எக்ஸிமா - Eczema in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 29, 2018

March 06, 2020

எக்ஸிமா
எக்ஸிமா

சுருக்கம்

ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது,  உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு,  உடலின் மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு செயலினால் தோன்றுகிற ஒரு தோல் பிரச்சினையாகும். வெளியிலிருந்து செயல்படும் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளில், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்குகின்றன. பல்வேறு ஆன்டிஜென்களுக்கு (நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது அந்நிய பொருட்கள்) எதிரான, உடலின் அதிக உணர்திறன் மற்றும் ஹேப்டன்களும் (ஒரு வகை ஆன்டிஜென்) கூட எக்ஸிமாவுக்குக் காரணமாகக் கூடும். பொதுவாக எக்ஸிமாவின் அறிகுறிகளில், தோலில் அரிப்பு, சிவந்து போதல் மற்றும் வீக்கம், நீர் வடிதல் மற்றும் செதிலாக உரிதல் ஆகியவை அடங்கும். எக்ஸிமாவுக்கான சிகிச்சை தேர்வுகளும், அதே போல் நோய் முன்கணிப்பும், எக்ஸிமாவின் வகை மற்றும் ஒரு நபரின் வயதைப் பொறுத்து வேறுபடுகின்றன.

எக்ஸிமா என்ன - What is Eczema in Tamil

எக்ஸிமா என்பது, தோலில் சொரசொரப்பான, சிவந்த திட்டுக்கள் மற்றும் அரிப்பு ஏற்படுத்தும் கொப்புளங்கள் ஏற்படும் ஒரு தோல் பிரிச்சினையாகும். சில நேரங்களில் தீவிரமான அரிப்பு  மற்றும் சொறிதல், இரத்தம் வழிதலை ஏற்படுத்துகிறது. எக்ஸிமாவில் தோலின் தடித்த அடுக்கின் மேல் ஏற்படும் அழற்சி, தோல் நோய் எனப்படுகிறது. இந்தப் பிரச்சினை எந்த வயதிலும், உடலின் எந்த ஒரு பகுதியிலும் பாதிக்கக் கூடும். எக்ஸிமா என்ற வார்த்தை "கொதித்து வெளியேற" எனப் பொருள்படும் கிரேக்க வார்த்தையான "எக்ஸீமா" என்பதில் இருந்து வந்தது. எக்ஸிமாவில், தோல் கொதிப்பது போன்றே கிட்டத்தட்ட தோன்றுவதால், முந்தைய மருத்துவர்களும் மருத்துவப்பணி செய்பவர்களும், இந்த தோல் பிரச்சினைக்கு கச்சிதமாகப் பெருந்தக் கூடிய எக்ஸிமா என்ற பெயரை வைத்தனர்.      

எக்ஸிமா அறிகுறிகள் என்ன - Symptoms of Eczema in Tamil

எக்ஸிமாவில் பலவிதமான வடிவங்கள் இருக்கின்றன. அவற்றில் சில சுற்றுச்சூழல் சார்ந்த காரணங்களால் அடையாளப்படுத்தப்படும் வேளையில், மற்றவை மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. அனைத்து வகை எக்ஸிமாக்களின் மருத்துவ அறிகுறிகளும் மற்றும் குறிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன மற்றும் சொறியின் கால அளவைப் பொறுத்து தீவிரமானது அல்லது நாள்பட்டது என வேறுபடுகின்றன. அவை:

 • குழந்தைகளுக்கு வரும் ஒவ்வாமை எக்ஸிமா, முகம் மற்றும் உடல்பகுதியோடு தொடர்புடையதாக இருக்கிறது. குழந்தை, பாதிக்கப்பட்ட பகுதிகளை சொறிவதால், தோல் செதில் செதிலாக மற்றும் சிகப்பாக மாறுகிறது. ஒவ்வாமை எக்ஸிமாவில், வறண்ட சருமமும் காணப்படுகிறது. கன்னங்கள், அடிக்கடி பாதிக்கப்படும் முதல் பிரதேசமாக இருக்கின்றன. வழக்கமாக, டையப்பர் அணியும் பகுதிகள்  பாதிக்கப்படுவதில்லை. குழந்தைப்பருவத்தில், சொறிகள் முழங்கால்களின் பின்புறம், முழங்கைகளின் முன்புறம், மணிக்கட்டுகள் மற்றும் கணுக்கால்களில் தோன்றுகின்றன. சில நேரங்களில், ஒவ்வாமை எக்ஸிமா பிறப்புறுப்பு பகுதிகளையும் பாதிக்கக் கூடும். வயது வந்தவர்களுக்கு, ஒரு பரவலான வடிவத்தில், வறண்ட, செதில்செதிலான தோல் போன்று, கைகள், கண் இமைகள், மற்றும் மார்புப்புக்காம்புகளில் ஏற்படுகிறது.
 • ஊறல் எக்ஸிமா, ஒரு சிறிய தோல் துகள்கள் போன்று, உச்சந்தலை, முகம் மற்றும் உடலின் மேற்பகுதியில் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு, இது, அக்குளில் இருந்து இடுப்புப் பகுதி வரை  பரவுவதோடு, தொட்டில் தொப்பி (உச்சந்தலையில் பரவலாக மற்றும் பிசுக்கான செதில் உரிதல்) ஏற்படக் காரணமாகிறது. சொறியின் இந்த பட்டைகள், தோற்றத்தில் இளம்சிவப்பு நிறத்திலும், சாதாரணமாக குறைந்த அரிப்புடையதாகவும் இருக்கிறது. வயது வந்தவர்களிடம், பொதுவாகக் கண்  இமை அழற்சி (சிவந்த செதில்கள் மற்றும் வீங்கிய கண் இமை விளிம்புகள்) காணப்படுகிறது. வயது வந்தவர்களிடம் இருக்கும் திட்டுக்கள் அரிப்பு குறைவானவையாக இருக்கின்றன மற்றும் எக்ஸிமா பொதுவாக குளிர் காலத்தில் தோன்றுகின்றன.
 • தட்டு வடிவ எக்ஸிமா, நீர் வடியும் தீவிர வகை அல்லது வறண்ட வகையாகத் தோன்றுகிறது. இரண்டு வடிவங்களும் வழக்கமாக உடல்பகுதியில் தோன்றுகின்றன. தட்டு வடிவ எக்ஸிமாவில், தனித்த வட்ட வடிவத்தில் அல்லது முட்டை-வடிவத்தில் சிகப்பு நிறமான காயம் காணப்படுகிறது. இந்தக் காயங்கள் வலிமிகுந்தவை.
 • எரிச்சல் தொடர்பு எக்ஸிமாவில், முதலில், திட்டுக்கள் அல்லது காயம் வழக்கமாக, எரிச்சலைக் கொடுக்கும் பொருளைத் தொட்ட குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தோன்றுகிறது. இந்தக் காயம் சுடர் சிகப்பு நிறத்தில் திட்டுகளை உருவாக்கும் கொப்புளங்கள் வடிவில் தோன்றுகிறது. மேலும், தொடர்புடைய பகுதியில், செதில் செதிலாக ஏற்படுத்துகிறது. பின்னர் அந்தப் பகுதி வறண்டு, தோலில் விரிசல்கள் உண்டாகின்றன.
 • ஒவ்வாமை தொடர்பு எக்ஸிமா, ஒவ்வாமைப் பொருட்களைத் தொடும் பகுதிகளில் காணப்படுகிறது. இருந்தாலும், முறையான கவனம் எடுக்கப்படவில்லை எனில், இது மற்ற பகுதிகளுக்கும் பரவக் கூடும். காயம், ஒவ்வாமைப் பொருளை ஒரு சில நாட்களுக்கு, அந்த இடத்தில் இருந்து தள்ளி வைப்பதன் மூலம் சரியாகிறது. தோல், சிவப்பாக, அரிப்போடு, வீக்கமாக அல்லது வறண்டு மற்றும் சமனற்று காணப்படுகிறது. நிக்கல் (நகைகளில்) போன்ற ஒவ்வாமை பொருட்களோடு தொடர்பு ஏற்படுவதால் , பொதுவாக பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில், வெளிக்காதுகள் மற்றும் மணிக்கட்டுகள் ஆகியவை அடங்கும்.
 • அஸ்டியாடோடிக் எக்ஸிமா, மிகவும் வழக்கமாக, ஒரு சிவந்த பின்னணியில் நல்ல பிசுபிசுப்பான சிற்றலைகள் போன்று அல்லது 'பைத்தியக்கார பரவல்' போன்று தோன்றுகிறது. இது, ஒரு வலைப்பி ன்னல் போன்று தோன்றக் கூடிய , சாய்சதுர வடிவ திட்டுக்களில் குறுக்கே சிகப்பு நிற பட்டைகள் செல்வது போல் தோன்றுகிறது. மிகவும் தீவிரமான நிலைகளில், வீக்கம் மற்றும் கொப்புளங்களும் இணைந்து கொள்கின்றன. 
 • தேக்க நிலை எக்ஸிமா, இரத்த ஓட்ட பற்றாக்குறையால் ஏற்படுவதால் இரத்த ஓட்ட தடை எக்ஸிமா எனவும் அறியப்படுகிறது. இவை, தடிப்புகள், கொப்புளங்கள், கருமையான தோல், கால்களில் நிறம் மாறிய தடித்த தோல், வறண்ட தோல், புண்கள், இன்ன பிற வடிவங்களில் தோன்றுகின்றன. காயங்கள் மிகக் கடுமையான வலியுடையதாக மற்றும் அரிப்புடையதாக இருக்கக் கூடும்.
 • பூஞ்சை பன்முக எக்ஸிமா பெரும்பாலும் கழுத்தின் பின்புறம், கால்களின் கீழ் பகுதி மற்றும் பிறப்புறுப்பு மற்றும் பின்புற பகுதிகளில் தோன்றுகிறது. இது, ஒரு ஒற்றை படிவாக, எல்லை வரையறுக்கப்பட்ட நேர்கோடு வடிவத்தில் அல்லது முட்டை வடிவத்தில் தோன்றுகிறது. இது கடுமையான அரிப்பை ஏற்படுத்துகிறது. இது, வறண்ட சருமம் மற்றும் அரிப்பின் காரணமாக சிராய்ப்புகளுடன் கூடிய நிறமுள்ள காயங்களைக் கொண்டிருக்கிறது.
 • போம்ஃபோலிக்ஸ், உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் பாதிக்கிறது. புண்கள், திரும்ப வரக்கூடிய கொப்புளங்கள் மற்றும் குமிழிகளாகத் தோன்றுகின்றன. இந்தக் காயங்கள், வேதனையை உண்டாக்கும் அளவுக்கு அரிப்பையும், கூடவே ஒரு எரிச்சல் உணர்வையும் கொண்டிருக்கின்றன. கொப்புளங்கள் வெடிக்கும் போது, அடிக்கடி வலிக்கக் கூடிய விரிசல்களோடு ஒரு வறண்ட, சிவந்த சருமத்தை உண்டாக்குகின்றன.

எக்ஸிமா சிகிச்சை - Treatment of Eczema in Tamil

எக்ஸிமா, அதன் காரணத்தை அறிய முடியாத தன்மையினால், அதனைக் குணப்படுத்த முடியாது. அடிப்படை மருத்துவம், அறிகுறிகளைக் குறைக்க மற்றும் எக்ஸிமா திட்டுக்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பது ஆகும். மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள உறுதியான பொதுவான நடவடிக்கைகள்:

 • விளக்குதல், மனநிம்மதியளித்தல் மற்றும் ஊக்குவித்தல்.
 • எரிச்சலூட்டும் பொருட்களின் தொடர்பைத் தவிர்த்தல்.
 • கொழுப்பு நிறைந்த களிம்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல்.
 • கார்டிகோஸ்டெராய்டு க்ரீம்கள் மற்றும் களிம்புகளின் பொருத்தமான பயன்பாடு.

இவை தவிர,  பல்வேறு வகை எக்ஸிமாவுக்கு குறிப்பிட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவை பின்வருமாறு:

 • ஒவ்வாமை எக்ஸிமா
  அந்த நபருக்கு விளக்கமளித்து, ஆதரவளித்தல், மாய்ச்சரைசர்களின் தொடர்ந்த பயன்பாடு, ஒவ்வாமை கார்டிகோஸ்டெராய்டுகளை முடிந்த அளவு குறைவாகப் பயன்படுத்துதல். 'ஈரமான துணி', தார் மற்றும் இச்தம்மொல் பசை பட்டை கொண்டு கட்டு கட்டுதல். நோய்த்தொற்று உள்ள காயங்களாக இருந்தால், ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை கிருமி நாசினி மருந்துகள்
 • ஊறல் எக்ஸிமா  
  கேட்டோகோனசோல் ஷாம்பு மற்றும் க்ரீம்கள் போன்ற பொருட்கள், சிகிச்சையின் அடிப்படையில் இருந்தே, தேவைப்பட்டால் மிதமான கார்டிகோஸ்டெராய்டு கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் சிகிச்சை மறுபடி கொடுக்கப்படலாம்.
 • எரிச்சலூட்டும் பொருள் தொடர்பு எக்ஸிமா மற்றும் ஒவ்வாமை தொடர்பு எக்ஸிமா
  எரிச்சலூட்டும் பொருள் மற்றும் ஒவ்வாமை பொருட்களுடன் எந்த ஒரு தொடர்பையும் தவிர்த்தல். தேவைப்பட்டால், அவசியமான வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்தல்.
 • தேக்க நிலை எக்ஸிமா
  1% ஹைட்ரோகார்டிசோன் அல்லது 0.05% குளோபடசோன் புடிரேட் போன்ற மிதமான கார்டிகோஸ்டெராய்டு,  அல்லது 0.1% பெட்டமதஸோன் வேலரேட், 0.1% மொமெடசோன் ஃபுரோட் 0.1% போன்ற சக்தி வாய்ந்த கார்டிகோஸ்டெராய்டுகள் எக்ஸிமா பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. புண்கள் உள்ள பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூட இருக்கும் வெளி வீக்கம் கால்களைத் தூக்கி வைப்பது மற்றும் அழுத்தமான பட்டைகளைக் கொண்டு கட்டுவதன் மூலம் கவனிக்கப்பட வேண்டும்.
 • அஸ்டியோடாடிக் எக்ஸிமா
  மாயிச்சரைஸர்களைப் பயன்படுத்துவது மற்றும் குளிக்கும் அளவுகளைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் வறண்ட சருமத்தைத் தவிர்த்தல். மேலும், அறிகுறிகளைக் குறைக்க மேற்பூச்சு கார்டிகோஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படலாம்.
 • பூஞ்சை பன்முக எக்ஸிமா
  படிவுக்கு சிகிச்சையளிக்க மேற்பூச்சு ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொரு 4-6 வாரங்களுக்கும் ஸ்டெராய்டு ஊசிகள் தேவை, மாய்ச்சரைஸர்கள் மற்றும் குளிரூட்டும் களிம்புகள், ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 • போம்ஃபோலிக்ஸ் எக்ஸிமா
  பொட்டாசியம் பர்மாங்கனேட் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈரமான துணியால் கட்டுதல், முக்கியமாக, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில். காலுறைகளுடன் பொருத்தமான காலணிகள், பெர்ஸ்பிரண்ட் எதிர்ப்பிகள் (அதிகமான வியர்த்தலை சமாளிக்க), மேற்பூச்சு கார்டிகோஸ்டெராய்டு களிம்புகள், அமைப்பு முறை கார்டிகோஸ்டெராய்டுகள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன.

வாழ்க்கைமுறை மேலாண்மை

நீங்கள் எக்ஸிமாவைத் தடுப்பதற்கும் அல்லது அது திரும்ப வருவதைக் கட்டுப்படுத்தவும் ஒரு சில அளவீடுகள் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே:

 • எப்போதும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்.
 • எரிச்சலூட்டும் பொருட்களோடு சருமம் எந்த விதத்திலும் தொடாமல் தவிருங்கள்.
 • வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துங்கள்.
 • தியானம் மற்றும் மற்ற பொழுதுபோக்கு உத்திகள் மூலம் மன அழுத்தத்தையும் மனம் அலைபாய்வதையும் கட்டுப்படுத்துங்கள்.
 • ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
 • எக்ஸிமாவால் உங்கள் தோல் பரப்பு ஏதேனும் பாதிக்கப்பட்டால், அதை சொறிவதைத் தவிருங்கள். அதனால், உங்கள் நகத்தை வெட்டுவது நல்லது.


மேற்கோள்கள்

 1. Harsh Mohan: Textbook of Pathology [Internet]
 2. Stuart Ralston Ian Penman Mark Strachan Richard Hobson. Davidson's Principles and Practice of Medicine. 23rd Edition: Elsevier; 23rd April 2018. Page Count: 1440
 3. American Academy of Dermatology. Rosemont (IL), US; Stasis dermatitis
 4. National Health Service [Internet]. UK; Atopic eczema.
 5. International Eczema-Psoriasis Foundation [Internet]; Eczema Rashes: Definitions, Types, Symptoms & Best Treatments

எக்ஸிமா டாக்டர்கள்

Dr. Neha Baig Dr. Neha Baig Dermatology
3 वर्षों का अनुभव
Dr. Avinash Jhariya Dr. Avinash Jhariya Dermatology
5 वर्षों का अनुभव
Dr. R.K . Tripathi Dr. R.K . Tripathi Dermatology
12 वर्षों का अनुभव
Dr. Deepak Kumar Yadav Dr. Deepak Kumar Yadav Dermatology
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

எக்ஸிமா க்கான மருந்துகள்

எக்ஸிமா के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।