உப்பு குறைபாடு - Salt Deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

May 12, 2019

March 06, 2020

உப்பு குறைபாடு
உப்பு குறைபாடு

உப்பு குறைபாடு என்றால் என்ன?

உப்பு உணவில் இயற்கையாக காணப்படுகிறது, ஆனால் பெரும்பாலான நேரங்களில், உணவு தயாரிக்கையில் உப்பு சேர்க்கப்படுகிறது.உப்பு அல்லது சோடியம் குளோரைடு என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அளவு ஆகியவற்றை பராமரிக்க உதவுகிறது.இது உடல் திரவ சமநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது.உடலில் உப்பின் அளவுகள் குறைந்து காணப்படும் நிலைமையே இரத்தச் சோடிய உப்புக்குறை மற்றும் /அல்லது தாழ்குளோரைடிரத்தம் என அழைக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

உப்பு குறைபாட்டின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

உப்பு குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • உடலில் அதிக அளவு திரவம் அல்லது நீர் இருத்தல்.
  • உப்பு அல்லது உப்பு மற்றும் திரவம் ஆகிய இரண்டையும்  உடலில் இருந்து இழத்தல்.
  • சிறுநீரக செயலிழப்பு.
  • நெஞ்சடைப்பு.
  • குறைந்த தைராய்டு அளவுகள் போன்ற சில ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம்.
  • மருந்துகள் (சிறுநீரிறக்கிகள், வலி நிவாரணிகள் மற்றும் மனஅழுத்தம் நீக்கிகள்).
  • வெகுநீர்வேட்கை (அதிகபடியான தாகம்).
  • கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நோயாளியின் மருத்துவ பின்புலம் மற்றும் உடல் பரிசோதனை செய்வதன் மூலம் உப்பு குறைபாடு கண்டறியப்படுகிறது.இரையக குடலிய, நரம்பியல், இதயம், சிறுநீரக மற்றும் அகஞ்சுரக்குந் தொகுதி போன்றவற்றில் உள்ள பிரச்சினைகளை குறிப்பாக பார்க்கவேண்டும்.கிரியாட்டினைன் அளவு சோதனை, முழு வளர்சிதை மாற்ற குழும சோதனை, சிறுநீரகம் மற்றும் இரத்தத்தில் உள்ள சோடியம் மற்றும் குளோரின் அளவு சோதனைகள் போன்ற ஆய்வக சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் பிற சோதனைகள் செய்யப்படுகின்றன.

உப்பு குறைபாட்டிற்கு அதன் அடிப்படை காரணத்தின் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.உப்பு குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பின்வருமாறு:

  • சோடியம் கரைசல் வாய்வழியாக அல்லது நரம்பூடாக (நரம்பு வழியாக) செலுத்துதல்.
  • சிறுநீரகங்கள் உடலில் இருந்து கூடுதலான நீரை அகற்ற உதவும் கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல்.
  • உடலில் உப்பு அளவைத் தக்கவைக்கும் மருந்துகள்.
  • வலிப்புத்தாக்கங்கள், குமட்டல் மற்றும் தலைவலி உள்ளிட்ட உப்பு குறைபாடு அறிகுறிகளை நிர்வகிக்கும் மருந்துகள்.
  • போதுமான உப்பு அளவுகளுடன் கூடிய இஉணவுத் திட்டம்.
  • குறுகிய கால சிகிச்சையில் மருந்துகளை சரிசெய்தல் மற்றும் நீர் உட்கொள்ளுதலை குறைத்தல் ஆகிய சிகிச்சைகள் தில் அடங்கும்.



மேற்கோள்கள்

  1. Michael M. Braun et al. Diagnosis and Management of Sodium Disorders: Hyponatremia and Hypernatremia. Am Fam Physician. 2015 Mar 1;91(5):299-307. American Academy of Family Physicians.
  2. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Hyponatremia
  3. National Kidney Foundation [Internet] New York; Hyponatremia
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Salt
  5. National Health Portal [Internet] India; Global Iodine Deficiency Disorders Prevention Day

உப்பு குறைபாடு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்