குறுகிய குடல் நோய்க்குறி என்றால் என்ன?

குறுகிய குடல் நோய்க்குறி என்பது சிறு குடலில் சத்துக்கள் ஒழுங்காக உறுஞ்சப்படாத ஒரு அரிதான நிலை ஆகும்.இது பெரும்பாலும் சில தீவிர நோய்களின் விளைவாக அல்லது சிறுகுடலின் ஒரு சிறிய பகுதியை அல்லது சிறுகுடலை முழுமையாக நீக்குவதன் காரணமாக ஏற்படுகிறது.பெருங்குடல் செயலிழப்பு கூட ஒரு சில நேரங்களில் குறுகிய குடல் நோய்க்குறி என்று குறிப்பிடப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நோயின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

  • தசைப்பிடிப்பு.
  • களைப்பு.
  • பலவீனம்.
  • வயிறு உப்பல்.
  • நெஞ்செரிச்சல்.
  • வெளிர்ந்த நிறத்தில் மலம்.
  • குழந்தைகளின் மோசமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.
  • இரும்பு மற்றும் துத்தநாக குறைபாடு.

வைட்டமின் பற்றாக்குறையுடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • சிறுகுடலில் ஒரு பகுதி அல்லது சிறுகுடலை முழுமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்: இது திசுச்சிதைவு குடலழற்சி, குரோன்'ஸ் நோய், குடல் குலைவுரு நோய் மற்றும் புற்றுநோய்.
  • சிறுகுடலின் தவறான செயல்பாடு.

பிற காரணங்கள் பின்வருமாறு:

  • அதிர்ச்சி காரணமாக குடல் காயம் .
  •  ஹிர்ஸ்ச்ஸ்பரங்'ஸ் நோய்.
  • கதிர்வீச்சு சிறுகுடல்அழற்சி.
  • போதுமான இரத்த ஓட்டம் இல்லாமை காரணமாக குடலுக்கு சேதம் ஏற்படுதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

குறுகிய குடல் நோய்க்குறியைக் கண்டறிவதில் மருத்துவ வரலாறு, பரிசோதனை மற்றும் விசாரணை உதவும்.

பரிசோதனைகள் பின்வருமாறு:

  • இரத்த சோதனைகள்: தாது மற்றும் வைட்டமின் அளவுகள்.
  • மலக்கழிவு சோதனைகள்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடலின் எக்ஸ்-கதிர்கள் சோதனை.
  • குடலின் சி.டி ஸ்கேன்.

குறுகிய குடல் நோய்க்குறி சிகிச்சை பாதிக்கப்பட்ட குடல் பகுதி மற்றும் நோயின் தீவிரத்தன்மையைச் சார்ந்தது.

ஊட்டச்சத்து குறைபாடுகளை சமாளிக்க வாய்வழி நீரேற்றம் மற்றும் வைட்டமின் மற்றும் தாதுப் பிற்சேர்வுகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

விரைவான மீட்சிக்காக சிரைவழி திரவங்கள் நிர்வகிக்கப்படலாம்.

சில நேரங்களில் மூக்கு அல்லது வாய் வழியாக நுழையும் ஒரு குழாய் மூலம் உணவளித்தல் தேவைப்படலாம்.நோயாளிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உணவளிக்க வேண்டும்.

இந்த நிலைமையில் அறுவை சிகிச்சை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் கொழுப்புச்சத்துள்ள பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.

Read more...
Read on app