விரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) - Testicular Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 21, 2019

March 06, 2020

விரைச்சிரை புற்றுநோய்
விரைச்சிரை புற்றுநோய்

விரைச்சிரை புற்றுநோய் / டெஸ்டிகுலர் கேன்சர் என்றால் என்ன?

விந்தகம் என்பது (விரைகள்) ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும், இது விந்தணுக்களை உற்பத்தி செய்து டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. விரைச்சிரை புற்றுநோய் என்பது 15-45 வயது வரையிலான ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அரிய புற்றுநோய் வகை ஆகும். இது விதைப்பையில் வலியற்ற கட்டியாக விளங்குகிறது. இந்த வகை புற்றுநோய் அதிக வெற்றி விகிதத்துடன் குணப்படுத்தக்கூடியது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

விரைச்சிரை புற்றுநோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் விதைப்பையில் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் மற்றும் வீக்கத்தின் காரணமாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள் பின்வருமாறு:

 • ஒன்று அல்லது இரண்டு விந்தகத்திலும் ஏற்படும் வீக்கம்.
 • விதைப்பையில் கனமான உணர்வு.
 • விதைப் பகுதியில் திரவம் சேருதல்.
 • விதைப்பையினுள் அசௌகரியம் அல்லது வலி.
 • இடுப்பு பகுதியில் மந்தமான வலி.
 • கீழ் முதுகு வலி.
 • மார்பகம் மென்மையாதல் அல்லது விரிவாக்கம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை?

விரைச்சிரை புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை, ஆனால் பல நோய் நிலைகள் அல்லது ஆபத்து காரணிகள் ஒரு நபரை விந்தக புற்றுநோயின் பாதிப்புக்குள்ளாகும். இந்த அபாயக் காரணிகள் பின்வருமாறு:

 • விரைச்சிரை வளர்ச்சியில் இயல்புமீறல் - க்ளின்ஃபெல்ட்டர் சின்ட்ரோம் எனப்படும் மரபணுக் கோளாறின் காரணமாக ஏற்படும் விந்தின் மோசமான வளர்ச்சி அல்லது அசாதாரண வளர்ச்சி விந்தக புற்றுநோயை உண்டாக்கும்.
 • கீழிறங்காத ஆண்விதை (க்ரிப்டோசிடிஸம்) - ஒரு உயிர் கருவில் இருக்கும் போது, விந்தகங்கள் அடிவயிற்றிலிருந்து விதைப்பையின் பகுதிக்கு இறங்குகின்றது. ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு இது ஒரு போதும் நிகழ்வதில்லை, மாறாக விந்தகங்கள் அடிவயிற்றிலேயே இருக்கும்.
 • விரைச்சிரை புற்றுநோயின் வலுவான குடும்ப வரலாறு.
 • 15-45 வயது பிரிவினரிடையே விரைச்சிரை புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஒரு முறையான மருத்துவ வரலாறு மற்றும் அதனுடன் கூடிய உடல் பரிசோதனை, விரைச்சிரை புற்றுநோயைக் கண்டறிவதற்கு உதவும். ஆனால் நோயின் சிகிச்சையை நிர்ணயிப்பதற்கும், நோயை உறுதிப்படுத்துவதற்கும் சில ஆய்வுகள் கட்டாயமானவை. அவை பின்வருமாறு:

 • இரத்தப்பரிசோதனை - ஆல்பா-பெட்டோபுரோட்டீன், பீட்டா எச்.சி.ஜி மற்றும் லாக்டேட் டிஹைட்ரோஜினேஸ் போன்ற புற்றுநோய்க் கட்டி குறியீடுகள் விரைச்சிரை புற்றுநோயை பகுப்பாய்வு செய்ய உதவலாம்.
 • சோனோகிராபி - விதைப்பகுதியின் அல்ட்ராசவுண்ட் மதிப்பீடு புற்றுநோய் பரவியுள்ள அளவின் தீவிரத்தை தீர்மானிக்க உதவுகிறது மற்றும் கட்டியின் வகையை தீர்மானிக்கிறது.
 • சி.டி ஸ்கேன் - இது பொதுவாக புற்றுநோய் பரவியுள்ள அளவின் தீவிரத்தை தீர்மானிக்க உதவுகிறது.
 • ஹிஸ்டோபாத்தாலஜி - புற்றுநோய் கட்டியை அகற்றிய பிறகு, அதை நுண்ணோக்கியின் கீழ் வைத்து கட்டியின் வகை கண்டறியப்படுகிறது.

புற்றுநோயின் நிலை மற்றும் வகையை சார்ந்து சிகிச்சை நெறிமுறைகள் விளங்கும். சில நேரங்களில், நோயாளியின் ஒட்டுமொத்த உடல் நிலை மற்றும் முன்னுரிமைகள் சிகிச்சை முறையை பாதிக்கும். சிகிச்சை விருப்பங்களில் பின்வருவன அடங்கும்:

 • அறுவைசிகிச்சை (ஆர்க்கைடாக்டோமி) - அறுவை சிகிச்சை மூலம், பாதிக்கப்பட்ட விதைப்பையை அகற்றுதல் சிறந்த சிகிச்சையாகும். இவற்றுடன், பாதிக்கப்பட்ட நிணநீர் முடிச்சுகள் (லோகோ-மண்டல முடிச்சுகள்) நீக்கப்படுகின்றன. இந்த சிகிச்சை பொதுவாக புற்றுநோயை சரி செய்கிறது.
 • கதிரியக்க சிகிச்சை - உயர் ஆற்றல் எக்ஸ்-ரே பீம்ஸ் மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன, ஆனால் கதிர்வீச்சு சிகிச்சை பல பக்கவிளைவுகளை கொண்டுள்ளது மற்றும் சில வகையான புற்றுநோய்களில் மட்டுமே பயனுள்ளதாக உள்ளது.
 • கீமோதெரபி - புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு கீமோதெரபி முகவர்கள் உதவுகின்றன.  இது பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எஞ்சிய புற்றுநோய் செல்களை நீக்குவதற்கு  பயன்படுத்தப்படுகிறது. இதில் பல பக்க விளைவுகளும் உண்டு.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Testicular cancer.
 2. American Society of Clinical Oncology [Internet] Virginia, United States; Testicular Cancer: Symptoms and Signs
 3. Canadian Cancer Society. Testicular cancer. [Internet]
 4. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Testicular Cancer.
 5. Cancer Research UK. Testicular cancer. [Internet]

விரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) டாக்டர்கள்

Dr. Anil Heroor Dr. Anil Heroor Oncology
22 वर्षों का अनुभव
Dr. Kumar Gubbala Dr. Kumar Gubbala Oncology
7 वर्षों का अनुभव
Dr. Patil C N Dr. Patil C N Oncology
11 वर्षों का अनुभव
Dr. Amit Agarwal Dr. Amit Agarwal Oncology
19 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

விரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) க்கான மருந்துகள்

விரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிகுலர் கேன்சர்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।