விறைப்பு குறைபாடு - Erectile Dysfunction in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

February 07, 2019

March 06, 2020

விறைப்பு குறைபாடு
விறைப்பு குறைபாடு

சுருக்கம்

விறைப்பு செயலிழப்பு (ஈடி) என்பது ஒரு உறுதியான ஆண்குறியை (உறுதியான ஆண்குறி) சரியாக பராமரிக்காத காரணத்தால், உடலுறவு வைத்துக்கொள்ள இயலாத நிலையாகும். விறைப்புத்தன்மை என்பது நரம்பியல் நிகழ்வாகும், (நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை உள்ளடக்கியது) இது எண்ணங்கள் அல்லது தொடுதல் போன்ற பாலியல் தூண்டுதல் காரணமாக நிகழ்கிறது. மருந்துகள், மதுபானம், உடல் பலவீனம், நீரிழிவு போன்ற பல்வேறு காரணங்களால் விறைப்பு குறைபாடு ஏற்படுகிறது. இது ஆண்களின் பொதுவான குறைபாடாகும் ஆனால் இதைப்பற்றி மிகவும் விவாதிக்கப்படவில்லை. விறைப்பு குறைபாடு உள்ள ஆண்கள், மருத்துவரை அணுக தயக்கம் காட்டுகின்றனர் ஆனால் இது ஒரு முக்கிய உடல்நல பிரச்சினையாகும். விறைப்பு குறைப்பாடுற்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது வாழ்க்கை துனையுடனான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும்.

விறைப்பு குறைபாடு என்ன - What is Erectile Dysfunction in Tamil

விறைப்பு செயலிப்பு (ஈடி) என்பது ஒரு ஆண், தன் துனையுடன் திருப்திகரமான பாலியல் உடலுறவை வைத்துக்கொள்ள இயலாத நிலையாகும். உயிரியல் ரீதியாக, விறைப்புத் தன்மையை தக்கவைக்க, ஆண்குறியில் போதுமான மற்றும் நிலையான இரத்த ஓட்டம் இருத்தல் வேண்டும். அதனால் நரம்புகள் தொடர்ச்சியாக தூண்டுதல்களை அனுப்ப முடியும். ஆணுறுப்புக்கு எலும்புகள் இல்லை. நரம்பு மண்டலத்தை இரத்த நாளங்கள் தொடர்பு கொள்ளவதினால் ஆண்குறி விறைப்புக்கு அது உதவுகின்றன. ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையானது, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவக்கும். ஆண்குறிக்கு தேவையான அளவு இரத்தம் இல்லாதற்கான காரணங்கள் ஆண்குறி தமனிகள், வயது காரணமாக தமனி கடினமாதல் (தமனித் தடிப்பு), நீரிழிவு, உடல் பருமன், அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளல் ஆகியவையாகும். இதற்கான சிகிச்சையானது மருந்துகள், ஹார்மோன் தெரபி, ஆண்குறி உள்வைப்புகளாகும்.

விறைப்பு குறைபாடு அறிகுறிகள் என்ன - Symptoms of Erectile Dysfunction in Tamil

விறைப்பு குறைபாடு தொடர்பான அறிகுறிகள் மிகவும் குறைவானவை:

 • விறைப்புத்தன்மையை முற்றிலுமாக பெற இயலாது.
 • விறைப்புத்தன்மை ஏற்படாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் அல்லது குறிப்பிட்ட நிலைமைகளின் பங்காவும் இருக்கலாம்.
 • விறைப்புத்தன்மை ஏற்பட்டலாம் அவர்களால் அதை ஒரு திருப்திகரமான பாலியல் உடலுறவை அடையும் காலம் வரை அதைத் தக்கவைக்க முடியாது.
 • குறைந்த பாலியல் விருப்பம்.

விறைப்பு குறைபாடு சிகிச்சை - Treatment of Erectile Dysfunction in Tamil

மருத்துவர் மதிப்பீடு செய்யும் நோயாளியின் மருத்துவ மற்றும் தனிப்பட்ட வரலாற்றைப் பொறுத்து, சிகிச்சைகள் வேறுபடுகின்றன. நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ நிலையில் இருந்தால், அதற்கு பொருத்தமான மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்படும்.

 • சில்டெனாபில் (வயக்ரா, 50-100 மி.கி), தடாலாபில், வர்ட்டாஃபில், மற்றும் அவானஃபில் போன்ற சில மருந்துகள் சிகிச்சையின்போது அளிக்கப்படுகிறது. இந்த மருந்துகள் ஆண்குறியின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் திருப்திகரமான விறைப்புத்தன்மையை ஏற்படுதுவம் உதவுகிறது. இந்த மருந்துகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆண்குறியில் ஊசியின் மூலம் மருந்துகளை உட்செலுத்தலாம்.
 • விறைப்பு செயலிப்பு உடையவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படலாம். இது எலும்புரை, தசைகளின் சக்தி மற்றும் வீரியம் ஆகியவற்றை மீட்க உதவுகிறது. தசை வழியில் ஊசிப்போடுதல், தோலின் அடியில் ஊசிப்போடுதல், டிரான்ஸ்டெர்மால் போன்ற  பல்வேறு முறைகள் டெஸ்டோஸ்டிரோனை நிர்வகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது (மேலும் வாசிக்க - டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க இயற்கை வைத்தியம்)
 • வேக்கம் சாதனமானது தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.வெளிப்புற பிளாஸ்டிக் உருளை மற்றும் வேக்கம் பம்ப் ஆகியவற்றை கொண்டு இழுப்பதினால் ஆண்குறியில் இரத்த ஒட்டம் அதிக்கரித்து விறைப்புத்தன்மை ஏற்பட உதவுகிறது. சில சமயங்களில் இரத்த ஓட்டம் மீண்டும் உடலின் உள்ளே செல்லும், அதை தடுக்க ஆண்குறியின் அடிப்பகுதியில் ஒரு எலாஸ்டிக் வளையம் வைக்கப்படுகிறது.
 • ஆண்குறியின் உள்வைப்புகள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன (நிலையான கம்பி அல்லது ஊப்பச் செய்யும் வகைகள்).
 • ஆண்குறியில் குறைவான இரத்த ஓட்ட பிரச்சனை கொண்ட இளைஞர்களுக்கு வாஸ்குலர் புனரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
 • நோயாளி மற்றும் அவரின் வாழ்க்கைத்துனை இருவரும் மன உலைச்சல் அல்லது உறவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தால் மனோதத்துவ சிகிச்சை செய்யப்படுகிறது.
 • கொரிய சிவப்பு ஜின்ஸெங் (பானாக் ஜின்ஸெங், 900 மில்லி ஒரு நாளுக்கு மூன்று முறை) என்பது விறைப்பையை மேம்படுத்த உதவும் மாற்று சிகிச்சையாகும்.

வாழ்க்கைமுறை மேலாண்மைகள்

உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு மனோதத்துவ சிகிச்சையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்பியல் மற்றும் வாஸ்குலர்களினால் நோயை மேம்படுத்த சாத்தியமில்லை, ஆனால் அதை தவிர பல சிகிச்சைகள் இருக்கின்றன. வாய்வழி மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளியின் நிலைமையை மேம்படுத்துவதற்கு அறுவை சிகிச்சைகளும் முயற்சி செய்யப்படலாம்.

மேற்கொள்ளக்கூடிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:

 • கார்டியோ பயிற்சிகளை செய்யவும்.  உடல் பருமன் மற்றும் எளிதாக எடையை குறைக்க நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளவும்.
 • ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்கவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளினால் விறைப்பு செயலிப்புகான வாய்ப்புகளை குறைக்க உதவும்.
 • விறைப்பு செயலிப்பு ஏற்படுவதற்கு இரண்டு பெரிய காரணங்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாகும். எனவே, சரியான சிகிச்சை பெற முறையான மருந்துகள் மற்றும் உணவு மாற்றங்கள் அவசியமாகும், அத்துடன், உடற்பயிற்சிகளும் விறைப்பு செயலிப்பை தீர்க்க உதவுகின்றன.
 • கிகெல் பயிற்சிகள் போன்ற இடுப்பு பயிற்சிகளை முயற்சிக்கவும். இந்த பயிற்சிகள் இடுப்பு (இடுப்பு) மற்றும் இடுப்பின் கீழ் உள்ள பாகங்களின் தசையை பராமரிக்க உதவுகிறது.
 • மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் போதுமான நேரம் தூங்கவும்.
 • புகைத்தல் மற்றும் மது உட்கொள்ளல் ஆகியவற்றை கட்டுப்படுத்துங்கள்.


மேற்கோள்கள்

 1. Urology Care Foundation [Internet]. American Urological Association; Erectile Dysfunction.
 2. Hormone Health Network [Internet]. The Endocrine Society; Washington, DC: Erectile Dysfunction.
 3. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Erectile Dysfunction (ED).
 4. Stuart H. Ralston, Ian D Penman, Mark W J Strachan, Richard Hobson. Davidson's Principles and Practice of Medicine E-Book.. 23rd Edition; Elsevier, 23-Apr-2018 - Medical - 1440 pages.
 5. Joel J. Heidelbaugh, University of Michigan, Ann Arbor, Michigan. Management of Erectile Dysfunction.. American Family Physician. 2010 Feb 1;81(3):305-312.
 6. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Preventing Erectile Dysfunction..
 7. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. 5 natural ways to overcome erectile dysfunction.. Harvard University, Cambridge, Massachusetts.

விறைப்பு குறைபாடு டாக்டர்கள்

விறைப்பு குறைபாடு க்கான மருந்துகள்

விறைப்பு குறைபாடு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page