புற்றுநோய் - Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 03, 2019

September 10, 2020

புற்றுநோய்
புற்றுநோய்

சுருக்கம்

புற்றுநோய் என்பது, கட்டிகள் (திசுக்களின் திரள்கள் அல்லது புடைப்புகள்) வடிவத்தில் தோன்றுகின்ற, செல்களின் ஒரு அசாதாரணமான வளர்ச்சியைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிற நோய் ஆகும். புற்றுநோய் உடலில் உள்ள எந்த ஒரு உறுப்பையும், அல்லது திசுவையும் பாதிக்கக் கூடியது ஆகும். அது, மேலும் தீவிரமாகப் பிரிந்து உடலில் உள்ள பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது, அல்லது ஒரே இடத்தில் வளரத் தொடங்குகிறது. இந்த குணத்தின் அடிப்படையில் கட்டிகள் அதிக தீங்கற்றவையாகவோ (பரவாதவை), அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவோ (பரவுகின்றவை) இருக்கின்றன.

பல்வேறு வகை புற்றுநோய்களுக்கான காரணங்கள் வேறுபடுகின்றன. இருப்பினும் சில வழக்கமான வகை புற்றுநோய்களுக்கான காரணங்களாக, மரபணு கோளாறு, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், நார்ச்சத்து குறைவான ஒரு உணவுமுறை, வேதிப்பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுக்கு ஆளாகுதல், மற்றும் பல காரணங்கள் உள்ளன. புற்றுநோயைக் கண்டறிதல், ஒரு உடலியல் பரிசோதனை. எக்ஸ்-ரேக்கள், CT ஸ்கேன், MRI மற்றும் PET ஸ்கேன் ஆகியவற்றின்  மூலமாக செய்யப்படுகிறது.

புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அபாய காரணிகளை தவிர்ப்பதன் மூலம், புற்றுநோய்கள் ஏற்படுவதை  ஒரு பரந்த அளவில் தடுப்பது சாத்தியமானதாகும். புற்றுநோய்க்கான சிகிச்சை, ஒற்றை முறையாக, அல்லது கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பலவித சிகிச்சை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள், அவற்றின் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், முழுமையாக குணப்படுத்தக் கூடிய சாத்தியமுள்ளவையாக இருக்கின்றன. இது எப்போதும் சாத்தியமற்றது என்றாலும் கூட, அந்த நபரின் வாழ்க்கையை சௌகரியமானதாக ஆக்குவதற்காக அதன் பரவுதலைக் கட்டுப்படுத்த, மற்றும் சிக்கல்களைக் குறைக்க பல்வேறு வகை சிகிச்சை தேர்வுகள் உள்ளன.

புற்றுநோய் வகைகள் என்ன - Types of Cancer in Tamil

புற்றுநோய்கள் ஏற்படுகின்ற திசுக்களின் இடத்தைப் பொறுத்து, அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:

 • கார்சினோமாக்கள்: காரசினோமாக்கள் என்பவை தோலின் மேற்புற திசுக்களில் ஏற்படும் புற்றுநோய்களைக் குறிக்கின்றன. தோலின் மேற்புற திசுக்கள் எனப்படுபவை, தோல் இரைப்பை உட்புற சுவர், வாயின் உட்புற சுவர், அல்லது மூக்கின் உட்புற சுவர் போன்ற, வெளிப்புற அல்லது உட்புற சூழலை சந்திக்கின்ற எந்த ஒரு உறுப்பினையும் சுற்றி இருக்கின்ற திசுக்களை குறிக்கின்றது. இவை மிகவும் வழக்கமாகத் தெரிவிக்கப்படுகின்ற வகைகள் ஆகும். கார்னிமோக்களின் சில எடுத்துக்காட்டுக்களில், ப்ரோஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் தோலின் செதில் செல் கார்னிமோ ஆகியவை அடங்குகின்றன.
 • சர்கோமாக்கள்: இவை, இணைப்பு திசுக்களில் பரவக் கூடிய புற்றுநோய்கள் ஆகும். இணைப்பு திசுக்கள், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு ஆதரவாக இருக்கின்றன மற்றும் அவற்றை இணைக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, மற்றவை மத்தியில் கொழுப்பு திசு, மார்பகக் காம்பு தோல், தசை நார்கள், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைக் கூறலாம்.
 • லூக்கோமியா: லூக்கோமியா என்பது, இரத்த வெள்ளை அணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியின் ஒரு விளைவாக, இரத்தத்தில் ஏற்படுகின்ற புற்றுநோய் ஆகும். லூக்கோமியாவின் முக்கியமான நான்கு வகைகளாக லிம்போஸைட்டிக் (தீவிரமானது மற்றும் நீடித்தது), மற்றும் மைலேய்ட் (தீவிரமானது மற்றும் நீடித்தது) ஆகியவை உள்ளன. லிம்போஸைட்டிக் மற்றும் மைலேய்ட் லூக்கோமியா என்ற சொற்கள், எலும்பு மஜ்ஜையில் இரத்த வெள்ளை அணுக்களை உருவாக்குவதற்கு நடைபெறும் முதிர்ச்சியின் பல்வேறு நிலைகளில் செல்களில் ஏற்படுகின்ற புற்றுநோயைக் குறிக்கின்றன.
 • லிம்போமாக்கள்: இவை, நிணநீர் முடிச்சுகள் மற்றும் நிணநீர் உறுப்புகளில் ஏற்படுகின்ற புற்றுநோய்கள் ஆகும். நிணநீர் என்பது, இடைத்திசுக்களின் இடங்களில் உற்பத்தி ஆகின்ற திரவத்தைக் குறிக்கிறது. அவை, உடலின் பல்வேறு உறுப்புகளில் உள்ள நிணநீர் குழாய்கள், மற்றும் சிறிய கொத்துக்களின் தனிப்பட்ட தொகுதியைக் கொண்டிருக்கின்றன. நிணநீர், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகின்ற லிம்போசைட்டுக்களைக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய், அல்லது லிம்போமாக்கள் இரண்டு வகைப்படும் - ஹாட்ஜ்கினுடையது மற்றும் ஹாட்ஜ்கினுடையது அல்லாத லிம்போமாக்கள் ஆகும்.

இவற்றுக்கும் மேலாக, தொடர்புடைய உறுப்பு அல்லது உடலின்  பாகத்தைப் பொறுத்து, புற்றுநோய் பின்வருமாறு வகைப்படுத்தப்படக் கூடியவையாகும்:

புற்றுநோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Cancer in Tamil

பாதிக்கப்பட்ட பகுதியின் அடிப்படையில், புற்று நோயின் அறிகுறிகள் பரந்த அளவில் வேறுபடுகிறது. புற்றுநோயின் வகை, மற்றும் ஏற்பட்டிருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், உணரப்படுகின்ற சில வழக்கமான குறிகள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • அசாதாரணமான எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு   
 •  பலவீனம் மற்றும் சோர்வு
 • சருமம் அடிக்கடி கன்றிப் போகுதல்
 • சருமத்துக்கு அடியில் ஒரு புடைப்பு இருப்பது போன்ற உணர்வு
 • ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கும் மூச்சு விடுதல் பிரச்சினைகள் மற்றும் இருமல்
 • ஏற்கனவே இருக்கின்ற மச்சங்களின் அளவு மற்றும் வடிவம், அல்லது புண்களின் தோற்றம் போன்றவற்றில் ஏற்படுகின்ற மாறுதல்கள் போன்ற, சருமத்தில் ஏற்படுகின்ற மாறுதல்கள்
 • சருமத்தில் எளிதாக சிராய்ப்புகள் ஏற்படுதல்
 • வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகள்
 • விழுங்குவதில் சிரமம்
 • பசியிழப்பு 
 • குரலின் தரத்தில் மாற்றங்கள்
 • காய்ச்சல் அல்லது இரவு நேர வியர்த்தல்களின் தொடர்ச்சியான நிகழ்வுகள்
 • தசை அல்லது மூட்டு வலிகள், மற்றும் காயங்கள் குணமாக தாமதமாகுதல்
 • நோய்த்தொற்றுக்கள் திரும்பத் திரும்ப ஏற்படுதல்

இந்த அறிகுறிகளில் எதையேனும் நீங்கள் கவனித்தால், உங்கள் மருத்துவரைப் பார்ப்பது புற்றுநோய்களை மிகவும் ஆரம்ப நிலையில் கையாள உதவக் கூடியதாக இருப்பதால், அது மிகவும் கட்டாயமானதாகும். இந்த அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் ஏற்படுவது இல்லை, மற்றும் எல்லோராலும் ஒரு இறுதி நிலை வரை இந்த அறிகுறிகள் தீவிரமாக உணரப்படுவது கிடையாது எனபதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சொல்லப் போனால், ஒரு பொது மருத்துவப் பரிசோதனையின் பொழுது எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்படும் வரை, சிலருக்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியாமலே இருக்கிறது. எனவே, இந்த அறிகுறிகள் மிதமானவையாக இருந்தாலும் கூட, நீங்கள் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

புற்றுநோய் சிகிச்சை - Treatment of Cancer in Tamil

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் முதன்மையாக இரண்டு வகைப்படும்:

அறுவை சிகிச்சை முறைகள்

இது, செல்களின் அசாதாரணமான வளர்ச்சி அல்லது திரட்சியை நீக்குவதுடன் தொடர்புடையது ஆகும். அதைத் தொடர்ந்து மீதமிருக்கும் பகுதிக்கு பயாப்ஸி செய்யப்படுகிறது. குறிப்பாக இது, கட்டி, அணுகக் கூடிய இடத்தில், மற்றும் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு இருக்கும் பொழுது உதவிகரமாக இருக்கிறது.

அறுவை சிகிச்சை அற்ற முறைகள்

இது, செல்களின் அசாதாரணமான திரட்சியை அழிப்பதற்காக கொடுக்கப்படும் மருந்துகளை உள்ளடக்கி இருக்கின்ற கீமோதெரபி, மற்றும் வளரும் கட்டி யின் மீது நேரடியாக காமா கதிர்கள் போன்ற கதிவீச்சுக்களைப் பயன்படுத்துகின்ற கதிர்வீச்சு சிகிச்சை, ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

சிலநேரங்களில், அறுவை சிகிச்சை, மற்றும் அறுவை சிகிச்சை அற்ற முறைகள் ஆகிய இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. முதலில், கட்டியின் அளவைக் குறைப்பதற்காக கதிர்வீச்சு சிகிச்சை ,அல்லது கீமோதெரபி பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் புற்றுநோய்த் தன்மை உள்ள அந்த புண்களை வெட்டி நீக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அந்த புண்கள் மற்ற இடங்களுக்கு மேலும் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, மறுபடியும் அந்தப் பகுதியில் கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மற்ற சிகிச்சை தேர்வுகளாக, ஹார்மோன் சிகிச்சை, நோய் எதிர்ப்பு அதிகரிப்பு சிகிச்சைகள், பிஸ்ஃபோஸ்ஃபோனெட்கள், இன்ன பிற சிகிச்சைகள் உள்ளன. இவை, குறிப்பிட்ட வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மார்பகப் புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ஹார்மோன் சிகிச்சை பொருத்தமானதாக இருக்கிறது.

மருந்துகளும் புற்றுநோயோடு இணைந்த அறிகுறிகளைக் கையாள்வதற்காகப் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள், தனிநபர்களின் அறிகுறிகளைக் கையாள அளிக்கப்படும் வலி நிவாரணிகள், அமில எதிர்ப்பிகள், காய்ச்சல் தணிப்பான்கள் ஆகியவை அடங்கும்.

புற்றுநோயின் காரணமாக ஏற்படுகின்ற தொடர்ச்சியான வலி, மற்றும் அசௌகாரியத்தைப் போக்குவதற்காக மார்ஃபின் பற்றுகள் அல்லது பிற வலி நிவாரணிகள் பயன்படுத்தப்படுகின்ற போது, புற்றுநோயின் பரவுகின்ற இயல்பின் காரணமாக அது கட்டுப்படுத்த முடியாததாக இருப்பதால், அவ்வப்போது வலியைக் குறைக்கும் கவனிப்பு மட்டுமே சாத்தியமுள்ள ஒரே சிகிச்சையாக இருக்கிறது. 

வாழ்க்கைமுறை அளவீடுகள் 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, மற்றும் புற்றுநோயின் அறிகுறிகளை சமாளிப்பதற்காக, சில வாழ்க்கைமுறை மாறுதல்களை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றுள் அடங்கி இருக்கக் கூடியவை:

 • அனைத்து ஊட்டச்சத்து உட்பொருட்களும் அடங்கியுள்ள, வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.
 • முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு வாரத்துக்கு 5 நாட்கள், 30 நிமிடங்களுக்கு போதுமான அளவு தீவிரமான உடற்பயிற்சி செய்வது உதவிகரமாக இருக்கக் கூடும். ஒருவேளை தீவிரமான உடற்பயிற்சிகளை செய்ய இயலாத நிலையில் நீங்கள் இருந்தால், 30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடைப்பயிற்சி செய்வது உதவிகரமாக இருக்கலாம்.
 • புகையிலை மற்றும் மது அருந்துவதைத் தவிருங்கள்.
 • உங்கள் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அளவிட, தொடர்ந்த முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள செல்லுங்கள்.
 • யோகா, தியானம், அல்லது ஒரு ஆர்வமுள்ள விஷயம் அல்லது பொழுதுபோக்கினைப் பின்பற்றுவது மூலம், மன அழுத்தத்தை நன்கு கையாளுங்கள்.
 • அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், மற்றும் நேர்மறை எண்ணங்களுடனும் இருங்கள். அனைத்து புற்றுநோய்களும் குணப்படுத்த முடியாத மற்றும் மரணத்தை ஏற்படுத்துகின்றவை அல்ல.

புற்றுநோய் என்ன - What is Cancer in Tamil

புற்றுநோய் என்பது, எந்த ஒரு செயல்பாட்டினையும் வழங்காத, தன்னிச்சையாக வளர்ந்து இயல்பற்ற முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்ற, செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் குறிக்கிறது. புற்றுநோய் செல்கள் இயல்பில் அதிக ஆபத்து உடையவையாக இருக்கின்ற போது உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவ, மற்றும் பிரியக் கூடியவை ஆகும். அவை, தீவிரமான ஆபத்து இல்லாதவையாக இருக்கின்ற பொழுது, ஒரே இடத்தில் தொடர்ந்து வளர்கின்றன.

புற்றுநோய், அடிப்படையில், மற்ற திசுக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றை அழிக்கக் கூடிய திறனைக் கொண்ட, செல்களின் ஒரு அசாதாரணமான மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஆகும்.மேற்கோள்கள்

 1. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Risk Factors for Cancer
 2. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; What Causes Cancer?.
 3. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Cancer Staging.
 4. Harsh Mohan: Harshmohan’s textbook of pathology [Internet]
 5. Stuart Ralston Ian Penman Mark Strachan Richard Hobson. Davidson's Principles and Practice of Medicine E-Book. 23rd Edition: Elsevier; 23rd April 2018. Page Count: 1440

புற்றுநோய் க்கான மருந்துகள்

புற்றுநோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।