இமைப்படல அழற்சி - Conjunctivitis in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 23, 2018

March 06, 2020

இமைப்படல அழற்சி
இமைப்படல அழற்சி

இமைப்படல அழற்சி என்றால் என்ன?

இமைப்படல அழற்சி என்பது கன்ஜங்டிவாவில் ஏற்படும் அழற்சி அதாவது கண்ணின் வெண்மைப்பகுதி மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுக்களான கோடுகளில் ஏற்படும் அழற்சியாகும். இமைப்படல அழற்சி பொதுவாக குழந்தைகளில் காணப்படும் நிலைமை மேலும் இது தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கும் பரவக்கூடியது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

இமைப்படல அழற்சியின் அறிகுறிகள் பின்வருமாறு:

 • பாதிக்கப்பட்ட கண்ணின் வெள்ளைப் பகுதி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுதல்.
 • அதிகரித்த கண்ணீர்.
 • கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு.
 • அதிகப்படியான சளி வெளியேற்றம்.
 • கன்ஜங்டிவா/இமையிணைப்படலம் மற்றும் கண் இமைகளில் உண்டாகும் வீக்கம்.
 • கண்களில் எரிச்சல்.
 • கண்ணில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு.
 • பார்வையில் ஏற்படும் இடையூறு.
 • வெளிச்சத்திற்கு உணர்திறன்.
 • காலையில் விழித்தவுடன் கண் இமைகளில் ஏதோ பசை போன்ற பொருள் ஒட்டி இருத்தல்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இமைப்படல அழற்சி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் சுற்றுச்சூழலில் உள்ள நோய்தொற்று, ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டிகளே ஆகும்.

 • நோய்தொற்று பொதுவாக வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களாலாலேயே ஏற்படுகின்றது அதாவது ஸ்டாஃபிலோகாக்கஸ், கிளமிடியா மற்றும் கானாக்காக்கஸ் போன்றவைகள்.
 • பூச்சிகள், பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்படும் உடல் தொடர்பு மற்றும் மாசுபட்ட கண் அழகுசாதன  பொருட்கள் ஆகியவற்றால் நோய்தொற்று பரவுகிறது.
 • மகரந்தம், தூசிப் பூச்சிகள், விலங்குகளின் முடிகள் / இறகுகள் ஆகியவற்றின் வெளிப்பட்டு, கடினமான அல்லது மென்மையான காண்டாக்ட் லென்ஸ்களை மாற்றாமல் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துதல் போன்றவகைளாலேயே பொதுவாக ஒவ்வாமை ஏற்படுகின்றது.
 • மாசுபாடு (புகை, உமிழ்வுகள், முதலியன), குளங்களில் உள்ள குளோரின் மற்றும் நச்சு தன்மையுடைய இரசாயனங்கள் போன்றவையே பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த எரிச்சலூட்டிகள் ஆகும்.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

மருத்துவம் சார்ந்த வரலாறு, அடையாளங்கள், அறிகுறிகள் மற்றும் கண் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில், கண் மருத்துவரால் இமைப்படல அழற்சி நோயை கண்டறியமுடியும். பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தல், இமையிணைப்படலம், வெளிப்புற கண் திசு மற்றும் கண்ணின்  உட்புற அமைப்புகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்தல் போன்றவைகள் கண் பரிசோதனையில்  உள்ளடங்குகிறது. வழக்கமாக, இந்த கண்ணின் நிலை நான்கு வாரங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும். ஒருவேளை இந்த நோய்த்தொற்று நீடித்திருந்தாலோ அல்லது சிகிச்சைக்கு ஏற்ற பலன் கிடைக்காதப்போதோ, ஒரு ஸ்வாப்ஸ் உதவியால் மாதிரி (இங்கு சளியின் மாதிரி திரவம் / வெளியேற்றம் சேகரிக்கப்படும்) எடுக்கப்படுவதோடு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

இமைப்படல அழற்சிக்கான சிகிச்சை அதன் காரணிகளை பொறுத்ததே ஆகும். பாக்டீரியா நோய் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்த சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது, ஆனால் இந்த சொட்டு  மருந்து வைரல் நோய் தொற்றுக்கு கொடுக்கப்படுவதில்லை. வைரல் நோய்த்தொற்றுகள் வழக்கமாக அதன் போக்கிலேயே செயல்படும். குளிர்ந்த பொருள் கொண்டு ஒத்தடம் கொடுத்தல் மற்றும் செயற்கை கண்ணீர் போன்றவைகள் இதன் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் இமைப்படல அழற்சிக்கு ஆண்டிஹிச்டமின்கள் மற்றும் கண்சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இமைப்படல அழற்சி ஏற்பட்டிருக்கும் போது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பின்வரும் வழிகளில் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிப்படையாமல் நீங்கள் பாதுகாக்கலாம்:

 • உங்களது பாதிக்கப்பட்ட கண் /கண்களை தொடுதல் கூடாது.
 • கைகளை முறையாக கழுவுதல் வேண்டும்.
 • துண்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை பகிர்தலைத் தவிர்த்தல் வேண்டும்.மேற்கோள்கள்

 1. Prashant V Solanke, Preeti Pawde, Valli P. Prevalence of Conjunctivitis among the Population of Kanyakumari District. Volume 4, Issue 7; July 2017. ISSN: 2393-915X.
 2. Indian journal of medical microbiology. Infections of the ocular adnexa, ocular surface, and orbit. Indian Association of Medical Microbiologist. [internet].
 3. American Optometric Association. Conjunctivitis. St. Louis, Missouri. [internet].
 4. Centre for Health Informatics. [Internet]. National Institute of Health and Family Welfare About Conjunctivitis (Pink Eye)
 5. National Health Portal. Seasonal Allergic Conjunctivitis. Centre for Health Informatics; National Institute of Health and Family Welfare

இமைப்படல அழற்சி டாக்டர்கள்

Dr. Meenakshi Pande Dr. Meenakshi Pande Ophthalmology
22 वर्षों का अनुभव
Dr. Upasna Dr. Upasna Ophthalmology
7 वर्षों का अनुभव
Dr. Akshay Bhatiwal Dr. Akshay Bhatiwal Ophthalmology
1 वर्षों का अनुभव
Dr. Surbhi Thakare Dr. Surbhi Thakare Ophthalmology
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

இமைப்படல அழற்சி க்கான மருந்துகள்

இமைப்படல அழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।