பாராகோசிசையோடோமைகோசிஸ் - Paracoccidioidomycosis in Tamil

Dr. Ayush PandeyMBBS

May 04, 2019

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
பாராகோசிசையோடோமைகோசிஸ்
பாராகோசிசையோடோமைகோசிஸ்
ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

பாராகோசிசையோடோமைகோசிஸ் என்றால் என்ன?

பாராகோசிசையோடோமைகோசிஸ் ஆரம்பத்தில் நுரையீரலை தாக்கி, பின் இறுதியாக சருமம் மற்றும் உடலில் உள்ள மற்ற பகுதிகளுக்கு பரவும் ஒரு பூஞ்சை நோயாகும். பாராகோசிசையோடோமைகோசிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், இது உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம். எனினும், இது அரிதாக ஏற்படக்கூடிய பூஞ்சை நோயாகும். இந்நோய் லோபோ நோய் அல்லது பி.சி.எம் என்று பொதுவாக அறியப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பாராகோசிசையோடோமைகோசிஸ் நோய் முக்கியமாக சருமம் மற்றும் நுரையீரலை பாதிக்கிறது. அதன் அறிகுறிகள் பின்வருமாறு:

பாராகோசிசையோடோமைகோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சரும புண்கள், நிணநீர் முனைகளில் வீக்கம் ஆகிய அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். பெரியவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படலாம் மற்றும் அறிகுறிகள் அதற்கேற்ப மாறுபடும்.

இந்த தொற்று ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு கூட ஏற்படலாம். எனினும், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

மிக சில நபர்களில், இந்த பாராகோசிசையோடோமைகோசிஸ் நோயின் அறிகுறிகள் காணப்படுவதில்லை.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பாராகோசிசையோடோட்ஸ் பிராசிலியென்சிஸ் என்று அழைக்கப்படும் பூஞ்சைகளினால் பாராகோசிசையோடோமைகோசிஸ் நோய் ஏற்படுகிறது. காற்று மூலம் பரவ கூடிய பூஞ்சை வித்துக்கள் ஒருவர் மூச்சை உள்ளிழுக்கும் போது உடலினுள் நுழைகிறது. உள்ளிழுக்கப்படும் வித்துக்கள் நுரையீரலில் நுழையும் போது, அவை செயல் திறன் உள்ள பூஞ்சைகளாக மாற்றப்பட்டு பின்னர் மற்ற உடல் பாகங்கள் வரை பரவுகின்றன.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

இந்நோய் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சளி அல்லது சீழின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வக பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த தொற்று ஏற்படுவதற்கான காரணம் கணடறியப்படுகிறது. சேகரிக்கபட்ட திசு மாதிரியானது நுண்நோயிக்கியின் கீழும் பகுப்பாய்வு செய்யப்பட்டு நோய் கண்டறிதல் உறுதிசெய்யப்படுகிறது.

இரத்த பரிசோதனைகள் இந்நோய்க்கான காரணத்தை கண்டறிவதில் உதவியாக இருக்கும். இந்நோய்த் தொற்றின் தீவிரத்தைத் தீர்மானிக்க, மருத்துவர் மார்பக எக்ஸ்-ரே சோதனையை மேற்கொண்டு நுரையீரலில் பூஞ்சை தொற்று பாதித்துள்ள பகுதிகளை கண்டறிவார்.

இட்ராகன்ஜோல் மற்றும் அம்போடெரிசின் பி போன்ற பூசண எதிர்ப்பி மருந்துகளின் உதவியுடன் இந்த பாராகோசிசையோடோமைகோசிஸ் நோய்க்கு திறம்பட சிகிச்சை அளிக்கலாம். இந்த பூஞ்சை காளான் நோயிலிருந்து முற்றிலும் விடுபெற இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒருவருட காலத்திற்க்கு தொடர்ந்து இந்நோய்க்கான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டி வரும்.மேற்கோள்கள்

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Paracoccidioidomycosis.
  2. National Organization for Rare Disorders [Internet]; Paracoccidioidomycosis.
  3. Marques SA. Paracoccidioidomycosis: epidemiological, clinical, diagnostic and treatment up-dating. An Bras Dermatol. 2013 Sep-Oct;88(5):700-11. PMID: 24173174
  4. Ramos-E-Silva M,Saraiva Ldo E. Paracoccidioidomycosis. Dermatol Clin. 2008 Apr;26(2):257-69, vii. PMID: 18346557
  5. Department for International Development [Internet]; Government of UK. Pharmacological interventions for paracoccidioidomycosis.

பாராகோசிசையோடோமைகோசிஸ் க்கான மருந்துகள்

பாராகோசிசையோடோமைகோசிஸ் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹58.8

20% छूट + 5% कैशबैक


₹172.2

20% छूट + 5% कैशबैक


₹158.2

20% छूट + 5% कैशबैक


₹107.8

20% छूट + 5% कैशबैक


₹117.6

20% छूट + 5% कैशबैक


₹147.0

20% छूट + 5% कैशबैक


₹227.5

20% छूट + 5% कैशबैक


₹90.3

20% छूट + 5% कैशबैक


₹147.0

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 215 entries