பூஞ்சை தொற்று - Fungal Infections in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

July 10, 2017

March 06, 2020

பூஞ்சை தொற்று
பூஞ்சை தொற்று

சுருக்கம்

பூஞ்சை தொற்றுக்கள் மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் ஒன்றாகும், இது உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கின்றது.பூஞ்சை தொற்று, பூஞ்சை என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால்  ஏற்படுகிறது. சேற்றுப்புண், வாய்ப்புண், பிறப்புறுப்பு பகுதியில் நமைச்சல், படை மற்றும் டினீயா வேர்சிகலர் ஆகியவை பொதுவாக நிகழும் பூஞ்சை நோய்த்தொற்றுகள் சிலதாகும் . தொற்று என்பது மிதமாக (மேலாக) அல்லது கடுமையாக(உள்புறமாக) இருக்க கூடும். மேலாகவுள்ள பூஞ்சை தொற்றுகளின் பொதுவான அறிகுறிகள் அரிப்பு, தோல் நிறத்தில் மாற்றங்கள் மற்றும் தோல் செதில் போல் உருவாகுவது ஆகியவை ஆகும் . உட்புற பூஞ்சை தொற்றுக்கள் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று போன்ற அறிகுறிகளை  உருவாக்கின்றன. உட்புற பூஞ்சை தொற்றுக்கு மருத்துவ பரிசோதனை மூலம் நோயறிதல் நிர்வகிக்கப்படுகிறது. மேலாகவுள்ள பூஞ்சை நோய்த்தொற்றுகள் அதிக பாதிப்பில்லாதவை மற்றும் எளிதில் சிகிச்சையளிக்ககூடியவை; ஆனால் ​​பொதுவாக உட்புற பூஞ்சை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம். மேலாகவுள்ள பூஞ்சைக்கு எளிய சிகிச்சையாக நோய்த்தொற்றுகளில் ஒரு அண்டி-பங்கள் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்)கிரீம் பயன்பாடாக இருக்ககூடும் .உட்புற பூஞ்சை நோய்த்தொற்றுகளுக்கு வாய்வழி மற்றும் நரம்பு மூலம் செலுத்தும் மருந்துகள் தேவைப்படலாம்

பூஞ்சை தொற்று என்ன - What is Fungal Infections in Tamil

பூஞ்சை பொதுவாக காற்று, மண், தண்ணீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும். பூஞ்சை தொற்றுகள் இயற்கை சுற்றுப்புறத்தை அதிகம் பாதிக்கின்றன, இவை தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டிற்கும் பொதுவானவை. நோயெதிர்ப்பு  அமைப்பு பூஞ்சையால் ஆக்கிரமிக்கப்பட்டு அதை எதிர்கொள்ள  முடியாதபோது மனிதர்கள் பூஞ்சைகளால் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில், பூஞ்சை தொற்று காரணமாக  உடலில் மற்றொரு பதிக்கப்படாத  பாகத்தில்  ஒவ்வாமை எதிர்வினை ஏற்படலாம்.உதாரணமாக, கால் மீது ஒரு பூஞ்சை தொற்று பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்படாத என்ற கைகளில் அல்லது விரல்களில் ஒரு ஒவ்வாமை வேனர்கட்டி ஏற்படலாம். பூமியில்  சுமார் 2 மில்லியன் பூஞ்சை இனங்கள் உள்ளன, அதில் 600 க்கும் மேற்பட்ட நோய்கள் விளைவிக்கக்கூடியவை.

பூஞ்சை தொற்று காரணங்கள் என்ன - Causes of Fungal Infections in Tamil

காரணங்கள்

நோயெதிர்ப்புசக்தி குறைவாக உள்ள நபருடன் பூஞ்சை தொடர்பில் வரும்போது, நோயெதிர்ப்பு அமைப்பினால் அதனை எதிர்த்து போராட இயலாமல் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பூஞ்சை வித்திகள் காற்று வழியாக எளிதில் பயணிக்கின்றன, அதை சுவாசித்தாலே தொற்றுநோய்கள் வந்துவிடும்.

பூஞ்சை தொற்று சிகிச்சை - Treatment of Fungal Infections in Tamil

எல்லா பூஞ்சைதொற்றுகளுக்கும் பூஞ்சை-எதிர்ப்பு  மருந்துகள் தான் நிரந்தரமான தீர்வு, சில பூஞ்சை தொற்றுக்கள் சிறியதாக இருக்கும் அவை மருந்துகள் எடுக்காவ்விட்டால், கூடவோ-கூரயவோ செயல்லாம்,ஆனால் ஆழமான பூஞ்சை தொற்று ஆபத்தாக கூடும். அதன் சிகிச்சையில் பல வகை உண்டு,சிலவற்றுக்கு பாதிக்கபட்ட இடத்தில் மருந்து தடவினால் போதும் அனால் சிலவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். அதை சரியாக கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்,மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் எடுக்ககூடாது.

பூஞ்சை தொற்றுக்கு சில பொதுவான சிசிச்சை முறைகள் கீழ்கண்டவை ஆகும்:

பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்
தொற்றின் தீவிரத்தை பொருத்து மேற்பூச்சு,வாய்வழியாக  அல்லது ஊசி மூலமாகவொ பூஞ்சை எதிர்ப்பிகள் மருந்துகள் குடுக்கபடும். பூஞ்சை எதிர்ப்பிகள் மருந்துகள் பூஞ்சையின் அணு சுவர்களை தகர்த்து, அணுக்களை அழித்து விடுகின்றன.அவை பூஞ்சயின் இனபெருக்கத்தேயும் கட்டுபடுத்தும்.பல வகையான பூஞ்சை எதிர்பான்கள் சந்தையின் கிடைக்கின்றன ,உதாரணமாக போலின்,டுபுளின் டிஸ்ரப்டர்,அசோல்ஸ்,அளிலாமின்,பிரிமிடின் அனலாக் மற்று எக்கிநோகாண்டின்  

கோர்டிகோஸ்டீரோயட்ஸ்
1950 முடிவிலுருந்து  கோர்டிகோஸ்டீரோயட்ஸ் அல்லது ஸ்டீரோயட்ஸ் எனப்படும் மருந்துகளை இந்த தொற்றின் சிகிச்சைக்காக பயன்படுத்திவருகின்றனர். ஹயிட்ரோகோர்டிசொன்,பீடாமித்தசொன், க்லோபிடசொல், க்லோபிடசொன்/க்லோபிடசொல்,டைப்ளுகோர்டோலோன் மற்றும் ப்ளுசிநோலோன் ஆகியவை தோலில் மேற்பூச்சுக்குரிய கோர்டிகோஸ்டீரோயட்ஸ் ஆகும். ப்றேட்னிசொலோன், ப்றேட்னிசொன், மீதையில்ப்றேட்னிசொலோன், டேக்சாமீதாசொன் ஆகியவை ஊசியால் குடுக்கப்படும் கோர்டிகோஸ்டீரோயட்ஸ் ஆகும். பிக்லோமீதசொன்,ப்ளுடிகசொன்,புடிசொனயிட்,மொமீடசொன் அண்ட் சிஸ்லிசொனயிட் இவை சுவாசிக்கும் மருந்துகள்

மூச்சுக்குழாய் தமனி எம்போலிசேஷன்
ஹிமொப்டிசிஸ் எனப்படும் இரத்தச் இருமல் நோய், மிகவும் கடுமையான பூஞ்சை தொற்று நோயாகும், இதனை  குணப்படுத்துவதற்கு நோயாளியின் மூச்சுக்குழாய் தமனி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மிதமானதிலுருந்து இருந்து கடுமையானதக இருக்கும். மிதமான பாதிப்பு என்றால் நோயாளிகளுக்கு வாய்வழி மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது , அதே நேரத்தில் கடுமையான நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு இரத்தமாற்றம் செய்யலாம். தீவிரமான சந்தர்ப்பங்கள் சிகிச்சையளிப்பது கடினம், பெரும்பாலும் இதன் விளைவு கணிக்க முடியாதவை. பல்வேறு பக்க விளைவுகள் மற்றும் நிலைமை மோசமாகுவதை கட்டுபடுத்த விரைவான,தொடர் கவனிப்பு மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவை அவசியம்

நோய்தடுப்பாற்றல் சிகிச்சை
ஆக்கிரமிப்பு பூஞ்சை தோற்று என்றால்,நோயாளியின் நோய் எதிர்ப்புசக்தி மிகவும் பாதிக்கப்படும். பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள்கள் இருந்தும் கூட இறப்புவிதம் 40% மாக உள்ளது.நோய்தடுப்பாற்றல் சிகிச்சை, ஆக்கிரமிக்கும் பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்து நோயாளியின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 • வெள்ளை இரத்த அணுக்கள்(WBC)  மாற்றுதல்
  இவை நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கும் உதவும். எவ்வாறாயினும், அனால் மாற்றத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் தரம் முக்கியமானதாகும். இவை,நுண்ணுயிர் எதிர்ப்பிகளால்  எளிதில் கட்டுப்படுத்த முடியாத கடுமையான தொற்றுநோய்களின் முன்னேற்றத்தைக் இந்த மாற்றங்கள் கட்டுப்படுத்த உதவுகின்றன.
 • க்ரானுலோசிட் கோலோனி தூண்டுதல் காரணி-
  இந்த சிகிச்சை எலும்பு மஜ்ஜினால் WBC களின் உற்பத்தி தூண்டுகிறது, இதன் விளைவாக நோய் எதிர்ப்பு அமைப்பின் மற்ற பாகங்களும் மேம்படுத்துகின்றன
 • காமா இண்டர்ஃபெரன்
  காமா இண்டர்ஃபெரன் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் நுட்பத்தை அதிகரிக்கிறது அவற்றின் பூஞ்சை அழிக்கும் திறன் மேம்படுத்தும்.

அறுவை சிகிச்சை
மற்ற எல்லா சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்றால் தீவிரமான பூஞ்சை தொற்றுகளுக்கு அறுவை சிகிச்சை தேவை படலாம்

மூளை

 • க்ரானுலோமா அல்லது சிப்டோகோகோம்மா
  தோற்று கட்டியாக இருந்தால் நோயாளிகள் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டு அதை அகற்ற வேண்டும், குறிப்பாக அந்த கட்டி திங்கு விளைவிப்பதாக  இருந்தால்.கூடுதல் காலமாக பூஞ்சை எதிர்ப்பிகள் சிகிச்சை எடுதுகொபவர்களுக்கு அந்த உயிரினம் அதை ஏற்றுகொண்ட  நிலையான கட்டத்தில் இருக்கலாம், அதனால் அந்த சிகிச்சை பலனளிக்காது, அப்பொழ்து அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்
 • செரிபெரல் அப்ச்செச்ஸ் (பெருமூளை அடைப்பு)
  சீழ்கட்டியின் இடத்தை பொருத்து ஸ்டீரியோடாக்டிக் (குறிப்பிட்ட இடத்தில்) வடிகால் அல்லது அந்த சீழ்கட்டியை முழுவதுமாக அகற்றுவது

கண்கள்

 • எண்டோஃதால்மிடிஸ்
  பூஞ்சை எண்டோப்தால்மிட்டிஸின் (கண்க்குழி வீக்கத்தினால்) உள்ளிருக்கும்  நுண்ணுயிரிகள் மற்றும் கசடுகள் அகற்றுவதற்கு ஒரு விக்ரெட்டோமெடிமி பரிந்துரைக்கப்படுகிறது.
 • கேரடிடிஸ்
  50% க்கும் அதிகமான நோயாளிகளுக்கு  பூஞ்சை எதிர்ப்பிகளின் சிகிச்சைக்கு பலனளிக்காத காரணத்தினால், ஆழமான விழி புண்கள் இருந்தால் அதற்க்கு  ஒரு அறுவை சிகிச்சை பொதுவாக பரிந்துரைக்கப் படுகின்றது.

மூக்கு

தீவிர சயின்ஸ் பிரச்சனைக்கு, அறுவை சிகிச்சை- எல்லா ஒவ்வாத சளியும், பூஞ்சை கசடுகள் மற்றும் முக்கின் சிறு கட்டிகளை அகற்றி அடியிலிருக்கும் சளிசவ்வை பாதுகாக்கிறது

 • சைனசின் பூஞ்சை பந்து
  சைனசின் பூஞ்சை பந்தை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றி நோயை குனபடுத்த அதிக வாய்ப்புள்ளது. அவ்வப்போது உள்-ஆக்கிரமிப்பை தடுக்க பூஞ்சை எதிர்ப்பி சிகிச்சை குடுக்கப்படும்

காது
காதுகளின் பூஞ்சை நோய்தொற்று சரிசெய்வத்ற்கு பெரும்பாலும் சேதமடைந்த திசுக்களை எலும்பு வரை அகற்ற வேண்டும் இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் முழுமையாக கேட்க்கும் திறனின்  இழப்பு ஏற்படலாம்

நுரையீரல்

 • ஊடுருவும் நுரையீரல் ஆஸ்பெர்ஜிலோசஸ் தமநிகளிலுருந்து அதிக இரத்த கசிவின் அபாயம் இருந்தால் உயிரை காப்பாற்ற இருந்தால் அவசர அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.  
 • அச்பெர்கில்லோமா மற்றும் குரோனிக் பல்மோனரி அச்பெர்கில்லோசிஸ்
  ஒரு அறுவை சிகிச்சை, நோயின் தீவிரத்தை குறைத்து, மேலும் சிக்கல்கள் தடுத்து உயிர் பிழைக்கும் விகிதத்தை அதிகபடுத்தும்.

இதயம்

 • பெரிகார்டிடிஸ்(இதயத்தை சுற்றி இருக்கும் சவ்வின் வீக்கம்)
  பெரிகார்டியல் கட்டுப்பாட்டு விஷயத்தில், பெரிகார்டியேக்டோமி அல்லது பெரிகார்டியத்தின் ஒரு பகுதியை அகற்றுவது அவசியம். ஒரு அறுவை சிகிச்சை நடத்தப்படும் முன்னர் தொற்றுநோய் கட்டுப்படுத்த வடிகால் செய்ய வேண்டும்
 • எண்டோகார்டிடிஸ் தொற்றுக்கள்
  இதக்கு அறுவை சிகிச்சை மிகவும் சிறந்த சிகிச்சை முறையாகும் ,அதை விரைவில் செய்தல் மிகவும் நல்லது. சிக்கல்கள் வந்துவிட்டால் அதிலிருந்து விடுபடுவது கடினம் 
   
 • செயர்க்கை இதய மின்னியக்கி மற்றும் கார்டியோவேர்ட்டர் - டிஃபிபிரிலேட்டர் கம்பி தொற்று: இந்த நிலையில், கம்பி பிரித்தெடுத்தல் செய்து ஸ்டெர்னோடமி மற்றும் கார்டியோபல்மோனரி பைபாஸ் அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டும்

எலும்பு

 • மார்பெலும்பு பொன் தொற்று
  இந்த வகை தொற்றில், பாதிக்கப்பட்ட பகுதியில் கம்பிகள் அகற்றுவதற்காக ஒரு அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. அறுவைசிகிச்சை தொடர்ந்து ஒரு பூஞ்சை எதிர்ப்பிகள் சிகிச்சை செய்யபடுகிறது
   
 • முதுகெலும்பு தொற்று
   எலும்பின் இந்த தொற்றை சரி செய்வதற்கு அறுவைசிகிச்சை மூலம் கசடை அகற்றவேண்டும். நிலைமையை பொருத்து எலும்பு போர்த்துதல் தேவை படலாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

சில வாழ்க்கை முறைகளில் பூஞ்சை உட்பட சுற்றுச்சூழல் நோய்பரப்பிகள் அகிகம் எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. நீங்கள் பூஞ்சை நோய்த்தொற்றுகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், தோட்டம் அல்லது பச்சைக் குத்துவது  போன்ற அவர்கள் வேலை காரணமாகலாம், வேலை மாற்றம் ஒரு தீர்வை வழங்கலாம். நோயாளிகளுக்கு அடிக்கடி ஒவ்வாமை இருப்பதற்கு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பொருந்தும் சீதோஷ்ண இடத்திற்கு மாற பரிந்துரை செய்வார்கள். பூஞ்சை நோய்த்தொற்றுகளில் வாழ்க்கை முறையானது முக்கிய பங்கு வகிக்கவில்லை என்றாலும், வாழ்க்கைமுறை சரிசெய்தால் தொடர்ச்சியாக வரும்  ஒவ்வாமை நோய்களைத் தவிர்க்க முடியும்மேற்கோள்கள்

 1. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. What you need to know about fungal infections
 2. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections.
 3. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. Overview of Fungal Infections
 4. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Invasive.
 5. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Allergic.
 6. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Chronic.
 7. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Mucosal Infection.
 8. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Skin, Nails and Hair.
 9. British Association of Dermatologists [Internet]. London, UK; Fungal Infections of nails.
 10. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Diagnosing fungal infections.
 11. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Dermatoscopy for Skin, Nails and Hair.
 12. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Laboratory.
 13. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Imaging.
 14. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Allergy testing.
 15. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Skin testing.
 16. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Introduction to treatment.
 17. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Antifungal agents.
 18. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Corticosteroids.
 19. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Embolisation.
 20. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Immunotherapy.
 21. Leading International Fungal infections [internet]. Fungal Infection Trust; Fungal Infections: Surgery.
 22. Sipsas NV, Kontoyiannis DP. [Internet]. Infectious Diseases Unit, Dept. of Pathophysiology, Laikon General Hospital and Medical School, National and Kapodistrian University of Athens, Athens, Greece. Occupation, lifestyle, diet, and invasive fungal infections..Infection. 2008 Dec;36(6):515-25. PMID: 1899805

பூஞ்சை தொற்று டாக்டர்கள்

Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Alok Mishra Dr. Alok Mishra Infectious Disease
5 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

பூஞ்சை தொற்று க்கான மருந்துகள்

பூஞ்சை தொற்று के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page

translation missing: ta.lab_test.test_names