வைட்டமின் E என்றால் என்ன?

வைட்டமின் E என்பது, ஒரு கரையக்கூடிய-கொழுப்பு வைட்டமின் மற்றும் உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்கிற ஒரு சக்திமிக்க ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். இது, இயற்கையாக பல்வேறு உணவுப் பொருட்களில் காணப்படுகிறது மற்றும் தேவைப்படும் வரை உடலினால் சேமித்து வைக்கப்படுகிறது. வைட்டமின் E, எட்டு விதமான வித்தியாசமான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஆல்ஃபா-டோக்கோபெரோல் என்பது, அவற்றில் மிகவும் செயல்திறன் மிக்க வடிவம் ஆகும். அது, கிழிதல் மற்றும் தேய்மானத்தையும் மற்றும் அடிப்படை மூலக்கூறு சேதாரத்தின் காரணமாக ஏற்படுகின்ற முதுமைத் தோற்றம் அல்லது சுருக்கங்களையும் தவிர்ப்பதில் உதவுகின்ற, உங்கள் தோலின் இயல்பான நெகிழ்த்திறனைப் பராமரிக்கிறது. தோல் மற்றும் முடிக்கான வைட்டமின் E- யின் நன்மைகள் கணக்கற்றவை. அவை பற்றி அடுத்து வரும் பகுதிகளில் விவரிக்கப்படும். ஆனால் முதலில், இந்த கிழிதல் மற்றும் தேய்மானத்துக்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விவாதிப்போம்.

அடிப்படை மூலக்கூறு சேதாரம் என்றால் என்ன?

அடிப்படை மூலக்கூறு சேதாரம் என்பது, ஒரு ஜோடியை உருவாக்கும் செயல்திறன் மிக்க, ஜோடியற்ற அல்லது தனித்த செல்கள் ஆகும். அதனால் அவை, அவற்றுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றி, உங்கள் தோல் மற்றும் உடல் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய திறனைப் பெற்றிருக்கின்றன. இந்த எதிர்வினை, உங்கள் செல்களுக்கு சேதாரம் ஏற்படக் காரணமாகிற நச்சுத்தன்மை ஆக்சிஜனேற்றம் செயல்பாட்டைத் துவங்கி வைக்கிறது. அடிப்படை மூலக்கூறு சேதாரம் முக்கியமாக உங்கள் சருமத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்தினாலும், கூடவே அது, மைய நரம்பு மணடலம், இதயநாள அமைப்பு, நோய் எதிர்ப்பு அமைப்பு போன்ற உடலின் மற்ற பாகங்களையும், திசுக்களையும் கூட பாதிக்கக் கூடும். இந்த செல்களின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகள், பின்வரும் நோய்களுக்கு காரணமாகக் கூடும்:

 • அல்சைமர் நோய் அல்லது ஞாபக மறதி போன்ற மைய நரம்பு மண்டல குறைபாடுகள்.
 • உரிய வயதுக்கு முன் கூட்டியே ஏற்படும் சுருக்கங்கள், தோலின் நெகிழ்திறன் அல்லது மென்மை இழப்பு, தோலின் மேற்பரப்பில் மாற்றம் போன்ற தோல் நோய்கள்.
 • முடி உதிர்வு, இளநரை போன்ற முடி தொடர்பான பிரச்சினைகள்.
 • மூளை முடக்குவாதம் போன்ற தன்னிச்சை நோய் எதிர்ப்பு குறைபாடுகள்.
 • குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள்.
 • மரபணுரீதியான குறைபாடுகள்.
 • இரத்தநாள அடைப்புகளின் காரணமாக ஏற்படும் தமனித் தடிப்பு.
 • பார்வை குறைதல், மங்கலான பார்வை அல்லது கண் புரை போன்ற, கண் தொடர்பான குறைபாடுகள்.
 • நீரிழிவு.

உடலில் அடிப்படை மூலக்கூறு சேதாரம் ஏற்படக் காரணம் என்ன?

அடிப்படை மூலக்கூறு சேதாரம் இயற்கையாக உருவாகிறது. இருந்தாலும், புகைப்பிடித்தல், அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் அல்லது பொறித்த/பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைமுறை காரணிகளும்; சுற்றுப்புற மாசுகள், வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும், மற்றும் உடலின் செயல்பாட்டு முறையைப் பாதிக்கக் கூடிய மற்ற பிற காரணிகளும், உடலினால் மேற்கொள்ளப்படும் மூலக்கூறு சேதாரத்தை விரைவுபடுத்துவதாக அறியப்படுகின்றன.

வைட்டமின் E, மூலக்கூறு சேதாரத்தை எதிர்த்துப் போராட எவ்வாறு உதவுகிறது?

மேலே குறிப்பிட்டுள்ள படி வைட்டமின் E, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை செறிவாகக் கொண்டுள்ளது; ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், மற்ற மூலக்கூறுகளின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் உதவுகிறது மற்றும் மூலக்கூறு சேதாரத்தின் எதிர்வினையைத் தாமதப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. இது, மூலக்கூறு சேதாரம் நடைபெறும் செல்லுக்கு, ஒரு அதிகப்படியான எலக்ட்ரான் அணுவை அளிப்பதனால், அதன் செயல்பாடுகள் மற்றும் வேதியியல் சமநிலையின்மையை குறைப்பதன் மூலம், நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 1. வைட்டமின் E- க்கான உணவு ஆதாரங்கள் - Food sources of Vitamin E in Tamil
 2. வைட்டமின் E -யின் நன்மைகள் - Benefits of Vitamin E in Tamil
 3. எவ்வாறு வைட்டமின் E எடுத்துக் கொள்வது - How to take vitamin E in Tamil ?
 4. ஒரு நாளுக்கு எவ்வளவு வைட்டமின் E? - How much Vitamin E per day in Tamil?
 5. வைட்டமின் E -யின் பக்க விளைவுகள் - Side effects of vitamin E in Tamil

வைட்டமின் E, பின்வருவன போன்ற உணவுகளில் இயற்கையாக இருக்கின்றது

 • கீரை, முட்டைக்கோசு, பச்சை முட்டைகோசு, முள்ளங்கி கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள், குறிப்பிட்ட மிளகு, மற்றும் அவரை பருப்பு போன்றவை.
 • அவகோடா.
 • வஞ்சிர மீன்.
 • கடல் உணவு.
 • கொழுப்பற்ற இறைச்சி.
 • முட்டைகள்.
 • பாதாம், வேர்க்கடலை, நார்க்கடலை, பைன் கடலை போன்ற கடலைகள்.
 • சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகள்.
 • சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், கோதுமை விதை எண்ணெய் போன்ற குறிப்பிட்ட தாவர எண்ணெய்கள்.
 • மீன் எண்ணெய்
 • பழ சாறுகள் அல்லது காலை ஊட்டச்சத்து உணவுகள் போன்ற, சில குறிப்பிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகள்.  

இந்த ஆதரங்களைத் தவிர வைட்டமின் E, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்லது சருமத்துக்கான பொதுவான ஒரு பிற்சேர்க்கைப் பொருளாக அவ்வப்போது பயன்படுத்தப்படும் மாத்திரைகள், பிற்சேர்க்கை உணவுகள் மற்றும் குழாய் மாத்திரைகள் வடிவங்களிலும் கூட கிடைக்கிறது.

Vitamin E Capsules
₹449  ₹499  10% OFF
BUY NOW

ஒரு திறன்மிக்க ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக இருப்பதால் வைட்டமின் E, மேலே நாம் விவாதித்தவாறான செயல்பாட்டு முறையில், அடிப்படை மூலக்கூறு சேதாரத்தில் இருந்து தோல் மற்றும் முடியைப் பாதுகாப்பதாக அறியப்படுகிறது. வைட்டமின் E, தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், மிகவும் ஆழமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அது, வைரஸ்கள், நுண்ணுயிரிகள், மற்றும் பிற நோய்க்காரணி உயினங்களுக்கு எதிராக போராடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டினை அதிகரிக்கவும் கூட உதவுகிறது. மேலும் அது, ஆர்.பி.சி- க்களை உருவாக்குவதில் மற்றும் உடலினால் வைட்டமின் K எடுத்துக் கொள்ளப்படுவதை அதிகரிப்பதில் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல், வைட்டமின் E, அதன் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளின் காரணமாக, உடலியல் செயல்பாடுகள் மற்றும் உடலின் ஒட்டு மொத்த செயல்முறையை அதிகரிக்கக் கூடிய, பல்வேறு உடல் உறுப்புகள் மற்றும் அமைப்புகளை, பாதுகாக்கும் நடவடிக்கைகளை கொண்டிருக்கிறது.

 • இளமையான தோற்றம் அளிக்கும் சருமத்துக்காக: வைட்டமின் E, உங்கள் சருமத்துக்காக நீங்கள் வாங்கக் கூடிய பொருத்தமான பிற்சேர்க்கை பொருட்களில் ஒன்று ஆகும். அது, சருமம் வறண்டு போதல் பிரச்சினைகளைத் தடுப்பதில் உதவுகின்ற வகையில், உங்கள் தோலின் மீது ஊட்டமளிக்கும் மற்றும் இதமளிக்கும் ஒரு விளைவினைக் கொண்டு இருக்கிறது. மேலும் அது, முகப்பரு வரும் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் தோல் முதிர்ச்சி அடைவதைக் குறைக்கிறது.
 • நீண்ட மற்றும் ஆரோக்கியமான முடிக்காக: உங்கள் தினசரி முடி பராமரிப்பில் வைட்டமின் E -யை சேர்த்துக் கொள்வது, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அது, முடியின் இயற்கையான எண்ணெய்களை மறுபடி தோன்றச் செய்து, உங்களுக்கு நீண்ட மற்றும் பளபளப்பான முடியை வழங்குகிறது.
 • கண்பார்வையை மேம்படுத்துகிறது: வைட்டமின் E செறிவுள்ள உணவுகள், பார்வையைப் பாதுகாக்க மற்றும் கண்பார்வையை மேம்படுத்த, கண் மருத்துவர்களால் பரவலாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இது, உணவில் வைட்டமின் E -யை சேர்த்துக் கொள்வது, கண்புரை மற்றும் கருவிழி செயலிழப்பு போன்ற முதுமையின் காரணமாக ஏற்படுகின்ற கண் குறைபாடுகளைத் தவிர்க்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
 • ஞாபக மறதியைத் தடுக்கிறது: ஆராய்ச்சி முடிவுகள், வைட்டமின் E பற்றாக்குறை, ஞாபக மறதி மற்றும் அல்சைமர் ஆகியவை ஏற்படும் அதிக பட்ச அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது என வெளிப்படுத்துகின்றன. மற்றொரு புறம், வைட்டமின் E எடுத்துக் கொள்வது, அல்சைமர் பிரச்சினையில் அறிவாற்றலை அதிகரிப்பதில் உதவிகரமாக இருப்பதாக அறியப்படுகிறது.
 • மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கிறது: வைட்டமின் E, ஒரு இயற்கையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக இருப்பதால், இதய தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் இரத்த நாளங்களில் இரத்தம் உறைந்து கட்டியாகும் அபாயத்தைக் குறைக்கிறது. இதனால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

சருமத்துக்கான வைட்டமின் E -யின் நன்மைகள் - Vitamin E benefits for skin in Tamil

வைட்டமின் E, ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து மற்றும் வயது முதிர்ச்சி அடையும் போது, தோலின் மேற்பரப்பில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவும், ஒரு இயற்கையான முதுமை எதிர்ப்பு காரணி ஆகும். ஒரு சமீபத்திய ஆய்வு, சுருக்கம் ஏற்பட்ட தோலின் மீதான வைட்டமின் E -யின் நன்மைகளை நிரூபித்தது; வைட்டமின் E பிற்சேர்க்கை பொருட்கள் கொடுக்கப்பட்ட நபர்களுக்கு, அவர்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோற்றத்தை மேம்படுத்துகின்ற வகையில், தோலின் நெகிழ்திறன் மற்றும் நிறத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. இது, சூரியன், மாசுக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் காரணிகளின் காரணமாக, தோலில் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் செய்யப்படுகிறது.

வைட்டமின் E உணவுகள், சேதத்தை எதிர்த்துப் போராடுவதோடு, கூடவே வறண்ட சருமத்தைப் பராமரிப்பதிலும் கூட உதவுகின்றன.மேலும் அவை முகப்பருவுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் முகப்பருவைத் தடுப்பதிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சருமத்துக்கான வைட்டமின் E -யின் நன்மைகள் எண்ணில் அடங்காதவை மற்றும் அது, 1950களில் இருந்தே, தோல்நோய் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வறண்ட சருமத்துக்கு நல்ல பலனைப் பெற வைட்டமின் E -யை, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரவு க்ரீம் அல்லது களிம்புடன் கலந்து கொள்ளலாம். அது ஒரு இயற்கையான ஈரப்பதம் அளிக்கும் காரணியாக இருப்பதால், வறண்ட சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டு எடுக்கிறது. இதனால், வைட்டமின் E -யை மேற்பூச்சாகத் தடவுவது அனைத்து இடங்களில் ஏற்படும் வறண்ட தன்மையையும் குணப்படுத்த உதவுவதால், அது விரிசல் விழுந்த தோல் அல்லது வெடிப்புற்ற உதடுகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

(மேலும் படிக்க: முகப்பரு சிகிச்சை)

பல்வேறு ஆய்வுகளின் மூலம் இந்த நன்மைகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. 'பிளாஸ்டிக், மறுகட்டுமான & அழகுக்கலை அறுவை சிகிச்சை பற்றிய நாளேடு'வில் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வுக்கட்டுரை, வைட்டமின் E சிகிச்சை எடுத்துக் கொண்ட, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தை நோயாளிகளுக்கு, தழும்புகள் ஏதும் ஏற்படவில்லை என வெளிப்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் இருந்தவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னர் தினமும் மூன்று முறையும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தினமும் இரண்டு முறையும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் வைட்டமின் E மேற்பூச்சாகத் தடவப்பட்டது; மற்றொரு குழுவுக்கு, அதே போன்ற முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில், ஒரு பெட்ரோலியம் அடிப்படையிலான மருந்து தடவப்பட்டது. வைட்டமின் E எடுத்துக் கொண்ட குழுவோடு ஒப்பிடும் போது, ஆறு மாத கால கட்டத்தில் வைட்டமின் E எடுத்துக் கொண்ட குழுவினருக்கு 0% தழும்பு ஏற்பட்ட நிலையில், மற்றொரு குழுவுக்கு 6.5% அளவுக்கு தழும்புகள் ஏற்பட்டு இருந்தன.

இது, உங்கள் தோலின் மீது வைட்டமின் E கொண்டிருக்கும் அற்புதமான விளைவுகளைக் காட்டுகிறது, மேலும், ஒரு ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்துக்காக உங்கள் தினசரி சரும பராமரிப்பு நடைமுறையில், இந்த அருமையான வைட்டமினை கேள்விகள் ஏதும் இன்றி சேர்த்துக் கொள்ள, உங்களை ஊக்குவிக்கிறது.

முடிக்காக வைட்டமின் E எண்ணெய் - Vitamin E oil for hair in Tamil

நீங்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அழகு சாதன மற்றும் கேசத்துக்கான பொருட்களில், வைட்டமின் E ஒரு முக்கியமான உட்பொருள் என உங்களுக்குத் தெரியுமா?  இது, உங்கள் உடல் செல்களின் இந்த வைட்டமினின் அதிர்ச்சியூட்டும் விளைவுகளுக்கு காரணமாக இருக்கக் கூடும். வைட்டமின் E, உடலின் செல்களை பாதுகாக்கிற அதே வேளையில், புதிய செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதிலும், மற்றும் செல்களுக்கு ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதிலும் கூட திறன்மிக்கதாக இருக்கிறது. வைட்டமின் E, அடிப்படை மூலக்கூறு சேதாரத்தின் காரணமாக ஏற்படும் சேதத்தைக் குறைப்பதன் மூலம், உங்கள் முடியை விரும்பத்தகாத வறட்சி மற்றும் சிக்கலில் இருந்து பாதுகாத்து, அவற்றைப் பராமரிக்க எளிதாக்குகிறது. அதன் புத்துயிர் அளிக்கும் பண்புகள், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்கள் முடிகளுக்கு வைட்டமின் E -யின் நன்மைகள் மற்றும் இந்த நன்மைகளை சிறந்த முறையில் பெற, இந்த வைட்டமினை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பன பற்றி நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.

முடி உதிர்வுக்காக வைட்டமின் E

வைட்டமின் E, முடி உதிர்வு மற்றும் முடி இழப்பைத் தடுப்பதாக அறிப்படுகிறது. மேலும் அது, முடி உதிர்வால் பாதிக்கப்படும் நபர்களுக்கு, முடி மறுவளர்ச்சி செயல்முறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, தனி மனிதர்களுக்கு ஏற்படும் முடி உதிர்வுக்கான காரண காரணியாக அறியப்படும் ஆக்சிஜினேற்ற நச்சுத்தன்மையைக் குறைப்பதன் மூலம் செய்யப்படுகிறது. 

நீண்ட கேசத்துக்காக வைட்டமின் E

உங்கள் தினசரி நடைமுறையில் வைட்டமின் E - யை சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் கனவு கண்டு கொண்டிருந்த பளபளப்பான நீண்ட கூந்தலை, நீங்கள் இப்போது பெற முடியும். வைட்டமின் E, திறன்மிக்க முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிற வகையில் உங்கள் முடி வேர்க்கால்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவினை அதிகரிப்பதுடன் சேர்ந்து, உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. உச்சந்தவையில் சிறந்த ஒரு இரத்த சுழற்சி மற்றும் பாய்தலை அளித்து, அதன் மூலம் உங்கள் நீண்ட கூந்தல், கச்சிதமான பளபளப்பு மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கவும், அவை மேலும் வளரும் போது வறண்டு அல்லது உடைந்து விடாமல் இருக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான கேசம் மற்றும் உச்சந்தலைக்காக வைட்டமின் E

உங்கள் முடி அதன் இயற்கையான ஈரப்பதம் மற்றும் எண்ணெய்களை இழக்கின்ற பொழுது, அது வறண்டு மற்றும் உடைந்து போக ஆரம்பிக்கிறது. வைட்டமின் E பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவது அல்லது உங்கள் உச்சந்தலையை மூடிக் கொள்வது மூலம், உங்கள் முடியில் இருந்து இயற்கையான எண்ணெய்களை இழப்பதைத் தவிர்ப்பதில் உதவுகிறது. இது, வெளிப்புற சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்களின் தொடர்பைத் தவிர்த்து, முடியின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. வைட்டமின் E, உங்கள் முடியின் இயற்கையான எண்ணெய்களை மீட்டெடுக்கும் அதே வேளையில், அது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கவும் செய்கிறது. வைட்டமின் E -யின் இந்த விளைவுகள், உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் பளபளப்பான கேசத்தை உறுதியாக வழங்குகிறது.

நீங்கள் கனவு காணும் கேசத்தைப் பெற, மேலே கூறப்பட்ட ஆதாரங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் உணவில் வைட்டமின் E -யை நீங்கள் சேர்த்துக் கொள்ள இயலும். மேலும் நீங்கள், முடி, உச்சந்தலை மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த, வைட்டமின் E மாத்திரைகள் மற்றும் பிற்சேர்க்கை பொருட்களையும் கூட எடுத்துக் கொள்ள முடியும். வைட்டமின் E -யை உட்பொருளாகக் கொண்டிருக்கும் சரும பராமரிப்பு மற்றும் கேச பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதும் கூட உதவிகரமாக இருக்கிறது. பொதுவாக வைட்டமின் E, மேலுறையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட எண்ணெய்கள், சரும களிம்புகள், க்ரீம்கள், முடி க்ரீம்கள், ஷாம்புகள் மற்றும் கட்டுப்படுத்திகள் ஆகியவற்றில் இருக்கிறது. இந்தப் பொருட்களை மேற்பூச்சாகத் தடவுவதும் அதே அளவு திறன்மிக்கதாக இருக்கிறது. இருப்பினும், உங்கள் மருத்துவர் அல்லது தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்படாவிடில், நீங்கள் பிற்சேர்க்கை பொருட்கள் மற்றும் மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கண்களுக்காக வைட்டமின் E - Vitamin E for eyes in Tamil

உங்களில் பெரும்பாலோருக்குத் தெரிந்த மாதிரியே, கொட்டைகள் மற்றும் விதைகள், அவற்றின் கண்களின் மீதான நன்மை பயக்கும் விளைவுகளுக்காகப் புகழ் பெற்றவையாக இருக்கின்றன. மேலும் அவை, சிறந்த கண்பார்வை மற்றும் காட்சியை அளிக்கக் கூடிய ஒரு ஆதாரமாகக் கருதப்படுகின்றன. இந்த உணவுகள், இவற்றின் கண்களைப் பாதுகாக்கும் மற்றும் கண்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொறுப்பையுடைய வைட்டமின் E -யை, அதிக அளவில் கொண்டிருக்கின்றன.

பாதிப்புகளைத் தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் கண் பராமரிப்புக்காக, கண்மருத்துவர்கள், தினசரி எடுத்துக் கொள்ளும் வைட்டமின்களுடன் கூடுதலாக வைட்டமின் E செறிவான பிற்சேர்க்கைகளை, உணவுடன் எடுத்துக் கொள்ள  பரவலாகப் பரிந்துரை செய்கிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மூலம், தினசரி வைட்டமின் E பிற்சேர்க்கை உணவுகளை எடுத்துக் கொள்வது, முதுமை தொடர்புடைய தசைநார் தேய்வு பிரச்சினையின் முற்றிய நிலைக்கு செல்லும் அபாயத்தை 25% அளவுக்கு குறைக்கிறது எனவும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பலன்களைப் பெற பரிந்துரைக்கப்பட்ட, எடுத்துக் கொள்ளும் அளவு, 400 ஐ.யு ஆகும். இருந்தாலும், இந்த வைட்டமினை தினசரி எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட அளவு 22.5 ஐ.யு (1. ஐ.யு என்பது 0.9 மி.கி டோக்கோஃபெரல்க்கு சமம்) ஆகும்.

மற்ற ஆய்வுகளும் கூட, ஆல்ஃபா-டோக்கோஃபெரல் (வைட்டமின் E -யின் ஒரு மூலக்கூறு), லுடேயின் மற்றும் ஜியாக்ஸ்ன்தின் ஆகியவற்றுடன் இணைந்து, கண்புரை வளரும் அபாயத்தைக் குறைக்கின்றது என நிரூபித்திருக்கின்றன. இருப்பினும் இவை, முறையான ஒரு பரிந்துரை மற்றும் பக்க விளைவுகளைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது..

நோய் எதிர்ப்பு சக்திக்காக வைட்டமின் E - Vitamin E for immunity in Tamil

வைட்டமின் E ஒரு திறன்மிக்க ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக இருப்பதால், பாதுகாப்பளிக்கும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கங்களை மேம்படுத்துவதில் திறன்மிக்கதாக இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளில் வைட்டமின் E, நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கிறது, மற்றும் இந்த வைட்டமினில் ஏற்படும் பற்றாக்குறை, தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதோடும் மற்றும் கட்டிகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதோடும் தொடர்புடையதாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..

செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலைகளில், வயது மூப்படைவதன் ஒரு பின்விளைவாக அல்லது எய்ட்ஸ், புற்றுநோய், இன்ன பிற நோய்களின் காரணமாக நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் நிலைகளில், இந்த வைட்டமினை அளிப்பது மிகவும் திறன்மிக்கதாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் அது, நோயில் இருந்து மீண்டு வருவதை அதிகரிக்கிறது மற்றும், கீமோ அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போன்ற சிகிச்சைகளின் காரணமாக ஏற்படும், திசுக்களின் சேதத்தில் இருந்து மீள்வதை ஊக்குவிப்பதிலும் கூட உதவுவதாக அறியப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகளின் காரணமாக, வைட்டமின் E, ஒரு திறன்மிக்க ஊட்டச்சத்து மற்றும் அதன் பிற்சேர்க்கை அளிப்பு மிகவும் திறன்மிக்கது மற்றும் தேவையானதும் கூட. குறிப்பாக முதுமைப்பருவத்தில் என நன்கு தெரிகிறது.

(மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது)

வைட்டமின் E மற்றும் புற்றுநோய் - Vitamin E and cancer in Tamil

வைட்டமின் E -யின் பாதுகாப்பளிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே விவாதிக்கப்பட்டு இருக்கிறது, ஆனால், புற்றுநோய் செல்கள் மீது வைட்டமின் E -யின் நேரடியான விளைவுகள் பற்றிய முடிவுகள் இன்னமும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. இருப்பினும், உணவுடன் சேர்த்து பிற்சேர்க்கை பொருளாக இயற்கை ஆதாரங்கள் மூலம் வைட்டமின் E -யை அளிப்பது, அதிகமான புற்றுநோய் எதிர்ப்பு அளிக்கக்கூடியது. ஆனால் இன்னமும், விளைவுகள் பற்றிய ஆய்வுகள் நன்கு அறியப்படாததாலும், உறுதியாக நிரூபிக்க முடியாததாலும், ஒரு குறிப்பிட்ட வகை வைட்டமினை, மாத்திரைகள் அல்லது கூடுதல் பிற்சேர்க்கை உணவு வடிவில் எடுத்துக் கொள்வது அறிவுறுத்தத்தக்கது அல்ல.

வைட்டமின் E மற்றும் ஞாபக மறதி - Vitamin E and dementia in Tamil

வைட்டமின் E -யின் பாதுகாப்பளிக்கும் செயல்பாடுகள் மற்றும் அதன், உடல் செல்களுக்கு ஏற்படும் சேதத்தை சீரமைக்கும் பண்புகளுக்காகவும், ஞாபக இழப்பு மற்றும் தினசரி நடவடிக்கைகளை செய்யும் திறன் குறைதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் அல்சைமர் நோய் மற்றும் ஞாபக மறதியின் அறிகுறிகள் வளர்வதைத் தடுப்பதற்கு, இந்த வைட்டமினைப் பயன்படுத்த அறிவுத்துமாறு செய்கின்றன. வயதுடன் கூடவே அதிகரிக்கும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மை, மனிதர்களிடம் ஏற்படும் இந்த முதுமை தொடர்பான மாற்றங்களுக்கு காரணமாக அறியப்பட்டிருக்கிறது; வைட்டமின் E, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மைக்கு சரியான எதிர்விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதனால், இது போன்ற நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள், மூளைத்தண்டுவட நீர் மற்றும் இரத்த நிண நீரில், நமது உடலில் ஏற்படும் சீர்குலைவு மாற்றங்களுக்குப் பொறுப்பாகிற, குறைவான அளவு வைட்டமின் E -யைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த கண்டுபிடிப்புக்களைக் கருத்தில் கொள்ளும் போது, வைட்டமின் E -யைப் பயன்படுத்துவது, அல்சைமர் நோய் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றின் அறிகுறிகள், குறிப்பாக ஆரம்ப நிலைகளில், வளருவதைத் தவிர்க்க உதவுவது போன்று தான் தோன்றுகிறது.

இந்த நோயின் முற்றிய நிலைகளில் இதன் பலன்கள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை, மேலும், மூளைக்கு ஏற்பட்ட சேதத்தின் அறிகுறிகளை சரி செய்து பழைய நிலைக்கு கொணர இயலாது. இருந்தாலும், ஞாபக மறதி அல்லது ஏ.டி- யால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வைட்டமின் E அழிப்பதன் மூலம், சாப்பிடுவது, சுத்தப்படுத்துவது, குளிப்பது போன்ற தினசரி நடவடிக்கைகளை செய்வதில் அவர்களின் திறன் மேம்பட்டு இருப்பது கண்டறிப்பட்டு இருக்கிறது.

இந்த பிற்சேர்க்கை பொருட்களில் எந்தவித பக்க விளைவுகளோ அல்லது நச்சுத்தன்மையோ இருப்பதாக அறியப்படவில்லை. ஆனால், இந்த பிற்சேர்க்கை பொருட்களை எடுத்துக் கொள்ளும் காலத்தில், நோயாளிகளை மிகவும் கவனமான, தொடர்ந்த கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

இதயத்துக்கான வைட்டமின் E -யின் நன்மைகள் - Vitamin E benefits for heart in Tamil

வைட்டமின் E, அதன் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்கும் திறன்களின் காரணமாக இதயத்தைப் பாதுகாக்கும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. அவை, இரத்தம் உறைந்து கட்டியாவதைத் தடுக்கின்றன என்பதால், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை குறைக்க, மிகவும் சிறப்பான முறையில் உதவுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அதிகமான கட்டிகள் உருவாதல் அல்லது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கின்றன. வைட்டமின் E எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றை சமாளிக்க இயலும். இருப்பினும், அது எதிர்விளைவைக் கொடுக்கக் கூடும் என்பதால், அளவுக்கு அதிகமாக அதை எடுத்துக் கொள்வது கண்டிப்பாகக் கூடாது.

மேலே விவரிக்கப்பட்டவாறு, வைட்டமின் E -யை, உங்கள் உணவுடன் இயற்கையான வழியில் சேர்த்துக் கொள்ள இயலும் அல்லது, மாத்திரைகள் அல்லது குழாய் மாத்திரைகள் வடிவத்தில், ஒரு பிற்சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தலாம். அது, தோல் களிம்புகள், க்ரீம்கள் மற்றும் முடிக்கான எண்ணெய்கள் வடிவத்திலும் கூட கிடைக்கின்றது. முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வைட்டமின் E -யை நீங்கள் பயன்படுத்தக் கூடிய சில வழிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வைட்டமின் E முடி கவசம் - Vitamin E hair mask in Tamil

முடி கவசங்கள், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மற்றும், உச்சந்தலைக்கு இதமளிப்பது மற்றும் ஊட்டமளிப்பதில் மிகவும் திறன் வாய்ந்தவை. இந்த அனைத்துத் தேவைகளையும் வைட்டமின் E தீர்த்து வைக்கிறது. வீட்டிலேயே உங்கள் முடி கவசத்தை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என கீழே காணலாம்.

 • ஒரு தேக்கரண்டி அவகோடா எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யுடன், ஒரு கூழாக்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் அவகோடா பழத்தை கலக்கவும். இப்பொழுது, ஒரு நல்ல பசை அல்லது கவசத்தை உருவாக்க, அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்க்கவும்.
 • உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் கைகளை கொண்டு, இந்த கவசத்தை தேய்த்துக் கொடுக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடவும். பிறகு ஒரு மென்மையான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் கொண்டு மென்மையாகக் கழுவி விடவும்.

சருமத்துக்காக வைட்டமின் E மாத்திரைகள் - Vitamin E capsules for skin in Tamil

நீங்கள் எண்ணெய் பசையான சருமம் மற்றும் முகப்பருவினால் பாதிக்கப்பட்டு இருந்தால், 2 - உட்பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய முகத்திரை வடிவத்தில், உங்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஒரு தேக்கரண்டி தேனை, வைட்டமின் E குழாய் மாத்திரையில் உள்ள திரவத்துடன், ஒரு பசை போன்று வருமாறு கலக்கவும். அதனை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பிறகு நன்கு கழுவி விடவும். நீங்கள் முகப்பரு இல்லாத, ஒரு பளபளப்பான சருமத்தை அடைவீர்கள்.

முகத்துக்காக வைட்டமின் E - Vitamin E for face in Tamil

நீங்கள் எண்ணெய் பசையான சருமம் மற்றும் முகப்பருவினால் பாதிக்கப்பட்டு இருந்தால், 2 - உட்பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய முகத்திரை வடிவத்தில், உங்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வை நாங்கள் கொண்டிருக்கிறோம். 2 தேக்கரண்டி தேனை, 2 வைட்டமின் E குழாய் மாத்திரைகளில் உள்ள திரவத்துடன், ஒரு பசை போன்று வருமாறு கலக்கவும். அதனை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பிறகு நன்கு கழுவி விடவும். நீங்கள் முகப்பரு இல்லாத, ஒரு பளபளப்பான சருமத்தை அடைவீர்கள்.

14 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு, தினசரி வைட்டமின் E  எடுத்துக் கொள்ளும் பரிந்துரைக்கப்பட்ட அளவு என்பது, இயற்கையான ஆதாரங்களில் இருந்து பெறப்படும் 22 ஐ.யு அல்லது செயற்கையான ஆதாரங்களில் இருந்து பெறப்படும் 33 ஐ.யு -வுக்கு சமமான அளவான, 15 மி.கி/நாள் ஆல்ஃபா-டோக்கோபெரல் ஆகும். இருப்பினும், பற்றாக்குறை உள்ள நிலையில், ஒரு நாளுக்கு 60-75 ஐ.யுக்கு இணையான அளவு (1 ஐ.யு  என்பது 0.9 மி.கி டோக்கோபெரல்க்கு சமமானது) பரிந்துரைக்கப்படுகிறது. இயற்கையான வைட்டமின் E, மேலே குறிப்பிடப்பட்ட உணவு ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது மற்றும் அது முழுமையான பாதுகாப்புடையது. ஆனால், சாத்தியமுள்ள பக்க விளைவுகளைத் தவிர்க்க, மாத்திரைகள் மற்றும் பிற்சேர்க்கை பொருட்கள் வடிவில் இருக்கும் செயற்கை ஆதார பொருட்களை, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற ஆரோக்கிய நோக்கங்களுக்காக நீங்கள் வைட்டமின் E எடுத்துக் கொண்டு இருந்தால், இந்த பிற்சேர்க்கை பொருட்களை எடுத்துக் கொள்ளும் நோக்கத்தோடு சேர்ந்து, வயது, எடை, பாலினம் மற்றும் பிற காரணிகளும்இருப்பதால், இந்த வைட்டமினை எடுத்துக் கொள்ளும் முன்னரும் மற்றும் எடுத்துக் கொள்ளும் கால கட்டத்திலும் உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலைப் பயன்படுத்துமாறு, நீங்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதோ ஒரு வழிகாட்டு அட்டவணை.

வயது   ஆண்கள் பெண்கள்

6 மாதங்கள் வரை

4 மி.கி 4 மி.கி

7 மாதங்கள் முதல் 1 வருடம்

5 மி.கி

5 மி.கி

1 முதல் 3 வருடங்கள்

6 மி.கி

6 மி.கி

4 முதல் 8 வருடங்கள்

7 மி.கி

7 மி.கி

9 முதல் 13 வருடங்கள்

11 மி.கி

11 மி.கி

14 வருடங்கள் மற்றும் அதற்கு மேல்

15 மி.கி

15 மி.கி

பெண்களுக்கு என மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகள் அல்லாமல், பாலூட்டும் தாய்மார்கள், கூடுதலான வைட்டமின் E எடுத்துக் கொள்ள வேண்டும். பாலூட்டும் பெண்களுக்கான வைட்டமின் E எடுத்துக் கொள்ளும் பரிந்துரைக்கப்பட்ட அளவு 19 மி.கி ஆகும்.

Multivitamin Capsules
₹649  ₹995  34% OFF
BUY NOW

வைட்டமின் E -யை தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொள்வது வழக்கமாக பாதுகாப்பானது. ஆனால், அதீதமான அளவு எடுத்துக் கொள்வது, பின்வரும் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடும்:

வைட்டமின் E உட்கொள்ளும் முன்னர் / உட்கொள்ளும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

 • ஒருவேளை நீங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால், வைட்டமின் E, பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால், நீங்கள் அதை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
 • ஏற்கனவே மாரடைப்பு அல்லது பக்கவாதம் வந்த நபர்கள், மரணம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, வைட்டமின் E எடுத்துக் கொள்வதை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து விட வேண்டும்.
 • இரத்தக்கசிவு குறைபாடு உள்ள நபர்கள், வைட்டமின் E ஒரு திறன்மிக்க இரத்த மெலிதாக்கும் காரணி மற்றும் இரத்தப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதால், அதை எடுத்துக் கொள்வதை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து விட வேண்டும். இந்த விளைவுகளின் காரணமாக, அது முக்கியமான உடல் உறுப்புகளில் இரத்தப்போக்கை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது எனவும் கூட அறியப்பட்டு இருக்கிறது. இதைப் போன்ற காரணங்களால், ஏதேனும் அறுவை சிகிச்சை அல்லது துளை சிகிச்சைக்குப் பின்னர், இதை உட்கொள்வது கண்டிப்பாகக் கூடாது.
 • வைட்டமின் E, ப்ரோஸ்டாட் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட வகை புற்றுநோய்களை வளரச் செய்யும் அபாயத்தையும் கொண்டிருக்கிறது. அது, நீங்கள் முன்னர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று இருந்தால், புற்றுநோய் திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.
 • வைட்டமின் E பிற்சேர்க்கை பொருட்கள், இதய செயலிழப்பு மற்றும் அதன் காரணமாக மருத்துவ உதவி பெறுதல் ஆகியவற்றின் அபாயத்தையும் கூட அதிகரிக்கிறது.

Medicines / Products that contain Vitamin E

மேற்கோள்கள்

 1. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Vitamin E.
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vitamin E
 3. Hahn HJ et al. Instrumental evaluation of anti-aging effects of cosmetic formulations containing palmitoyl peptides, Silybum marianum seed oil, vitamin E and other functional ingredients on aged human skin. Exp Ther Med. 2016 Aug;12(2):1171-1176. Epub 2016 Jun 9. PMID: 27446338
 4. Moriguchi S, Muraga M. Vitamin E and immunity. Vitam Horm. 2000;59:305-36. PMID: 10714244
 5. Chung S. Yang, Nanjoo Suh, Ah-Ng Tony Kong. Does Vitamin E Prevent or Promote Cancer?. May 2012 Volume 5, Issue 5. American Association for Cancer Research. [Internet]
 6. Breana Cervantes, Lynn M. Ulatowski. Vitamin E and Alzheimer’s Disease—Is It Time for Personalized Medicine?. Antioxidants (Basel). 2017 Sep; 6(3): 45. PMID: 28672782
 7. Evans JR, Lawrenson JG. Antioxidant vitamin and mineral supplements for slowing the progression of age-related macular degeneration.. Cochrane Database Syst Rev. 2017 Jul 31;7:CD000254. PMID: 28756618
 8. Huwait EA. Combination of vitamin E and L-carnitine is superior in protection against Isoproterenol-induced cardiac affection: a histopathological evidence. Folia Morphol (Warsz). 2018 Aug 14. PMID: 30106462
Read on app