செவித்திறன் இழப்பு - Hearing Loss in Tamil

Dr. Abhishek GuptaMBBS

December 05, 2018

March 06, 2020

செவித்திறன் இழப்பு
செவித்திறன் இழப்பு

செவித்திறன் இழப்பு என்றால் என்ன?

செவித்திறன் இழப்பு என்பது ஒரு காதிலோ அல்லது இரண்டு காதுகளிலுமோ ஏற்படும் சத்தம் கேட்கும் திறனில் ஏற்படும்  குறைபாடு ஆகும்.கேட்கும் திறனின்மையினை அடிப்படையாகக் கொண்டு லேசான, மிதமான மற்றும் தீவிரமான செவித்திறன் இழப்பு என்று இந்நோய் வகைப்படுத்தப்பட்டுள்ளது.மிகவும் குறைந்த அளவிலிருந்து சுத்தமாக ஒன்றுமே கேட்காத நிலை வரை ஏற்படும் குறைப்பாடு காது கேளாண்மை என்றழைக்கப்படுகிறது.அடிப்படைக் காரணத்தை பொறுத்து இந்நிலை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருக்கக்கூடியது.

உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரை, 2050ஆம் ஆண்டுக்குள், உலகளவில் 90 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்படலாம் என கருதப்படுகிறது.மற்ற நாடுகளை விட இந்தியாவிலேயே செவித்திறன் இழப்பின் பாதிப்பு அதிக அளவில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

செவித்திறன் இழப்பு என்பதே ஒரு அறிகுறி.செவித்திறன் இழப்பு வெளிப்படுத்தும் அடையாளங்களுள் அடங்குபவை பின்வருமாறு:

 • சத்தமான சூழ்நிலைகளில் இருக்கும் போது காது கேட்கும் திறனில் ஏற்படும் சிரமம்.
 • உரையாடலின் போது செவித்திறன் குறைபாட்டால் யூகத்தில் சம்பந்தமில்லாத பதிலளிப்பது.
 • செவித்திறன் குறைபாட்டால் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பது அல்லது தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற நிலை ஏற்படுதல்.
 • செவித்திறன் குறைபாட்டால் மற்றவர்களிடம் ஒரு விஷயத்தையே பலமுறைக் கேட்பது.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இயற்கை செயல்முறையின் காரணமாக வயது முதிர்ந்தவர்களிடம் பொதுவாகவே செவித்திறன் இழப்பு காணப்படுகிறது, இதன் விளைவால் உயிரணுக்கள் அழிய நேரிடுகின்றது.நீங்கள் 40 வயதிலிருந்து செவித்திறனில்  சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாடு பல காரணிகளால் விளைகின்றது அவை பின்வருமாறு:

செவித்திறனை பாதிக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:

 • நீரிழிவு, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களால் ஏற்படலாம்.
 • காதுகளில் ஏற்படும் தொற்றுநோய்.
 • மருந்துகள்.
 • தலை அல்லது காதில் ஏற்படும் காயம்.
 • காது மெழுகு.
 • வேலைசெய்யும் இடத்தில் அல்லது பொழுதுபோக்கு சார்ந்த அமைப்புகளில்(கச்சேரிகள், இரவு கிளப், பார்ட்டிகள் ) ஏற்படும் சத்தங்களின் வெளிப்பாடு இவற்றுடன் ஹெட்ஃபோன்கள் அல்லது இயர்ஃபோன்களை அதிக சத்தத்தில் பயன்படுத்துதல்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

உங்களுக்கு செவித்திறன் பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், உங்களது மருத்துவரை சந்தியுங்கள்(காது சம்பந்தப்பட்ட நிபுணர்).உங்கள் மருத்துவர் உங்கள் செவித்திறன் இழப்பிற்கான காரணத்தை கண்டறிவதோடு அதை கையாளும் சிகிச்சை முறைகளையும் தீர்மானிப்பார்.காதில் மெழுகு இருப்பது காரணமென கண்டறிந்தால், அதை அகற்றுவதன் மூலம் செவித்திறன் இழப்பிற்கு நிவாரணம் பெற முடியும்.

தேவைப்பட்டால் காது கேட்பதற்கான கருவி அல்லது மாற்று அறுவைசிகிச்சையைக் கூட உங்கள் மருத்துவர் அறிவுறுத்தக்கூடும்.ஒருவேளை செவித்திறன் இழப்பு குணப்படுத்த முடியாததாக இருந்தால், உதடு அசைத்தல் மற்றும் அடையாளம் காணும் மொழியினை படிப்பதன் மூலம் மாற்றவர்களுடன் உங்களுக்கான உரையாடலை மேம்படுத்திக்கொள்ளலாம்.

குழந்தைகளில் ஏற்படும் காது கேளாமை பிரச்னையை  கீழ்கண்டவற்றால் தடுக்கலாம்:

 • தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கிக்காக எடுத்துக்கொள்ளும் தடுப்பூசி.
 • ஓரிடிஸ் மீடியா போன்ற தொற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை.
 • சத்தமான இசை /இரைச்சலை கேட்காமல் இருத்தல்.
 • குழந்தைகள் எந்த பொருளையும் காதுக்குள் சொருகிக்கொள்ளாமல் இருக்குமாறு கவனமாக பார்த்துக்கொள்தல்.

சத்தமாக இருக்கும் இடங்களில் வேலைபார்க்கும் பெரியவர்கள் காது பாதுகாப்பிற்கு தேவையானவற்றை பயன்படுத்துதல் அவசியம்.மேற்கோள்கள்

 1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Deafness and hearing loss
 2. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; WHO global estimates on prevalence of hearing loss
 3. National Research Council (US) Basics of Sound, the Ear, and Hearing. Committee on Disability Determination for Individuals with Hearing Impairments; Dobie RA, Van Hemel S. Washington (DC): National Academies Press (US); 2004. 2
 4. Thomas Zahnert et al. The Differential Diagnosis of Hearing Loss. Dtsch Arztebl Int. 2011 Jun; 108(25): 433–444. PMID: 21776317
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hearing loss

செவித்திறன் இழப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for செவித்திறன் இழப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.