டைபாய்டு காய்ச்சல் - Typhoid Fever in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

April 24, 2017

March 06, 2020

டைபாய்டு காய்ச்சல்
டைபாய்டு காய்ச்சல்

சுருக்கம்

டைபாய்டு என்பது ஒரு தொற்று பாக்டீரியா நோயாகும், இது சால்மோனெல்லா டைபீ என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் கொண்டவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி , தலைவலி, பசியின்மை, ரோஜா வண்ணப் புள்ளிகள் போன்ற நோய் அறிகுறிகள் இருக்கும். பொதுவாக பருவ மழைக்கு முன், பருவ மழையின் போது மற்றும் பருவ காலத்திற்குப் பிந்தைய பருவங்கள் ஆகியவற்றின் போது இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் பரிமாற்றம் மலம்-வாய் வழியே ஏற்படுகிறது. எனவே, மலக்குடல், பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை ஸ்டூல்(மல) சோதனை உறுதிப்படுத்துகிறது. டைபாய்டுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப்(antibiotics) பயன்படுத்தி  முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உட்புற இரத்தப்போக்கு, சீழ்ப்பிடிப்பு (செப்சிஸ்) போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அல்லது அரிதான நிகழ்வுகளில், மரணம் கூட ஏற்படலாம்.

டைபாய்டு காய்ச்சல் என்ன - What is Typhoid Fever in Tamil

டைபாய்டு மற்றும் பாராடைபாய்டு காய்ச்சல் கூட்டாக குடல்காய்ச்சல் என்று அழைக்கப்படுகின்றன. இது சல்மோனெல்லா எண்ட்டரிகாவின் (பாக்டீரியாவின் வகை) பல்வேறு வகைககளான  டைஃபி, பாராடைஃபி ஏ, பி மற்றும் சி ஆகியவற்றால் ஏற்படுகின்ற பொதுவான தொற்று நோயாகும். ஆரம்பத்தில் அது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாத நிலையில் இந்த பாக்டீரியா  கடுமையான முறையில் உங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு பரவுகிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது அபாயகரமான தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்ன - Symptoms of Typhoid Fever in Tamil

அசுத்தமடைந்த உணவினை உட்கொண்டபின், பாக்டீரியா உங்கள் செரிமான அமைப்பில் நுழைகிறது மற்றும் பெருக்கமடைகிறது. பின்வருவது போன்ற அறிகுறிகள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டுகிறது:

 • 102⁰-104⁰F (38⁰-40⁰C) என்ற அளவிளான காய்ச்சல்
 • வயிற்று வலி
 • இருமல்
 • பசியிழப்பு
 • மலச்சிக்கல்
 • வயிற்றுப்போக்கு

இந்த கட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், இந்த காய்ச்சல் மேலும் மோசமடையலாம் மற்றும் நீங்கள் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கலாம்:

 • களைப்பு
 • குழப்பம்
 • மாயைகள் (இல்லாத ஒன்றை பார்த்தல் அல்லது கேட்டல்)
 • மூக்கில் இரத்தப்போக்கு
 • கவனப் பற்றாக்குறை (கவனம் செலுத்துவதில் சிரமம்)
 • பிளாட் இளஞ்சிவப்பு அல்லது ரோஜா நிற புள்ளிகள் (ரோஜா புள்ளிகள்) அல்லது மார்பு மற்றும் அடிவயிற்றில் (விலா எலும்புகள் மற்றும் இடுப்புக்கு இடையில்) தடிப்புகள்.

வலுவான மற்றும் வளரும் நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, குழந்தைகள் பெரியவர்களை விட குடற்காய்ச்சல் நோய்த்தாக்கத்தின் குறைந்த அறிகுறிகளைக் காட்டலாம்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

டைபாய்டு காய்ச்சல் சிகிச்சை - Treatment of Typhoid Fever in Tamil

இந்த அறிகுறிகள் மோசமடைவதற்கு முன்பு உடனடி மருத்துவ உதவி பெறுதல் மிகவும் முக்கியம். வழக்கமான தேவையான சிகிச்சை கீழே விவரிக்கப்பட்டுள்ளது:

 • வாய்வழி உட்கொள்ளும் ஆண்டிபயாடிக்குகள்:
  நீங்கள் நோயை கண்டறிந்து மருத்துவ உதவியை நாடும் ஆரம்ப கட்டத்தில், ​​7-14 நாட்களுக்கு வாய்வழி உட்கொள்ளும் ஆண்டிபயாடிக்குகள் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்-நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் மருந்துகள்)  முதலில் பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் அறிகுறிகள் மருந்தை உட்கொள்வதால் 2-3 நாட்களுக்குள்  மறைந்துவிட்டது போல இருக்கலாம், இருப்பினும் மேற்கொண்டு ஆண்டிபயாடிக்குகளை நிறுத்தி விடாமல் எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலில் இருந்து முற்றிலும் பாக்டீரியாவை அகற்றலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
 • திரவ மாற்றீடு:
  உடலில் இருந்து நோய்தொற்று துர்நீரை வெளியேற்றவும், நீர்சத்து இழப்பதை தடுக்கவும் மற்றும் நீர்சத்தை அதிகப்படுத்தவும் திரவ உணவுகளை நிறைய உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரம்பகட்டத்திலே நோய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் பொதுவாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது தேவையில்லை மற்றும் நோயாளிக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் மூலம் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம்.
 • மருத்துவ மனையில் தங்கி  சிகிச்சை பெருதல்:
  நோய்க்கான அறிகுறிகள் மோசமாகிவிட்டால் அல்லது சில காரணங்களால் நோய்க்கான சிகிச்சையில் தாமதமாகிவிட்டால் அல்லது அறிகுறிகள் ஆன்டிபயோடிக் எடுத்துக்கொண்ட பிறகும் மறையவில்லை எனில், மருத்துவர் உங்களுடைய சிகிச்சை பலனின் நிலையை கண்காணிக்கும் வகையில் மருத்துவமனையில் தங்கி  சிகிச்சை பெற ஆலோசனை கூறுவார். உங்கள் நிலை தீவிரமாக இருந்தால், ஆண்டிபயாடிக் ஊசி போடப்படும். இதனால் ஆண்டிபயாடிக் வேகமாக செயல்படுவதோடு, உங்கள் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. திரவ மற்றும் எலக்ட்ரோலைட் மாற்றீடு நரம்புகள்(ட்ரிப்ஸ்) வழியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.
 • இரண்டாம் கட்ட ஸ்டூல்(மல) சோதனை:
  முழுமையான சிகிச்சைக்குப் பின்னர், நீங்கள் மலக்குடலின் வழியாக டைபாய்டு பாக்டீரியாவை வேளியேற்றவில்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டாவது மலக்குடல் சோதனை செய்யப்படுகிறது. சோதனையில் டைபாய்டு பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்தால், மற்றொரு 28-நாள் வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை(ஆண்டிபயாடிக்) உட்கொள்ள அறிவுறுத்தப்படுவீர்கள்.
 • நோய் அறிகுறிகள் மீண்டும் வருதல்:
  சில சமயங்களில், நோய் அறிகுறிகள் மீண்டும் வருதல் ஏற்படுகிறது. இது பொதுவாக உங்கள் மருந்து முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு நடக்கிறது. அறிகுறிகள் மென்மையானவை மற்றும் குறுகிய காலத்திற்கானதே என்றாலும், வழக்கமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மீண்டும் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும், சில சந்தர்ப்பங்களில், நோயாளியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் நோயாளியை  மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஏனெனில் டைபாய்டின் மறுவருகை உடலை பலவீனப்படுத்துகிறது.

டைபாய்டு சிகிச்சையில் சமீபத்திய சவால்கள்:
சில விகாரங்களில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்; ஆன்டிபயாட்டிக், டைபாய்டு பாக்டீரியாவின் மீது குறைந்த அளவிலான தாக்குதல் மட்டுமே நடத்துதல் மற்றும் ஃப்ளோரோக்வினொலோன்ஸ் (எ.கா. சிப்ரோஃப்ளோக்சசின்) போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை, டைபாய்டு பாக்டீரியா அதிகரித்த எதிர்ப்புத்தன்மையுடன் போராடுதல் போன்ற நிகல்வுகளை எதிர்கொண்டிருக்கின்றன.

சுய பராமரிப்பு:

 • அனைத்துக்கும் முதலாக மருத்துவர்கள் ஆரம்ப நாட்களில் வீட்டில் முழு படுக்கை ஓய்வு எடுக்க ஆலோசனை கூறுகிறார்கள்.
 • உடலல் பலவீனமாக இருப்பதாலும், பல்வேறு நோய்த்தொற்றுகல் எளிதில் பாதிக்கலாம் என்பதாலும், இளநீர், பலச்சாறுகள், லஸ்ஸி, குளுக்கோஸ் நீர் போன்ற பலவகையான திரவங்களைப் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
 • அரிசி உணவுகள், பழக்கலவை போன்ற எளிதில் செரிக்கக்கூடிய குறுகிய கால இடைவெளிகளில் உண்ண வேண்டும். செரிமானம் ஆக நேரம் ஆகும் கடினமான உணவுப்பொருட்களை உண்ணக் கூடாது.
 • கொழுப்பு நிறைந்த நெய், பால் போன்ற உணவை சாப்பிட வேண்டாம். நல்ல ஆரோக்கிய சுகாதரத்தை பராமரிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
 • பெரும்பாலான மக்கள் வேலைக்கு அல்லது பள்ளிக்கூடத்திற்கு மிக விரைவில்  உடல் சற்று சரியானதும் திரும்புவர். இருப்பினும், உணவைக் கையாள்பவர்கள், ஐந்து வயதிற்கும் குறைந்த வயதுடையோருடன் அல்லது முதியோருடன் வேலை செய்பவர்கள், தங்கள் இரண்டாவது நிலை மலச் சோதனை முடிவுகளில் டைபாய்டு கிருமிகள் இல்லை என தெரியும்வரை வேலை அல்லது பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகிறது.


மேற்கோள்கள்

 1. National Health Service [internet]. UK; Typhoid fever: Overview
 2. Iowa Department of Public Health [internet]. TYPHOID FEVER, CARRIER. Acute Communicable Disease Control Manual (B-73), REVISION—JUNE 2018
 3. National Health Service [internet]. UK; Typhoid fever: Vaccination
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Typhoid & Paratyphoid Fever. Infectious Diseases Related to Travel.
 5. National Health Portal [Internet] India; Typhoid / Enteric Fever
 6. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Typhoid.

டைபாய்டு காய்ச்சல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for டைபாய்டு காய்ச்சல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for டைபாய்டு காய்ச்சல்

Number of tests are available for டைபாய்டு காய்ச்சல். We have listed commonly prescribed tests below: