பிறப்புறுப்பு மருக்கள் - Genital Warts in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

பிறப்புறுப்பு மருக்கள்
பிறப்புறுப்பு மருக்கள்

பிறப்புறுப்பு மருக்கள் என்றால் என்ன?

பிறப்புறுப்பு மருக்கள் என்பது மனித சடைப்புத்துத் தீ நுண்மம் (ஹெச்.பி.வி) காரணமாக ஏற்படும் ஒரு பொதுவான பாலியல் ரீதியாக பரவும் (பால்வினை நோய்) நோய்த்தொற்றாகும். இது பிற அறிகுறிகளுக்கு மத்தியில் வலி, அசௌகரியம் மற்றும் அரிப்பு ஆகியவையால் பண்பிடப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களில் பிறப்புறுப்பு பகுதி அருகே இவை ஒன்றாக அல்லது கொத்தாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களில் இந்த நோய் தாக்கும் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பிறப்புறுப்பு மருக்கள் வெவ்வேறு வடிவங்களில் வளரும்.இதன் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

 • சிறிய, சிதறிய புடைப்புகள் (சரும நிறத்தில் அல்லது இருண்ட நிறத்தில்).
 • பிறப்புறுப்பு பகுதியில் கொத்து கொத்தான புடைப்புகள்.
 • இடுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுதல் அல்லது அசௌகரியத்தை உணர்தல்.
 • உடலுறவின்போது இரத்தப்போக்கை தொடர்ந்து வலி ஏற்படுதல்.

பிற்போக்கு மருக்கள் பின்வரும் பகுதிகளில் தோன்றும்:

பெண்களில்:

 • யோனியின் உள்.
 • கருவாய், கருப்பை வாய் அல்லது இடுப்புப் பகுதியின் மீது.

ஆண்களில்:

 • ஆண்குறியின் மீது.
 • விதைப்பை, தொடை, அல்லது இடுப்புப் பகுதியின் மீது.

இரு பாலினங்களிலும்:

 • ஆசனவாயினுள் அல்லது அதனைச் சுற்றி.
 • உதடுகள், வாய், நாக்கு அல்லது தொண்டையின் மீது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பிறப்புறுப்பு மருக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஹெச்.பி.வி நோய்த் தொற்று ஆகும். பிறப்புறுப்பு மருக்கள் ஹெச்.பி.வி பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஒரு ஆரோக்கியமான நபருக்கு பின்வருமாறு பரவும்:

 • பாலியல் உடலுறவு (யோனி, வாய்வழி, குதவழி) - ஹெச்.பி.வி நோய்த் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிக இளம் வயதில் உடலுறவில் ஈடுபடுதல் அல்லது பலருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளுதல் அல்லது பாலியல் ரீதியான வரலாறு அறியப்படாத நபருடன் உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றால் அதிகரிக்கிறது.
 • குழந்தை பிறப்பு (நோய்த்தொற்றுடைய தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவும்).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

தோலியல் மருத்துவர் முதலில் மருக்களை பரிசோத்தித்துப் பார்ப்பார். பின்னர் கண்டறிதலை உறுதிப்படுத்த ஒரு மருவை அல்லது அதன் ஒரு பகுதியை நுண்ணோக்கியின் மூலம் பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பார்.

பின்வரும் மருந்துகளை தோலியல் மருத்துவர் பரிந்துரை செய்வார்:

 • போதோபயில்லோடோக்ஷின் (மருக்களின் உயிரணுக்களின் வளர்ச்சியை நிறுத்த).
 • இமிக்யுயிமாட் (ஹெச்.பி.வி-ஐ எதிர்த்து போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்த).

இதற்கான சிகிச்சை செயல்முறைகள் பின்வருமாறு:

 • உறைநிலை அறுவை (திரவ நைட்ரஜன்) மருக்களை உறைய வைக்கிறது.
 • வெட்டி நீக்குதல் அல்லது அறுவை சிகிச்சை நீக்கம்.
 • மின் தீய்ப்பான் (மின்னோட்டம்) மருக்களை அழிக்கிறது.
 • மின் தீய்ப்பான் (மின்னோட்டம்) மருக்களை அழிக்கிறது.

பிறப்புறுப்பு மருக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மிக முக்கியமான காரணம் ஹெச்.பி.வி நோய்த்தொற்று கர்ப்பப்பை வாய் மற்றும் யோனி புற்றுநோயின் முக்கிய காரணமாக அமைவதே ஆகும். ஹெச்.பி.வி-க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் மருக்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Genital warts.
 2. Office on women's health [internet]: US Department of Health and Human Services; Genital warts.
 3. American Academy of Dermatology. Rosemont (IL), US; Genital Warts: Overview.
 4. Valerie R. Yanofsky et al. Genital Warts A Comprehensive Review. J Clin Aesthet Dermatol. 2012 Jun; 5(6): 25–36. PMID: 22768354
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Genital warts.

பிறப்புறுப்பு மருக்கள் டாக்டர்கள்

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

பிறப்புறுப்பு மருக்கள் க்கான மருந்துகள்

பிறப்புறுப்பு மருக்கள் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।