மனித பாபிலோமாவைரஸ் (ஹெச்.பி.வி) என்றால் என்ன?

மனித வகை பாபிலோமாவைரஸில் (ஹெச்.பி.வி) 120 வகைகள் உள்ளன, அவற்றில் சுமார் 40 வகைகள் உடலுறவு மூலம் பரவுகின்றன.

ஹெச்.பி.வி நோய்த்தொற்று என்பது உடலுறவு மூலம் பரவும் நோய்த்தொற்றுக்களில் மிகவும் பொதுவான  ஒன்றாகவும்.இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கிறது.

இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

  • ஹெச்.பி.வி நோய்த்தொற்றின் அறிகுறிகள் உடலில் நுழைந்துள்ள வைரஸின் வகையைப் பொறுத்து மாறுபடும்.
  • பெரும்பாலான ஹெச்.பி.வி வைரஸ் வகைகள் பாலுண்ணி அல்லது மருக்களை ஏற்படுத்தும்.இவை முகம், கை, கழுத்து மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் ஒழுங்கற்ற வீக்கங்களை ஏற்படுத்தும்.
  • ஹெச்.பி.வி நோய், மேல் சுவாசக் குழாயில் காயங்களை ஏற்படுத்துகிறது, இவை முக்கியமாக தொண்டைச்சதை, குரல்வளை மற்றும் தொண்டையில் ஏற்படுகின்றன.
  • சில வைரஸ் வகைகள் பெண்களில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் மற்றும் வாய்த்தொண்டைப் புற்றுநோய் ஏற்படுத்துகின்றன.வாய் அல்லது தொண்டை புற்றுநோய் கூட ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • வைரஸ் காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும்போது, ​​நோயின் மேம்பட்ட நிலை வரை அறிகுறிகள் காணப்படுவதில்லை.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

  • ஹெச்.பி.வி பரவுவதற்கான முக்கிய வழியாக உடலுறவு இருப்பதால், ஹெச்.பி.வியால் பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவில் ஈடுபடும்போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.(மேலும் வாசிக்க: பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது எப்படி?).
  • பல உடலுறவு துணைகள் மற்றும் வாய்வழி உடலுறவில் ஈடுபடுவது தொற்று ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கிறது.
  • எய்ட்ஸ் நோயாளிகளும் நோயெதிர்ப்பு நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் ஹெச்.பி.வி நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
  • உடலில் ஒரு திறந்த காயம், வெட்டு, அல்லது வெளிப்புற தோல் மூலமாகவும் ஹெச்.பி.வி நுழைகிறது.
  • பாலியல் பரிமாற்றம் அல்லாத அல்லாத வகைகளில், மற்றொரு நபரின் உடலில் உள்ள ஒரு பாலுண்ணி அல்லது மருவாய் தொடுவதன் மூலம் ஏற்படுகிறது.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

  • உடல் பரிசோதனையில், ஒரு பாலுண்ணி அல்லது மரு நோய் கண்டறிதலுக்காக மருத்துவர் பரிசோதிப்பார்.மருத்துவ மற்றும் பாலியல் வரலாறு கூட மிகவும் முக்கியம்.
  • ஹெச்.பி.வி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், கர்ப்பப்பைவாய் அணுக்களில் இருக்கும் அசாதாரணங்களைக் கண்டறிய ஒரு காட்டன் ஸ்வாப் பயன்படுத்தி ஒரு பாப - ஸ்மியர் சோதனை செய்யப்படுகிறது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ் பெரும்பாலும் வைரஸ் டி.என்.ஏ முன்னிலையில் இருப்பதை வைத்து ஆய்வக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

வைரஸ் தன்னைதானே வெளியேற்றுவதற்கான சிகிச்சை எதுவும் இல்லை.இது எந்த தலையீடும் இல்லாமல் இருக்கலாம் அல்லது மறைந்து இருக்கலாம்.

  • லேசான பாலுண்ணிகளால் ஏற்படக்கூடிய ஹெச்.பி.விக்கு, மருத்துவர் வாய்வழி மருந்துகள் மற்றும் மேற்பூச்சு கிரீம்களை பரிந்துரைக்கலாம்.
  • பாலுண்ணிகளை மருந்துகளால் அகற்ற முடியாவிட்டால், லேசர்கள் அல்லது குளிர் சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை நீக்கம் செய்யப்படுகிறது.
  • ஹெச்.பி.வி புற்றுநோயை ஏற்படுத்தியிருந்தால், கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை உட்பட சில விரிவான சிகிச்சை தேவைப்படுகிறது.
  • ஹெச்பிவியினால் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பு மருந்துகள் இருப்பினும், நோய்த்தொற்றைத் தடுக்க அனைத்து உடலுறவின்போதும் கருத்தடை உறை பயன்படுத்துவது போன்ற நடவடிகைகளை பெண்கள் எடுக்க வேண்டும்.

Dr Rahul Gam

Infectious Disease
8 Years of Experience

Dr. Arun R

Infectious Disease
5 Years of Experience

Dr. Neha Gupta

Infectious Disease
16 Years of Experience

Dr. Anupama Kumar

Infectious Disease

Medicines listed below are available for மனித 'பாபிலோமாவைரஸ்' (ஹெச்பிவி). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
GARDASIL INJECTION3730.64
Cervarix Vaccine1 Injection in 1 Packet1683.5
Human Papillomavirus Type 16 Vaccine1 Vaccine in 1 Vial3500.0
Human papillomavirus type 6 Vaccine1 Vaccine in 1 Vial3500.0
Human Papillomavirus Type 16 + Human Papillomavirus Type 18 L1Protein Vaccine1 Vaccine in 1 Vial3500.0
Human Papillomavirus Vaccine Type11 L1Protien Vaccine1 Vaccine in 1 Vial3500.0
Human Papillomavirus Type 18 L1Protein Vaccine1 Vaccine in 1 Vial3500.0
Read more...
Read on app