சுருள் சிரை நரம்புகள் - Varicose Veins in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

சுருள் சிரை நரம்புகள்
சுருள் சிரை நரம்புகள்

சுருள் சிரை நரம்புகள் என்றால் என்ன?

சுருள் சிரை நரம்புகள் எனும் நிலையில் இரத்தம் திரண்டிருப்பதின் காரணத்தினால் நரம்புகள் வீங்கி விரிவடைந்திருக்கக்கூடும். இவை தோல்களின் கீழ் இருப்பதை வெறும் கண்களாலேயே காண முடியும்; மேலும், அவை முறுக்கி இருப்பதோடு, முடிச்சுகளுடன் வீங்கி நீல நிறத்தில் அல்லது இருண்ட ஊதா நிறத்தில் காணப்படும். பொதுவாக, இவை கால்களில் தோன்றக்கூடியது, ஆனால் இவை உடலில் எந்த பாகத்தில் வேண்டுமென்றாலும் ஏற்படக்கூடியவை.

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலான நோயாளிக்கு சுருள் சிரை நரம்புகள் நீண்ட காலத்திற்கு எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. இந்நிலையில் பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • கால்களில் உண்டாகும் வலி.
 • கால்களில் ஏற்படும் வீக்கம்.
 • கால்கள் அல்லது காலின் பின் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கள்.
 • காலின் பின் பகுதி மற்றும் தொடைகளில் சிலந்தி-போன்ற பச்சை நிற நரம்புகள் காணப்படலாம்.
 • சுருள் சிரை நாளங்கள் இருக்கும் தளத்தில் உண்டாகும் நமைச்சல்.
 • உலர்ந்த செதில்களாக, இருக்கும் தோல்களில் ஏற்படும் எரிச்சல்.
 • விரைவாக குணமடையாத புண்பட்ட தோல்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

வால்வுகள் மற்றும் வால்வின் சுவர்களின் ஏற்படும் பலவீனம் காரணமாக, நரம்புகளில் இரத்தம் குவிந்து நரம்புகள் வீக்கமடைந்து, வளைந்து, சுருண்டு அதாவது சுருள் சிரைக்கு வழிவகுக்கின்றது. பொதுவாக, வால்வுகள் இரத்தத்தை புவியீர்ப்புவிசைக்கு எதிராக மேல் நோக்கி செலுத்துகின்றது, ஆனால் வால்வுகள் பலவீனமாக இருக்கும் போது, ​​நரம்புகளில் இருக்கும் இரத்தம் ஒன்றாக குவிந்து சுருள் சிரை நரம்புகளை ஏற்படுத்துகின்றது.

இவற்றில் அடங்கும் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

 • நீண்ட நேரம் நின்றுகொண்டிருத்தல் எ.கா. ஓவியர்கள், பஸ் / ரயில் நடத்துனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர்.
 • பெண் பாலினம்.
 • கர்ப்பகாலத்தில் இவ்வாறு ஏற்படலாம்.
 • உடல்பருமன்.
 • வயது முதிர்ச்சியின் காரணமாகவும் ஏற்படலாம்.
 • சுருள் சிரை நரம்புகளை கொண்டிருக்கும் குடும்ப வரலாறு.
 • இடுப்பினுள் உண்டாகும் கட்டி, நரம்புகளில் இரத்தம் உறைந்திருத்தல் போன்ற அரிதான நிலைகள்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

கால்களில் பின்வரும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா என மருத்துவர் பரிசோதனை செய்யக்கூடும்:

 • தோல் நிறம்.
 • கால்களில் உள்ள குணமடைந்த அல்லது குணமடையாத புண்கள்.
 • தோலின் வெப்பநிலை.
 • சிவந்திருத்தல்.

நரம்புகளின் இரத்த ஓட்டத்தை சரிப்பார்த்து, ஏதேனும் இரத்த உறைவு இருக்கிறதா என்பதை கண்டறிய டோப்லர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிந்துரைக்கப்படலாம். மேலும் ஆஞ்சியோகிராம் சோதனை நோய் கண்டறிதலை உறுதிப்படுத்தவதற்கு அறிவுறுத்தப்படலாம் ஆனால் இந்த சோதனை பெரும்பாலும்  செய்யப்படுவதில்லை.

இந்நிலைக்கான சிகிச்சை பின்வரும் நடவடிக்கைகளை கொண்டது:

 • அழுத்தம் கொடுக்கும் காலுறைகள் - இது வீக்கத்தை குறைக்கவும் மற்றும் கால்களுக்கு மெதுவாக அழுத்தம் கொடுப்பதாலும் இரத்த ஓட்டத்தை இதயத்தை நோக்கி செலுத்துகின்றது, இது இரத்த குவிதலை குறைக்க உதவுகின்றது.
 • அப்லேஷன் தெரபி - கதிர்வீச்சு அதிர்வெண் நீக்கம், லேசர் நீக்கம் ஆகியவை சுருள் சிரை நரம்புகளை அழிக்க பயன்படுத்தப்படுகின்றன.
 • ஸ்கெலெரோதெரபி - நரம்புகளில் சப்ளைகளை நிறுத்துவதற்கு உட்செலுத்தப்படும் ஏஜென்ட்.
 • அறுவைசிகிச்சை (ப்ளேபெக்டோமி) -  இரத்த சப்ளைக்கு பாதிக்கப்பட்ட நரம்புகளுக்கு இணையான நரம்புகள் இருப்பதால் அவற்றை நீக்குதல்.
 • கடுமையான வழக்குகளில் பாதிக்கப்பட்ட நரம்பை நீக்குதல் மற்றும் அணுத்திரள்சேர்க்கை செய்தல்.

சுய-பராமரிப்பு பின்வருபவற்றை கொண்டுள்ளது:

 • நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து நிற்பதை தவிர்த்தல்.
 • கால்களை 15 நிமிடத்திற்கு உயர்ந்த நிலையில் வைத்திருத்தல் இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3-4 முறை செய்தல் நன்று.
 • கீழ் எல்லைகளுக்கு அழுத்தத்தை குறைக்க எடை இழப்பு செய்தல் நன்று.
 • இரத்த ஓட்டத்தை மேம்படுத்த அதிகமான உடல் செயல்பாடு மேற்கொள்தல். நடைபயிற்சி அல்லது நீச்சல் ஆகிய செயல்பாடுகள் சிறந்த தேர்வுகள்.
 • ஏதேனும் காயங்கள் அல்லது புண்கள் திறந்த நிலையில் இருந்தால் அவற்றை பாதுகாத்தல்.
 • கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதால் தோல் வறண்டு வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Varicose veins
 2. National Health Service [Internet]. UK; Varicose veins.
 3. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Varicose Veins
 4. Bruce Campbell. Varicose veins and their management. BMJ. 2006 Aug 5; 333(7562): 287–292. PMID: 16888305
 5. Office of Disease Prevention and Health Promotion. Varicose veins and spider veins. [Internet]

சுருள் சிரை நரம்புகள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for சுருள் சிரை நரம்புகள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.