இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு - Iron Poisoning in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

December 31, 2020

இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு
இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு

இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு என்றால் என்ன?

ஒருவர் வழக்கமாக ஒரு குறுகிய நேரத்திற்குள், இரும்புச் சத்து நிறைந்தவற்றை அதிகமாக உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்து அதிக அளவில் சேர்ந்து இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு ஏற்படுகிறது. இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு பெரியவர்களை விட குழந்தைகளிடத்தில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

  • இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள் வயிற்றுப் பிடிப்பு மற்றும் இரைப்பை அசௌகரியம் ஆகும்.
  • அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்தவற்றை உட்கொண்டவருக்கு கறுப்பு நிற மலம் அல்லது மலத்தில் இரத்தம் இருக்கும்.
  • இதன் பிற ஆரம்ப கால அறிகுறிகள் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் கடுமையான வாந்தி ஆகும்.
  • இந்த ஆரம்ப கால அறிகுறிகள் 24 மணி நேரத்திற்குள் சரியாகவிட்டால், தீவிரமான அறிகுறிகள் தோன்றும். அவை பின்வருவனவற்றில் அடங்கும்: சுவாசிப்பத்தில் சிரமம், ஒழுங்கற்ற நாடித் துடிப்பு, தலைச்சுற்றல், தோல் நீல நிறமாக மாறுதல், உடலின் வெப்பநிலை அதிகரித்தல் சிம்மத்தின் தீவிரம்.
  • அறிகுறிகளின் தீவிரம் இரும்புச்சத்து உட்கொண்டதன் அளவைப் பொறுத்ததே ஆகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குழந்தைகளில் இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் அதிகப்படியான இரும்புச்சத்து பிற்சேர்க்கைகளின் நுகர்வு ஆகும். இது குழந்தைகளிடத்தில் பெரியவர்களால் கண்காணிக்கப்படாத போது அல்லது மாத்திரைகள் எளிதில் எட்டும் வகையில் இருந்தால் ஏற்படும்.

இரத்த சோகைக்கு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இரும்புச் சத்து பிற்சேர்க்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி, அல்லது கட்டுப்பாடற்ற அளவிலான உட்கொள்ளல் இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

1 கிலோ உடல் எடைக்கு 20மிகி-க்கும் அதிகமாக இரும்புச்சத்து உட்கொண்டால், நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றுகின்றன.

60மிகி / கிலோவிற்கு, கடுமையான சிக்கல்கள் ஏற்படும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியமானதாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

  • ஒரு குழந்தைக்கு இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், மருத்துவர் உட்கொண்ட இரும்பின் அளைவைப் பற்றிய பின்புலத்தை அறிவார்.
  • இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தின் அளவைக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை இரும்புச்சத்து ஆய்வுகள் ஆகும்.
  • இயல்நிலை வரைவு மூலம் இரைப்பை குடலில் உள்ள இரும்பு மாத்திரைகளை சோதிக்க முடியும், இருப்பினும், இது எப்போதும் நம்பகமானதாக தோன்றுவது இல்லை.

இதற்கான சிகிச்சை முறை பின்வருமாறு:

  • இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பின் அறிகுறிகள் ஒரு சில மணி நேரத்திற்குள் மறைந்துவிட்டால், சிகிச்சை தேவைப்படுவது இல்லை.
  • இருப்பினும், நிவாரணமின்றி காணப்படும் தொடர்ச்சியான அறிகுறிகளுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.
  • இரசாயன பொருட்கள் பயன்படுத்தி இரைப்பையை கழுவுவதே இதற்கான உடனடி சிகிச்சை ஆகும்.
  • மற்றொரு முறை உடலில் ஒரு விசேஷ இரசாயனத்தை நரம்பின் வழியாக செலுத்துவதே ஆகும். டெஃபெராக்ஸ்மைன் என்ற இரசாயனம் இரும்புடன் பிணைந்து, சிறுநீர் வழியாக நச்சை வெளியேற்ற உதவுகிறது. எனினும், இந்த இரசாயனம் சுவாச பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. Science Direct (Elsevier) [Internet]; Pulmonary toxic effects of continuous desferrioxamine administration in acute iron poisoning.
  2. Science Direct (Elsevier) [Internet]; Iron Poisoning.
  3. Sane MR. et al. Fatal Iron Toxicity in an Adult: Clinical Profile and Review.. Indian J Crit Care Med. 2018 Nov;22(11):801-803. PMID: 30598567
  4. Mowry JB. et al. 2015 Annual Report of the American Association of Poison Control Centers' National Poison Data System (NPDS): 33rd Annual Report.. Clin Toxicol (Phila). 2016 Dec;54(10):924-1109. PMID: 28004588
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Iron overdose.

இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.