கை எலும்புமுறிவு - Fractured Hand in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

கை எலும்புமுறிவு
கை எலும்புமுறிவு

கை எலும்புமுறிவு என்றால் என்ன?

கை எலும்புமுறிவு என்பது கையில் எலும்பு உடைவது அல்லது எலும்புகளில் விரிசல் ஏற்படுவதைக் குறிக்கிறது. அவை மணிக்கட்டு, உள்ளங்கை அல்லது விரல்களில் உள்ள எலும்புகளில் ஏற்படும்.உள்ளங்கை எலும்பு என்பது மணிக்கட்டு மற்றும் விரல்கள் இரண்டிற்கும் நடுவில் உள்ள எலும்புகள் ஆகும்.குத்துச்சண்டை வீரர் கை எலும்புமுறிவு என்பது மிகவும் பொதுவாக காணப்படும் கை எலும்புமுறிவு, இது ஐந்தாவது உள்ளங்கை எலும்பில் ஏற்படும் எலும்புமுறிவு ஆகும்.கையின் எலும்புகள் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன;எனவே, ஒரு கை முறிவு ஏற்படும்போது அன்றாட வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளும் என்ன?

கை எலும்புமுறிவின் மிக பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • வலி.
 • வீக்கம் மற்றும் மென்மை.
 • நொறுங்கும் சத்தம் மற்றும் எடைதூக்குதலில் சிரமம்.

கை எலும்புமுறிவின் மற்ற தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றில் அடங்கும்:

 • கை, விரல்கள் அல்லது மணிக்கட்டு இயக்கத்தில் சிரமம் மற்றும் அசௌகரியம்.
 • உருக்குலைவு.
 • முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் சோர்வான தோற்றத்தை ஏற்படும்.

மணிக்கட்டு எலும்புமுறிவின் பண்பு என்னவென்றால், வலி தற்காலிகமாக குறைந்தாலும் மணிக்கட்டின் மையப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் அது மிகவும் ஆழமான, மந்தமான வலியை ஏற்படுத்தும்.

அரிதாக ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • விறைப்பு அல்லது இயலாமை.
 • இரத்தக் குழாய் அல்லது நரம்புகளில் சேதம்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

ஒருவர் கை நீட்டப்பட்ட நிலையில் கையின் மேல் நேரடியாக விழுந்தால் கை  எலும்புமுறிவு ஏற்படலாம்.

பிற காரணங்கள் பின்வருமாறு:

 • வாகன விபத்துக்களில் நேரடி அல்லது நசுக்கிய காயங்கள்.
 • விளையாட்டு காயங்கள், குறிப்பாக பனிச்சறுக்கும போது கை எலும்புமுறிவு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.
 • எலும்புப்புரை போன்ற நோய் மனிதர்களில் கை எலும்புமுறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

அறிகுறிகளின் வரலாறு, முறிவாக எலும்பின் கவனமான உடல் பரிசோதனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இந்த நிலையின் நோயறிதலுக்கு உதவும்.

மருத்துவர் உங்கள் தசைநாண்கள், கைத்திறன் மற்றும் கைகளின் செயல்பாட்டை ஆராய்வார்.

மருத்துவ சோதனைகள் பின்வருமாறு:

 • எக்ஸ்-கதிர்கள் எலும்புமுறிவைக் கண்டறியும் அதன் தீவிரத்தை தீர்மானிக்கவும் உதவுகிறது.
 • சிகிச்சைக்குப்பிறகு தொடர்ந்து எலும்பு குணமாவதைக் கண்டறிய எக்ஸ்-கதிர்கள் தேவைப்படலாம்.

அறுவை சிகிச்சை இல்லாமல் வேறு முறை சிகிச்சை மூலம் எலும்புகள் சீரமைக்கபடும்.மருத்துவர் மேன்மையாக கையாண்டு சிம்பு, வார்ப்பு அல்லது ஓட்டுதல் போன்ற சிகிச்சைமுறைகள் மூலம் எலும்பு துண்டுகளை சரியான இடத்தில் பொருத்தி எலும்புமுறிவை குணப்படுத்துகிறார்.

வலிநீக்கிகள்(வலி நிவாரணிகள்) அறிகுறிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சை தொடங்கி சுமார் மூன்று வாரங்களுக்கு பின்னர் விரைப்பைக் குறைக்க நீட்டிப்பு உடற்பயிற்சிகள் செய்யப்படலாம்.

சில சந்தர்ப்பங்களில் உடைந்த எலும்பு துண்டுகளை சரியாக அமைக்க முறிவு ஏற்பட்ட இடத்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் திறக்கலாம். தேவைப்பட்டால் திருகுகள், கம்பிகள் அல்லது தட்டுகள் போன்ற கூடுதலான சிறிய கருவிகள் எலும்பை ஒழுங்குபடுத்த எலும்பிற்குள் பொறுத்தப்படலாம்.மேற்கோள்கள்

 1. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont, Illinois. Hand Fractures.
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hand fracture: Aftercare
 3. American Society for Surgery of the Hand. Broken Hand. Chicago, USA. [internet].
 4. University of California San Francisco [Internet]. San Francisco, CA: Department of medicine; Hand and Wrist Fractures
 5. UW Health. Scaphoid (Navicular) Fractures of the Hand and Wrist. University of Wisconsin Hospitals; Wisconsin, United States. [internet].

கை எலும்புமுறிவு க்கான மருந்துகள்

கை எலும்புமுறிவு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।