வலிப்புத்தாக்குதல் (அப்சென்ஸ் வலிப்பு) - Absence Seizures in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 19, 2018

March 06, 2020

வலிப்புத்தாக்குதல்
வலிப்புத்தாக்குதல்

வலிப்புத்தாக்குதல் (அப்சென்ஸ் வலிப்பு) என்றால் என்ன?

ஒரு குறுகிய காலத்திற்கு ஏற்படும் திடீர் சுய நினைவு இழப்புடன் கூடிய மயக்கமே வலிப்புத்தாக்குதல் ஆகும்.

வலிப்புத்தாக்குதல் சுமார் 15 விநாடிகளுக்கு நீடிக்கும், இந்த நேரத்தில், வலிப்புத்தாக்கத்தை கொண்டிருக்கும் நபர் விண்வெளியை நோக்கி வெறுமனே விழிப்புடன் இருப்பதைப் போல தோன்றுகிறது. (எனவே, இது ஸ்டேரிங் ஸ்பெல்ஸ்/மயக்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றது) இந்த குறுகிய தருண சுயநினைவு நிறுத்தத்திற்கு பிறகு, அந்த நபர் திடீரென்று இயல்பான விழிப்புணர்வு நிலையை மீண்டும் பெறுகிறார்.

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

வலிப்புத்தாக்குதலின் பிரதான அறிகுறி ஒரு வெற்று பார்வையே ஆகும். எனினும், இது தற்செயலாக செய்யப்படுகிறது, மற்றும் அந்த நபருக்கு அதைப் பற்றி தெரியாது. வலிப்புத்தாக்குதலின் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

  • கண் இமைகள் பட படத்தல்.
  • விரல்களை தேய்த்தல்.
  • கைகள் இழுப்பது போன்ற இயக்கங்கள்.
  • தொடர்ச்சியான மெல்லும் அசைவுகள் அல்லது உதடுகளை நக்குதல்.
  • 10-20 விநாடிகளுக்கு விட்டத்தை உற்றுப்பார்த்தல்.

வலிப்புத்தாக்குதல் ஏற்பாடும் போது, ​​அந்த நபர் திடீரென அவர்கள் ஈடுபட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவார், அத்தகைய நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • திடீரென்று நடப்பதை நிறுத்திவிட்டு சில விநாடிகளுக்கு பிறகு தொடர்தல்.
  • ஒரு வாக்கியத்தை முடிக்காமல், பாதியிலேயே பேசுவதை நிறுத்தி, சில விநாடிகள் கழித்து மீண்டும் தொடர்தல்.

வலிப்புத்தாக்குதல் ஏற்பட்ட கூடிய விரிவில், அந்த நபர் எச்சரிக்கையுடன் இருக்க முனைவார், மற்றும் வலிப்புத்தாக்குதல் ஏற்பட்டதை அறிந்திருக்கமாட்டார். வலிப்பு நோய் பொதுவாக வேறு எந்த விதத்திலும் குழப்பமடைதலில் முடியாது. வலிப்புத்தாக்குதல் ஏற்படும் போது, அந்த நபர் விழுதல் என்பது சாத்தியமில்லாதது.

சில நபர்கள் ஒரே நாளில் வலிப்புத்தாக்குதலின் பல அத்தியாயங்களைக் கொண்டிருக்கலாம். குழந்தைகளில், இந்த அறிகுறிகள் பள்ளி செயல்திறனில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும். உண்மையில், வலிப்புத்தாக்குதல் கவனக்குறைவு மற்றும் பகற் கனவு போன்றவையாக தவறாக கருதப்படுகிறது.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

மூளையின் அசாதாரண நடவடிக்கையின் விளைவாக வலிப்புத்தாக்குதல் ஏற்படுகிறது. நமது மூளையின் உயிரணுக்கள்/செல்கள் மின் தூண்டுதல்கள் மற்றும் வேதியல் சமிக்ஞைகள் மூலம் தகவல் பரிமாறிக்கொள்கின்றன. வலிப்புத்தாக்குதலின் போது இந்த மின் சிக்னல்கள் மீண்டும் மீண்டும் செயல்படுகிறது. வலிப்புத்தாக்குதல் ஒரு அடிப்படை மரபணு காரணமாக ஏற்படலாம். வலிப்புத்தாக்குதல் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:

  • ஃபெனிட்டோயின் மற்றும் கார்பமஸெப்பீன் போன்ற வலிப்புத்தாக்குதலுக்கான மருந்துகள்.
  • வேகமாக மற்றும் ஆழமில்லாதவாரு சுவாசித்தல் மற்றும் அதிவளியோட்டம்.
  • ஒளிரும் விளக்குகள்.

இந்த நிலையில் குழந்தைகளிடத்தில் ஒரு இயற்சார்வு நிலை இருக்கலாம். 4 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் இந்த வலிப்புத்தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

வலிப்புத்தாக்குதல் பொதுவாக ஒரு மருத்துவ பிரச்சனையாக அறிவிக்கப்படாததால், ஒரு முறையான நோயறிதல் என்பது எப்பொழுதும் தாமதமாகிறது. வலிப்புத்தாக்குதல் நோயறிதளுக்கு கீழ்வரும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்:

  • வலிப்புத்தாக்குதலின் மற்ற நோயியல் காரணங்களை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
  • மூளையில் தோன்றும் எந்த அசாதாரணங்களையும் கண்டுபிடிக்க எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன்.
  • மூளையின் மின் செயல்பாட்டை சரிபார்க்க மூளைமின் அலைவரைவு (இ.இ.ஜி).

வலிப்புத்தாக்குதலுக்கான சிகிச்சையில் முக்கியமானது, வலிப்படக்கி மருந்துகள் உட்கொள்ளலாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த வலிப்புத்தாக்குதல்களை கையாள்வதில் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உதவியாக இருக்கும். உதாரணமாக, குழந்தைகளின் விஷயத்தில், குழந்தையின் நிலைமையைப் பற்றி ஆசிரியரிடம் தெரிவிப்பது உதவியாக இருக்கும். அரிதாக, வலிப்புத்தாக்குதலின் அடிக்கடி நிகழும் தன்மையை குறைக்க அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Absence seizure
  2. Johns Hopkins Medicine [Internet]. The Johns Hopkins University, The Johns Hopkins Hospital, and Johns Hopkins Health System; Absence Seizures
  3. Ewa Posner. Absence seizures in children. BMJ Clin Evid. 2008; 2008: 0317. PMID: 19450342
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Types of Seizures
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Seizures