தேன் என்பது, மலர்களின் மகரந்தங்களில் இருந்து உற்பத்தியாகிற இனிப்பான மற்றும் பிசுபிசுப்பான திரவம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிற தேன், ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்ட ஒரு அருமையான உருவாக்கம் ஆகும். மேலும் அது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்பூட்டி ஆகும். சொல்லப் போனால், 18 ஆம் நூற்றாண்டில் கண்டங்களுக்கு இடையே வர்த்தகம் நடந்து, கரும்புகள் கிடைக்கின்ற வரையில், சர்க்கரை என்ற ஒன்று இல்லை.

தேனீக்கள், முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை, 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மக்கள், தேனைப் பயன்படுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏறத்தாழ அனைத்து பண்டைய நாகரிகங்களின்  புராணங்கள் மற்றும் வேதங்கள், தேனைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. தேன், அதன் ஊட்டச்சத்து அளிக்கும் பண்புகளுக்காக பைபிளில், மற்றும் ஒரு குணமளிக்கும் பானமாக, குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தேன், அதன் ஏராளமான குணமளிக்கும் நன்மைகளுக்காக, ஆயுர்வேதத்தில் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டிருக்கிறது. நவீன மருத்துவமும் கூட, தேனின் எண்ணற்ற நன்மைகளை ஒப்புக் கொள்கிறது. அதைக் "கடவுள்களின் உணவு" என்று அழைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இயற்கையான தேன், அதன் நிறத்தைக் கொண்டு தரம்பிரிக்கப்படுகிறது. தெளிவான பொன்னிறமான தேன், கருப்பான ஒன்றை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிதமான  நிறமுடைய தேன், திடமான சுவையை உடைய கருமை நிற ஒன்றுடன் ஒப்பிடும் பொழுது, பொதுவாக அதைவிட அதிக மென்மையாக மற்றும் இனிப்பாக இருக்கின்றது.

தேன் இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது - இயற்கை நிலையில் உள்ளது மற்றும் பதப்படுத்தப்பட்டது. இயற்கை நிலையில் உள்ள தேன், அனைத்து நொதிகள், மகரந்த துகள்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. இவை, வெப்பத்தின் மூலம் தேன் பதப்படுத்தப்படுகிற பொழுது, வழக்கமாக வடிகட்டி வெளியேற்றி விட அல்லது அழிக்கப்பட்டு விடப்படுகின்றன. இயற்கை நிலையில் உள்ள தேன் வடிகட்டப்படாமல் இருப்பதால், அது உடனடியாக உறைந்து விடுகிறது. மற்றொரு புறம்  பார்க்கும் பொழுது பதப்படுத்தப்பட்ட தேன், நீண்ட நாட்களுக்கு திரவ வடிவத்திலேயே நீடிக்கிறது.

தேன் எங்கு விற்பனைக்கு செல்லப் போகிறதோ அதைப் பொறுத்து, சில்லறை விற்பனைக்காக அது சிறிய பாட்டில்களில் அடைக்கப்படலாம் அல்லது பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படலாம். பல்வேறு விதமான நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டிய காரணத்தினால், தேன் பல்வேறு வித  அளவுகள் மற்றும் பாணிகளில் உள்ள குப்பிகளில் அவை அடைக்கப்படுகின்றன. அவற்றுள் கண்ணாடி ஜாடிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், மற்றும் நசுக்கக் கூடிய பாட்டில்கள் ஆகியவை அடங்கும்.

உங்களுக்குத் தெரியுமா?

தேனின் நறுமணம், சுவை, நிறம் மற்றும் குணங்கள், அது எந்த  மகரந்தத்தில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. மலர்களின் தனித்த வாசனைகள் மற்றும் நறுமணச்சுவைகள் ஆகியவை, அவற்றின் மகரந்தத்துக்குள் ஊடுருவி, அதில் உற்பத்தியாகும் தேனில் பிரதிபலிக்கின்றன. தேனின் சுவை, நிறம், மற்றும் பண்புகள் ஆகியவை, ஒரே நாடாக இருந்தாலும், பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகிறது.

தேனைப் பற்றிய  சில அடிப்படை விவரங்கள்:

  • பொதுவான பெயர்: ஷாகத் (இந்தி), தேன்
  • சமஸ்கிருதப் பெயர்: மது
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியில் பரவுதல்: சீனா, துருக்கி, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதன்மையான தேன் உற்பத்தியாளர்கள்  ஆகும்.
  • சுவாரசியமான தகவல்:ஒரு காற்றுப் புகாத ஜாடியில் வைக்கப்பட்டு இருந்தால், தேன் நிலையான ஆயுளைக்  கொண்டிருக்கும். எப்போதும் அது  கெட்டுப் போகாது.
  1. தேனின் ஊட்டச்சத்து விவரங்கள் - Honey nutrition facts in Tamil
  2. தேனின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Honey health benefits in Tamil
  3. தேனின் பக்க விளைவுகள் - Honey side effects in Tamil
  4. முக்கிய குறிப்புக்கள் - Takeaway in Tamil

தேன், எளிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரையை முக்கிய உட்பொருட்களாகக் கொண்டிருக்கிறது. அந்த சர்க்கரை, பெரும்பாலும் குளுகோஸ் மற்றும் ஃபுரூக்டோஸ் ஆக இருக்கிறது. தேனில் இருக்கின்ற ஃபுரூக்டோஸ் காரணமாக, சர்க்கரையோடு ஒப்பிடும் போது, தேன் அதிக இனிப்பாக இருக்கிறது. தேன், கொழுப்பு அற்றது மற்றும் கொழுப்பு சக்தி அற்றது. சர்க்கரை அதிகரிப்பு குறியீட்டில் தேன் குறைவான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது, தேனில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக உடைகின்றன மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பது இல்லை.

யு.எஸ்.டி.ஏ. ஊட்டச்சத்து தகவல் தளத்தின் படி, கீழேயுள்ள அட்டவணை, 100 கி தேனில் இருக்கின்ற ஊட்டச்சத்து அளவுகளைக் காட்டுகிறது.

 

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 17.1 கி
ஆற்றல் 304 கி.கலோரி
புரதம் 0.3 கி
கார்போஹைட்ரேட் 82.4 கி
நார்ச்சத்து 0.2 கி
சர்க்கரைகள் 82.12 கி
தாதுக்கள்  
சுண்ணாம்புச்சத்து 6 மி.கி
இரும்புச்சத்து 0.42 மி.கி
மெக்னீஷியம் 2 மி.கி
பாஸ்பரஸ் 4 மி.கி
பொட்டாசியம் 52 மி.கி
சோடியம் 4 மி.கி
துத்தநாகம் 0.22 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் பி2 0.038 மி.கி
வைட்டமின் பி3 0.121 மி.கி
வைட்டமின் பி6 0.024 மி.கி
வைட்டமின் பி9 2 மி.கி
வைட்டமின் சி 0.5 மி.கி
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Manamrit Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like stress, anxiety, and insomnia with good results.
Brahmi Tablets
₹899  ₹999  10% OFF
BUY NOW

ஊட்டச்சத்து அளிக்கும் மற்றும் குணமளிக்கும் நன்மைகள் என வரும்பொழுது, தேனை, திரவ தங்கம் எனப் பொருத்தமாக அழைக்கலாம். இப்பொழுது நாம் தேனின், அதனை ஒரு அற்புதமான உணவாக ஆக்குகின்ற, ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைப் பற்றிக் காணலாம்.

  • காயங்களை குணப்படுத்துகிறது: தேன், ஒரு இயற்கையான காயத்தைக் குணப்படுத்தும் காரணி ஆகும். அது, காயங்களின் திறப்பு, மூடுவதை மேம்படுத்துகிறது மற்றும் காயமான இடத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. தேனைத் தடவுவது, திறந்த காயங்கள் மற்றும் தீப்புண்களினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  • ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்துகிறது: தேனை நுகர்வது, ஆஸ்துமா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இருமலைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் விதத்தில், சளி அதீதமாக சுரப்பதைக் குறைக்கிறது. கூடவே தேன், சுவாசப் பாதைகளில் அழற்சியைக் குறைக்கிறது, அதன் மூலம், ஆஸ்துமா பிரச்சினைகளி ன் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • இரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது: தேன், குறைவான சர்க்கரை அதிகரிப்பு குறியீட்டெண்ணைக் (குறிப்பிடத்தக்க அளவில் இரத்த சர்க்கரையை அதிகரிப்பதில்லை) கொண்டிருக்கிறது, அதனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரைக்குப் பதிலாக ஒரு மிகச் சிறந்த மாற்றாக இருக்கிறது. சொல்லப் போனால், தேன் இன்சுலின் அளவுகளை அதிகரிப்பதன் மூலம், இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
  • வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது: தேன், வயிற்றின் உட்புற சுவர்களின் மீதான ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கிறது. அது மியூக்கோஸல் தடுப்பை மேம்படுத்துகிறது, அழற்சியைக் குறைக்கிறது மற்றும் இரைப்பை சளி சவ்வில்,  நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்வதைத்  தடுக்கிறது, அதன் மூலம், இரைப்பை புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தேன் உட்கொள்வது, குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பை குடல் அழற்சியையும் கூடத் தடுக்கிறது.
  • முடிகள் மற்றும் உச்சந்தலைக்கான நன்மைகள்: தேன், உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் மீது, வறட்சியைக் குறைத்து உங்கள் முடியைப் பளபளப்பாக மற்றும் நீளமாக ஆக்கக்கூடிய, ஒரு ஈரப்பதமூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் ஒரு விளைவினைக் கொண்டிருக்கிறது. மருத்துவரீதியான ஆய்வுகள், தேனைக் கொண்டு தொடர்ந்து மஸாஜ் செய்து வருவது, உச்சந்தவையில் ஏற்படும் பொடுகு, அரிப்புகள் ஆகியவற்றைக் குறைக்கிறது என்று சுட்டிக் காட்டுகின்றன.

இதயத்துக்காகத் தேன் - Honey for the heart in Tamil

இதயநாள நோய்கள் என்பவை, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களோடு தொடர்புடைய,  பரந்த அளவிலான பிரச்சினைகளை உள்ளடக்கியது ஆகும். உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் இதயநாள நோய்களோடு இணைந்திருக்கின்ற சில வழக்கமான அபாய காரணிகள் ஆகும். ஆய்வுகள், தேனில் உள்ள பாலிஃபெனோல்கள், இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயன்மிக்கதாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றன. இந்த பாலிஃபெனோல்கள், இரத்த உறைவு ( இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டியாகுதல்) மற்றும் இசிஸ்செமியா (இதய இரத்தக் குழாய்களில் சேதம்) ஆகியவை ஏற்படாமல் தடுக்கின்றன. மேலும், அவை இரத்தக் குழாய்களை விரிவடைய வைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

பாலிஃபெனோல்களைத் தவிர, தேன், வைட்டமின் சி, மோனோஃபெனோல்கள் மற்றும் ஃபுளோவோனாய்டுகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இந்த அனைத்து மூலக்கூறுகளும், தேனின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளுக்கு பொறுப்பானவையாக இருந்து, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன.

நீரிழிவுக்கான தேனின் நன்மைகள் - Honey benefits for diabetics in Tamil

தேன், நீரிழிவு நோயாளிகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற ஒரு தவறான பொது அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால் ஆய்வுகள், தேன், உண்மையில், நீரிழிவினை முறையாகக் கையாள உதவக் கூடிய ஒரு நீரிழிவு எதிர்ப்புக் காரணி எனத் தெரிவிக்கின்றன. பல்வேறு முன் மருத்துவ ஆய்வுகள், தேன் உட்கொள்வது, இன்சுலின் அளவுகளை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகின்றன. தேனில் இருக்கின்ற ஃபுரூக்டோஸ் அளவானது, தேனின் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்குக் காரணமாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

மற்றொரு ஆய்வின் படி, தேனில் உள்ள ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மைக்கு எதிராகத் திறன்வாய்ந்ததாக அதை ஆக்குகிறது, அதன் மூலம் இரத்தத்தில் அதிக சர்க்கரை (மிகை இரத்த சர்க்கரை) பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான திறனுள்ளதாக இருக்கிறது. தேன், சர்க்கரையுடன் ஒப்பிடும் பொழுது, குறைந்த சர்க்கரை அதிகரிப்பு குறியீட்டெண்ணைக் (ஜி.எல்) கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், தேன் இரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்க நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பதாகும்.

(மேலும் படிக்க: நீரிழிவு அறிகுறிகள்)

தேன் புற்றுநோயைத் தடுக்கிறது - Honey prevents cancer in Tamil

புற்றுநோய் என்பது, இயற்கையான உடல் செல்களின் அசாதாரணமான ஒரு பெருக்கம் ஆகும். அதனுடன் தொடர்புடையதாக, வாழ்க்கைமுறை (புகைப்பிடித்தல், மது), நாள்பட்ட வியாதிகள், அழற்சி அல்லது மரபணு ரீதியானது உட்பட, பல்வேறு அபாய காரணிகள் இருக்க இயலும். அதிசயமாக, இந்த அனைத்துக்கும் எதிரான ஒரு சிகிச்சையாகத் தேன் இருக்கிறது. தேன், கேட்டசின்கள், ஃபுளோவோனாய்டுகள், குவார்செட்டின் மற்றும் கீம்ப்ஃபெரோல் உட்பட, மிகவும் பிரபலமான புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுகளின் களஞ்சியமாக இருக்கிறது. மேலும் இந்தப் பட்டியல், முடிவானது கூட அல்ல.

ஆதாரங்கள் அடிப்படையிலான நிறைவை உண்டாக்கும் மற்றும் மாற்று மருத்துவம் என்ற நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, தேன், புற்றுநோய்க்கு எதிரான இயற்கையான ஒரு தடுப்பு மருந்து ஆகும். அது எவ்வாறு என்று இங்கே காணலாம்:

  • ஒரு ஆகிசிஜனேற்ற எதிர்ப்பியாக தேன், புற்றுநோய் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்ற அதீதமான உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை அழித்து ஒழிக்கின்றது. மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் மன அழுத்தம் ஆகியவை, உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் குவிவதற்கான, மிகவும் பொதுவான சில காரணிகள் ஆகும்.

  • தேன் மிகச் சிறந்த ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும். எனவே அது, நாள்பட்ட நோய்த்தொற்றுக்களை, அவை கட்டிகளாக அல்லது புற்றுநோயாக மாறாமல் தடுக்கிறது.

  • தேன், தோலின் சுவர்கள் (உட்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்  இரண்டும்) சேதமடைவதில் இருந்து தடுக்கும் விதத்தில், காயங்களையும் விரைவாகக் குணமாக்குகிறது. அதன் மூலம், புற்றுநோயாக மாறக் கூடிய முனைப்பை வெளிப்படுத்தும் நாள்பட்ட காயங்களைத் தடுக்கிறது.

  • நீண்ட கால அழற்சி, புற்றுநோயை ஏற்படுத்தும் மற்றொரு அபாய காரணி ஆகும். ஒரு அழற்சி எதிர்ப்புக் காரணியாக தேன், அந்த மாதிரி அழற்சிக்கள், புற்றுநோயாக மாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

தேன் கொழுப்பை அளவுகளைக் குறைக்கிறது - Honey reduces cholesterol in Tamil

அதிகரித்த கொழுப்பு அளவுகள், உடல் பருமன், மாரடைப்பு மற்றும் தமனித் தடிப்பு உட்பட, பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. தேன், உடலில் அதிக கொழுப்பு பிரச்சினை (உயர் கொழுப்பு) உள்ள நபர்களுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக அதனை ஆக்குகின்ற வகையில், கொழுப்புகள் அற்றதாக இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் கூடவே, அது உடலில் உள்ள அதிகமான கொழுப்பு அளவுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

அதிக கொழுப்பு அளவுகளைக் கொண்ட 38 நபர்களிடம் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், தேனை உட்கொள்வது, 30 நாட்களுக்குள், குறை அடர்த்திக் கொழுப்புகள் எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) மற்றும் ட்ரைகிளிசரைடை குறைக்கக் காரணமாகிறது என்று காட்டியது. 70 ஆண்களிடையே நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, 4 வார கால் அளவுக்கு, தினசரி 70 கி தேனை எடுத்துக் கொள்வது, எல்.டி.எல் அளவு மற்றும் மொத்தக் கொழுப்பு அளவைக் (டி.சி) குறைத்ததை சுட்டிக் காட்டியது. மேலும், எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) அளவில் ஒரு அதிகரிப்பும் கூட காணப்பட்டது. எனவே, உங்கள் கொழுப்பு அளவுகளைப் பற்றிய கவலை இன்றி, உங்கள் உணவுப்பொருட்களில் நிச்சயமாக நீங்கள் தேனை சேர்த்துக் கொள்ள முடியும்.

(மேலும் படிக்க: உயர் கொழுப்பு அறிகுறிகள்)

வயிற்றுப் பிரச்சினைகளுக்காகத் தேனின் நன்மைகள் - Honey benefits for stomach problems in Tamil

தேன், இரைப்பை அமைப்புக்காக எண்ணற்ற நன்மைகளைக் கொண்டிருக்கிறது. பாரம்பரியமாக தேன், செரிமானத்தை மேம்படுத்துவதற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஒரு ஆய்வு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று அழற்சியைக் (இரைப்பை குடல் அழற்சி) குணப்படுத்த, தேன் உதவக்கூடியது என்று காட்டியது. மேலும் அது, வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

குடல்களின் சுவர்களில் நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்வதைத் தடுப்பது, வழக்கமான வயிற்று நோய்த்தொற்றுக்களைத் தடுப்பதில் உதவிகரமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. சமீபத்திய ஆய்வுகள், உள்மூலக்கூறு சேதாரம் மற்றும் அழற்சி ஏற்படுத்தும் சைடோகைன்களைக் குறைப்பது, மற்றும் சளி தடுப்புக்களை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நடைபெறும், தேனின் புண்கள் எதிர்ப்புத் திறனை நிரூபிக்கின்றன.

மருத்துவ ஆய்வுகள், தேன், இரைப்பை உள் சவ்வில் (வயிற்றின் உட்புற சுவர்கள்) ஏற்படும் அபோப்டோசிஸ் -ஸைத்(செல்-இறப்பு) தடுப்பதன் மூலம், இரைப்பை புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கின்றன.

காயங்களைக் குணப்படுத்துவதற்காக தேன் - Honey for healing wounds in Tamil

வழக்கமாகக் காயங்கள், முறையாகக் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டால், குணமாவதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்ளாது. ஆனால், ஒரு தீவிரமான பாதிப்பின் காரணமாக ஏற்படுகிற காயங்கள், குணமாக அதிக நாட்களை எடுத்துக் கொள்ளும். ஆய்வின் அடிப்படையில் தேன், குறிப்பிடத்தக்க அளவில் காயங்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. 10 காயமடைந்த நபர்களிடைய நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, தேனை மேற்பூச்சாகத் தடவுவது குணமாகும் நடவடிக்கையில் கணிசமான முன்னேற்றத்தைக் கொடுப்பதைக் காட்டியது. மேலும் 80% அளவுக்கு வலி மற்றும் வீக்கமும் குறைந்து காணப்பட்டன. அதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தேனின் இந்த குணமளிக்கும் நன்மைகளின் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது, காயத்தை சுத்தமாக மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேலும், தோல் புத்துயிர் பெறுவதில், மற்றும் ஒரு மென்மையான மற்றும் இதமான தழும்பு மேற்பரப்பை உருவாக்குவதில் உதவுக் கூடிய, பைபிரின்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

மருத்துவரீதியான சான்றுகள், தேன், தீப்புண்களையும் குணப்படுத்துகிறது எனத் தெரிவிக்கின்றன. தீப்புண் காயங்களை உடைய 50 நபர்களுக்கு, தேனை மேற்பூச்சாகத் தடவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் முதல் வாரத்திலேயே, கணிசமான அளவு குணமடைந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வு, தேன் தடவுவது, அந்தக் காயங்களில் ஏற்படக் கூடிய நோய்த்தொற்று மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் வெளிப்படுத்தியது.

ஆஸ்துமாவுக்காக தேன் - Honey for asthma in Tamil

ஆஸ்துமா என்பது, சுவாசப்பாதைகள் குறுகலாக மாறி, சுவாசிப்பதை சிரமம் ஆக்கக் கூடிய ஒரு அழற்சி பிரச்சினை ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்கள், அடிக்கடி இருமல் (குறிப்பாக இரவு நேரங்களில்), மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்படுவார்கள். ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு சிகிச்சை அளிக்க, தேன் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன் மருத்துவ ஆய்வுகள், தேன், ஆஸ்துமாவின் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க, திறன்வாய்ந்ததாக இருக்கின்றன என்று சுட்டிக் காட்டுகின்றன. தேனை நுகர்வது, சளியை சுரக்கும் வேலையைக் கொண்ட கோப்ளேட் செல்களின் அதீதமான வளர்ச்சியைத் தடுக்க உதவக் கூடியது ஆகும்.

இதற்கும் மேலாக, தேன், ஆஸ்துமாவில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவிகரமாக இருக்கக் கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குகிறது. இருப்பினும், மனிதர்களிடையே இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள பாதுகாப்பை உறுதி செய்கின்ற, மருத்துவ ஆய்வுகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

ஹேங்ஓவருக்காக தேன் - Honey for hangover in Tamil

ஹேங்ஓவர் என்பது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் அசௌகரியமான அறிகுறிகளின் தொகுப்பைக் குறிக்கிறது. வழக்கான அறிகுறிகளில் அடங்கிய தலைவலி, குமட்டல், தலைசுற்றல், மற்றும் ஒரு நீர் வற்றிப்போதல் உணர்வு ஆகியவை, சிலநேரங்களில் 24 மணி நேரம் வரை நீடிக்கக் கூடும். ஆய்வுகள் தேன், அதீதமாக மது அருந்திய பின்னர் ஏற்படும் நச்சுத்தன்மைக்கு எதிரான விளைவுகளைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றன.

ஒரு முன் மருத்துவ ஆய்வு, தேனை வாய்வழியாக உட்கொள்வது, ஹேங்ஓவர் ஏற்படுவதைத் தடுக்க உதவக் கூடும் என நிரூபித்தது. தேனில் உள்ள ஃபுரூக்டோஸ் காரணமாக இந்த நன்மை ஏற்படுகிறது. இந்த சர்க்கரை, இரைப்பை பாதைக்குள் மது கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது மற்றும் மதுவை நமது உடலில் இருந்து நீக்க உதவுகிறது. இவ்வாறு ஹேங்ஓவர் அறிகுறிகளைக் குறைக்கிறது.

முடிகளுக்கான தேனின் நன்மைகள் - Honey benefits for hair in Tamil

தேன், மிகச் சிறந்த ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி மற்றும் ஈரப்படுத்தி ஆகும். அதாவது, அது உங்கள் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது மற்றும் உள்மூலக்கூறு சேதாரத்தைக் குறைக்கிறது. அதன் மூலம், உங்கள் முடிகளுக்கு ஒரு உயிரோட்டமான பளபளப்பைக் கொடுக்கிறது. ஒரு எமோல்லியண்ட்டாகத் தேன், உங்கள் உச்சந்தலை மற்றும் முடிகளுக்கு இதமளிக்கிறது மற்றும் அவற்றை மென்மையாக்குகிறது. மென்மையான மற்றும் பளபளப்பான முடிகளைப் பெற வீட்டிலேயே தயாரிக்கப்படும் தேன் முகத்திரையை விட சிறந்தது எது?

ஊறல் தலை அழற்சி என்பது, உச்சந்தலையை பாதிக்கின்ற ஒரு பிரச்சினை ஆகும். இதன் வழக்கமான அறிகுறிகளில், பொடுகு, செதில் போன்ற புள்ளிகள் மற்றும் சிவந்து போதல் ஆகியவை அடங்கும். ஆயினும், இந்தப் பிரச்சினை, முகம், நெஞ்சுப்பகுதி மற்றும் கண்புருவங்கள் போன்ற மற்ற பகுதிகளையும் கூட பாதிக்கக் கூடும். 30 நபர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, தேனைக் கொண்டு, ஒரு சில நிமிடங்களுக்கு உச்சந்தலையில் மசாஜ் செய்வது, ஒரு சில வாரங்களில் அரிப்பைத் தடுக்கவும் மற்றும் உச்சந்தலையில் இருந்து செதில்களை  நீக்குவதிலும் உதவக் கூடியது என்று தெரிவித்தது. மேலும் அது, முடி உதிர்வை மற்றும் சரும சிதைவுகளைத் தடுக்கவும் கூட உதவுகிறது. அந்த ஆய்வுக்குப் பிறகு, 6 மாதங்கள் வரை, வாரத்துக்கு ஒரு முறை தேனைத்  தடவுவதைத் தொடர்ந்த நபர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் சிகிச்சையின் முதல் மூன்று மாதங்களுக்குள், தேன் தடவுவதை நிறுத்தியவர்களுக்கு, பிரச்சினை மறுபடி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வில், வாரந்தோறும் தேன் தடவுவது, ஊறல் தலை அழற்சியின் அறிகுறிகளைக் குறைப்பதில் பயன்மிக்கதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரப்பட்டது.

  • தேன், உணவுக்குடலின் கிரகிக்கும் தன்மையை எதிர்க்கக் கூடியவை என்று கண்டறியப்பட்டு இருக்கும் ஃபுரூக்டோஸ்களை  அதிக அளவில் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான நபர்களுக்கு இது எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத போது, இரைப்பை கோளாறுகள் உள்ளவர்களுக்கு, அதன் அறிகுறிகளை மேலும் மோசமடையச் செய்யக் கூடும். நீங்கள் அது போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் தேனைத் தவிர்ப்பது அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவினை அறிந்து கொள்ள ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, மிகவும் நல்லதாகும்.

  • கிரயானோடாக்சின்கள் என்பவை, எரிகாசியயி தாவரக் குடும்பத்தை சேர்ந்த தாவரங்களில் காணப்படும் நரம்பு மண்டலத்துக்கு நச்சுத்தன்மை அளிக்கும் காரணிகள் ஆகும். அந்தத் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் தேன், இந்த நச்சுப்பொருளைக் கொண்டிருக்கிறது. அது, மதி கெடுக்கும் தேன் என அறியப்படுகிறது. அந்தத் தேனை உட்கொள்வது, குறை இரத்த அழுத்தம், இதயத்துடிப்பில் இடையூறு, குமட்டல், வியர்த்தல் மற்றும் தலை சுற்றலுக்கு வழிவகுக்கிறது.

  • ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட சிசுக்களுக்குத் தேன் புகட்டுவது,  அவர்களுக்கு போட்டிலிசம் ஏற்படக் காரணமாக் கூடும் எனப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை, ஒரு குழந்தைகளுக்கான உணவில் சேர்ப்பதற்கு அல்லது ஒரு சுவையூட்டும் காரணியாகக் கூட, குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது

Rosemary Essential Oil
₹399  ₹450  11% OFF
BUY NOW

தேன் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்பூட்டிகளில் ஒன்றாகும். அதில் இருக்கின்ற ஃபுளோவோனாய்டுகள். பாலிஃபெனோல்கள் மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் காரணமாக, அது எண்ணற்ற ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அது, புற்றுநோய், இரைப்பை கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்களைத் தடுக்க உதவக் கூடிய, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், காயங்கள் விரைவாகக் குணமடைய உதவக் கூடியவை ஆகும். அது, சர்க்கரையுடன் ஒப்பிடும் பொழுது, குறைவான இரத்த அதிகரிப்புக் குறியீட்டெண்ணைக் கொண்டிருப்பதால், நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 12 மாதங்களுக்கும் குறைவான வயதை உடைய குழந்தைகளுக்குத் தேன் எப்போதும் கொடுக்கப்படவே கூடாது. மேலும் தே னின் ஒரு சில வகைகள் நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கக் கூடும் என்பதால், எப்போதும் ஒரு நம்பத்தகுந்த விற்பனையாளரிடம் மட்டுமே வாங்க வேண்டும்.


Medicines / Products that contain Honey

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 19296, Honey. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Saeed Samarghandian, Tahereh Farkhondeh, Fariborz Samini. Honey and Health: A Review of Recent Clinical Research. Pharmacognosy Res. 2017 Apr-Jun; 9(2): 121–127. PMID: 28539734
  3. Obi CL, Ugoji EO, Edun SA, Lawal SF, Anyiwo CE. The antibacterial effect of honey on diarrhoea causing bacterial agents isolated in Lagos, Nigeria. Afr J Med Med Sci. 1994 Sep;23(3):257-60. PMID: 7604751
  4. Tahereh Eteraf-Oskouei, Moslem Najafi. Traditional and Modern Uses of Natural Honey in Human Diseases: A Review Iran J Basic Med Sci. 2013 Jun; 16(6): 731–742. PMID: 23997898
  5. Alnaqdy A, Al-Jabri A, Al Mahrooqi Z, Nzeako B, Nsanze H. Inhibition effect of honey on the adherence of Salmonella to intestinal epithelial cells in vitro. Int J Food Microbiol. 2005 Sep 15;103(3):347-51. PMID: 16099316
  6. Almasaudi SB et al. Antioxidant, Anti-inflammatory, and Antiulcer Potential of Manuka Honey against Gastric Ulcer in Rats. Oxid Med Cell Longev. 2016;2016:3643824. PMID: 26770649
  7. Aida Ghaffari, Mohammad H Somi, Abdolrasoul Safaiyan, Jabiz Modaresi, Alireza Ostadrahimi. Honey and Apoptosis in Human Gastric Mucosa. Health Promot Perspect. 2012; 2(1): 53–59. PMID: 24688918
  8. Kumari K. Vijaya, K. Nishteswar. Wound healing activity of honey: A pilot study. Ayu. 2012 Jul-Sep; 33(3): 374–377. PMID: 23723644
  9. Nurfatin Asyikhin Kamaruzaman, Siti Amrah Sulaiman, Gurjeet Kaur, Badrul Yahaya. Inhalation of honey reduces airway inflammation and histopathological changes in a rabbit model of ovalbumin-induced chronic asthma. BMC Complement Altern Med. 2014; 14: 176. PMID: 24886260
  10. Al-Waili NS. Therapeutic and prophylactic effects of crude honey on chronic seborrheic dermatitis and dandruff. Eur J Med Res. 2001 Jul 30;6(7):306-8. PMID: 11485891
  11. Otilia Bobiş, Daniel S. Dezmirean, Adela Ramona Moise. Honey and Diabetes: The Importance of Natural Simple Sugars in Diet for Preventing and Treating Different Type of Diabetes. Oxid Med Cell Longev. 2018; 2018: 4757893. PMID: 29507651
  12. Health Harvard Publishing, Updated: March 14, 2018. Harvard Medical School [Internet]. Glycemic index for 60+ foods. Harvard University, Cambridge, Massachusetts.
  13. Majid M, Younis MA, Naveed AK, Shah MU, Azeem Z, Tirmizi SH. Effects of natural honey on blood glucose and lipid profile in young healthy Pakistani males. J Ayub Med Coll Abbottabad. 2013 Jul-Dec;25(3-4):44-7. PMID: 25226738
  14. Suze A. Jansen et al. Grayanotoxin Poisoning: ‘Mad Honey Disease’ and Beyond. Cardiovasc Toxicol. 2012 Sep; 12(3): 208–215. PMID: 22528814
  15. Tanzi MG, Gabay MP. Association between honey consumption and infant botulism. Pharmacotherapy. 2002 Nov;22(11):1479-83. PMID: 12432974
Read on app