
  • எலக்ட்ரோகார்டியோகிராம் அல்லது ஹோல்ட்டர் மானிட்டர் (24-48 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு இதற்கு தேவைப்படுகிறது).
  • இன்ட்ராகார்டியாக் எலெக்ட்ரோபிசியோலஜி ஆய்வு (இ.பி.எஸ்).
  • சுழற்சி அல்லது துடிப்பை பதிவு செய்யும் சாதனம்.

வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா குறைபாடு இதய கோளாறு வகையை சார்ந்தது மற்றும் அதில் காணப்படும் அறிகுறிகள்:

சிகிச்சையின் போது நரம்பின் மூலம் கொடுக்கப்படும் மருந்துகள் அல்லது வாய்வழியாக தேவைப்படும் நீண்ட கால சிகிச்சை மருந்துகள் பின்வருமாறு:

  • லிடோகெய்ன்.
  • ப்ரோகெய்னமைடு.
  • சோடலொல்.
  • அமியோடரொன்.

ஒரு பரிசோதனையில் அடங்கும் சிகிச்சை முறைகள்:

  • இதயசுவாசமூட்டல்.
  • கார்டியோவெர்ஷன் (மின்சார அதிர்ச்சி).
  • உறுப்பு நீக்கம்: இதில், அசாதாரணமான இதயத்துடிப்பை உண்டாக்கும் இதயத் திசு அழிக்கப்படுகிறது.
  • பொருத்தக்கூடிய கார்டியோவர்டர் டிஃபைபிரிலேட்டர் (ஐசிடி): இது பொருத்தக்கூடிய ஒரு சாதனம். இது உயிர் பாதிப்பை ஏற்படுத்தும் வேகமான இதய துடிப்பை கண்டறிந்து, இதயம் இயல்புநிலைக்கு திரும்ப மின்சார அதிர்ச்சி மூலம் சமிக்ஞை அனுப்பும் ஒரு சிகிச்சை முறையாகும்.
Read more...
Read on app