ஜீரகம், கேரட் மற்றும் கொத்தமல்லி தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாசனையூட்டும் மசாலா பொருள் ஆகும். நீங்கள் சர்வதேச உணவு வகைகளை விரும்புபவராகவோ அல்லது ஒரு உணவுப் பிரியராகவோ இருந்தால், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பரிமாறப்படும் சிறந்த உணவுகளில் பெரும்பாலானவற்றில், ஜீரகம் ஒரு பொதுவான ஒரு சேர்மானப் பொருளாக இருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். ஜீரக சாதம், ஏறத்தாழ ஒவ்வொரு இந்திய சமயலறையிலும் வழக்கமாகத் தயாரிக்கப்படும், மிகவும் விரும்பப்படும் ஒரு சமையல் ஆகும். சொல்லப் போனால், ஜீரகத்தின் கொட்டை போன்ற சுவை, மொராக்கோவில் உள்ள உள்ளூர் உணவகங்ககளில் மிகவும் விருப்பத்துடன் உண்ணத்தக்கதாக இருக்கிறது.

ஈராக்கில் கண்டறியப்பட்ட சில பழமையான சமையல்கலை புத்தகங்களில், ஜீரகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடப்பட்டு உள்ளன என நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். இருந்தாலும், சமையல் உலகத்தின் மற்ற பகுதிகளும், ஜீரகத்தைப் பயன்பாட்டை அனுபவிக்க தடை ஏதும் இல்லை. ஜீரகம், அதன் குணமளிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மைகளுக்காக, நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அது, ஒரு பால் சுரப்பு மருந்தாக மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாக, பல்வேறு கலாச்சாரங்களில் மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி, பண்டைய எகிப்தில், ஜீரகம் ஒரு முக்கியமான மருத்துவப் பொருளாக கருதப்பட்டது.

தற்பொழுது ஜீரக விதைகளின் ஆயுர்வேத பயன்களை உறுதி செய்ய, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பார்க்கப் போனால், ஜீரக விதைகள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைப்பதில் மிகவும் திறன்மிக்கதாக இருப்பதாக, மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் சுவைக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் மிகவும் பொருந்திப் போகிற மசாலாப் பொருளை விட சிறந்தது எது?

உங்களுக்குத் தெரியுமா?

ஜீரக செடி, 1 முதல் 1.5 அடிகள் உயரம் வரை வளரக் கூடிய ஒரு வருடாந்திர மூலிகை செடியாகும். ஜீரக செடியின் மென்மையான தண்டுகள் அதிக கிளைகளைக் கொண்டது. அது, ஜீரகத்தினுடைய சிறிய பூக்கள் ஜீரக செடியின் கிளைகளில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாக பூக்கின்ற வேளையில், இலைகளையும் கொண்ட ஒரு கலவையாக இருக்கிறது. ஜீரக விதைகள் நீளமானவையாக இருக்கின்றன ஆனால் முட்டை வடிவத்திலும் மற்றும் அவற்றின் பரப்பில் விளிம்புகளையும் கொண்டு இருக்கின்றன.

ஜீரகம் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • தாவரவியல் பெயர்குமினம் சைமினம்
  • குடும்பம்: அப்பியாசியயி
  • பொதுவான பெயர்கள்: குமின், ஜீரகம், ஜீரா.
  • சமஸ்கிருதப் பெயர்ஜிராகா.
  • பயன்படும் பாகங்கள்: பழம்.
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஜீரகம், எகிப்தை சார்ந்தது, ஆனால் அது, சீனா, மொராக்கோ மற்றும் இந்தியாவிலும் கூட வளர்க்கப்படுகிறது.
  • ஆற்றலியல்: வெப்பமாக்குதல்.
  1. ஜீரகம், சீமை ஜீரகம் மற்றும் கருஞ் ஜீரகம் வகைகள் - Cumin, Caraway and Black cumin varieties in Tamil
  2. ஜீரகத்தின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Health benefits of cumin in Tamil
  3. ஜீரக விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது - How to use cumin seeds in Tamil
  4. ஜீரகம் எடுத்துக் கொள்ளும் அளவு - Cumin dosage in Tamil
  5. ஜீரகத்தின் பக்க விளைவுகள் - Cumin side effects in Tamil
  6. குமின் விதைகள் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் டாக்டர்கள்

ஜீரகம், சீமை ஜீரகம் மற்றும் கருஞ் ஜீரகம் ஆகிய சொற்கள், அடிக்கடி மாற்றி மாற்றிப்  பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில், இந்த மூன்று சொற்கள், மூன்று விதமான ஜீரக வகைகளைக் குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அனைத்து வகைகளின் சில அடிப்படை வித்தியாசங்களை நாம் இப்போது காணலாம்.

  • குமின்: வெள்ளை ஜீரகம் எனவும் கூட அறியப்படும் குமினம் சைமினம் என்பது, வழக்கமாக சமையலில் பயன்படுத்தப்படும் ஜீரகம் ஆகும். அது, சிறிதளவு காரமான மற்றும் கொட்டை போன்ற ஒரு வெதுவெதுப்பான மணமுள்ள சுவையைக் கொண்டிருக்கிறது.
  • சீமை ஜீரகம்: சீமை ஜீரகம் அல்லது காஷ்மீர் ஜீரகம் எனவும் கூட அழைக்கப்படும் குமினம் நிக்ரம், நீங்கள் உங்கள் சமையலறையில் பயன்படுத்தும் குமினை விட, சிறிது வலுவான ஒரு சுவையைக் கொண்டிருக்கும். குமினுடன் ஒப்பிடும் பொழுது அதை விட, சீமை ஜீரக விதைகள் சிறிது வளைந்து மற்றும் நிறத்தில் அடர்த்தியாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.
  • கருஞ் ஜீரகம்: நிகெல்லா அல்லது களோஞ்சி. கருஞ்சீரகம் என சில மக்களால் அழைக்கப்படும் இந்த மசாலா பொருள், ஒரு ஜீரகமே கிடையாது. அது, ரானன்குளாசியயி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த, முற்றிலும் வேறு ஒரு வகையான தாவரத்தை சேர்ந்தது ஆகும். சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, பண்டைய எகிப்தில், பிணங்களை மம்மி செய்யும் நடைமுறையில், நிகெல்லா விதைகள் பயன்படுத்தப்பட்டன.

ஜீரகம் எனத் தவறாகக் குழப்பிக் கொள்ளப்படும் மற்றொரு மசாலாப் பொருள் கலிஜீரகம் அல்லது கலி ஜீரகம் ஆகும். கலிஜீரகம், பார்ப்பதற்கு ஜீரகம் போலவே இருக்கும் அதே வேளையில், ஜீரகத்துடன் ஒப்பிடும் பொழுது, அது மிகவும் கசப்பு சுவை உடையதாகவும் மற்றும் கடுமையானதாகவும் இருக்கிறது. மேலும் கலிஜீரகம், சில குறிப்பிட்ட உணவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.

ஜீரகம், அதன் இரைப்பை பாதைக்கான (கட்) நன்மைகள் என்று பார்க்கின்ற பொழுது, அது ஒரு அற்புதமான மூலிகை ஆகும். அது, இரைப்பை வாயு மற்றும் வயிற்றுப் பொருமல் போன்ற வாயுப் பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறைப்பதோடு மட்டும் அல்லாமல், குடல் எரிச்சல் நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுவதாக அறியப்படும் ஒரு நிவாரணியாகவும் இருக்கிறது. இது, பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரப்பினை அதிகரிக்க உதவுவதாகவும் பாரம்பரியமாக அறியப்படுகிறது.

இவ்வளவு தான் இதன் நன்மைகள் என்று நீங்கள் எண்ணும் பொழுது, ஜீரக விதைகள் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த ஜீரக விதைகளும் உடல் நலத்தை மேம்படுத்துவதாக இருக்கின்றன. ஜீரகத்தின் சில ஆராக்கியமளிக்கும் நன்மைகளை நாம் இப்போது காணலாம்.

  • உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது: பாரம்பரிய மருத்துவத்தில் ஜீரகம், ஒரு நன்கு அறியப்பட்ட உடல் எடைக் குறைப்பு காரணி ஆகும். தற்பொழுது, ஜீரக பொடி தனியாக அல்லது எலுமிச்சையுடன் சேர்த்து கொடுக்கப்படும் பொழுது, உடல்பருமன் கொண்ட நபர்களுக்கு, எடை குறைப்பை ஊக்குவிக்கிறது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
  • வயிற்றுக்கான நன்மைகள்: ஜீரக விதைகள், பெரும்பாலான வயிற்று பிரச்சினைகளுக்கு எதிரான, உங்களின் மிக சிறந்த நிவாரணி ஆகும். அவை வயிற்று வலி, வயிறு வீங்குதல் மற்றும் வாயு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டும் அல்லாமல் கூடவே, அவை குடல் எரிச்சல் நோயை குணமாக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
  • நீரிழிவு எதிர்ப்பு: ஜீரகம் ஒரு மிகச் சிறந்த சர்க்கரைக்குறைப்பு காரணி (இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்தல்) என ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அது, நீரிழிவு நோயுடன் இணைந்த பிரச்சினைகள் தோன்றுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.
  • இதயத்துக்கு நல்லது: ஜீரக விதைகள், இதய நோய்களை ஏற்படுத்தும் இரண்டு முக்கிய காரணிகளான கொழுப்பு அளவுகள் மற்றும் இரத்த அழுத்த அளவுகளை, குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஜீரகம், ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி மற்றும் இரத்த உறைதல் எதிர்ப்பி (இரத்தம் கட்டி சேருவதைத் தடுக்கிறது) ஆகும். ஜீரகத்தை தொடர்ச்சியாக உட்கொள்வது, மாரடைப்பில் இருந்து மற்றும் முதுமை காரணமாக ஏற்படும் சேதத்தில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக் கூடும்
  • சருமம் மற்றும் உச்சந்தவையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஜீரகம், மிகச்சிறந்த ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு காரணி ஆகும். அது, தோல் மற்றும் உச்சந்தலையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிரிகளின் வளச்சியைத் தடுக்கிறது.  அது ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக இருப்பதால், முன்கூட்டியே ஏற்படும் முதுமைத் தோற்றம் மற்றும் முடி நரைத்துப் போதல் ஆகியவற்றை தாமதப்படுவதில் உதவுகிறது.
  • மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: ஜீரக விதைகள், அதன் மன அழுத்தம் மற்றும் மன பதற்றம் ஆகியவற்றைக் குறைக்கும் பண்புகளுக்காக அறியப்படுகின்றன. அவை ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தவும் கூட உதவுகின்றன
  1. வயிற்றுக்கான ஜீரகத்தின் நன்மைகள் - Cumin benefits for stomach in Tamil
  2. சருமம் மற்றும் முடிக்காக ஜீரகம் - Cumin for skin and hair in Tamil
  3. பால் சுரப்புக்காக ஜீரக விதைகள் - Cumin seeds for lactation in Tamil
  4. மூளையின் ஆரோக்கியத்துக்காக ஜீரகம் - Cumin for brain health in Tamil
  5. ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக ஜீரகம் - Cumin as an antioxidant in Tamil
  6. இதய ஆரோக்கியத்துக்காக ஜீரகம் - Cumin for heart health in Tamil
  7. உயர் இரத்த அழுத்தத்துக்காக ஜீரகம் - Cumin for high blood pressue in Tamil
  8. ஜீரகத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு - Cumin antimicrobial activity in Tamil
  9. ஜீரகத்தின் இரத்த உறைவு எதிர்ப்பு பண்புகள் - Cumin anticoagulant properties in Tamil
  10. அழற்சி - எதிர்ப்புக்காக ஜீரக விதைகள் - Cumin seeds anti-inflammatotry in Tamil
  11. குடல் எரிச்சல் நோய்க்காக ஜீரகம் - Cumin for Irritable bowel syndrome in Tamil
  12. நீரிழிவுக்காக ஜீரகம் - Cumin for diabetes in Tamil
  13. கொழுப்பு அளவுகளுக்காக ஜீரகம் - Cumin for cholesterol in Tamil
  14. உடல் எடைக் குறைப்புக்காக ஜீரக விதைகள் - Cumin for weight loss in Tamil

வயிற்றுக்கான ஜீரகத்தின் நன்மைகள் - Cumin benefits for stomach in Tamil

ஜீரகம், அமில சுரப்பு அதிகரிப்பு, செரிமானமின்மை, வாயு மற்றும் வயிற்று புண்கள் போன்ற பொதுவான வயிறு சார்ந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு, ஒரு பாரம்பரியமான நிவாரணியாக இருக்கிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், ஜீரகத்தைத் தொடர்ந்து உட்கொள்வது, கணையத்தில் இருந்து சுரக்கின்ற செரிமான நொதிகளைத் தூண்டும் ஒரு விளைவைக் கொண்டிருக்கிறது என சுட்டிக் காட்டுகின்றன.

அலிமெண்டரி ஃபார்மகாலஜி அண்ட் தெரஃபியாட்டிக்ஸ் -இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ள படி, பெர்சிய ஜீரகம் அல்லது சீமை ஜீரக விதைகள் செரிமான கோளாறு - நீக்கும் பண்புகளைக் கொண்டு இருக்கின்றன. இருந்தாலும், சாத்தியமுள்ள பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளைக் கையாள, அடுத்த கட்ட ஆய்வுகள் இன்னமும் தேவையாகவே இருக்கின்றன.

(மேலும் படிக்க: வயிற்றுக் கோளாறு சிகிச்சை)

டெய்லர் மற்றும் ஃபிரான்சிஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வுக் கட்டுரையில், ஒரு விட்ரோ (ஆய்வகம் - சார்ந்த) ஆய்வில் ஜீரக சாறு, வயிற்றுப் புண்களுக்கு மிகவும் வழக்கமான காரணமான நுண்ணுயிரியான ஹெலிக்கோபாக்டர் பைரோலி- யைக் கொல்வதில் மிகவும் திறன்மிக்கதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அந்தக் கட்டுரை ஜீரகம், அந்த நுண்ணுயிரியின் மருந்து- எதிர்ப்பு சக்திக்கு இணையான சக்தியைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இருப்பினும், மனிதர்கள் மீதான ஆய்வுகள் குறைவாக இருக்கும் காரணத்தால், எந்த வகை வயிற்றுப் பிரச்சினைக்கும் ஜீரகத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

(மேலும் படிக்க: வயிற்று வலி நிவாரணம்)

சருமம் மற்றும் முடிக்காக ஜீரகம் - Cumin for skin and hair in Tamil

ஜீரகம் ஒரு திறன்மிக்க பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணயிர் எதிர்ப்பு காரணி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வழக்கமான தோல் மற்றும் உச்சந்தலை நோய்த்தொற்றுக்களுக்கு காரணமான பூஞ்சைகளைக் கொல்வதில், மிகவும் திறன்மிக்கதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜீரகத்தின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், சருமத்தை இளமையாக வைத்து இருப்பதிலும், மற்றும் முடிக்கு ஒரு இயற்கையான பளபளப்பு மற்றும் வலிமையை வழங்குவதிலும் சில நன்மைகளைக் கொண்டிருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

முகத்துக்குப் போடப்படும் ஜீரக முகத்திரைகள், ஒரு பொலிவான மற்றும் ஆரோக்கியமான தோற்றமளிக்கும் சருமத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் சருமத்துக்கு அல்லது முடிக்காக ஜீரகத்தைப் பயன்படுத்தும் முன்னால், உங்கள் சரும வகை மீதான சாத்தியமுள்ள பாதிப்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுமாறு, நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பால் சுரப்புக்காக ஜீரக விதைகள் - Cumin seeds for lactation in Tamil

ஜீரகம், பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ அமைப்பில் நன்கு அறியப்பட்ட, ஒரு பால் சுரப்பு ஊக்குவிப்பான் ( பால் சுரப்பினை அதிகரிக்கிறது) ஆகும்.

பசுமை மருந்தகம்: பொதுவான நோய்களுக்கான மூலிகை நிவாரணிகளில் புதிய கண்டுபிடிப்புகள் என்ற நூலில் உள்ள படி, உணவில் ஜீரகத்தை சேர்த்து எடுத்துக் கொள்வது, மொத்த மார்பக அணு (மார்பக செல்)களின் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இருந்தாலும், மனிதர்கள் மீதான ஜீரக விதைகளின் திறனை நிரூபிக்கும் மருத்துவரீதியிலான ஆய்வுகள் எதுவும் இல்லை. எனவே பாலூட்டும் தாய்மார்கள், எந்த ஒரு வடிவத்திலும் ஜீரகத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர், அவர்களின் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மூளையின் ஆரோக்கியத்துக்காக ஜீரகம் - Cumin for brain health in Tamil

பாரம்பரிய மருத்துவ முறைகள், ஜீரகத்தினை ஒரு மன அழுத்த எதிர்ப்பு மூலிகையாக அங்கீகரிக்கின்றன. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், ஜீரகம், மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தம் தொடர்புடைய அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதில் திறன்மிக்கது எனக் குறிப்பிடுகின்றன. மேலும் அந்த ஆய்வுகள், ஜீரகத்தை தொடர்ந்து உட்கொள்வது, நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவக் கூடும் எனவும் தெரிவிக்கின்றன.

(மேலும் படிக்க: மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன)

விட்ரோ ஆய்வுகளில், ஜீரகத்தின் நீரிய மற்றும் எத்தனால் சாறுகள், அல்சைமர் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அல்சைமர் என்பது, நினைவாற்றல் இழப்பு மற்றும் அறிவாற்றல் இழப்பு உட்பட, மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் ஒரு படிப்படியான இழப்புடன் இணைந்த, ஒரு மூளை குறைபாடு ஆகும்.

மருத்துவர்களின் கூற்றுப் படி, இந்த வியாதி, மூளையில் உள்ள செல்களுக்கு இடையேயான சமிஞ்கைகளை பரிமாறிக் கொள்வதற்குப் பொறுப்பான, அசிட்டைல்சோலைன் போன்ற வேதிப்பொருட்களைத் தடை செய்வதை அதிகரிக்கிறது. தற்போது அல்சைமருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் விலை உயர்வானவை மட்டும் அல்லாமல், வயிற்றுக் கோளாறு, அசௌகரியம், பதற்றம் போன்ற சில நிச்சயமான பக்க விளைவுகளையும் கொண்டிருக்கின்றன. ஆய்வுகள், ஜீரக சாறுகள் எடுத்துக் கொள்வது, மூளையில் உள்ள அசிட்டைல்சோலைன் அளவை அதிகரிக்கக் கூடும் என சுட்டிக் காட்டுகின்றன. அதன் மூலம் அல்சைமரின் அறிகுறிகளைத் தாமதப்படுத்துகின்றன. இருந்தாலும், மருத்துவ ஆய்வுகள் இல்லாத காரணத்தால், மூளையின் செயல்பாட்டுக்கான ஜீரகத்தின் நன்மைகளைப் பற்றி அறிய, உங்கள் மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது.

ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக ஜீரகம் - Cumin as an antioxidant in Tamil

ஜீரகத்தின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு திறனைப் பரிசோதிக்க எண்ணற்ற பரிசோதனைக்கூட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்த அனைத்து ஆய்வுகளும், ஜீரகம் ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி எனக் குறிப்பிடுகின்றன.

ஒரு சமீபத்திய ஆய்வு, ஜீரகத்தில் இருக்கின்ற பாலிஃபெனோல்கள், இந்த மசாலாவில் உள்ள முக்கியமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் ஆகும் எனத் தெரிவிக்கிறது. அடுத்த கட்ட ஆய்வு, ஜீரக எண்ணெய்யில் உள்ள காமா - டெர்பினென் மிகவும் திறன் வாய்ந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி எனத் தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், ஜீரக எண்ணெய்யின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்பானது, அதனை உணவு தயாரிப்பில் ஒரு பதப்படுத்தியாக, பயனுள்ளதாக ஆக்குகிறது என்று குறிப்பிடுகின்றனர்.

இதய ஆரோக்கியத்துக்காக ஜீரகம் - Cumin for heart health in Tamil

இதய ஆரோக்கியம் என வரும் பொழுது, ஜீரகம் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாக, அது ஒரு மிகச் சிறந்த ஹைப்போலிபிடெமிக் ஆகும். மற்றும் இறுதியாக, ஜீரகம் ஒரு திறன்மிக்க ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த மூன்று பண்புகளும் இணைந்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக் கூடும் என்பது மட்டும் அல்லாமல், கூடவே மனஅழுத்தம் மற்றும் உடலில் ஏற்படுகிற வாழ்க்கைமுறை பிரச்சினைகளின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை குறைப்பதன் மூலம், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. 

(மேலும் படிக்க: இதய நோய் தடுப்பு முறை)

உயர் இரத்த அழுத்தத்துக்காக ஜீரகம் - Cumin for high blood pressue in Tamil

பாரம்பரிய மருத்துவ முறையில் ஜீரகம், உயர் இரத்த அழுத்தத்துக்கு ஒரு நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

விவோ ஆய்வுகளில், ஜீரக விதைகள் உடலில் சிஸ்ட்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், இதுவரையில் இந்த தளத்தில், எந்த ஒரு மருத்துவ ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளுக்காக ஜீரகத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர் ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் நல்லது ஆகும்.

ஜீரகத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு - Cumin antimicrobial activity in Tamil

பெரும்பாலான பொதுவான நுண்ணுயிர் உயிரினங்களை மற்றும் உணவைக் கெடுக்கும் நுண்ணுயிரைக் கொல்வதில் ஜீரகம் மற்றும் ஜீரக பொருட்களின் திறனைப் பரிசோதிக்க எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆய்வக அடிப்படையிலான அனைத்து ஆய்வுகளும், ஜீரகம் ஒரு மிகச் சிறந்து நுண்ணுயிர் எதிர்ப்பு பொருள் எனத் தெரிவிக்கின்றன.

அந்த ஆய்வுகளில் ஒன்றில் ஜீரகம், எஸ்செரிசியா கோலி, மற்றும் ஸ்டாஃபிலோகோக்கஸ் அவுரஸ் ஆகியவற்றைக் கொல்வதில் மிகவும் திறன்வாய்ந்தது எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. மற்றொரு ஆய்வு, ஜீரகத்தின் அத்தியாவசிய எண்ணெய், அஸ்பெரிகில்லஸ் போன்ற உணவில் தோன்றும் ஏராளமான பூஞ்சைகளுக்கு எதிராகத் திறன்மிக்கதாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதனால் இது, வருங்காலத்தில் ஒரு இயற்கையான உணவு பதப்படுத்தியாகப் பயன்படுத்தப்படக் கூடும்.

நுண்ணுயிரியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பம் நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின் படி, ஜீரகம், வழக்கமான ஈஸ்ட் வகைகளான சாக்கரோமைசஸ் மற்றும் கேண்டிடா ஆகியவற்றுக்கு எதிராக, ஒரு திறன்மிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாக ஜீரகத்தின் எந்த ஒரு நன்மைகள் அல்லது பக்க விளைவுகளை உறுதி செய்ய, இன்னமும் மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. எனவே, ஜீரகத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு உட்பொருட்கள் மற்றும் செயல்பாட்டினைப் புரிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஜீரகத்தின் இரத்த உறைவு எதிர்ப்பு பண்புகள் - Cumin anticoagulant properties in Tamil

ஆய்வுக்கூட அடிப்படையிலான ஆய்வுகள், ஜீரகம் ஒரு திறன்மிக்க இரத்த உறைவு எதிர்ப்பான் (இரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது) எனத் தெரிவிக்கின்றன. ஆய்வுகள், ஜீரகத்தின் ஈதர் சாறுகள், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் ஆவேசமான செயல்பாடுகளைத் திறனுடன் தடுக்கின்றன எனத் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், ஒரு இரத்த உறைவு தடுப்பானாக ஜீரகத்தின் சாத்தியமுள்ள செயல்முறை, பக்க விளைவுகள் மற்றும் எடுத்துக் கொள்ளும் அளவு ஆகியவை பற்றிய விஷயத்தில், இன்னமும் மனிதர்கள் மீதான எந்த ஒரு ஆய்வும் செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஜீரகத்தின் இரத்தத்தை மெலிதாக்கும் பண்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் கேட்பது மிகவும் நல்லது ஆகும்.

அழற்சி - எதிர்ப்புக்காக ஜீரக விதைகள் - Cumin seeds anti-inflammatotry in Tamil

ஒரு சமீபத்திய ஆய்வுக்கூட ஆய்வு, ஜீரக விதைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அந்த ஆய்வு, ஒரு குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு மறுவிளைவு மூலக்கூறின் செயல்பாட்டினை, அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை சாந்தப்படுத்துவதற்காக, தடுக்கிறது எனத் தெரிவிக்கிறது.

மேலும் அந்த ஆய்வு, ஜீரகத்தில் காணப்படும் ஒரு இயற்கை வேதியியல் பொருளான குமினால்டிஹைட், இந்த மசாலாப் பொருளின் அழற்சி - எதிர்ப்பு பண்புக்கான காரணமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கிறது. இருந்தாலும், மருத்துவரீதியான ஆய்வுகள் மிகவும் குறைவாகவே இருக்கும் காரணத்தால், உங்கள் ஆரோக்கியத்துக்கான ஒரு பிற்சேர்க்கை உணவாக ஜீரகத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர், ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் நல்லது ஆகும்..

குடல் எரிச்சல் நோய்க்காக ஜீரகம் - Cumin for Irritable bowel syndrome in Tamil

குடல் எரிச்சல் நோய் என்பது, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மலச்சிக்கல், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வழக்கமான இரைப்பை குடல் தொடர்பான ஒரு பிரச்சினை ஆகும். ஐ.பி.எஸ்- க்கான தற்போதைய சிகிச்சை வழிமுறை, உணவுப் பழக்க மாறுதல்கள் மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொணருதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இருந்தாலும், நவீன மருத்துவ முறையானது, தாவரங்கள் அடிப்படையிலான சிகிச்சைக்கு மிகவும் வேகமாக மாறிக் கொண்டு இருக்கிறது.  இந்த பாணியில், பல்வேறு ஐ.பிஎஸ் -களின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிப்பதில் ஜீரகத்தின் திறனை பரிசோதிக்க ஒரு சிறிய அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டடது. அந்த மருத்துவ ஆய்வில், 55 ஐ.பிஎஸ் நோயாளிகளுக்கு தினமும் 20 துளிகள் ஜீரக அத்தியாவசிய எண்ணெய் அளிக்கப்பட்டது. அறிகுறிகளில், ஏதோ ஒரு மாற்றங்கள் அல்லது முன்னேற்றம் காணப்பட்டது.

4 வாரங்களுக்குப் பிறகு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மற்றும் வயிறு வீங்குதலின், அறிகுறிகள், ஒரு கணிசமான அளவுக்கு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இருந்தாலும், நீங்கள் ஐ.பி.எஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்தால், ஜீரகத்தை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது மிகவும் விரும்பத்தக்கது ஆகும்.

நீரிழிவுக்காக ஜீரகம் - Cumin for diabetes in Tamil

ஒரு சமீபத்திய ஆய்வில், நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட ஒரு குழுவினருக்கு, 8 வார கால அளவுக்கு தினமும் ஒருமுறை, ஜீரக மாத்திரை அல்லது மருந்தில்லா மருந்து கொடுக்கப்பட்டது. 8 வாரங்களின் முடிவில், ஜீரகம் எடுத்துக் கொண்ட குழுவினரின் இரத்த சர்க்கரை அளவுகளில், ஒரு குறிப்பிடத்தக்க அளவு குறைவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஜீரகம் எடுத்துக் கொண்ட அனைத்து நபர்களின் நீரிழிவு தொடர்பான மற்ற பிரச்சினைகளில், ஒரு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்பட்டதும் கண்டறியப்பட்டது.

மற்றொரு மருத்துவ ஆய்வில், ஜீரக அத்தியாவசிய எண்ணெய்யின் சர்க்கரைக்குறைப்பு (இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்தல்) விளைவுகள், வைட்டமின் E -யின் திறனை விட மிக அதிக அளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த ஆய்வு, ஜீரக அத்தியாவசிய எண்ணெய் ஒரு திறன்மிக்க அழற்சி - எதிர்ப்பு காரணி எனவும் தெரிவிக்கிறது.

இருப்பினும், ஜீரகத்தை ஒரு ஆரோக்கியத்துக்கான பிற்சேர்க்கை பொருளாக எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் பேசுவது எப்போதுமே அறிவுறுத்தப்படுகிறது.

(மேலும் படிக்க: நீரிழிவு சிகிச்சை)

கொழுப்பு அளவுகளுக்காக ஜீரகம் - Cumin for cholesterol in Tamil

கொழுப்பு என்பது, நமது உடலில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை உடற்கொழுப்பு ஆகும். அது, நமது உடல் செல்களின் மிகவும் முக்கியமான ஒரு பகுதி ஆகும். மற்றும் அது, வயிற்றில் உணவை செரிமானம் செய்வது உட்பட, பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்குத் தேவையானதாக இருக்கிறது.

இருந்தாலும், கொழுப்பு அளவுகளில் ஏற்படும் ஒரு சமநிலையின்மை, தமனித்தடிப்பு (கொழுப்பு படிமங்களின் காரணமாக இரத்தக் குழாய்கள் குறுகுதல்) போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கவும் மற்றும் அதன் விளைவாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கவும் கூடும். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் அதிக கொழுப்புக்கான மிகவும் வழக்கமான நிவாரணம் என்பது, ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதே ஆகும். உங்கள் உணவில், திறன்மிக்க, கொழுப்புகளை எரிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்வதும் கூட, அதிக கொழுப்பு அளவு பிரச்சினையைப் போக்க உதவக் கூடும்.

பைட்டோதெரபியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது, குறைந்தபட்சம் 6 மருத்துவ சோதனைகளின் முடிவின் படி, ஜீரகம் ஒரு மிகச் சிறந்த ஹைப்போலிபிடெமிக் (இரத்த கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது) ஆகும். மேலும் அது, தொடர்ச்சியாக ஜீரகம் உட்கொள்வது, உடலின் ஒரு குறிப்பிட்ட வகை கொழுப்பைக் (டிரைகிளிசரைடு - அற்றது) குறைக்கிறது எனவும் தெரிவிக்கிறது.

இதற்கும் மேலாக, சில உடல் எடைக் குறைப்பு ஆராய்ச்சிகளில் ஜீரகம் எடுத்துக் கொள்வது, எல்.டி.எல் (குறை - அடர்த்தி கொழுப்பு) அளவில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு குறைவைக் காட்டி இருக்கிறது. அதனால் ஜீரகம், ஒரு ஹைப்போலிபிடெமிக் காரணியாக ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என நாம் அச்சமின்றி கூறலாம்.

உடல் எடைக் குறைப்புக்காக ஜீரக விதைகள் - Cumin for weight loss in Tamil

உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ) கருத்துப்படி உடல்பருமன் என்பது, உடலில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு அதிகமான கொழுப்பு அளவுகளைக் கொண்டு குறிப்பிடப்படும் ஒரு பிரச்சினை ஆகும்.

பெரும்பாலும் உடல்பருமன், உள்ளே எடுத்துக் கொள்ளப்படும் கலோரிகளின் அளவுக்கும், அந்த கலோரிகள் எரிக்கப்படும் அளவுக்கும் இடையில் ஏற்படுகிற ஒரு சமநிலையின்மையின் காரணமாக ஏற்படுகிறது. இது, உலகம் முழுவதும் கவலை கொள்ளச் செய்யும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறி வருகிறது. எடை அதிகமாக இருப்பது, உடல்ரீதியாக சவாலாக இருப்பது மட்டும் இல்லாமல் அது, நீரிழிவு, இரத்த அழுத்தம், மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒரு நோயாக உடல் பருமன் என்பது முழுமையாகக் குணப்படுத்தக் கூடியது ஆகும்.

சமீபத்திய ஆய்வுகள், ஜீரகம் ஒரு திறன்மிக்க உடல் எடைக் குறைப்பு காரணியாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன. ஒரு ஆய்வில், உடல் பருமன் உள்ள 72 நபர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கு, ஜீரகம் மற்றும் எலுமிச்சை மாத்திரைகள் அல்லது மருந்தில்லா மருந்து (எந்த ஒரு வழியிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காத ஒரு பொருள்) இரண்டு மாறுபட்ட அளவுகளில், ஒரு நாளைக்கு இரண்டு முறை எட்டு வார கால அளவுக்கு கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட கால அளவு முடிவில், ஜீரக-எலுமிச்சை மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் அளவில் எடுத்துக் கொண்ட குழுவில் இருந்த நபர்களின் மொத்த உடல் எடையில், ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான குறைவு காணப்பட்டது.

மற்றொரு மருத்துவ ஆய்வில், உடல் எடை அதிகம் உள்ள 88 நபர்களுக்கு, மூன்று மாத கால அளவுக்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை, ஜீரகம் அளிக்கப்பட்டது. ஜீரகத்தை எடுத்துக் கொண்ட நபர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அளவில் உடல்எடை குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

அதனால், ஜீரகம் ஒரு திறன்மிக்க உடல் எடைக் குறைப்பு காரணி என எந்தவிதத் தயக்கமும் இன்றி கூறலாம். உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு, ஜீரகம் எடுத்துக் கொள்ளும் சரியான அளவினை அறிய, உங்கள் மருத்துவரிடம் கேட்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

(மேலும் படிக்க: உடல்பருமன் காரணங்கள்)

ஜீரக விதைகள் அல்லது பொடி, அதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவைக்காக, பல்வேறு சமையல் முறைகளில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும், ஒரு சுவையூட்டும் பொருளாக இருக்கிறது.

ஜீரக விதைகளின் தரமான சுவை, மிகவும் விரும்பப்படும் ஒரு இந்திய மசாலா கலவையான, கரம் மசாலாவின் முக்கியமான சுவைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் ரொட்டிகள், கேக்குகள், மற்றும் பிற பேக்கரி தயாரிப்புகளுக்கு சுவையூட்டவும் ஜீரகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மூலிகையின் அத்தியாவசிய எண்ணெய், அதன் நறுமணமூட்டும் மற்றும் மருத்துவப் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிற வேளையில், ஜீரக எண்ணெய் சமையலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய எண்ணெய் நிபுணர்கள், ஜீரகத்தின் வாசனையை வெதுவெதுப்பானது மற்றும் கொட்டை போன்றது என வகைப்படுத்துகிறார்கள்.

ஆரோக்கியத்துக்கான ஒரு பிற்சேர்க்கை பொருளாக ஜீரக மாத்திரைகளும் மற்றும் குழாய் மாத்திரைகளும் கூட, சில ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஜீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஜீரகத் தண்ணீர், உடல் எடைக் குறைப்புக்காகப் பயன்படுத்தப்படும் மிகவும் வழக்கமான நிவாரணிகளில் ஒன்றாகும். ஜீரகம் ஒரு திறன்மிக்க உடல் எடைக் குறைப்புக் காரணி என விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வீட்டிலேயே இந்த நிவாரணியைத் தயாரிக்க ஒரு சிறிய சமையல் குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  • ஒரு கோப்பையில் சிறிது ஜீரக விதைகளை எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, அந்த வெந்நீரை ஜீரக விதைகள் உள்ள கோப்பையில் ஊற்றவும்.
  • குறைந்தபட்சம் 5 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடவும். உங்கள் ஜீரகத் தண்ணீர் கடினமானதாக இருப்பதை நீங்கள் விரும்பினால், அதற்குள் மேலும் சில விதைகளை நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.
  • விதைகளை வடிகட்டி விட்டு, அதை வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.

ஒருவேளை உங்களுக்கு ஜீரகத் தேநீரின் சுவை பிடிக்கவில்லை என்றால், அதன் சுவையை அதிகரிக்க, நீங்கள் தேன், இஞ்சி அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றை எப்போதும் உங்கள் ஜீரகத் தேநீரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது, உங்கள் ஜீரக நீரை மேலும் சுவையானதாக ஆக்குவதோடு மட்டும் அல்லாமல் கூடவே, இந்த ஜீரக நீரின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளையும் அதிகரிக்கும்..

ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப் படி, பொதுவாக தினமும் 1 கிராம் அளவு ஜீரகம் எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும், ஜீரகம் எடுத்துக் கொள்ளும் அளவானது, அந்த நபரின் வயது மற்றும் உடலியல் நிலை போன்றவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது. எனவே நீங்கள், ஒரு ஆரோக்கியமளிக்கும் பிற்சேர்க்கை பொருள் வடிவத்தில் ஜீரகத்தை எடுத்துக் கொள்ள விரும்பினால், அதிகபட்சமான நன்மைகளைப் பெறுவதற்கு ஜீரகம் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவைத் தெரிந்து கொள்ள, ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிகவும் விரும்பத்தக்கது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
  • இந்தியாவின் சில பகுதிகளில் ஜீரகம், ஒரு கருக்கலைப்பு (கரு கலைவதற்கு காரணமாகிறது) பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள் மீதான ஜீரகத்தின் பாதிப்புகளை சோதிக்க எந்த ஒரு மருத்துவரீதியான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, கர்ப்பிணி பெண்கள் ஜீரகத்தை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் உறுதியாக அறிவுறுத்தப்படுகிறது.
  • ஜீரகம் ஒரு திறன்மிக்க இரத்தஉறைவு எதிர்ப்பான் என ஆய்வுகள் காட்டுகின்றன, எனவே ஒருவேளை நீங்கள், இரத்தம் உறையாமை போன்ற ஏதேனும் வகை இரத்தப்போக்கு குறைபாடினால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது உடலில் இரத்தம் உறைதல் காரணிகளில் ஏதேனும் ஒரு குறைபாட்டினைக் கொண்டிருந்தாலோ, ஜீரகத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
  • ஜீரகம், ஒரு திறன்மிக்க சர்க்கரை குறைப்பான் (இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது) எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, நீங்கள் இயல்பாகவே குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டவராகவோ, அல்லது சிகிச்சையில் இருக்கும் ஒரு நீரிழிவு நோயாளியாகவோ இருந்தால், ஜீரகத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது ஆகும்.
  • ஜீரகம் ஒரு நன்கு அறியப்பட்ட இரத்த மெலிதாக்கி ஆகும். எனவே, நீங்கள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக இருந்தால் அல்லது சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை உங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு இருந்தால், ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஜீரகத்தினைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.  ஏனென்றால் அது நீங்கள் குணமாகும் நடவடிக்கையை தாமதப்படுத்தக் கூடும்.
  • ஜீரகத்துக்கு இயற்கையாக ஒவ்வாமை ஏற்படுவது வழக்கமானது அல்ல. ஆனால், ஒரு 68 வயது பெண்மணியின் நோய் பற்றிய குறிப்பில், அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, நீங்கள் இப்பொழுது தான் ஜீரகத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஜீரகத்தின் மீது ஒவ்வாமை இருக்கிறதா என நீங்கள் பரிசோதனை செய்து கொள்வது அல்லது ஜீரகத்தை சிறிய அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் விரும்பத்தக்கது ஆகும்.

Dr Rudra Gosai

Ayurveda
1 Years of Experience

Dr Bhawna

Ayurveda
5 Years of Experience

Dr. Padam Dixit

Ayurveda
10 Years of Experience

Dr Mir Suhail Bashir

Ayurveda
2 Years of Experience

और पढ़ें ...
Read on app