எச்.ஐ.வி எய்ட்ஸ் - in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

November 12, 2018

March 06, 2020

எச்.ஐ.வி எய்ட்ஸ்
எச்.ஐ.வி எய்ட்ஸ்

சுருக்கம்

எய்ட்ஸ் நோய்க்கு அதாவது பெறப்பட்ட நோய்த்தடுப்பு குறைபாடுக்கு காரணமான, எச்.ஐ.வி என்பது ஹியூமன் இம்முனோடிஃபிசியன்சி வைரஸ் என்பதன் சுருக்கமாகும். இந்த வைரஸ் பொதுவாக உடலுறவின் மூலம் உடல் திரவங்கள் வழியாக, தொற்றுள்ள ஊசிகள் மூலம் இரத்தத்தின் வழியாக அல்லது பாதிக்கப்பட்ட அம்மாவிடமிருந்து அவள் குழந்தைக்குப் பரவுகிறது. இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தாக்கி, உடலின் பெரிய  பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்து, அந்த நபரை மற்ற நோய்த்தொற்று மற்றும் வியாதிகளுக்கு இலக்காக்குகிறது. எச்.ஐ.வி-1 மற்றும் எச்.ஐ.வி-2 என இரண்டு வகையான வைரஸ்கள் இருக்கின்றன. இந்த நோய் ஒரு தீவிர நிலையில் இருந்து நாள்பட்ட நிலைக்கு வளர்ந்து, இறுதியாக வாழ்நாளைக் குறைக்கக் கூடிய எய்ட்ஸ்க்கு கொண்டு செல்கிறது. அறிகுறிகள், நிலை 1இல் காய்ச்சல் போன்ற ஒரு நிலையிலிருந்து, நிலை 2இல் அறிகுறிகள் குறைந்து கொண்டு வருவது , நிலை 3இல் புற்றுநோய் மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகள் ஏற்படுவது என வேறுபடுகின்றன. போதைப்பழக்கம் உள்ளவர்கள், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்பவர்கள் மற்றும் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றாதவர்கள் எச்.ஐ.வி வருவதற்கான மிக அதிக அபாயத்தில் இருக்கிறார்கள்.

இரத்தப் பரிசோதனைகள் மற்றும் வீட்டில் செய்யப்படும் சோதனைகள் நிலையைக் கண்டறிய உதவுகிறது, ஆனால் முடிவினை உறுதி செய்ய, அதைத் தொடர்ந்து மேற்கத்திய புள்ளி சோதனை செய்யப்பட வேண்டும். எச்.ஐ.வி/எய்ட்ஸ் குணப்படுத்த முடியாதது, ஆனால், ரெட்ரோவைரஸ் எதிர்ப்பு சிகிச்சையைக் (ஏ.ஆர்.டி) கொண்டு பெரிய அளவில் சமாளிக்கப்படக் கூடியது. எச்.ஐ.விக்கான பெரும்பாலான மருந்துகள், வைரஸ் பெருகுவதற்கு உதவக்கூடிய குறிப்பிட்ட புரதங்கள் உருவாவதைத் தடுக்கும் தடுப்பிகள், மற்றவை சி.டி.4 எனப்படும் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு செல்களுக்குள் நுழைந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையைப் பாதிக்கக் கூடிய, வைரஸைத் தடுக்கின்றன. உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் மற்றும் சிகிச்சையைப் பெறுவதிலும், மன மற்றும் உடல் அழுத்தங்களை சமாளிப்பதிலும் குடும்பத்தினரின் ஆதரவும், நிலைமையை நன்கு சமாளிக்க உதவுகிறது. சிகிச்சையின் பக்க விளைவுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக வளரும் இணைந்த நோய்கள் மற்றும் நிலை 3இல் பாதிக்கக்கூடிய புற்றுநோய் உட்பட பலவிதமான சிக்கல்கள் இருக்கக் கூடும். எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கப்படும் வாழ்நாட்கள் 10 வருடங்கள் வரை இருக்கும் பொழுது, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், எச்.ஐ.வி உள்ள நபர்கள் 50 வருடங்கள் வரை நோய்த்தொற்றுடனே, இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

எச்.ஐ.வி எய்ட்ஸ் அறிகுறிகள் என்ன - Symptoms of HIV-AIDS in Tamil

எச்.ஐ.வி தொற்றின் அறிகுறிகள், நோயின் நிலையைப் பொறுத்து வேறுபடுகின்றன. அவை பின்வருமாறு தோன்றக் கூடும்:

கடுமையான எச்..வி நோய்த்தொற்று

நோய்த்தொற்று ஏற்பட்ட முதல் நான்கு வாரங்களுக்குள், கடுமையான நிலையில் இவை போன்று உணரலாம்:

இந்த நிலையில் அறிகுறிகள் சில நாட்களில் குறைந்தது போல் தோன்றும்.

நாள்பட்ட எச்..வி நோய்த்தொற்று

இந்த நிலையில், அந்த நபர் இன்னமும் நோய்த்தொற்றைக் கொண்டிருந்தாலும், கடுமையான நிலையின் அறிகுறிகள் மறைய ஆரம்பிப்பதைக் காண்பது வழக்கமானது. இந்த நிலையின் போது, குறிப்பாக முடிவில், வைரஸ் சி.டி.4 செல்களை  பாதிக்கிறது, இறுதியாக, வைரஸ் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது மற்றும் சி.டி.4 எண்ணிக்கை குறைகிறது. அந்த நபர் மூன்றாவது மற்றும் கடைசி நிலையை அடையும் போது அறிகுறிகள் வளர ஆரம்பிக்கின்றன.

எய்ட்ஸ்

இந்த நிலையில் உடல் அதன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுகள் எனப்படும் பலவித நோய்த்தொற்றுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஒரு நோய்த்தொற்று ஏற்பட்ட நபரின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின்  விளைவாக உருவாகும் இவற்றில் பெரும்பாலானவை, எச்.ஐ.வி இல்லாத ஆரோக்கியமான நபர்களுக்கு அறிகுறியாகத் தோன்றுவதில்லை என்பதால் தான், இந்த நோய்த்தொற்றுகள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. அந்த நோய்த்தொற்றுகளில் சில:

எச்.ஐ.வி எய்ட்ஸ் சிகிச்சை - Treatment of HIV-AIDS in Tamil

எச்.ஐ.வி நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் குணப்படுத்த முடியாததாக இருப்பதால், சிகிச்சையின் நோக்கம், வைரஸைக் கட்டுப்பாட்டில் வைப்பதிலும் நிலைமை மேலும் மோசமாவதை தடுப்பதையும் சுற்றியே சுழல்கிறது. இந்த வகையான சிகிச்சை வடிவத்தின் மருத்துவ சொல் ரெட்ரோ வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை (ஏ.ஆர்.டி) ஆகும், இது  வைரஸை மற்றும் அதன் செயல்களைக் கட்டுப்படுத்த, முக்கியமாக பல்வேறு மருந்துகளின் சேர்க்கையோடு செய்யப்படுகிறது. இந்த செயல்பாட்டுக்கு உதவும் மருந்துகள்:

 • எச்.ஐ.வி பெறுவதற்கு தேவையான குறிப்பிட்ட புரதங்களை துண்டிக்க உதவும் மருந்து களான, நியூக்ளியோசைட் அற்ற தலைகீழ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் தடுப்பிகள் (என்.என்.ஆர்.டி.ஐக்கள்).
 • எச்.ஐ.வி பெருகுவதில் உதவும் புரத நொதி என்றழைக்கப்படும் ஒரு புரதத்தைத் தடுக்கப் பயன்படும், மற்றொரு மருந்துத் தொகுதியான, புரத நொதி தடுப்பிகள்.
 • எச்.ஐ.வி, சி.டி.4 செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் சி.டி.4 எண்ணிக்கை குறைபடாமல் வைத்திருக்க உதவும் மருந்துகளான இணைவு தடுப்பிகள்.
 • இன்டெக்ரேஸ் எனப்படும் ஒரு முக்கிய புரதத்தை தடுப்பதன் மூலம், எச்.ஐ.வியின் மரபணு மூலக்கக்கூறுகள் சி.டி.4 செல்களின் டி.என்.ஏவோடு இணையாமல் தடுக்கும், இன்டெக்ரேஸ் தடுப்பிகள்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

இந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ்க்கு நடக்கும் சிகிச்சையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவி பெரிய அளவில் தேவைப்படலாம். சிகிச்சை நீடித்த காலத்துக்கு இருப்பதாலும் மற்றும் வாட வைப்பதாலும், மக்களுக்கு இவற்றில் உதவி தேவைப்படலாம்:

 • மருத்துவமனைக்கு சென்று வருவது.
 • நிதிசார்ந்த உதவி.
 • வேலைவாய்ப்பு உதவி.
 • சட்ட உதவி.
 • சுய மற்றும் குழந்தைகள் கவனிப்பு.
 • நண்பர்கள், குடும்பம் மற்றும் சமுதாயத்திலிருந்து உணர்வுப்பூர்வ ஆதரவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்.

போதை மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுவதும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை செய்வதும் வாழ்க்கைமுறையில் செய்யும் மாற்றங்களில் அடங்கும். உணவுத் தேர்வுகளில் அடங்கியவை:

 • அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை உண்ணுதல்.
 • உணவு மூலம் பரவும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதால், முட்டைகள் மற்றும் பச்சையான கறி அல்லது உணவுகளைத் தவிர்த்தல். முடிந்த அளவுக்கு சமைத்த உணவுகளையே தேர்ந்தெடுத்தல்.
 • சரியான நேரங்களில் சிகிச்சை எடுத்தல்.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாற்று சிகிச்சை எடுத்தல்.
 • எச்.ஐ.வி தொற்று உள்ள நபர்களுக்கு, சீறி எழும் முனைப்புடைய மற்றும் அதிரடியாக தீவிரமாக மாறக்கூடிய தொற்றுகள் போன்ற, தொற்று இருக்கக் கூடிய குறிப்பு காட்டினால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுதல்.


மேற்கோள்கள்

 1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; HIV/AIDS
 2. University of California San Francisco [Internet]. San Francisco, CA: Department of medicine; Superinfection
 3. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; HIV Overview.
 4. Ferri FF. Ferri's Clinical Advisor 2018. In: Ferri's Clinical Advisor 2018. Philadelphia, Pa: Elsevier; 2018.
 5. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; USPHS/IDSA Guidelines for the Prevention of Opportunistic Infections in Persons Infected with Human Immunodeficiency Virus.

எச்.ஐ.வி எய்ட்ஸ் டாக்டர்கள்

Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Alok Mishra Dr. Alok Mishra Infectious Disease
5 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

எச்.ஐ.வி எய்ட்ஸ் க்கான மருந்துகள்

எச்.ஐ.வி எய்ட்ஸ் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।