முற்றாப் பிரசவம் (குறைப்பிரசவம் ) - Premature Labor in Tamil

Dr. Ayush PandeyMBBS

May 12, 2019

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
முற்றாப் பிரசவம்
सुनिए ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

முற்றாப் பிரசவம் (குறைப்பிரசவம்) என்றால் என்ன?

கருப்பையில் தொடர்ந்து சுருக்கம் ஏற்படுவதாலும், குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் கருப்பை வாயில் ஏற்படும் மாற்றத்தாலும் 37 வாரங்கள் (கருக்காலம்) முடிவதற்கு முன்னரே குழந்தை பிறத்தல் முற்றாப் பிரசவம் /குறைப்பிரசவம் எனப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்த குறைப்பிரசவம் நிகழ முக்கிய மற்றும் மிக தெளிவான அறிகுறியானது குழந்தையின் பிறப்பு எதிர்பார்க்கப்படும் தேதிக்கு முன்னரே தாயின் வயிற்றினுள் கருவை தாங்கி உள்ள பனிக்குட பை உடைதல் ஆகும்.இது பனிக்குட நீர் பீறிட்டு வெளிவருவதற்கு வழிவகுக்கிறது.மேலும், இதற்கு உடனடி மருத்துவ அவசியமாகும்.

பிரசவ வலி நிகழும் போது பிற தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன.அவை பின்வருமாறு:

 • யோனி வெளியேற்றத்தின் அளவு அதிகரித்தல்.
 • இரத்த அல்லது சளி போன்று  யோனி வெளியேற்ற வகையிலான மாற்றம்.
 • அடிவயிற்று பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு.
 • வலியுடன் கூடிய அல்லது வலியற்ற சுருக்கங்கள் ஏற்படுவது போன்று தொடர்ந்து உணர்தல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பேறுகாலம் மற்றும் பேறுகாலத்திற்கு முன்னான கவனிப்பு முதல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாடு வரை என குறைபிரசவம் ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன.குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் காரணிகளில் சில பின்வருமாறு:

 • இதற்கு முன்னரே குறைப்பிரசவம் ஏற்பட்டிருத்தல்.
 • இரட்டையர்கள், மூவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை பிரசவித்தல்.
 • கடைசி குழந்தை பிறந்து 6 – 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில்  விரைவாக அடுத்தடுத்து கருத்தரித்தல்.
 • புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது மகப்பேறு மருத்துவ நிபுணரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளின் பயன்பாடு.
 • உடற்பருமன்.
 • உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் சர்க்கரை அளவு போன்ற நிலைமைகள். 

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

குறைபிரசவம் ஏற்படுவதற்கான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை விரைவாக பெறுவது நல்லது.கருப்பை வாயில் ஏதெனும் மாற்றம் இருக்கிறதா என்பதை கண்டறிய இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.தாய் ஆகப்போறவரை கண்காணிப்பின் கீழ் வைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தையின் முன்னேற்றத்தை கண்காணித்து பிரசவ கால வலியை தூண்ட வேண்டுமா என்று உறுதி செய்யப்படுகிறது. கூடுதலாக, கருப்பை வாயின் நீளத்தை அளவிடவும் மற்றும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க சரியான தேதியை தீர்மானிக்கவும் டிரான்ஸ் யோனி அல்ட்ராசவுண்ட் சோதனை மகப்பேறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டு மேற்கொள்ளப்படலாம்.

சோதனை முடிவுகள் குறைப்பிரசவம் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் விதமாக இருப்பின், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிரைவழியாக சொட்டு மருந்து போடப்பட்டு கருப்பையில் நிகழும் சுருக்கங்கள் யோனி வழி பிரசவத்திற்காக கண்காணிக்கப்படும் அல்லது யோனி வழி பிரசவ முறையில் ஏதெனும் சிரமம் இருப்பின் சில கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்கப்படும்.இந்த குறை பிரசவத்தால் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு விளையக்கூடிய சந்தர்ப்பங்களில், தாய்க்கு குறிப்பிட்ட சில மருந்துகள் சுருக்கங்களை சுலபமாக்கவும் , செயலமுறையின் வேகத்தை குறைக்கவும் கொடுக்கப்படுகின்றன.டோகோலிடிக்ஸ் அல்லது மக்னீசியம் சல்பேட்டு போன்ற மருந்துகள், கர்ப்பிணிப் தாய்க்கு பிரசவ வலி மற்றும் பிரசவத்தை தாமதப்படுத்தவும் கொடுக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய் அவளைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து பெரும் சரியான பராமரிப்பின் அடிப்படையினை சார்ந்தும் சரியான நேரத்தில் பிரசவம் நிகழும்.ஒரு நல்ல, அக்கறையான மற்றும் கவனமாக பார்த்து கொள்பவர்கள் மத்தியில் இருப்பது சரியான நேரத்தில் பிரசவம் ஏற்படவும், தாய் மற்றும் சேய் ஆரோக்கியமாக இருக்கவும் காரணமாகிறது.இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது தேவையற்ற பல திடீர் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.மேலும், அதனை எதிர்கொள்ளுதல் சவாலான ஒன்றாக இருக்கும்.மேற்கோள்கள்

 1. American Pregnancy Association. [Internet]; Premature Labor.
 2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Preterm Birth
 3. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human; National Health Service [Internet]. UK; What are the risk factors for preterm labor and birth?
 4. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human; National Health Service [Internet]. UK; Preterm Labor and Birth: Condition Information
 5. National Health Portal [Internet] India; Preterm birth
 6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Preterm labor
 7. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Premature infant
 8. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Pregnancy - premature labour

முற்றாப் பிரசவம் (குறைப்பிரசவம் ) க்கான மருந்துகள்

முற்றாப் பிரசவம் (குறைப்பிரசவம் ) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹264.67

20% छूट + 5% कैशबैक


₹20.0

20% छूट + 5% कैशबैक


₹262.5

20% छूट + 5% कैशबैक


₹51.5

20% छूट + 5% कैशबैक


₹97.06

20% छूट + 5% कैशबैक


₹103.6

20% छूट + 5% कैशबैक


₹45.5

20% छूट + 5% कैशबैक


₹33.6

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 105 entries