நெஞ்செரிச்சல் - Heartburn in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

January 10, 2019

September 10, 2020

நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல்

சுருக்கம்

பெரும்பாலும், நாம் 'நெஞ்செரிச்சல்' என்ற வார்த்தையை ஒரு கோளாறு அல்லது இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனை என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில், 'பைரோசிஸ்' எனப்படும் நெஞ்செரிச்சல், மருத்துவ சொற்களில், உணவுக்குழாயில் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும். இது ஒரு நோயல்ல, ஆனால் உணவு குழாய் மற்றும் அதன் செரிமானப் பாதை (இரைப்பை குடல்) செயல்பாட்டில் ஏதேனும் அசாதாரணத் தன்மை ஏற்பட்டதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். நெஞ்செரிச்சல் என்பது GERD-ன்  (காஸ்ட்ரோ-ஓசோபாகல் ரிஃப்ளக்ஸ் நோய்) மிகவும் பொதுவான அறிகுறியாகும். இது மார்பு பகுதியில் ஒரு எரியும் உணர்வு உணர்வது ஆகும். பொதுவாக, அது அமிலத்தன்மை(அசிடிட்டி) அல்லது உயர் அமிலத்தன்மை(ஹைபர் அசிடிட்டி) என அறியப்படுகிறது. இதன் சிகிச்சையில்  பொருத்தமான மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் வாழ்க்கை முறையிலும் உணவிலும் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.

நெஞ்செரிச்சல் அறிகுறிகள் என்ன - Symptoms of Heartburn in Tamil

நெஞ்செரிச்சல் தொடர்பான அறிகுறிகள் மிகவும் குறைவானவை மற்றும் அடையாளம் காண எளிதானவை. அவை:

 • இரவில் பெரும்பாலும் சாப்பிட்ட பிறகு மார்புப் பகுதியில் ஏற்படக்கூடிய ஒருவித எரியும் வலி (இரவு உணவிற்கு பின்னால் உடனே தூங்குவதால்).
 • வாயில் கசப்பான அல்லது அமிலச் சுவை.
 • விழுங்குவதில் சிரமம் (டிஸ்ஃபேஜியா).
 • இருமல் மற்றும் தொடர்ந்து தொண்டை புண் (அமிலம் எதுக்களித்து தொண்டைக்கு வருவதன் காரணமாக தொண்டையில் எரிச்சல்).
 • வாந்தி.
 • நீர் வெடிப்பு' (வயிற்று அமிலம் உணவுக்குழாயில் நுழைவதால் உமிழ்நீர் சுரப்பியின் அதிகப்படியாக செயல்படுவதன் காரணமாக அதிகப்படியான நீர் அல்லது எச்சிலை உமிழ்தல்).
 • வயிற்று அமிலம் தொண்டையின் எரிச்சல் அதன் காரணமாக லாரின்ஜிடிஸ்.
 • அஞ்சினா என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நெஞ்சு வலி.

நெஞ்செரிச்சல் தடுத்தல் - Prevention of Heartburn in Tamil

நெஞ்செரிப்பினை சமாளிக்க மிக முக்கியமான வழி சரியான காரணத்தை கண்டுபிடிப்பதே ஆகும். எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், நெஞ்செரிச்சலை எளிதில் தடுக்கலாம். அவை பின்வருமாறு:

 • சிறிது சிறிதாக  மற்றும் அடிக்கடி உணவு சாப்பிடுவதால் வயிற்றில் சுரக்கும் அமிலம் முழுமையாக அவ்வுணவை செரிக்க பயன்படுத்தப்படுகிறது இதனால் அதிகப்படியான அமிலம் வயிற்றில் சுரந்து நெஞ்செரிச்சலை தூண்டுவது தடுக்கப்படுகிறது.
 • இடுப்புக்கு மேலே மார்பு மற்றும் தலையை உயர்த்தி தூங்குவதற்ற்கு வசதியாக உங்கள் தலையணையை வைத்து தூங்குங்கள் அல்லது உங்கள் படுக்கையின் அளவை உயர்த்தி வைத்து தூங்குவதன் மூலம் உங்கள் தூங்கும் முறையில் மாற்றங்கள் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால், வயிற்றில் உள்ள அமிலம் உங்கள் தொண்டைக்குச் செல்லாமல் தடுக்கலாம்.
 • உடல் பருமன் காரணமாக நெஞ்செரிச்சல் என்றால் எடையை குறைக்க முயற்சி செய்யவும்.
 • மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக நெஞ்செரிச்சல் என்றால் அவற்றை குறைக்க முயற்சி செய்யவும்.
 • உங்கள் நெஞ்செரிச்சலை தூண்டக்கூடிய உணவை தவிர்க்கவும். காஃபின் தவிர்க்கப்பட வேண்டும்.
 • அடுத்த வேலை உணவு மற்றும் தூங்க செல்லும் நேரத்திற்கு இடையே (3-4 மணி நேரம்) போதுமான நேர இடைவெளி அவசியம்.
 • மது குடிக்கவோ புகைபிடிக்கவோ கூடாது.
 • சில மருந்துகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும் எனவே உங்கள் மருத்துவரது ஆலோசனை மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
 • இடுப்பை சுற்றி இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.

நெஞ்செரிச்சல் சிகிச்சை - Treatment of Heartburn in Tamil

எளிமையான வாழ்க்கை முறை நடவடிக்கைகளே நெஞ்செரிச்சலைக் குறைக்க போதுமானதாக இருக்கிறது. பெரும்பாலும், அண்டாக்சிட் ஜெல் போன்ற ஓவர் தி கவுண்டர் மருந்துகள் உடனடி நிவாரணம் வழங்குகிறது. பின்வரும் மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

 • வயிற்று அமிலங்களை சீராக்க உதவுகின்ற அண்டாக்சிட்-கள் (அமைப்புமுறை மற்றும் அமைப்புமுறை அல்லாத). எடுத்துக்காட்டு- அலுமினியம் ஹைட்ராக்சைடு ஜெல், சோடியம் பைகார்பனேட் முதலியன.
 • வயிற்றில் அமிலங்கள் சுரப்பதைக் குறைக்கும் ஹெச் 2- எதிர்ப்பிகள் (சிமெடிடின், ரனிடீடின், ஃபமோட்டிடின்).
 • புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் (பிபிஐ; ஓமெப்ரஸோல், பான்டோப்ரசோல், ஈசோமீப்ரசோல்) வயிற்றில் அமிலங்கள் சுரப்பதைக் குறைப்பதோடு மேலும் உணவுக்குழாயில் உள்ள புண்களை குணமடைய உதவும். இவை ஹெச் 2-எதிர்ப்பிகளை விட சிறந்தவை மற்றும் நீண்டகாலத்திற்கு நிவாரணம் அளிக்கின்றன.

மிகவும் அரிதாகவே, ஃபன்டோப்பிளிகேஷன் போன்ற அறுவை சிகிச்சை மூலம் உணவுக்குழாய் மாற்றியமைக்கப்படுகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

நெஞ்செரிச்சலை குணப்படுத்துவதற்கான சிறந்த தீர்வுகளில் வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கிமானதாக இருக்கின்றன. இதில் பின்வருவன அடங்கும்:

 • எடை குறைப்பு. இது GERD இன் அறிகுறிகளை மேம்படுத்துவதில் உதவுகிறது.
 • புளிப்பு போன்ற தக்காளி அல்லது காரமான உணவுப்பொருட்களை, அத்துடன் வறுத்த மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகள் போன்ற செரிக்க சிக்கலான உணவுகளைத் தவிர்க்கவும்.
 • தூக்கத்தின் போது எதுக்களிப்பதை தடுக்க படுக்கையின் தலை பகுதியை உயர்த்தி வைத்து படுக்கவும்.
 • தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் மற்றும் சிறிய வழக்கமான உணவுகளை உட்கொள்ளவும்.
 • நெஞ்செரிச்சல் மற்றும் உயர் அமில சுரப்பு ஆகியவற்றை குறைக்க புகைப்பிடிப்பதை நிறுத்தவும்.
 • அதிகப்படியான மது உட்கொள்ளவதை தவிர்க்கவும்.
 • நெஞ்செரிச்சலைத்  தூண்ட கூடிய இனிப்புகள் மற்றும் சாக்லேட் உட்கொள்வதை தவிர்க்கவும்.
 • ஆன்டிபயாட்டிக்ஸ் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) மற்றும் சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம், இவற்றை மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெஞ்செரிச்சல் என்ன - What is Heartburn in Tamil

நெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் உருவாகும் அமிலத்தின் தலைகீழ் ஓட்டம் காரணமாக மார்பு பகுதியில் ஏற்படும் ஒரு எரியும் உணர்வு ஆகும். பொதுவாக, அது அமிலத்தன்மை (அசிடிட்டி) என அறியப்படுகிறது. இது GERD இன் முக்கிய அறிகுறியாகும். இதனால் சில சமயங்களில் வாயில் கசப்பான அல்லது புளிப்பு சுவை போல் உணரப்படுகிறது. அதிகமாக உணவு உண்டுவிட்டு உடனே படுத்துக் கொள்வதால் இது ஏற்படுகிறது. இந்த உணர்வு ஒரு சில நிமிடங்கள் அல்லது ஒரு சில மணி நேரம் வரை நீடிக்கும். இதுபோல் அடிக்கடி நிகழ்கிறது என்றால், அது சில கடுமையான உடல் நிலை பாதிப்புக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். எனவே மருத்துவ பராமரிப்பு மற்றும் கூடுதல் உடல் நல விசாரணை இதற்க்கு தேவைப்படலாம்.

நெஞ்செரிச்சல் என்றால் என்ன?

நெஞ்செரிச்சல் (பைரோசிஸ்) என்பது மார்பு எலும்புக்கு பின்னால்(ரெட்ரோஸ்டெர்னல்) இருந்து தொண்டைக்கு மேல்நோக்கி பரவிச் செல்லும் எரியும் ஒரு வலி உணர்வு. இது வயிற்றில் இருந்து தொண்டைக்கு அமிலம் எதுக்களிப்பதால் ஏற்படும் ஒரு வகை செரிமானமாகாத நெஞ்சில் எரிவதாக தோன்றும் உணர்வு எனவும் வரையறுக்கப்படுகிறது. மேற்கோள்கள்

 1. Brian Walker Nicki R Colledge Stuart Ralston Ian Penman. link]. 1st February 2014, Churchill Livingstone; 22nd Edition. Elsevier [Internet]
 2. Am Fam Physician. 2003 Nov 15;68(10):2033-2034. [Internet] American Academy of Family Physicians; Heartburn.
 3. Brothers Medical Publishers [Internet]; API Textbook of Medicine, Ninth Edition
 4. Mark Feldman Lawrence Friedman Lawrence Brandt. Sleisenger and Fordtran's Gastrointestinal and Liver Disease E ..., Volume 1. St. Louis. Missouri: Elsevier Saunders; 3rd May 2010; 9th Edition [Internet]
 5. National Health Service [Internet]. UK; Heartburn and acid reflux.

நெஞ்செரிச்சல் க்கான மருந்துகள்

நெஞ்செரிச்சல் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।