உணவிற்கு அடிமை - Food Addiction in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

March 06, 2020

உணவிற்கு அடிமை
உணவிற்கு அடிமை

உணவிற்கு அடிமையாதல் என்றால் என்ன?

உணவிற்கு அடிமையாதல் என்பது தீவிரமான பிரச்சனையாகும் அதாவது ஒரு தனிநபர் அவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகளவு உணவை உண்பதாகும் அதாவது மிகையான உணவிற்கு அந்த நபர் அடிமையானவர் என்று அர்த்தம். உணவிற்கு அடிமையாதல் உளவியல் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்கக்கூடியது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளாவன:

  • ஒரு நபர் அவரின் உடல் அசௌகாரியத்தை உணரும் வரையிலோ அல்லது நோயுறும் வரையிலோ சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்.
  • ஒரு நபருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு கிடைக்கவில்லை என்றால், ஓய்வின்மை, எரிச்சல் மற்றும் சமூகத்திலிருந்து விலகி இருப்பது போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்துவார்.
  • அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் சோர்வு காரணமாக ஒரு நபரின் ஒட்டுமொத்த செயல் திறனும் குறைந்துபோகிறது. உடல் பருமனாகக்கூடிய அறிகுறிகளும் தோன்றலாம்.
  • உணவு பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அவர்களின் உணவினை மறைத்து வைத்திருப்பர் அல்லது ஒரு குறிப்பிட்ட உணவை உண்பதற்கு பல சாக்குகளை கூறுவார்.
  • உணவு முறை திட்டத்தை பராமரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் இந்த குறைபாடு காரணத்தினால் அந்த திட்டத்தில் அவர்கள் தோல்வியடைவார்கள் அல்லது குறிப்பிட்ட அளவுக்கு மீறி சாப்பிடுவது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் வரை உணவு உண்ணாமல் இருப்பது போன்றவற்றையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பார்கள்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

உணவிற்கு அடிமையாதலின் முக்கிய பல காரணங்கள் உண்டு மேலும் ஒரு நபரின் உணவு பழக்கத்தின் விளைவுகள் சில வழிகளிலோ அல்லது மற்ற வழிகளிலோ இதற்கு காரணமாகிறது.

  • உளவியல் காரணிகளை வைத்து பார்த்தால், சமூகத்திடமிருந்து விலகியிருப்பது, குடும்ப சூழ்நிலை அல்லது தனிமை போன்ற உளவியல் காரணங்களுக்காக ஒரு நபர் அவரின் திருப்தி அல்லது மகிழ்ச்சிக்காக உணவிற்கு அடிமையாகிறார்.
  • உடற்கூறு காரணிகளை வைத்து பார்க்கையில், தவறான வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை, மூளையின் வடிவத்தில் உள்ள அசாதாரணங்கள் அல்லது சில மருந்துகள் போன்ற சில உயிரியல் காரணங்களாக இதற்கு காரணமாக இருக்கலாம்.
  • எனவே, உணவிற்கு அடிமையாதலுக்கு மனநல பிரச்சனைகளின் அல்லது மற்ற உடல்நலத்தின் விளைவாகவோ இருக்கலாம். சில நேரங்களில், இதற்கு இரண்டுமே காரணங்களாக இருக்கலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

இந்த நிலைமையை பற்றி கண்டறியும் வழிமுறைகள்:

  • நோயாளி தனக்கு இந்த பிரச்சனை உள்ளது என ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் போது உணவு அடிமையானதைப் பற்றி கண்டறிவது தொடங்குகிறது. இது ஒரு தீவிரமான பிரச்சனை என்றும் இதற்கு சிகிச்சை வேண்டுமென்றும் நோயாளி உணர்ந்தால் மட்டுமே மருத்துவர் அல்லது மனநல மருத்துவரால் இதில் தலையிட முடியும்.
  • நோயாளியின் நடத்தை மற்றும் மற்ற அறிகுறிகளின் அடிப்படையில், உணவுக்கு அடிமையாதல் கண்டறியப்படுகிறது. இந்த நிலைமையை அறிந்துகொள்ள உறுதியான மற்றும் தேவையான பரிசோதனைகள் இல்லை, என்றாலும் இது சில நேரங்களில் சில சிகிச்சை முறைகள் உபயோகிக்கப்படலாம்.

இந்த நிலைமையின் சிகிச்சைகளாவன:

  • உணவிற்கு அடிமையாதலின் சிகிச்சைகள் மற்ற சிகிச்சைகளிடமிருந்து வேறுபட்டிருக்கும் அந்த விதத்தில் ஒரு தனிமனிதனுக்கு உயிர்வாழ்வதற்கு தேவையான உணவினை முழுமையாக கொடுக்காமல் தவிர்க்க முடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
  • இந்த பிரச்சனைக்கு உயிரியல் காரணம் என அறியப்பட்டால், சில மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் சிகிச்சை அளிக்கப்படும்.
  • நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும் மற்றும் அவருக்கு உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்படும்.
  • கொழுப்பு மற்றும் சோம்பலை குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்.
  • உணவுமுறை மாற்றங்கள் உட்பட சாப்பிடுவதற்கு ஒரு நிலையான நேரத்தை பின்பற்ற வேண்டும், ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து விலகி இருத்தல் வேண்டும் மற்றும் அதிகமாக உணவு உண்ணுதலை தவிர்க்க வழக்கமாக உண்ணும் உணவின் அட்டவணையை தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.



மேற்கோள்கள்

  1. The Journal of Nutrition. Food Addiction in Humans. Oxford University Press. [internet].
  2. Science Direct (Elsevier) [Internet]; Food Craving and Food “Addiction”: A Critical Review of the Evidence From a Biopsychosocial Perspective
  3. Science Direct (Elsevier) [Internet]; Refined food addiction: A classic substance use disorder
  4. Dimitrijevic I, Popovic N, Sabljak V, Skodric-Trifunovic V, Dimitrijevic N. Food addiction-diagnosis and treatment.. Psychiatr Danub. 2015 Mar;27(1):101-6. PMID: 25751444
  5. Volkow ND, Wang GJ, Tomasi D, Baler RD. Pro v Con Reviews: Is Food Addictive?. Obes Rev. 2013 Jan;14(1):2-18. PMID: 23016694

உணவிற்கு அடிமை க்கான மருந்துகள்

Medicines listed below are available for உணவிற்கு அடிமை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.