வடுக்கள் - Scars in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

வடுக்கள்
வடுக்கள்

வடுக்கள் என்றால் என்ன?

வடு அல்லது தழும்பு என்பது காயத்திற்குப் பிறகு தோலில் ஏற்படும் நிரந்தர திட்டுகள் ஆகும்.உடலில் ஏற்படும் வெட்டு ,சிராய்ப்பு அல்லது தீப்புண் ஆகியவற்றின் காரணமாக இந்த வடுக்கள் ஏற்படுகிறது.இதை தவிர சரும நோய்களான தட்டம்மை போன்ற நோயினால் உடலில் உண்டான காயம் குணமான பிறகு ஏற்படும் வடுக்களும் இதில் அடங்கும். வடுக்கள் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மற்றும் பளபளப்பாக தோலின் மேல் காணப்படும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்நோயின் வகை, தாக்கம் மற்றும் காயங்களின் அளவை பொறுத்து, இந்த வடுக்கள் வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன.

 • தடித்த வடுக்கள்.
  • சருமத்தை விட உயர்ந்து காணப்படுதல்.
  • சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றுதல்.
  • காயம் ஏற்பட்ட பகுதியில் மட்டும் வடுக்கள் ஏற்படுதல்.
 • வடுமேடு கட்டிகள்.
  • சருமத்தை விட மேலெழும்பி காணப்படுதல்.
  • சிவந்த அல்லது பழுப்பு நிறமாக தோன்றுதல்.
  • சருமம் முழுவதும் வடுக்கள் பரவுதல்.
 • முகப்பரு வடுக்கள்.
  • தீவிர முகப்பரு தோன்றி மறைந்த பிறகு தோன்றும் வடுக்கள்.
 • காண்ட்ராக்சர் வடுக்கள்.
  • தீப்புண்கள் மீது தோன்றும் வடுக்கள்.
  • சருமம் இறுக்கமாகவும் சுருக்கமாகவும் மாறுதல்.
  • பாதிக்கப்பட்ட பகுதி மீது குறைந்த செயல் திறன்  மற்றும் இது தசைகளையும் நரம்புகளையும் பாதிக்கலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

எப்பொழுதெல்லாம் சருமத்தின் மீது காயம் ஏற்பட்டு திசுக்கள் உடைந்து திறக்கிறதோ, அப்பொழுது கொலாஜன் புரதம் வெளியேற்றப்பட்டு காயம் ஏற்பட்ட பகுதியில் ஒன்றாக திரள்கிறது.இது இரத்தம் உறைதலை கட்டுப்படுத்தி  காயத்தை குணமாக்க துவங்குவதாகும்.சருமத்தின் மீது காயம் அதிகமாக ஏற்பட்டிருந்தால், இந்த கொலாஜன் இழை நார்களின் உருவாக்கம் மற்றும் படிதல் பல நாட்கள் தொடர்ந்து இருக்கலாம், மேலும் அது தடிமனாகவும், சருமத்திலிருந்து மேலெழும்பியும், சிவப்பு நிறமாகவும், புடைப்புடனும் தோன்றுகிறது.

இந்த வடுக்கள் ஏற்பட எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. ஆனால் இந்த வடுக்கள், பெரிய காயங்கள், வெட்டுக்கள், தீக்காயங்கள் மற்றும் சிலநேரங்களில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏற்படலாம்.வயதானவர்கள் அல்லது கருமையான சரும நிறத்தை கொண்டவர்களில் இந்த வடுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பொதுவாக, முறையான மருத்துவ அறிக்கை மற்றும் முழுமையான மருத்துவ பரிசோதனைகள் இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய உதவுகின்றன.அது என்ன வகையான வடு என்பதனை அறிய இச்சோதனை வழிவகுக்கும்.இருப்பினும்,சரும திசு பரிசோதனை (வடுக்கள் ஏற்பட்டுள்ள திசுக்களின் திசுச் சோதனை) இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை உறுதி செய்ய மேற்கொள்ளப்படுகிறது.

இந்நோயினால் ஏற்படும் வடுக்ககளை முழுவதுமாக அகற்றுவது என்பது கடினம் ஆகும், ஆனால் இந்த வடுக்களில் பொதுவாக ஒரு சில ஆண்டுகளுக்குள் தானாகவே மங்கி விடுகின்றன. சில புலனுணர்வு வகை சிகிச்சை முறை இந்த வடுக்களை சீக்கிரமாகவே மறைவதற்கு உதவுகின்றன அல்லது அவற்றை குறைவாகக் காட்ட உதவுகின்றன:

 • லிக்கான் ஜெல் வடு மீது குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தப்படுகிறது.
 • வடுக்களின் அளவைக் குறைப்பதற்கு வடு திசுக்களின் எல்லா பக்கங்களின் மீதும் ஸ்டீராய்டுகளை உட்செலுத்துதல்.
 • வடு அல்லது தோலை ஒட்டுதல் போன்ற அறுவை சிகிச்சைகளை செய்தல்.
 • லேசர் சிகிச்சையை  (வாஸ்குலர் லேசர்) பெறுதல், உயர்ந்துள்ள வடுக்களை தட்டையாக்க அல்லது அவற்றை அகற்ற சில சமயங்களில் அப்லட்டிவ் லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Scars.
 2. Moetaz El-Domyati et al. Microneedling Therapy for Atrophic Acne Scars An Objective Evaluation . J Clin Aesthet Dermatol. 2015 Jul; 8(7): 36–42. PMID: 26203319
 3. American Academy of Dermatology. Rosemont (IL), US; Scars
 4. A Bayat et al. Skin scarring . BMJ. 2003 Jan 11; 326(7380): 88–92. PMID: 12521975
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Scars

வடுக்கள் டாக்டர்கள்

Dr. Neha Baig Dr. Neha Baig Dermatology
3 वर्षों का अनुभव
Dr. Avinash Jhariya Dr. Avinash Jhariya Dermatology
5 वर्षों का अनुभव
Dr. R.K . Tripathi Dr. R.K . Tripathi Dermatology
12 वर्षों का अनुभव
Dr. Deepak Kumar Yadav Dr. Deepak Kumar Yadav Dermatology
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வடுக்கள் க்கான மருந்துகள்

வடுக்கள் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।