முகவாதம் என்றால் என்ன?

முகவாதம் என்பது முகத்திலிருக்கும் நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் நோயாகும், அதன் காரணமாக, நோயாளிக்கு முகபாவனைகள் செய்யவும், சாப்பிடுவதற்கும் மற்றும் பேசுவதற்கும் இயலாது.

முகவாதம் நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

முகவாதம் நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளாவன;

  • கண்ணின் இமைகளை சிமிட்டவோ அல்லது மூடவோ இயலாது.
  • முகத்தை அசைக்க இயலாது.
  • வாய் கீழே தொங்குவது.
  • முக அமைப்பின் சமநிலையை பராமரிக்க இயலாது.
  • முகவாதம் ஏற்பட்டால், புருவங்களை உயர்த்த இயலாது
  • பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும் கடினமாக இருக்கும்.
  • ஒட்டுமொத்த முக அசைவுகளும் கடினமாக இருக்கும்.

முகத்தில் பயன்படுத்தும் அடிப்படை செயல்பாடுகளை கூட செய்ய இயலாமல் இருப்பதால் நோயாளிகள் முகவாதத்தினால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். எனவே, நோய் குணமாக சிகிச்சைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுவது மிகவும் அவசியமாகும்.

முகவாதநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

முகவாதம் திடீரென்று ஏற்படலாம் அல்லது படிப்படியாகவும் ஏற்படலாம். முகவாதத்திற்கான பொதுவான காரணங்கள் சில:

முகவாதம் ஏற்படுவதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு;

  • முகத்தில் ஏற்பட்ட காயம்.
  • லைம் நோய் உடன் ஏற்பட்ட நோய்தொற்று (உண்ணி பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பாக்டீரியா நோய் பரவுகிறது).
  • வைரஸ் தொற்று.
  • வாஸ்குலிடிஸ் போன்ற தன்னுடல் தாங்குதிறன் நோய்கள்.
  • துல்லியமில்லாத பல் சீரமைப்பு வழிமுறைகள் ஏற்படுத்தும் விளைவினால், சில முக நரம்புகள் பாதிக்கப்டுகின்றன.
  • மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பிறக்கும் போதே முகவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் (இது பின்னர் சரியாகும்).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்களுக்கு மேற்கண்ட முகவாத நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும். உணர்ச்சி இல்லாமல் இருந்தாலோ அல்லது முகம் பலவீனமாக காணப்பட்டாலோ அவை முகவாதத்தின் ஆரம்ப நிலை அறிகுறிகளாகும்.

மருத்துவர் உங்கள் முகத்தின் இரு பக்கங்களிலும் பரிசோதனை செய்வார். அவர் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு மற்றும் காயங்களை பற்றி கேட்பார். சில முக்கிய பரிசோதனைகளை செய்யவும் மற்றும் நோய் கண்டறிதல் முறைகளை பற்றியும் அவர் தீர்மானிப்பார். அவை பின்வருமாறு:

  • இரத்த பரிசோதனை (இரத்தத்தில் சர்க்கரை அளவை சரிபார்க்க).
  • லைம் பரிசோதனை.
  • தசை மின்னலை வரவி பரிசோதனை (EMG) நரம்பு மற்றும் தசை முறைகளை பற்றி அறிய.
  • சிடி ஸ்கேன்/ தலையில் எடுக்கப்படும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).

மருத்துவர், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு (நோயாளியின் வயது, நோய் ஏற்பட்ட காரணம் மற்றும் நோயின் தீவிர தன்மை) நோயை பற்றி கண்டறிந்து, உங்களுக்கு சரியான சிகிச்சையை பரிந்துரைப்பார். அவைகள்:

  • உடல் மற்றும் பேச்சு பயிற்சி.
  • முகத்தசை பயிற்சி சிகிச்சை.
  • முகத்தசை கட்டுப்பாட்டை மேம்படுத்த உயிரியல் பின்னூட்டம் பயிற்சி.
  • முகத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் கண்களை மூடவும் ஓத்துருப்பு அறுவை சிகிச்சை செய்யபடுகிறது.
  • அதிக இரத்த அழுத்தத்தின் காரணமாக குறிப்பிட்ட மருந்துகள் தேவைப்படுகின்றன.

Dr. Vinayak Jatale

Neurology
3 Years of Experience

Dr. Sameer Arora

Neurology
10 Years of Experience

Dr. Khursheed Kazmi

Neurology
10 Years of Experience

Dr. Muthukani S

Neurology
4 Years of Experience

Medicines listed below are available for முகவாதம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Baidyanath Vatkulantak Ras Bri Tablet (25)25 Ras Rasayan in 1 Bottle536.0
Shree Divya Ayurved Ekangvir Ras30 Ras Rasayan in 1 Bottle223.25
Baidyanath Nagpur Mahanarayan Taila 100ml100 ml Oil in 1 Bottle153.0
Herbal Canada Ras Raj Ras (25)25 Ras Rasayan in 1 Box1985.0
Herbal Canada Triyodashang Guggulu (100)100 Tablet in 1 Bottle130.05
Herbal Canada Ras Raj Ras (50)50 Ras Rasayan in 1 Bottle2580.0
Baidyanath Nagpur Mahanarayan Taila 200ml200 ml Oil in 1 Bottle284.75
Baidyanath Nagpur Rasraj Ras Sy (5)5 Tablet in 1 Bottle527.85
SBL Ammonium phosphoricum Dilution 30 CH30 ml Dilution in 1 Bottle85.5
Baidyanath Nagpur Rasraj Ras Sy (10)10 Tablet in 1 Bottle973.25
Read more...
Read on app