வலி - Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

April 30, 2019

March 06, 2020

வலி
வலி

வலி என்றால் என்ன?

எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் ஏற்படக்கூடிய, உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த ஒரு விரும்பத்தகாத, உணர்வே வலி ஆகும். வலியை உணரக்கூடிய தன்மையானது ஒருவரது எண்ணம் சார்ந்தது மற்றும் அது மக்களில் ஒருவருக்கொருவர் வேறுபடும் தன்மை கொண்டது. உடல் சார்ந்த வலியானது, சாதாரண வலியாக தொடங்கி மிகவும் கடுமையான வலியாக உருவெடுக்கலாம்,மேலும் அது திடீரென்று ஏற்படும் கடுமையான வலியாகவோ அல்லது நாள்பட்ட வலியாகவோ இருக்கலாம். உங்களுக்கு வலியானது மீண்டும் மீண்டும் ஏற்படலாம் அல்லது அது ஒரு தற்காலிக உணர்வாக கூட இருக்கலாம்.

இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் யாவை?

ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாகவே வலி உணரப்படுகிறது. பெரும்பான்மையாக, வலி இருக்கும் போது பின்வரும் சில அறிகுறிகளை அது கொண்டிருக்கும்:

 • அமைதியின்மை.
 • குழப்பம் /கிளர்ச்சி.
 • மந்தமான வலி.
 • அதிர்வுற்றுத் துடிக்கின்ற வலி மற்றும் விட்டு விட்டு ஏற்படுகிற உணர்வு.
 • தசைப்பிடிப்பு.
 • சாதாரண நடவடிக்கைகள் செய்ய இயலாமை.
 • கூர்ந்து கவனிக்கும் திறன் இல்லாதது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பின்வரும் நிலைமைகளின் காரணமாக நீங்கள் வலியை அனுபவிக்கலாம்:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உடலின் எந்த இடத்திலும் வலி ஏற்படலாம். கடுமையான வலிக்கு, அதனை உடனே கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவேண்டும். நோயாளியின் முழுமையான நோய் பற்றிய வரலாற்றை அறிந்துகொண்ட பிறகு அவருக்கு கீழ்க்கண்டவற்றில் எவ்விதமான சோதனைகள் தேவைப்படும் என்பது பரிந்துரைக்கப் படலாம்:

 • உடல் பரிசோதனை.
 • இரத்த பரிசோதனைகள்.
 • எக்ஸ்-ரே (எக்ஸ்-கதிர்கள் சோதனை).
 • அல்ட்ராசவுண்ட் இமேஜிங்.
 • காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
 • எலெக்ட்ரோயோகிராபி (தசை செயல்பாட்டை சரிபார்க்க).

வலி இவைகளை ஏதேனும் ஒரு அளவு கோல் மூலம் அளவிடப்படுகிறது. காட்சி அனலாக் அளவு (வி.ஏ.எஸ்), எண்மயமான வலி மதிப்பீட்டு அளவு (என்.ஆர்.எஸ்), நாட்பட்ட வலி தரம் அளவிடுதல் (சி.பி.ஜி.எஸ்), குறுகிய படிவம் -36 உடல் வலி அளவு (எஸ்.எப் -36 பிபிஎஸ்), இடைப்பட்ட மற்றும் நிலையான ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் (ஐ.சி.ஓ.ஏ.பி) அளவீ டுகள். வலிக்கான சிகிச்சை பின்வரும் விருப்பங்களை உள்ளடக்கியது:

 • மருந்துகள்:
  • புற்றுநோய் வலி மற்றும் இறுதிகட்டத்திலிருக்கும் நோயாளிகளுக்கு ஓபியோட் வலி நிவாரணிகள்.
  • ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்.எஸ்.எ.ஐ.டி.ஸ்).
  • தசை தளர்த்திகள்.
  • மயக்க மருந்துகள்.
 • பிசியோதெரபி.
 • ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சிகள்.
 • அக்குபஞ்சர்.
 • யோகா.
 • சூடு மற்றும் குளிர் ஒத்தடங்கள்.
 • மூலிகை மருந்துகள்.
 • ஹோமியோபதி.

ஆற்றல்மிக்க வலி நிவாரண மேலாண்மைக்கு ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டு சிகிச்சைகள் தேவைப்படலாம். வலியின் அடிப்படை காரணத்திற்கான வழக்கமான மருந்துகள்,இவற்றுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வேலை செய்யும் போது சரியான தோற்ற அமைவை பராமரித்தல், மற்றும் வழக்கமான யோகா மற்றும் தியானம்,  ஆகியவை ஆற்றல்மிக்க வலி நிவாரண மேலாண்மையில் சிறந்த முடிவுகளை தரும்.மேற்கோள்கள்

 1. Jue Mo et al. Does throbbing pain have a brain signature? Pain. 2013 Jul; 154(7): 1150–1155. PMID: 23557747
 2. Mary E Lynch. What Is the Latest in Pain Mechanisms and Management? Can J Psychiatry. 2015 Apr; 60(4): 157–159. PMID: 26174214
 3. Mari A. Griffioen et al. Acute Pain Characteristics in Patients with and without Chronic Pain Following Lower Extremity Injury . Pain Manag Nurs. 2017 Feb; 18(1): 33–41. PMID: 27964911
 4. National Center for Complementary and Integrative Health [Internet] Bethesda, Maryland; Pain
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Pain
 6. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Pain and pain management – adults

வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.