ஊட்டச்சத்துக்குறைபாடு - Malnutrition in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

February 06, 2019

September 10, 2020

ஊட்டச்சத்துக்குறைபாடு
ஊட்டச்சத்துக்குறைபாடு

சுருக்கம்

ஊட்டச்சத்துக்குறைபாடு என்பது, தவறான ஊட்டச்சத்து என்று எளிமையாக அர்த்தமாகிறது. இது, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதீத ஊட்டச்சத்து இரண்டையும் உள்ளடக்கிய பரவலான வார்த்தையாகும்.. ஊட்டச்சத்து பற்றாக்குறை, உலகளவில் லட்சக்கணக்கானோரைப் பாதிக்கின்ற உலகளாவிய ஆரோக்கியப் பிரச்சினையாகும். இந்தக்கட்டுரை, உலகம் முழுவதும் அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் மேல் முதன்மையான கவனம் செலுத்துகிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு, பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்க முனைகிறது. ஊட்டச்சத்துக்குறைபாட்டின் அறிகுறிகளுள் சோர்வு, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை மற்றும் கவனக் குறைவு ஆகியவை அடங்கும். சில பிரச்சினைகளில், எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம் என்பதால், ஊட்டச்சத்துக்குறைபாட்டை கண்டறியக் கடினமாக இருக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாடு, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சமூக-பொருளாதாரக் காரணிகள் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படக் கூடும். சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால், ஊட்டச்சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கும், அதே போன்று பெரியவர்களுக்கும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் முறையாக உடல்நலப் பரிசோதனைகளுக்கு செல்வது உட்பட பல-பரிமாணங்களில் அணுகுவதைப் பின்பற்றுகிறது. சிகிச்சையின் போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவும், சிகிச்சையில் நல்ல ஒரு பலன் கிடைக்க அவசியமானதாகும். சமூகரீதியான தளத்தில், சமுதாயத்தின், சமூக-பொருளாதார நிலையில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, மருத்துவ வசதிகள் மற்றும் உணவு ஆதாரங்களை  வழங்குவது, ஊட்டச்சத்துக்குறைபாடு பரவுவது, சிக்கல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க உதவுகின்றன.

ஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன - Symptoms of Malnutrition in Tamil

ஊட்டச்சத்துக்குறைபாடு அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள்,  ஊட்டச்சத்துக்கள் முழுமையின்மையை சார்ந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் ,பொதுவான மற்றும் தனித்தன்மை வாய்ந்த அறிகுறிகளுள் அடங்கியவை:

மன நலமும் கூட, ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்படலாம். இந்த அம்சத்தில் தோன்றக் கூடிய சில அறிகுறிகள்:

 • கவனிப்பதில் சிரமம்.
 • கற்றுக் கொள்வதில் சிரமம்.
 • குழப்பம்.
 • கவனம் செலுத்துவதில் பிரச்சினை.
 • சிறிய பிரச்சினைகளைக் கூட தீர்க்க இயலாமை.

குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை, சில குறிப்பிட்ட, தனித்தன்மை வாய்ந்த அறிகுறிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும்.

எடுத்துக்காட்டாக, இரும்புச்சத்து பற்றாக்குறை, சோர்வு மற்றும் ஒரு குறிப்பிடத்தகுந்த குறைந்த கவனம் செலுத்தலையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் அயோடின் பற்றாக்குறை, மன ஒடுக்கம் மற்றும் இயல்பான உடல் வளர்ச்சியில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.

பெரியவர்களுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் (ஊட்டச்சத்துப் பற்றாக்குறை) அறிகுறிகள் பின்வருமாறு இருக்கக் கூடும்:

 • எடை இழப்பு
  எடை இழப்பு, ஊட்டச்சத்துக்குறைபாட்டின், மிகவும் வெளிப்படையான அறிகுறியாக இருக்கின்றது. இருந்தாலும், ஊட்டச்சத்துக் குறைவுடனே,  அந்த நபர், ஆரோக்கியமான எடை அல்லது கூடுதலான எடையுடன் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. 3 முதல் 6 மாத காலகட்டத்திற்குள், எந்தக் காரணமும் இல்லாமல், உடல் எடையில் 5-10% குறைவது, ஊட்டச்சத்துக்குறைபாட்டின் ஒரு அறிகுறியாக இருக்கக் கூடும். ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைவான பி.எம். ஐ (உடல் நிறை குறியீட்டெண்), ஊட்டச்சத்துக்குறைபாட்டினை சுட்டிக்காட்டுவதாகும்.
 • எடை இழப்பைத் தவிர, மற்ற அறிகுறிகளில் அடங்கியவை:
  • குறைந்த பசியுணர்வு.
  • ஆற்றலின்மை.
  • ஒருவர், வழக்கமாக, பழக்கப்பட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை.
  • கவனக் குறைபாடு.
  • எந்த நேரமும் குளிராக உணருதல்.
  • மனம் அலைபாய்தல்.
  • மன அழுத்தம் குறிகளைக் கொண்டிருத்தல்
  • காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல்.
  • விவரிக்க முடியாத சோம்பல்.
  • அடிக்கடி நோய்வாய்ப்படுதல்.

ஊட்டச்சத்துக்குறைபாடு சிகிச்சை - Treatment of Malnutrition in Tamil

ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, அதன் காரணத்தையும், கடுமையையும் பொறுத்து இருக்கிறது. ஒரு நபருக்கு. ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கலாம். சில நிலைகளில், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படலாம். சிகிச்சையின் முதன்மையான நோக்கம், ஏதேனும் சிக்கல்கள் தோன்றும் அபாயத்தைக் குறைப்பதாகும்.

வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை

 • சிகிச்சை வீட்டிலேயே மேற்கொள்வதாக இருந்தால், உடல்நல ஆலோசகர், மறுபடியும் ஆரோக்கியமாவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய உணவுப்பழக்க மாறுதல்களைப் பற்றி எடுத்துரைப்பார். உங்கள், அதேபோன்று உங்கள் குடும்பத்தாரிடம் இருந்து உள்ளீடுகளைப் பெற்ற பின்பு பெரிதாகக் கூடிய, ஒரு ஊட்டச்சத்து கவன திட்டமும் உங்களுக்கு வழங்கப்படலாம்.
 • கார்போஹைடிரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதை, படிப்படியாக அதிகரிப்பது பரிந்துரைக்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், ஒரு பிற்சேர்ப்பு பொருளும் பரிந்துரைக்கப்படலாம். ஒருவேளை, ஒருவரால் தேவைப்படும் அளவு உணவை சாப்பிட இயலாத பொழுது, உணவூட்டும் குழாய் போன்ற ஒரு செயற்கையான முறை பயன்படுத்தப்படலாம். இந்தக் குழாய்கள், மருத்துவமனைகளுக்குப் பொருத்தமானவை, ஆனாலும் வீட்டிலும் பயன்படுத்த இயலும்.

மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையில் அடங்கக் கூடியவை

 • ஒரு மருத்துவரின் நிலையான கண்காணிப்பு.
 • ஊட்டச்சத்து நிபுணரின் வருகை.
 • ஒரு ஆலோசகரின் வருகை.
 • ஒரு சமூக சேவகரின் வருகை.
 • ஒரு நபரின், உணவை சாப்பிடும் மற்றும் செரிமானமாகும் ஆற்றல் மதிப்பிடப்படலாம். தேவையானால், ஒரு உணவூட்டும் குழாய் பயன்படுத்தப்படலாம். இந்த உணவூட்டும் குழாய் மூக்கிலிருந்து வயிற்றுக்குள் சொருகப்படுகிறது அல்லது அறுவை சிகிச்சை மூலம் அடிவயிற்றின் வழியாக நேரடியாக வயிற்றுக்குள் வைக்கப்படுகிறது. முறையான மதிப்பீடுக்குப் பிறகு, வழக்கமாக அந்த நபர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார். இருப்பினும், உடல்நல முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தற்போதைய உணவுப்பழக்கத் திட்டம் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், அவர் ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்கு திரும்ப வர வேண்டிய தேவை இருக்கலாம்.
 • குடல்வழி ஊட்டச்சத்து அளித்தல்
  குடல்வழி ஊட்டச்சத்து அளித்தலில், இரத்தக் குழாயில் நேரடியாக ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடிய ஒரு சொட்டும் நீர் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் சாப்பிடுவதன் வழியாகப் பெற முடியாத ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு, இது இடமளிக்கிறது. இந்த சொட்டும் நீர் வழியாகச் சொல்லும் கரைசலில், ஒருவருக்கு உள்ள தேவைகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக்களும், எலக்ட்ரோலைட்களும் இருக்கக் கூடும்.    

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஊட்டச்சத்துக்குறைபாட்டில் இருந்து மீண்டு வர உதவக் கூடிய பல்வேறுபட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் பற்றி கீழே விவாதிக்கப்பட்டு இருக்கிறது:

 • ஒவ்வொரு சிலமணி நேரங்களுக்கும், சிறிய அளவு உணவுகளை உண்ணுங்கள். தினசரி, இடையில் சில நொறுக்குத்தீனிகளுடன் குறைந்த பட்சம் மூன்று முறை ஆரோக்கியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஆற்றல் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.
 • தேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
 • உணவு அருந்தி, ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடியுங்கள். சாப்பாட்டுக்கு முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பது, ஒருவருக்கு வயிறு நிரம்பி விட்ட உணர்வை ஏற்படுத்தக் கூடும்.
 • மது அருந்துவதைக் குறையுங்கள்.
 • காஃபின் எடுத்துக் கொள்வதை, குறிப்பாக நீங்கள் குறைந்த எடையுள்ளவராக இருந்தால், தவிருங்கள்.
 • உங்கள் ஆற்றல் அளவை, நாள் முழுவதும் அதிகமாக வைத்துக் கொள்ள, புரதங்கள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
 • இனிப்புப் பண்டங்களைத் தவிருங்கள்.
 • உங்கள் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க, அதிக பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ணுங்கள். விரைவாக மீண்டு வருவதற்கான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை பச்சைக் காய்கறிகள் கொண்டிருக்கும் வேளையில்,  இனிப்பு உண்ணும் ஆசையைத் திருப்திபடுத்துவதில் பழங்கள் உதவிகரமாக இருக்கின்றன. பழங்கள் அதிக அளவு புரதங்கள் மற்றும் கலோரிகளைக் கொண்டிருக்காததால், அவற்றை உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ள முயற்சியுங்கள்.
 • நொறுக்குத் தீனியாக கொட்டைகளை எடுத்து கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிருங்கள்.
 • நீங்கள் எடையை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், முட்டைகள், பால், தயிர் மற்றும் வெண்ணை போன்ற பால் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்..
 • உடனடியாக சக்தியைப் பெற, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி உணவு போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை உண்ணுங்கள்.
 • வெளியில் செல்லும் பொழுது, நீர் வற்றிப்போதலைத் தடுக்க, பழச்சாறுகள், தண்ணீர் மற்றும் வாய்வழி மறுநீர்ச்சத்து உப்புக்கள் போன்ற பானங்களைக் கொண்டு செல்லுங்கள். ஆற்றல் பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள். அவை காஃபின் மட்டும் சர்க்கரையைக் கொண்டிருப்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் காரணமாகக் கூடும்.
 • உங்கள் பசியை  இயல்பாக அதிகரிக்க, தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.
 • ஒருவேளை நீங்கள் உண்ணும் குறைபாடுடன் போராடிக் கொண்டிருந்தால், பல்வேறு நபர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு நேர்மறையான உடல் தோற்றத்தைக் கட்டமைக்கவும் ஆதரவுக் குழுக்கள் உதவிகரமாக இருக்கக் கூடும்.
 • உங்கள் உடல்நிலை முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்பதை உறுதி செய்யும் தொடர்ச்சியான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதும் அவசியமானது.


மேற்கோள்கள்

 1. London School of Hygiene and Tropical Medicine [internet] Bloomsbury, London; Types of malnutrition
 2. National Health Service [Internet]. UK; Malnutrition
 3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; What is malnutrition?
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Malnutrition
 5. British Association for Parenteral and Enteral Nutrition [internet] UK Introducing 'MUST'
 6. Nidirect [Internet]. Government of Northern Ireland; Treating malnutrition
 7. Nidirect [Internet]. Government of Northern Ireland; Increasing nutritional intake

ஊட்டச்சத்துக்குறைபாடு டாக்டர்கள்

Dt. Akanksha Mishra Dt. Akanksha Mishra Nutritionist
8 वर्षों का अनुभव
Surbhi Singh Surbhi Singh Nutritionist
22 वर्षों का अनुभव
Dr. Avtar Singh Kochar Dr. Avtar Singh Kochar Nutritionist
20 वर्षों का अनुभव
Dr. priyamwada Dr. priyamwada Nutritionist
7 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

ஊட்டச்சத்துக்குறைபாடு க்கான மருந்துகள்

ஊட்டச்சத்துக்குறைபாடு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।